கவிதை குழாம்; வத்தலகுண்டு
=============================
வத்தலகுண்டு சி சு செல்லப்பா, ராஜம் அய்யர், ராமையா போன்ற இலக்கிய முன்னோடிகளையும், சுப்ரமணிய சிவா போன்ற சுதந்திர தியாகிகளையும் நினைவு கொள்ளச் செய்யும் ஊராகும். சிறப்பு தன்மை வாய்ந்த ஊரில் சாகித்ய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.சுப்ரமணிய சிவா வீட்டைத் தேடிப்போனால் யாரும் அடையாளம் காட்ட மறுக்கிறார்கள். நினவிடம் என்று எதுவும் இல்லை. புது வீடு முளைத்திருக்கிறது. செல்லப்பா வீட்டை நினைவு கொள்ளும் அவரின் உறவினர்கள் ஆறுதல் தந்தார்கள். ராஜம் அய்யரின் நினைவாய் ஒரு கல்வெட்டு இருந்தது. இலக்கிய முன்னோடிகளின் ஊரில் அவர்களை அடையாளம் காட்ட ஆளில்லை. வருத்தமாக இருந்தது.
சுப்ரபாரதிமணியன் நவீன தமிழ்க் கவிதையை அடையாளப்படுத்தும் வகையில் இரு கவிஞர்களைப் பற்றிய கட்டுரையை வாசித்தார்.1 சிற்பி பாலசுப்ரமணியன். மூத்த கவிழஞர் என்ற வகையில் மரபும், புதுமையும் இணைந்த முயற்சிகளை அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைதொகுப்பை முன் வைத்து விளக்கினார். இளைய கவிஞர் என்ற முறையில் சூரிய நிலாவின் கவிதைத் தொகுப்பை முன் வைத்து நவீன அம்சங்களை எடுத்துரைத்தார்.தென்மண்டல செயலாளர் இளங்கோவன் சாகித்திய அக்கதமியின் ஒருமைப்பாட்டு பணியை பல் வேறு நிகழ்ச்சிகளை முன் வைத்து விரிவான உரை நிகழ்த்தினார்.தங்கம் மூர்த்தி நவீன கவிதையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றி பேசினார். ஆனைவாரி ஆன்நதன் மரபுக் கவிதயின் பலம் பற்றி எடுத்துரைத்தார்.
கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை காவல் துறை அதிகாரியும் கவிஞருமான சின்னசாமி துவக்கிவைத்தார்.... 2000 ஆண்டு கால் மரபு கொண்ட தமிழ்க் கவிதையின் செழுமை பற்றி விளக்கினார். பழமலை கவிஞர்களை அறிமுகப்படுத்தியும், தமிழ் சூழலில் அரசியல் செலுத்தும் செல்வாக்கு பற்றியும் எடுத்துரைத்தார்.கவிஞர்கள் ரசூல், சக்தி ஜோதி, ரத்திகா, சுபமுகி, மயூரா ரத்தினசாமி. அம்சப்பிரியா,பழமலை,சாஜகான்,தங்கம் மூர்த்தி, யவனிகா சிரிராம்,அமிர்தம் சூர்யா , சுதிர் செந்தில் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.மனுஸ்யபுத்திரன் உடல் நலக் குறைவு காரணமாக கலந்து கொள்ள முடியவிலலை.கவிஞர்கள் சந்திப்பு மற்றும் கலந்திரையாடலுக்கான நல்ல களமாக வத்தலகுண்டு கவிஞர்கள் சந்திப்பு அமைந்திருந்தது.எழுத்தாளர்கள் காமுத்துரை, ஸபி, வதிலை பிரபா, அல்லி உதயன், தாரகை போன்ற கவிஞர்களும் கலந்து கொண்டனர்.