- கவிதை நூல் வெளியீடு

சுபமுகியின் ‘இராசயன்பொடிக் கோலம்’ என்ற கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு ஞாயிறன்று மத்திய அரிமா சங்கத்தில் நடைபெற்றது. திரைப்படக் கலைஞர் அஜயன்பாலா நூலை வெளியிட, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் சுபமுகியின் கவிதை நூலை வழக்கறிஞர் ரவி அறிமுகப்படுத்திப் பேசினார். மத்திய அரிமா சங்கத் தலைவர் முருகசாமி தலைமை வகித்தார். அரிமா மாவட்ட தலைவர் சுதாமா கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
விழாவில் மதுரைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களின் ‘படுகளம்’ நாவலை சுப்ரபாரதிமணியன் அறிமுகப்படுத்திப் பேசினார்.
விழாவில் ‘அஜயன்பாலா படைப்புலகு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ‘அஜயன்பாலாவின் சிறுகதைகளில் விளிம்பு நிலை மனிதர்கள்’ என்ற தலைப்பில் எஸ்.ஏ.பாலகிருஷ்ணன் பேசினார். ‘அஜயன் பாலாவின் திரைப்படக்கனவு’ என்ற தலைப்பில் தாண்டவக்கோன் உரையாற்றினார். ‘அஜயன்பாலாவின் புரட்சி நாயகர்கள்’ என்ற தலைப்பில் நிசார் முகமது உரையாற்றினார். அஜயன் பாலாவின் ‘கூட்ஸ் வண்டி’ என்ற வலைத்தளத்தைப் பற்றி முத்துசரவணன் உரையாற்றினார்.
தாய்த்தமிழ்ப் பள்ளித் தலைவர் முத்துசாமி, கவிஞர்கள் ஜோதி, சிவதாசன், நாடகக் கலைஞர் சாமி, வரலாற்று ஆய்வாளர் அனந்தகுமார், பத்திரிகையாளர் கே.எஸ், குறும்பட இயக்குனர்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். ஜெயபால் நன்றி தெரிவித்தார்.
செய்தி: K.ரவிக்குமார்