அஞ்சுவண்ணம் தெரு=தோப்பில்மீரானின் நாவல்
===============================================
இஸ்லாம் சமூகம் பற்றிய யதார்த்தமான சித்தரிப்பை மனிதாபிமானம் ததும்ப தன் படைப்புகளில் கையாள்கிறவர் தோப்பில் முகமது மீரான். அவரின் துறைமுகம்,சாய்வு நாற்காலி, கடலோரத்து கிராமத்துக் கதை போன்ற நாவல்களுக்குப் பிறகு தற்போது வெளிவந்திருக்கும் நாவல் " அஞ்சுவண்ணம் தெரு " மூஸ்லீம் சமுக மக்களின் மரபான வாழ்க்கையை தொன்மங்களோடும் ஆசாரங்களோடும், சிதைந்த அவர்களின் கனவுகளோடும் சித்தரிக்கிறது.
" அஞ்சு வண்ணம் தெரு " வில் வெவ்வேறு வகைப்பட்ட கதாப்பாத்திரங்களை விவரித்துக்கொண்டு போவதாலே முஸ்லீம் சமூகம் பற்றிய மாற்றங்களையும் , கால மாற்றத்தின் முன் அச்சமூகம் திணறி, மூச்சுத்திணறும் ஜாதிய முரண்பாட்டுச் சூழல்களையும் முன் வைக்கிறார்.
வழக்கமான யதார்த்த கதை சொல்லல் பாணியே தோப்பிலின் பாணியாகும். அந்தப் பாணியில் தான் அறிந்த முஸ்லீம் சமூக மக்களின் வாழ்க்கையை திறம்பட எளிமையுடனும் எள்ளல் தன்மையுடனும் சொல்வது அவருக்கு இயல்பாக இருக்கிறது. நாஞ்சில்நாட்டின் ஒரு சிறிய தெருவின், மனிதர்களின் வாழ்க்கையை சமூக ஆவணச் சாட்சிகளாக நிலைநிறுத்துகிறார்.
=சுப்ரபாரதிமணியன்
( முழுமையான கட்டுரைக்கு " தீராநதி " செப்டம்பர் இதழ் பாருங்கள் )
அஞ்சுவண்ணம் தெரு =தோப்பில் மீரான் நாவல்
அடையாளம் வெளியீடு , 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி
விலை ரூ 130/
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 18 செப்டம்பர், 2009
திங்கள், 14 செப்டம்பர், 2009
மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்
மறுபடியும் பட்டு அல்லது காஞ்சீவரம்
=================================
காஞ்சீவரம் பற்றி " இனி ஒரு"வில் பதிவு ஆகிருப்பதை வெகு தாமதமாகத்தான் அறிந்தேன் என்பதால் எதிர்வினையைத் தாமதமாகப் பதிகிறேன்.
நான் எழுதிய " பட்டு " திரைக்கதையை அந்த ஒளிப்பதிவாளர் இன்றைய பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல்வாதியுமான பெண் கவிஞர், ஒரு மலையாள இயக்குனர் , ஒரு இயக்குனர் ஆகியோரிடம் செழுமைப்படுத்த தந்ததாக என்னிடம் சொல்லியிருந்தார். அது போல் வேறு யார்யாரிடம் சென்றன என்பது தெரியவில்லை. "ஒரு ரவுண்டு 'போய் விட்டு வந்து இந்த ரூபமூம் அடைந்திருக்கலாம். "சினிமாமாவுலே இதெல்லாம் சகஜமப்பா " என்று ஆறுதல் படுத்திக் கொள்வதுண்டு. எனது திரைக்கதை சுதந்திரப்போராட்டகாலத்தை சார்ந்ததல்ல. அதில் பெண் பாத்திரத்தை பிரதானமாக்கி இருந்தேன். இதில் அப்பா பிரதானமாகி இருக்கிறார்.
மலர் மன்னன் நான் குறிப்பிட்ட " முதல் மரியாதை ' அனுபவம் பற்றி கேட்டிருந்தார். " முதல் மரியாதை" படம் எனது " கவுண்டர் கிளப் " குறுநாவலன் மையத்தை ஒத்திருந்தது. அந்தக் குறுநாவல் "தீபம்" இதழில் வந்தது.இயக்குனர் பாரதிராஜா, கதாசிரியர் செல்வராஜ் ஆகியோருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினேன்.இரண்டு முறை திரும்பி வந்தன. மூன்றாம் முறை பெற்றுக் கொண்ட பாரதிராஜா பதில் அனுப்பியிருந்தார் அவரின் வழக்கறிஞர் மூலம்: " கடிதம் அனுப்பி இருக்கும் ஆர் பி சுப்ரமணியனுக்கும் . சுப்ரபாரதிமணியனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை " ஆர் பி சுப்ரமணியன் என்பது என் இயற்பெயர். நான் தான் சுப்ரபாரதிமணியன் என்பதை நிரூபிக்கவேண்டியுருந்தது. அப்போது தீபம் பத்திரிககை அலுவலகத்தில் மறைந்த எழுத்தாளர் என் ஆர் தாசனை சந்தித்தேன். அவரின் " வெறும் மண் ' என்ற நாடகத்தைத் தழுவி பாலச்சந்தர் ' அபூர்வ ராகங்கள் " எடுத்ததை மையமாகக் கொண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்தவர்.அவரின் அனுபவத்தைச் சொன்னார்:
" முதல் ஏழு ஆண்டுகள் வாய்தாதான், பிறகு 3 ஆண்டுகள் விசாரணை. முடிவில் ஆமாம் கதையில் ஒற்றுமை உள்ளது 1000 ரூபாய் அபராதம் என்று விதித்தார்கள். நான் சென்னைக்காரன். வழக்கறிஞர் செந்தில்நாதன் நண்பர். எனவே அலைந்தோம். நீங்கள் ஹைதராபாத்தில் இருக்கிறிர்கள். சென்னைக்கு அலைய முடியுமா " . நான் அப்போது ஹைதாராபாத்தில் வசித்து வந்தேன். எனவே வழக்கை விட்டு விட்டேன்.
எனது " கவுண்டர் கிளப் " மையம் இது; கவுண்டர் ஒருவர் கிராமம் ஒன்றில் கிளப்=டீ கடை வைத்திருப்பார் . மனைவியுடன் உறவு இருக்காது. ஒரு பெண் =தாழ்ந்த ஜாதி தனது தந்தையுடன் அந்த கிராமத்திற்கு வேலை தேடி வருவாள் தந்தையுடன். கவுண்டரின் நிர்கதி தெரியவரும். இருவரும் நட்பு கொள்வார்கள். கவுண்டரின் மனைவி கவுண்டர் ஊரில் இல்லாத ஒரு நாளில் அவளை தெருவில் வைத்து அடித்து அவமானப்படுத்துவாள்.ஊர் திரும்பிய கவுண்டர் அதிர்ந்து போவார். அப் பெண் தற்கொளை செய்து கொள்வாள்.அவளின் நினைவாக டைம் பீஸ் கடிகாரம் உட்பட பல இருக்கும்.தலை மயிரில் கோத்த பாசிமணி உட்பட. மையம் இது.
படத்தில் சிவாஜி, ராதா ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிவாஜியின் மாப்பிள்ளை, சத்தியராஜ் கதைகள் கிளைக்கதைகள் தனி. .படத்தில் கி ராஜநாரயணனின் கோபல்லகிராமம் இதில் ஒரு பகுதியாக வந்திருக்கும்.
எனது " சாயத்திரை "நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருநததை பெற்றுக்கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போதைக்கு 5 பேர் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்டதினால் "ஆன் லைனில் "ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ். பிளீஸ் என்று தொலைபேசியிலேயே தொடர்ந்துக் கேட்டு கொண்டிருந்தார். 15 நாளில் முழு திரைக்கதையை " ஆன் லைனில் " எழுதி முடித்தேன்.அது என்ன பாடுபடப் போகிறதோ.
திரைப்படத்துறையைச் சார்ந்த ஒரு நண்பர் சொல்வார்: 'பத்து குயர் பேப்பர் வாங்கிக் குடுத்து இதுதா சன்மானம்முன்னு அனுப்பிச்சிருவாங்க."
சினிமாவுலே இதைல்லாம் சகஜமப்பா..
= சுப்ரபாரதிமணியன்

வெள்ளி, 11 செப்டம்பர், 2009
செய்தி சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
சாயத்திரை : மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
==================================================
சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை "நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு நூல் " சாயம் புரண்ட திர "வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள மலையாளி சமாஜத்தில் ஓணம் பண்டிகை அன்று நடைபெற்றது. மலையாள கவிஞர் விஜயகுமார் குனிச்சேரி நாவலை வெளியிட்டுப் பேசினார். " மூன்றாம் உலக நாடுகளின் ச்ற்றுச்சூழல் பிரச்சினைகள் விசுவரூபம் எடுத்து மனித உரிமை விசயங்களாக மாறி வருகின்றன. சுற்றுச் சூழல் பிரச்சினைகள் சார்ந்த அக்கறையை கலைப்படைப்புகளில் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தை சுப்ரபாரதிமணியனின் " சாயத்திரை " நாவல் வலியுறுத்துகிறது. " என்றார்.
" சாயம் புரண்ட திர " நூலை மலையாளத்தில் மொழிபெயர்த்திருப்பவர் கோவையைச் சார்ந்த ஸ்டேன்லி ஆவார். திருப்பூரின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை மையாமாகக் கொண்டும் , நொய்யலை ஒரு கதாபாத்திரமாகவும் கொண்ட " சாயத்திரை " நாவல் ஆங்கிலத்திலும் ( டாக்டர் ராஜ்ஜா மொழிபெயர்ப்பு The coloured curtaiந் ), ஹிந்தியிலும் ( மீனாட்சிபுரி மொழிபெயர்ப்பு Reng Rengli sadhar meiheli ) முன்பே மொழிபெயர்ப்பாகி வெளிவந்துள்ளன. கனனடத்தில் தமிழ்ச்செல்வி மொழிபெயர்த்து 2 ஆண்டுகள்ல ஆகி விட்டது. அது விரைவில் வெளி வரலாம்.
" சாயம் புரண்ட திர " நூலை திருவனந்தபுரம் " சிந்த " பதிப்பகம் வெளியிட்டுள்ளது . விலை ரூ 85
செய்தி : issundarakkannan7@gmail.com
-------------------------------------------------------------------------------------
சாயத்திரைகள்
சுற்றுச் சூழல் சீர்கேட்டில் சாயப்பட்டறைகள் குறித்த எந்தவொரு முனுமுனுப்பையும் சகித்துக் கொள்ளாதபடி தொழில் சமூகம் இருந்தது. மூடப்பட வேண்டிய சாயப்பட்டறைகளின் பட்டியல்கள் நீதிமன்றங்களும் மாத கட்டுப்பாது வாரியல்களும், அரசும் அறிவிக்கிற போது தொழிலாளர் நலனை முன்னிருத்தி அவை பயங்கரவாத செயல்களாக பேசப்படுவது கேளிக்குறியது. சுற்றுச் சூழல் பற்றின அக்கறை நியாய வணிகத்தின் நெறிமுறைகள் திரும்ப திரும்ப பல்வேறு வகையான ஏற்றுமதிக் கொள்கைகள் மனித உரிமை அம்சங்களின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை அலட்சியப்படுத்தப்படும் போதும் தொழில் சமுகம் இவ்வகை நெருக்கடிகள் குறித்து யோசிக்காதது இன்னும் கேலிக்குள்ளானது.
சாயப்பட்டறை சலவை ஆலைகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரை காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் பகுதிக்கு ராட்சத குழாய்கள் மூலம் எடுத்துச் சென்று கடலில் கலக்கம் செய்ய வேண்டும். இது மட்டுமே பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி என்கிறார். நகரின் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் நகராட்சியின் தலைவருமான ஒருவர் சுனாமியில் பாதிக்கப்பட்ட காரைக்கால் அல்லது நாகப்பட்டிணம் மக்களுக்கு இன்னும் அதிர்ச்சி தரும் இந்த சுனாமி செய்தி இப்பிரச்சனைக்கு சாயப்பட்டறைகள் மட்டுமா காரணம் என்று கொதிக்கிறார்க்ள் சாயப்பட்டறை உரிமையாளர்கள். பின்னலாடை தயாரிப்பில் 6000 கோடி அன்னிய செலவாணியை ஈட்டித் தருவதில் சாயப்பட்டறைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டால் சுற்றுச் சூழல் பிரச்சனைகள் குறையும். நிலத்தடி நீர் தில்சூர் மட்டுமல்ல அதையொட்டிய ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது. விவசாய பயன்களுக்காக கட்டப்பட்ட ஒரத்துப்பளையம் அரசு தில்சூர் சாயக்கழிவுகளை தேக்கி வைத்திருக்கிற வெடிகுண்டாக இருக்கிறது. அதில் தேங்கியிருக்கும் சாய நீரை வெளியேற்றுவது குறித்து பல சர்ச்சைகள் உள்ள அணையைத் திறந்து விடாதீர்கள் என்று விவசாயிகள் கூக்குரல் இடுவது சாதரணமாகி விட்டது. உலக சுற்றுச் சூழல் தினத்தில் அணையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராகும் இளைஞர்கள் அவ்வப்போது அணையில் மதகுகளை திறக்க வேண்டாம் என்று சொல்லி மறியலில் கைதாகும் விவசாயிகளின் நம்பிக்கைகளும் தகர்ந்து கொண்டிருக்கின்றன அவர்களை வழி நடத்தும் சிறு சிறு குழுக்களின் தலைவர்கள் பல்வேறு தரப்பிலிருந்து வரும் நிர்பந்தங்கள் காரணமாக காணாமல் போய்விடுகிறார்கள். தங்கள் வீடுகளின் கல்யாணம், சாவு காரியங்கள் ஊர் பொது கோவிலில் திருப்பணிகள் காரணமாய் இப்பிரச்சனையில் தாங்கள் ஈடுபட முடியாமல் இருப்பதாக அவ்வப்போது தெரிவிக்கிறார்கள். ஓரத்துப்பiளாயம் சாயக்கழிவு குறித்த போராட்டத்தை முன் நின்று நடத்திச் செய்ய தன்னார்வக் குழுக்களும் தயங்குகின்றன. அப்பகுதியின் விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றினைவதில் பல தடைகள் நிர்பந்தங்கள் உள்ளன. விவசாயிகளே சட்ட ரீதியான அலோசனைகளுக்கு கூட தங்களை தயார்படுத்திக் கொண்டு தன்னார்வ குழுக்களின் உதவிகளையும், ஆலோசனைகளையும் பெறத் தயங்கும் போது போராட்ட செயல்பாடுகள் முடங்கிப் போயிருக்கின்றன.
ஓரத்துப்பாளையம் சாயக்கழிவை சுத்தம் செய்ய ரூபாய் 6 கோடி என்ற சாதாரண நஷ்ட ஈட்டுத் தொகையை உயர்நீதிமன்றம் உத்தரவாக சாயப்பட்டறைகளுக்கு வழங்கியது. அதில் சொற்ப பணமாக ரூபாய் 1 கோடி மட்டும் வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது அதிலும் முதல் தவணையாக ரூபாய் 1 கோடி மட்டும் பெயருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் சொன்ன நஷ்ட ஈட்டுத்தொகையை கட்டுதல் மற்றும் சாயக்கழிவு நீரை மறுசுழற்சி முறைக்கு உள்ளாக்கி தொழிலைத் தொடர்தல் என்பது மட்டுமே இன்றைக்குள்ளத் தீர்வாக உள்ளது. சுமார் ஆயிரம் சாயப்பட்டறைகள் உள்ள ஊரில் 5ரூ சாயப்பட்டறைகள் மட்டுமே ரிவெர்ஸ் ஆஸ்மாசிஸ் என்ற சாயக்கழிவு நீரை மறுசுழற்சி சுத்தமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். கழிவுநீர் மறுசுழற்சி முறைக்காக ஆகும் செலவு லாபத்தை குறைக்கும் என்பதே தயாரிக்ககுறியதாகிறது பொது சுத்திகரிப்பு முறை என்பது பெரிதாக முன் வைக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தை கை கொள்ளாதவர்கள் தொழிலில் இருந்து துரத்தப்படுவார்கள் என்பது தொழில் சமூகத் தரப்பிலிருந்தே பல ஆண்டுகளாய் எச்சரிக்கையாய் விடுக்கப்பட்டதை மறுத்ததால் சிறிய சாயப்பட்டறையினர் சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
சாயக்கழிவு நிர் பிரச்சனைக்கு சாயப்பட்டறையினர் மட்டுமே காரணமல்ல பணியின் உற்பத்தியாளர்களும் எனவே நஷ்டஈட்டை அவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை புறக்கணிப்பதில் மேற்கத்திய நாடுகள் அக்கறை கொண்டிருக்கும் நேரத்தில் பணியின் சாயக் கழிவால் சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மனித உரிமை பிரச்சனையாக விருவரூபம் எடுப்பது மேலை நாடுகள் தங்களின் தொழில் அக்கறையை திருப்பூரிலிருந்து வேறு ஊர்களுக்கு நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்பாகவும் அமைந்து விடும் சூழல்கள் உருவாகியுள்ளன.
சமீபத்தில் சில சாயப்பட்டறைகள் மூட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவில் அதிர்ச்சி அடைந்த சாயப்பட்டறைகள் உரிமையாளர்கள் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தமே தொழிலாளர், முதலாளிகள் தரப்பில் பல வகை அச்சங்களைக் கிளப்புவதாக இருந்தது சாயப்பட்டறைத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் அதை பயத்துடன் ஓய்வு தினமாக எடுத்து கொண்டனர் ஆனால் ஒரே நாளில் சாயப்பட்டறைகளுக்கு பயன்படும் உப்பு, சாயம், ரசாயனம், விறகு, தண்ணீர் ஆகியவற்றின் விற்பனையான ஒரு கோடி நஷ்டம் ஏற்பட்டது. திருப்பூர் சாய ஆலைகளில் ஒரு மாதத்தில் 400 டன் சாயமும், 500 டன் சோடா வாஷ், காஸ்டிக் சோடா, உள்ளிட்ட ரசாயனப் பொருட்களும் 1000 லோடு சோடியம் குளோரைடு உப்பும் பயன்படுத்தப்படுகிறது. இதைத்தவிர இதனால் அரசுக்கு வரும் வருமான இழப்பும் பெரிய தொகையாகும் சாய சலவை தங்களுக்கு ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் தண்ணீர் பயன்பாடாகிறது. இவை முழுக்க வாலிகள் மூலமே கொண்டு வரப்படுகிறது. இந்தத் தண்ணீர் கொண்டு வரப்படுத்தலிலும் சிக்கல்கள் தொடர்கின்றன அவை எடுத்து வரப்படும் பக்கத்திலுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் கிராமவாசிகள் நடத்தும் மறியல் போராட்டங்கள் தொடர்வதால் இன்னும் அதிக தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டியிருக்கிறது. பவானியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்திற்கு ஈரோடு மாவட்ட பொதுமக்களும் சுற்றுச்சுழல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவிப்பது தொழில் நலத்தை முன்னிட்ட துரோகச் செல் என்று வெளிக்காட்டப்பட்டு ஒதுக்கப்படுகிறது.
சாயப்பட்டறைகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் திருப்பூர் தண்ணீர் திட்டம் தெற்காசியாவிலேயே கட்டி, உரிமையாக்கி இயக்கி மாற்வம் திட்டம் எனப்படுகிறது. பவானி ஆற்று நீர் இதற்கு பயன்படப் போகிறது. இதில் நாளொன்றுக்கு 1150 இலட்சம் லிட்டர் நீரை பின்னலாடைத் துறையினர் பெறுவர். திருப்பூர் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டிருக்கும் இத்திட்டத்தில் மகேந்திரா மகேந்திரா (இந்தியா) பெச்டெல் (அமெரிக்கா), யுனைட்டெட் யூடிலிட்டி (இங்கிலாந்து) முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆயிரம் லிட்டருக்கு நாற்பத்தைந்து ரூபாய் தண்ணீர் கட்டணம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோகத்திற்கு ஆயிரம் லிட்டருக்கு ஐந்து ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது பவானியில் நீர் குறைந்து போவது மற்றும் அதிக லாபம் ஈட்ட முடியாத நிலை உருவாகும்போது பன்னாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்திலிருந்து நழுவிக் கொள்வது திருப்பூரை பாலைவனமாக்கும்.
தமிழகத்தின் தண்ணீர் மயமாக்கம் திட்டத்தின் முன்னோடியான திருப்பூர் பல சந்தேகங்களையும், சங்கடங்களையும், உருவாக்கியுள்ளது பின்னர் பசி சாவுகள் போல தாக சாவுகளும் ஏற்படும் செய்திகள் விஷக்காய்ச்சலால் பரவும் கண்களை மறைக்க பல திரைகள் உள்ளன.

புதன், 9 செப்டம்பர், 2009
காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
===============================
காஞ்சீவரம் தமிழ்த் திரைப்படம் தேசிய விருது பெற்றுள்ளது.சென்றாண்டு கேரளா திரைப்படவிழாவில் அதை முதலில் பார்த்தேன். அதிர்ச்சியடைந்தேன்.
அன்று தங்கபச்சானின் அழகி திரைப்படம் வெளியாகியிருந்த நாள்.ஒளிப்பதிவாளர் ஒருவர் தொடர்ந்து என்னை சென்னைக்கு எனது சாயத்திரை நாவலை திரைப்படம் ஆக்கும் திட்டத்திற்கான ஆலோசனைக்காக கூப்பிட்டுக்கொண்டே இருந்தார்..அன்று தான் வாய்த்தது.ஆலோசனையின் போது நாவலின் இறுக்கம் காரணமாகவும், திரைக்கதை ஆக்குவதில் இருந்த சிக்கல்கள் காரணமாகவும் அந்த ஒளிப்பதிவாளர் வேறோரு கதையை , அது நெசவாளர் வாழ்க்கை பற்றி இருந்ததால் ( நான் நெசவாளர் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால்) அதை திரைக்கதை ஆக்குவது பற்றி ஆலோசித்தோம். கதையின் மையம் முடிவானது.3 நாட்களுக்குப் பின் திருப்பூர் திரும்பிய நான் ஒரு வாரத்துள் 30 சம்பவங்கள் கொண்ட திரைக்கதையை எழுதி முடித்து அனுப்பி விட்டேன். ஒளிப்பதிவாளர் வெகு சீக்கிரம் என்பதால் வெகுவாக மகிழ்ந்தார். திரைக்கதைக்கு தற்காலிகமாக பட்டு என்று பெயர் இட்டோம். ஒளிப்பதிவாளர் அதை குறைந்த பட்ஜெட் படமாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். காஞ்சிபுரம் சென்று இடங்கள் கூட பார்த்து வந்தார்.தேவைப்படும் போது கூப்பிடுவதாகச் சொன்னார். பலரிடம் அந்த திரைக்கதை பார்வைக்கு அனுப்பியதையும் அவர் பின்னர் பகிர்ந்து கொண்டார்.தயாரிப்பில் நிச்சயம் ஈடுப்டுவேன் என்றார்.
வேறு செய்திகள் இல்லாமல் நாட்கள் கழிந்தன.சில ஆண்டுகளுக்குப் பின்.. கோவையில் ஒரு விழாவிற்கு வந்த நடிகை ரேவதியிடம் அந்த ஒளிப்பதிவாளர் என்னை அறிமுகப்படுத்திய போது பட்டு திரைக்கதையை எழுதியவன் என்றார் .ரேவதியும் அதை எடுக்கலாமே. எனக்கு தாருங்கள் என்றார். ஒளிப்பதிவாளர் அதை தான் தொடரப்போவதாக சொன்னார். பிறகு காஞ்சீவரம் திரைப்படம் பற்றி ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தியை படித்து விட்டு அவரிடம் தொடர்பு கொண்ட போது, தனக்கு பார்க்க கிடைக்கவில்லை, செய்தி தெரியவிலை என்றார்.
கேரளா சர்வதேச திரைப்படவிழாவிற்கு தொடர்ச்சியாகச் செல்ப்வன் நான்.சென்ற டிசம்பரில் திருவனந்தபுரத்திற்கு சென்ற போது காஞ்சீவரம் திரையிடல் இருப்பது திகில் அனுபவமாக இருந்தது.திரையிடப்பட்ட அன்று பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது.எனது திரைக்கதையில் ஒரு நெசவாளர் வீட்டு முதிர்கன்னிப் பெண் தனக்கான கல்யாண பட்டுப் புடவையை தானே நெய்து கொள்வாள். குடிகார தகப்பன்.திருமணக்கனவு நிறைவேறாதபோது தற்கொலை செய்து கொள்வாள். அவளது பிணத்திற்கு தந்தை அவள் நெய்த பட்டு சேலையை போர்த்துவார்.நான் எழுதிய திரைக்கதை பலரிடம் பரிசீலனைக்காக சென்றதை ஒளிப்பதிவாளர் சொன்னது ஞாபகம் வந்தது.திரைப்பட விழாவிற்காக வந்த தமிழ் நாட்டு நண்பர்களுடன் அதைப் பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக அறை நண்பர் விசுவாமித்திரனுடனும். பிறகு தமிழ் பத்திரிக்கை நண்பர்களிடமும் இதைச் சொன்னேன். தளவாய் சுந்தரம் போன்றவர்களிடமும்.
முதல் மரியாதை பட அனுபவம் 25 ஆண்டுகளுகு முன் ஏற்பட்டது இது போலத்தான்.
=சுப்ரபாரதிமணியன்
புதன், 2 செப்டம்பர், 2009
உடுமலைவாசியாகிவிட்டேன்...
1. உடுமலைவாசியாகிவிட்டேன்
================
15 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூரில் வசித்து வந்த நான் உடுமலைக்கு மாற்றலாகி ஒரு வருடம் ஆகி விட்டது. வீடு பார்த்து குடி வந்தும் விட்டேன். திருப்பூரைப் பிரிவது சிரமமாக இருந்தது. இங்கு வந்த பின்பு " பதியம் " நடத்திய ஒரு கவிஞர்கள் சந்திப்புக்காக திருப்பூர் சென்றபோது அந்நிகழ்ச்சியில் 'பாரதிவாசன்' 'இடம்பெயர்வு' என்ற தலைப்பில் அவர் வீடு மாற்றியது பற்றி வாசித்த கவிதை என் அனுபவமாகவும் இருந்தது.கவிஞர்கள் கார்த்திகேயன், சுரேஸ்வரன், தமிழவன், யாழ்மதி, இளஞ்சேரல், ஆகியோரையும் சந்திக்க முடிந்துது.
( சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கவிஞர்கள் சந்திப்பில் நாஞ்சில் நாடன் கவிஞர்கள் சந்திப்பு என்பதே குடிப்பதற்காகவே என்று குற்றம் சாட்டியதைக் குறிப்பிட்டபோது சுரேஸ்வரன் ஆமாம் அதுக்குந்தான் என்றார்.)
2. சமீபத்திய இரண்டு சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகள்:
அ. அஸ்மிதா நிகழ்ச்சி
பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் வாசிப்பு
சென்னை கன்னிமேரா நூலகம்
பங்கு பெற்றோர்: பாமா, ராஜலட்சுமி, பாரதி
ஆ. மலையின மக்கள் இலக்கியம்:சேலம்
பங்கு பெற்றோர்:சீ பக்தவச்சலபாரதி, சிற்பி, தமிழ் நாடன்,
ஆ செல்லபெருமாள், பெ.மதையன்,இந்திரன்
நசிமுதீன், கரு அழ குணசேகரன்
============================================================
அடுத்த இரு நிகழ்ச்சிகள்;
1. தங்கம் மூர்த்தியின் ஒருங்கிணைப்பில் புதுக்கோட்டையில் கவிஞர்கள் சந்திப்பு
2. சுப்ரபாரதிமணியணின் ஒருங்கிணைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு
திருப்பூரில்:
" தமிழ் நாடக இயக்கங்களும், நவீன போக்கும்
=============================================================
சாகித்திய அகாதமியின் : Writers in Residence
=========================================
சாகித்திய அக்காதமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்ற வகையில் சமீபத்தில் சாகித்திய அகாதமி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மாதாந்திர விசயமாக, சாதாரணமாகி விட்டது.
சாகித்திய அகாதமி இவ்வாண்டு கீழ்க் கண்ட எழுத்தாளர்களுக்கு Writers in Residence என்ற திட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கு ரூ 25,000/ வீதம் இலக்கியப் பணிக்காக உதவி வழங்கியுள்ளது .தோப்பில் முகமது மீரான் , சா கந்தசாமி, பொன்னீலன், ஈரோடு தமிழன்பன்,, பிரபஞ்சன், ஆகியோர் அவர்கள் ஆவர்.
இத்திட்டத்தின் கீழான இலக்கிய நிகழ்ச்சியொன்றை தோப்பில் முகமது மீரான் திருநல்வேலியில் இந்து கல்லூரியில் நடத்தினார். நானும் கலந்து கொண்டேன். புதுமைப்பித்தன், பாரதியார், தொமுசி ரகுநாதன், திகசிவசங்கரன்,, போன்ற இலக்கிய
முன்னோடிகள் படித்த பழமையானக் கல்லூரி என்பதால் நானும் புளங்காகிதம் அடைந்தேன்.கல்லூரி வளாகத்துக்குள் தென்பட்ட புது விநாயகர் கோவில் கும்பவிசேக இரைச்சல் தொந்தரவு தந்தது. மாணவர்களிடம் பேசுவது கொஞ்சம் சங்கடமானது. நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்வது கொடுமைதான்.நானும் என் படைப்புகளும் என்ற தலைப்பில் பேசினேன். கவிஞர் கிருசி இலக்கிய போக்குகள் என்ற தலைப்பில் பேசியவர் திருநல்வேலி , கோவில்பட்டி எழுத்தாளர்களை மட்டும் அடையாளம் காட்டி குசும்பு செய்தார்,. வழக்கமான திருநல்வேலி குசும்புதான் அது.
தோப்பில் மீரானின் சமீபத்திய மிக முக்கியமான நாவலான "அஞ்சு வண்ணம் தெரு" பற்றித்தான் பேச விரும்பி கட்டுரை தயாரித்திருந்தேன். அந்த அரங்கில் கிருசியைத் தவிர வேறு யாரும் அந்த நாவலைப் படித்திருக்க வாய்ப்பில்லை என்று பட்டது அக்கட்டுரையை இந்த இதழ் "தீராநதி:"யில் வாசியுங்கள். நித்தில், கருப்பையா போன்ற நவீன இலக்கிய வாசிப்பில் அக்கறை கொண்ட ஆசிரியர்களைக் காண முடிந்தது. குற்றாலத்தில் தண்ணீர் அதிகம் இருந்தாலும் கூட்டம் இல்லை. திருநல்வேலி கதிர், தாமிரபரணி கரையில் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பது பற்றி படம் எடுத்து சிரமப்பட்டவர் இப்போது அதை யாரும் கண்டு கொள்வதில்லை.சுலபமாக சுரண்டல் நடக்கிறது என்கிறார். பிளச்சிமடா ஞாபகம் வந்நது. அங்கேயே முன்பு மாதிரி கோக்காகோலா தொழிற்சாலை இயங்குகிறது.பிளாச்சிமடாவில் நடைபெற்ற ஒரு சுற்றுசூழல் போராட்ட நிகழ்ச்சிக்கு நானும் , மகுடேசுவரனும் கலந்து கொண்டு எதிர்ப்பு கவிதைகள் படித்தோம்.வநதனா சிவா, அருந்ததி ராய் போன்றோரை சந்திக்கும் வாய்ப்பு அப்போது கிடைத்தது.மலையாள கவிஞர் விஜயகுமார் குனிசேரி அக்கறையுடன் கலந்து கொண்டிருந்தார்.
தாமிரபரணி இன்னும் திருப்பூரின் நொய்யலாகி விடவில்லை என்பதுதான் சற்று ஆறுதல்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009
சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி
==========================================
சதாவதானி செய்குதம்பி பாவலர் பற்றிய கருத்தரங்கம் நாகர்கோவில் இந்து
இந்து கல்லூரியில்நடைபெற்றது. நெசவாளர்குடும்பத்தில் பிறந்தவர். சதாவதானியாக மிளிர்ந்து சைவ இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவர். உருவ வழிபாடா, சரஸ்வதி துதி பாடலா,முழு உருவ படமா என்று சர்ச்சையில் இருந்தவர். அவரின் படைப்புகள் பல் வேறு கோணங்களில் அமைந்திருந்தன.அவரின் குடும்பத்தைச் சார்ந்தவரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.பொன்னீலன், தோப்பில் முகமது மீரான்,சிரிகுமார் ஆகியோரின் பேச்சுகள் கவனத்திற்குரியவை.சா அ. தென்னிந்திய செயலாளர் இளங்கோவனின் பேச்சு விரிவாக இருந்தது. பலரின் பேச்சு தயாரிப்பை வீணாக்கி விட்டது என்று சில கவலை கொண்டனர். என் பேச்சு பாவலரின் புலமையும், வறுமையும் என்பதாகும். சதாவதானத்தில் ஒரு அங்கமான சீட்டாட்டத்தில் அவரின் புலமை வறுமையோடு விளையாடியது என்பது என் மையமாக இருந்தது. சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெறவில்லை.
================================================================================
சிற்பி ரஸ்ய பயணம்
====================
சாகித்திய அகாதமியின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளர் சிற்பி பால சுப்ரமணியன் ரஸ்யப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு நடைபெறும் உலக புத்தகக் கண்காட்சியில் பேசுகிறார்.பயணத்தில் பங்கு பெற்றிருக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளர் பாமா ஆவார்.
=========================================================== ====================
எனது நூல்கள் மொழிபெயர்ப்பில்:
=============================
1. என் சாயத்திரை நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு " சாயம் புரண்ட திர" திருவனந்தபுரம் "சிந்தா " பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ரூ 85
. மொழிபெயர்த்தவர்: கோவையைச் சார்ந்த ஸ்டான்லி அவர்கள்.சாயத்திரையின் இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புகள் முன்பு வெளியாகி இருக்கின்றன.
2. எனது நாவல் " பிணங்களின் முகங்கள் " ஆங்கில மொழிபெயர்ப்பில் " The faces of the dead " என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. 220 பக்கங்கள். மொழிபெயர்த்தவர்: ஆர் பால கிருஸ்ணன், கோவை

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009
15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
=================================
* கவிஞர் சிற்பி இலக்கிய விருது ரூ 15,000
* சிற்பி இலக்கியப் பரிசு ரூ 5,000
கவிதைப் படைப்புகளை, தொகுப்புகளை அனுப்ப வேண்டிய
முகவரி:
கவிஞர் சிற்பி அறக்கட்டளை,
106 ( 50 ) அழகப்பா குடியமைப்பு,
பொள்ளாச்சி : 642 001.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)