சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 14 ஜூலை, 2025
குறும்படங்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு அல்ல “
” குறும்படங்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்கான விசிட்டிங்க் கார்டு அல்ல . வணிக நோக்கமின்றி எடுக்கப்படுவதால் அவை கேளிக்கை மீறி செய்திகளையும் முன் வைக்கின்றன. வாழும் காலத்திலேயே சாதனை மனிதர்களைக் கொண்டாட ஆவணப்படங்கள் அவசியம்”
என்று 17ஆம் ஆண்டின் திருப்பூர் குறும்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய குறும்பட , ஆவணப்பட இயக்குனர்கள் குறிப்பிட்டார்கள்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட பதினாறு பேருக்கு விருதுகளை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வழங்கினார். நிகழ்வுக்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார்.நூலகர் இந்துமதி, சமூக ஆர்வலர் ராஜேந்திர பாபு, கவியரசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நன்றியுரை : முத்துபாரதி வழங்கினார்
முன்னதாக ” குறும்படங்களும், திரைப்படங்களும் “ என்றத் தலைப்பில் நடந்த கருத்தரங்கினை எழுத்தாளரும் வழக்கறிஞருமான ஜீவன் நடராஜன் தொடக்கி வைத்து திரைப்படப் பயிற்சிகளுக்காக இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சிக்கல்லூரிகளின் செயல்பாடுகளை விவரித்தார். குறும்பட அனுபவங்களை விருது பெற்றவர்கள் கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.
கருத்தரங்கில் கீழ்க்கண்டோர் விருதுக்கள் பெற்றனர்.
திருவாளர்கள்
எம்.கவுரிசங்கர் சென்னை
கவின் ஜெரோம் கோவை இயக்குனர்
எஸ். ஸ்ரீராம் , திருப்பூர் இயக்குனர்
வி சீதாராமன் நடிகர் கோவை
மூர்த்தி, நடிகர்
பி கே சூர்யா இயக்குனர்
ஜான்சி, நடிகை திருப்பூர்
ம. அசோக் , கோவை
ரமேஷ் ராதாகிருஷ்ணன், நடிகர் கோவை
வி. இளைய பாரதி, நடிகர்
நவீன் சந்தர், இயக்குனர் கோவை
க.விசுவன், ஊட்டி
சிக்கந்தர் பாட்சா ,இயக்குனர், மேட்டுப்பாளையம்
ஆர். ஆனந்த், இயக்குனர் மேட்டுப்பாளையம்
அய்யாறு ச புகழேந்தி இயக்குனர்
அரவிந்தன் தஞ்சை இயக்குனர்
0
- கனவு / திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்/டாப் லைட் நூலகம் ஆகியவை இணைந்து இந்த விருது விழாவை பல்லடம் சாலை டாப்லைட் நூலகத்தில் நடத்தின
திருப்பூர் குறும்பட விருதுகள் 2025 விழா
17ஆம் ஆண்டில்..
13/7/25 ஞாயிறு காலை 10 மணிக்கு.
முன்னிலை: சுப்ரபாரதிமணியன் ( கனவு ) , தூரிகை சின்னராஜ் , இந்துமதி (டாப் லைட் நூலகம் )
0
” குறும்படங்களும், திரைப்படங்களும் “
உரைகளும் உரையாடல்களும் :
கருத்தரங்கில் பங்கு பெற்று பேசுவோர்
விருது பெறும் படைப்பாளிகள் :
திருவாளர்கள்
எம்.கவுரிசங்கர் சென்னை
கவின் ஜெரோம் கோவை இயக்குனர்
எஸ். ஸ்ரீராம் , திருப்பூர் இயக்குனர்
வி சீதாராமன் நடிகர் கோவை
மூர்த்தி, நடிகர்
பி கே சூர்யா இயக்குனர்
ஜான்சி, நடிகை திருப்பூர்
ம. அசோக் , கோவை
ரமேஷ் ராதாகிருஷ்ணன், நடிகர் கோவை
வி. இளைய பாரதி, நடிகர்
நவீன் சந்தர், இயக்குனர் கோவை
க.விசுவன், ஊட்டி
சிக்கந்தர் பாட்சா ,இயக்குனர், மேட்டுப்பாளையம்
ஆர். ஆனந்த், இயக்குனர் மேட்டுப்பாளையம்
அய்யாறு ச புகழேந்தி இயக்குனர்
அரவிந்தன் தஞ்சை இயக்குனர்
0
மாலை 4 மணிக்கு..
விருது வழங்கும் விழா
0
தலைமை: கே. பி. கே. செல்வராஜ் ( திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் )
0
நன்றியுரை : முத்துபாரதி
ஒருங்கிணைப்பு / தொடர்புக்கு : 96882 63329 / 95667 11643
- வரவேற்கும்: கனவு / திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்/டாப் லைட் நூலகம்
இலக்கியக் கருத்தரங்கம் 29/6/25
” விஞ்ஞானம் கற்பனையை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது.விஞ்ஞானக் கதைகளை படிப்பதன், எழுதுவதன் மூலம் இளைஞர்கள் கற்பனையை விரித்துக் கொண்டு புதிய சிந்ததைகளை உருவாக்கலாம். படைப்புத்தளத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இந்த வகையில் விஞ்ஞானக் கதைகள் வாசிப்பு இளைஞர்களுக்கு உதவும் “ என்று விஞ்ஞானக்கதை நாவலாசிரியர் ஆர்னிகா நாசர் ஞாயிறு நடைபெற்ற திருப்பூர் பல்லடம் சாலை டாப்லைட் நூலகத்தில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டார்.
“ விஞ்ஞானக்கதைகள் விஞ்ஞானசெய்திகளை அடைப்படையாகக் கொண்டு எழுதப்படுபவை ஒருவகை… இன்னொரு வகை பேண்டசியும் கேளிக்கையும் கொண்டது. அது மனதை குதூகலிக்கச் செய்யும் “ என்று அவர் குறிப்பிட்டார்.
ராஜேந்திர பிரபு கருத்தரங்கைத் துவக்கிப் பேசுகையில் தத்துவங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்றார்.
நூலகர் இந்துமதி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
கவிதையியல் வாழ்வில் செய்யும் மாயங்கள் பற்றி கவிஞர் அம்சப்ரியா பேசினார்.
சிறார் இலக்கிய எல்லைகளை எப்படி நாங்கள் மீறினோம் என்பது பற்றி
பூங்கொடி பாலமுருகன் , சரிதா எஸ் ஜோ ஆகியோர் பேசினர்.
தரவுகளும் தொல்லியலும் சரித்திர கதைகளை இயக்குவது எப்படி
சரித்திர நாவலாசிரியர் பவுசியா இக்பால் தன் உரையில் குறிப்பிட்டார்.
பயணநாவல் வகையில் சுப்ரபாரதிமணியன் அவரின் சில நாவல்கள் எழுதிய அனுபவத்தைச் சொன்னார்.
கனிணியும் இயந்திரங்களும் ஓவியனை முடக்கி விட முடியுமா . ஓவியர்கள் உலகம் படைப்பிலக்கியத்தோடு இணைந்தது என்று ஓவியர் தூரிகை சின்ன ராஜ்தன் உரையில் குறிப்பிட்டார்.முத்துபாரதி இலங்கை அகதியியல் சார்ந்த நாவல் அனுபவங்களைப் பற்றிப் பேசினார்.
யாழி இந்துமதி எழுதிய இரு வாழ்வியல் அனுபவ நூல்கள் வெளியிடப்பட்டன. கனவு இலக்கிய இதழின் 39ஆம் ஆண்டு மென்னிதழ்- 120 வெளியிடப்பட்டது. தூரிகை சின்னராஜ் எழுதிய வானவில் வாழ்க்கை -ஓவியர்கள் உலகம் நூல் வெளியிடப்பட்டது
கவிஞர் மதுராந்தகன் நன்றி கூறினார்.கனவு இலக்கிய அமைப்பும் டாப் லைட் நூலகமும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின
திரை நாவல் ஓரு பார்வை.
***
ஞாயிறன்று பல்லடம் டாப்லைட் நூலகத்தில் நடைபெற்ற இலக்கிய உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டேன்.
தோழர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் தனது குறுநாவலை வழங்கினார்.
இது திரை நாவல்.
50 பக்கங்கள்.
எளிய கதை. ஆனால் வலுவான கதை. வியாபாரத்தை விரிவாக்க பெண்களின் முகம் எவ்வாறான பயன்பாட்டற்கு உள்ளாகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பெரும் உணவு விடுதிகளுக்கு முன் நின்று கொண்டு. படும் சிரமங்கள், மற்ற வேலை செய்யும் பெண்கள் படும் துன்பங்கள் எனக் களம் பாரட்டும் வகையில் அமைந்துள்ளது.
வித்தியாசமான கதைக் கரு.
பாராட்ட வேண்டிய நூல்
வெளியீடு ; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
044-26251968 - fb amsapriya
வணக்கம்
உரத்தசிந்தனை
வணக்கம் இனியநண்பரேஇந்தமாதஉரத்தசிந்தனையில்உங்களைப்பற்றியும் kanavu என்னைப்பற்றியும் கட்டுரைகள்
வந்து ள்ளன,மிகவும்
மகிழ்ச்சி!நீங்களும் நானும்(82+)தொடர்ந்து இலக்கிய பணிகள்செய்துவருகிறோம்,பெருமை
வளர்ச்சீ!ஆனால் நமதுஇலாக்காதேய்ந்துவருவதுவருத்தம்
சென்றவாரம்கடலூருக்குபாவண்ணன்
வந்திருந்தார், kadal nagarajan , kadaloor
கோவை சொல் முகம் சந்திப்பு
6/7/25 கோவை விஷ்ணுபுரம் பதிப்பகம் சிற்றரங்கில் நடைபெற்றது.
சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பற்றிய நான்கு அமர்வுகள்
நாவல்கள் பற்றிய நான்கு அமர்வுகள்
நடைபெற்றன.சிறப்பான ஆய்வுகள்.
விகரம், பூபதி, சுஷில்குமார், சுதா சீனிவாசன்,நவீன், அருணா, , உமா பாலாஜி, நரேன் ஆகியோர் உரையாற்றினர்.
நுணுக்கமான இளைஞர்களின் பார்வைகள் . பெண்களின் பார்வையில் மீட்சி தேடும் விடுதலை என்று அமைந்தது.
2
சொல்முகம் கருத்தரங்கில் பலரும் பேச்சில் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் குறிப்பிட்டார்கள்
பலரும் என்னுடைய ஒவ்வொரு ராஜகுமாரிகளுககுள்ளும் சிறுகதைகளை பற்றி குறிப்பிட்டார்கள்
அந்த கதை வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன அண்ணன் மீரா அவர்கள் அன்னம் இதழில் வெளியிட்டார் .
அந்த கதை வந்த போது ஜெயமோன் அவர்கள் சுமார் 40 நண்பர்களுக்கு கடிதங்கள் மூலமாக அந்தக் கதையை சிபாரி செய்து எழுதி இருப்பதை பலமுறை அவர் குறிப்பிட்டு இருக்கிறார் அதை அவரே மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் கதா இதழில் வெளிவந்தது
பிறகு என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் வெளிவந்த போது அதைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதினார் அந்தக் கட்டுரையில் சுப்ரபாரதி மணியனுக்கான வடிவம் நாவல் தான் என்று ஜானகிராமனை போன்றவரை குறிப்பிட்டு எழுதி இருந்தார். அப்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் என் இலக்கிய பயணத்தில் 29 நாவல்கள் எழுதிய பிறகு அவருடைய கணிப்பு ஆரம்பத்திலேயே சரியாக இருக்கிறது இருந்திருக்கிறது என்பதை கண்டு கொண்டேன் என்பதை பற்றியும் குறிப்பிட்டேன்
சிறப்பாக அமைந்தது.நன்றி சொல் முகம் குழுமம் நண்பர்களே
3
நரன் அவர்கள் சிலுவை நாவலைப் பற்றி விரிவாக பேசினார் மிகவும் சிறந்த உரையாக இருந்தது அவருடைய படைப்புகளை சொல்வனம் போன்ற இதழ்களில் படித்திருக்கிறேன்
300 ஆண்டுகால கோவை பகுதி சரித்திரத்தில் சோமனூர் கருமத்தம்பட்டி மேட்டுப்பாளையம் திருப்பூர் உட்பட பகுதிகளில் மாந்தர்கள் இடம்பெற்று இருப்பதும் ஒரு கிறிஸ்துவ விதவைப் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த நாவலில் அவள் விதவை என்பதை நாலு தலைமுறைகளுக்குப் பின்னாலும் சிலர் குறிப்பிட்ட பேசி கொச்சைப்படுத்துவதையும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை தொடர்ந்து இயேசுவின் மேல் கொண்ட அக்கறையால் இயேசுவின் மேற்கொண்ட அக்கறையால் முழுமையடைந்திருப்பதையும் ஆனால் அவருடைய மகன்களில் ஒருவர் பொதுவுடமைக் சார்ந்த அக்கறையில் வாழ்க்கையக்கொள்வதும் உலகமயமாக்கலின் தாக்கத்தால் இன்றைக்கு ஜிஎஸ்டி தாக்கம் வரைக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களும் கொங்கு மண்டலத்தின் பொருளாதார வீழ்ச்சியும் பனியன் சார்ந்த தொழில்
அமைப்புகளும் இன்னும் அந்த நெசவுக்குடும்பங்கள் பாதாளத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிற துயரமும்
தனியார் மயமாக்கப்பட்ட சூழலில் துயருறும் புதிய தலைமுறை பற்றியும் இந்த நாவலில் பல்வேறு படிமங்களாக வந்திருப்பதும் பல்வேறு தொன்மக்கதைகள் இந்த நாவலில் இடம்பெற்றதும் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டார் ..அட்டையில் உள்ள
ரெம்ப ரண்ட்
ஓவியம் வெளிப்படுத்தும் உணர்வுகளை பற்றி விரிவாகச் சொன்னார்
அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
வணக்கம்
மிகவும் நன்றி
நெகிழ்வான தருணங்கள்..
நுணுக்கமான அலசல்..
படைப்பாளி பெருமை கொள்ள நல்ல சந்தர்ப்பம் ..
நன்றி.. கோவை சொல் முகம் நண்பர்களே. 6/7/25 எனக்கு மகிழ்ச்சி தந்த நாள். .. subrabharathi@gmail.com
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)