சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

அசோகமித்திரன் / கோவை ஞானி .... சமீபத்தில் ரெண்டு சிறு வெளியீடுகள் படித்தேன சிறப்பான வெளியீடுகள். நீண்ட கட்டுரைகளை கொண்ட வெளியீடுகள் ஆனால் அவற்றுக்குள் அந்த படைப்பாளி பற்றிய முழு பார்வையும் கொண்டு வர முடிந்தது. இதே போல முன்பு அறிஞர் அண்ணா உடைய படைப்புகள் பற்றிய சிறு வெளியீடுகள் படித்தேன்.. இந்த இரண்டு அறிஞர்கள் பற்றிய இந்த நூல்களில் முழுமையான பார்வை இருந்தது 0 அசோகமித்திரன்/ கோவை ஞானி - வெளியீடுகள் அவர்களின் எழுத்தில் எனக்கு எப்போதும் ஈடுபாடு இருந்தது. காரணம் அவர் 20 வயது வரை வாழ்ந்த செகந்தராபாத் நகரத்தில் நானும் 8 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் நான் வாழ்ந்த சமயங்களில் பலமுறை அசோகமித்ரன் அவர்கள் செகந்தராபாத் வந்திருக்கிறார் அங்கு அவருடன் பல இடங்களுக்கு சென்று இருக்கிறேன். அவருடைய பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அவர் இறுதி காலம் வரைக்கும் ஹைதராபாத் சார்ந்த கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார் என்பது தான் மிக முக்கியமாக எனக்குப் பட்டது. கனவில் 30 ஆண்டுகளுக்கு முன்னால் அசோகமித்ரன் சிறப்பிதழ் வெளியிட்டு இருக்கிறேன். அதில் டிரஸ்க்கி மருதுவினுடைய அட்டைப்படம். உள்ளே ஜெயமோகன், திலிப் குமார், அரவிந்தன் ஜெகதீஷ் உட்பட பலரின் கட்டுரைகள் மற்றும் அசோகமித்திரன் அவர்களுடைய பிரசுரமாகாத சில படைப்புகளும் இடம்பெற்றிருந்தன. பின்னால் அவருக்கு 77 ஆம் வயது நிறைவேற்றபோது இன்னும் சில கட்டுரைகளை சேர்த்து அசோகமித்திரன் 77 என்று அந்த புத்தகத்தை கொண்டு வந்தேன். அதை திலகவதி அவர்களின் அமிருதா பதிப்பகம் வெளியிட்டிருந்தது இப்போது கூட அதை மறுபடியும் கொண்டு வர வேண்டும் என்று இரண்டு பதிப்பகங்ளுக்கு அனுப்பிபேன். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. அசோகத்தினுடைய படைப்புகள் சார்ந்து ஒரு தீவிரமான அக்கறை கடந்த 20 ஆண்டுகளில் உருவாகி இருப்பது மகிழ்ச்சி தருகிறது - அசோகமித்திரன் படைப்புகளில் வாழ்வியல் எதார்த்தங்களை குறிப்பாக அவலங்களை இன்னும் குறிப்பாக பாச உணர்வுகளின் புறக்கணிப்பு சார் இன்னல்களை விவரித்துச் செல்ல காட்சிப்படுத்த வகைப்பாடு அமைந்த கதை சொல் முறையை பொருத்தமாக அமைந்துள்ளது கதை மாந்தரோடு நெருங்கி நின்று கதை நிகழ்வுகளை உயிர் உடன் விவரிப்பதுடன் தீர்வு காண முடியாத நிலையில் தீர்வு இன்றி கதையை முடிக்கவும் இதை இந்த கதை சொல் முறை பெரிதும் அசோகமித்திரன் அவர்களுக்கு கை கொடுத்திருக்கிறது என்கிறார் 0 கோவை ஞானி ஐயா அவர்கள் கோவை மாவட்டம் என்ற சோமனூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்த ஊருக்கு பக்கத்தில் உள்ள செகடந்தாளி என்ற கிராமத்தில் நான் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் அவரோடு பாசத்துடன் பழகி இருக்கிறேன். அவருடைய பல கட்டுரைகள் கனவு இதழில் வெளிவந்திருக்கின்றன.. அவர் பக்கத்தில் கோவையில் அவர் இருந்த காரணத்தினால் அவருடன் பேசி விவாதம் செய்து பல விஷயங்களை தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஆளுமைகள் என்ற என்னுடைய நூலில் கூட எனக்கு பிடித்த சில ஆளுமைகளை பற்றி சொல்கிறபோது கோவை ஞானி அவர்களை அந்த நூலில் முதலில் சொல்லி இருக்கிறேன் அந்த நூலில் முதல் கட்டுரையாக அவரைப் பற்றிதான் இடம்பெற்றிருக்கிறது .ஞானி அவருடைய விமர்சனப்பார்வை பற்றிய பல விஷயங்கள் இந்த சிறு நூலில் இடம் பெற்று இருக்கின்றன. - ஞானி அவருடைய படைப்புகளை பற்றிய சரியான அணுகுமுறை இந்த நூலில் காணப்பட்டது அந்நியமாக்கப்பட்ட மனிதருக்கு கடவுள் தேவைப்படுகிறார். அந்நியமாதல்தான் தான் கடவுளை படைக்கிறது என்ற ஞானியின் விளக்கங்களில் கடவுள் என்று சொல் தன் பழம் பெறும் படிவத்தை இழந்து புது படிவத்தை கட்டமைத்துக் கொள்வதைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. சமூகம் கட்டமைக்கும் அறம் பெரும்பாலும் ஆதிக்க சக்திகளை அதிகார மையங்களை தாங்கி பிடிப்பதாக உள்ளது என்ற ஞானி உடன்பாடு உடையவர் தான் ஆனால் ஆதிக்கத்தை ஏற்காமல் காலம்தோறும் எழுப்பப்படும் வகையில் வரும் கழக குரலில் அறம் இல்லையா என்று அவர் எழுப்பு வினாவும் நாம் ஏன் அந்த அறத்தில் அக்கறை காட்டவில்லை என்று சுட்டிக்காட்டு குற்றச்சாட்டும் ஏனைய ஒரு இடமிருந்து ஞானியை பிறரிடமிருந்து பிரித்துக் காட்டுகின்றன இந்த பின்புலத்தில் ஞானியின் படைப்புகளில் இடம்பெற வேண்டும் என சுட்டும் அறம் எத்தகையது என்பதை தெளிவாகிக் கொள்ளலாம் என்கிறார். மேலும் திராவிடனாக இருப்பதாயே அவன் தொழிலாளியாக இருக்கிறான். பார்ப்பனராய் இருப்பதா இல்லையே அவன் முதலாளியாக இருக்கிறான் என்கிறார் அதாவது முதலாளி தொழிலாளி சாதிய வேறுபாட்டில் இருந்து இனம் கண்டு விளக்குகிறார் பெரியார். பெரியார் கருத்துக்களை மேற்கோளாக காட்டும் ஞானி அவற்றை சரியான விமர்சனத்திற்கும் உள்ளாக்குகிறார் என்று அறவேந்தன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். இரு நூல்களின் சுருக்கம் காரமானது. தீவிரமானது/ என் டி பி எச் வெளியீடுகள் / இரண்டும் ரூ35 தனித்தனியே அன்புடன், சுப்ரபாரதிமணியன்