சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

வடகிழக்கு இந்தியப் பயணம் :16 சுப்ரபாரதிமணியன் வடகிழக்கு மாநில படுகொலைகளுக்கு தீர்வு எப்போது என்று அரசியல் சார்ந்த கருத்தாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள் இந்த கேள்விகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன வடகிழக்கு இந்தியப் பகுதிகளைகளுக்கு சென்றபோது இந்த கேள்விகள் என்னை திரும்பத் திரும்ப துன்புறுத்தின. கோகிமா மாவட்டம் கீசாமில் நடந்த ஒரு சம்பவம் இந்த ஆண்டில் பெரிய பின்னடைவுகளைக்ட கொண்டு வந்தது அங்கு பழங்குடி மக்கள் ஒரு திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் இந்தத் திருவிழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கக் கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக பாதுகாப்பு படையினர் மேகாலயா நாகாலாந்து மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகளில் கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வாகனத்தின் மீது ராணுவத்தின் சிறப்புப் படையினர் சந்தேகப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் சுமார் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் வேலைக்கு சென்ற சுரங்கத் தொழிலாளர்கள் வீடு திரும்பாததால் அந்த கிராம மக்கள் உறவினர்களை தேடி அலைந்த போது இறந்து போனவர்களின் உடல் ராணுவ வாகனத்தில் மறைக்கப்பட்டு இருப்பதைக் கண்டார்கள் இதன் காரணமாக கலவரம் ஏற்பட்டது. ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் சுமார் பத்து பேர் கொல்லப்பட்டார்கள் இந்த கொலைகளின் போது வழக்கம்போல் ஆயுதப்படைகள் அந்த வடகிழக்கு மாநிலங்களில் கொண்டு இருக்கிற சிறப்பு அதிகாரங்களையும் பயன்படுத்தினர் . அவை தீவிரமாகஅமல்படுத்தப்பட்டுள்ளது .இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ராணுவம் இந்த படுகொலையை செய்தது என்று குற்றம் சாட்டப்பட்டது மாநிலததிற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் இந்த சட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் நாகாலாந்து மணிப்பூர் அருணாசலப் பிரதேசத்தில் மற்றும் அசாமில் சில பகுதிகளில் இந்த சட்டம் அமலில் உள்ளது .இந்த ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை திரும்ப பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டு முயற்சிகள் எடுக்கப்பட்டன .ஆனால் தொல்லை தரும் பகுதிகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் இந்த சட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறார்கள். நாகாலாந்தில் 60 ஆண்டுகள் ஆகி போர்நிறுத்தம் செய்யப்பட்டும் 25 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த சட்டம் அமலில் உள்ளது பற்றி பல்வேறு சர்ச்சைகள் உள்ளன நாகாலாந்து பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண மக்கள் அமைப்பும் இந்த பகுதியில் பிரச்சினைகளை தொடர்ந்து தந்து கொண்டு வருகிறது இந்த நிலையில் சென்ற வருடம் டிசம்பர் மாதம் கடைசி நாளன்று நாகாலாந்து மற்றும் தொந்தரவு உள்ள பகுதிகளில் ஆயுதப்படைகள் சட்டத்தை மறுபடியும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது இந்த சிறப்பு ஆயுதப் படைகளின் அதிகாரம் குறைக்கப்பட வேண்டும் அந்த சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கின்றன .இது வடகிழக்கு இந்தியாவில் அமைதி எப்போது திரும்பும் அந்த மாநில படுகொலைகளுக்கு எப்போது தீர்வு என்பதை திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கின்றன இந்த பயணத்தின் போது மனதில் பட்ட இந்த கோரிக்கை சார்ந்த விஷயங்களும் கசப்பாகவே இருந்தன தொடர்ந்து கொண்டே இருக்கிறது முடிவில்லாமல் இருக்கிறது. அசாம் - மேகாலயா இடையே 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.30/3/22 அன்று இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை புதிய தலைமுறை செய்தி தந்துள்ளது. மேகாலயாவுக்கும், அண்டை மாநிலமான அசாமிற்கும் இடையே கடந்த 1972ஆம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை மேகாலயா அரசு உரிமை கோரியது. எனினும் அதற்கு அசாம் மாநில அரசு ஏற்க மறுத்தது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரு மாநில அமைச்சர்கள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு எல்லையை வரையறுக்கும் பணிகள் நடைபெற்றன. இதற்கான வரைவு தீர்மானம் ஒன்றை இரு மாநில முதலமைச்சர்களும் கடந்த ஜனவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அனுப்பி வைத்தனர். அதன் மீது ஆய்வு மற்றும் பரிசீலனை நடைபெற்றது. இந்த நிலையில், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ட்ராட் சங்மா இருவரும், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிரச்னைக்கு தீர்வு காண ஒப்புதல் தெரிவித்து, அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். அதன்படி, இரு மாநிலங்களுக்கு இடையே 884 புள்ளி 9 கிலோ மீட்டர் தொலைவிலான எல்லையில் இருக்கும் 12 இடங்களில், 6 பகுதிகளில் பிரச்னைக்கு தீர்வு காண வழி ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் உள்ள 36.79 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் அசாமிற்கு 18.51 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும், மேகாலயாவுக்கு 18.28 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியும் பிரித்து எடுத்துக் கொள்ளப்படும். இந்த உடன்பாடு மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் 70 சதவிகித எல்லைப் பிரச்னைகள் தீர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லை விவகாரத்தில் இந்த வரலாற்று ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இனி வரும் மணிப்பூர், நாகாலாந்து பயணங்கள் இது குறித்த பல சந்தேகங்களுக்குத் தீர்வு தரும் என்று எண்ணுகிறேன் பயணங்கள் மகிழ்ச்சி தருபவை. மனிதனுக்கு பல சோர்வான அனுபவங்களிலிருந்து விடுதலை தருபவை. ஆனால் அந்த பகுதியில் நிலவும் ராணுவ அதிகாரமும் அதனால் பாதிக்கப்பட்ட மக்களும் திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டே இருக்கிறார்கள் .காட்டுத் தீயை போல இந்த பிரச்சனை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது தீர்வு இல்லை என்பதுபோல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஆனால் இதற்கும் ஒரு தீர்வு இருக்கிறது அதை வடகிழக்கு மாநில மக்கள் வெகுவாக எதிர் நோக்கியிருக்கிறார்கள்