சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 7 பிப்ரவரி, 2022
தோழர் தேனரசன்:   சுப்ரபாரதிமணியன்
	” வாசலிலே மரண நெடி
 வாழ்ந்ததை மனத்திரையில்….
 தன்னை இழந்துலகு பெறும் 
தத்துவத்தின் ஞானம்.. ..ஓ”
  தோழர் தேனரசன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இருந்தபோது பல சமயங்களில் அவரின் இந்த கவிதை வரிகளை மனதில் கொண்டுவந்திருக்கிறேன் 
 சென்ற ஆண்டு இரண்டு  வானம்பாடி இயக்கக் கவிஞர்களைச் சந்தித்தேன் .ஒருவர் சக்திக் கனல்.  மெலிந்த உடல் ஆனால் திடமான மன பலம் . உடல்நலக்குறைவு  எதுவுமில்லை உற்சாகமாக இருந்தார். 
சந்தித்த இன்னொருவர் தோழர் தேனரசன் .அவரின் உடல்நலக்குறைவு மனதில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது
“ இந்த மழை போதாது
 இன்னுமிது பொழியட்டும் “ என்று கவிதை காட்டும் வாழ்க்கையாகட்டும், வாழ்க்கை அனுபவம் ஆகட்டும் எல்லாவற்றையும் வரவேற்றவர் உடல்நலக்குறைவால் தொடர்ந்து இருந்தது உறுத்திக்கொண்டே இருந்தது 
தமிழ் கவிதையில்  அந்நிய உலோக வாசனை கமழும் சூழலில் நம் மண் வாசனையை முழுக்க  
“ மண் வாசலில் ”கொண்டுவந்தவர் .
” மழை விழுந்தால் சேறாகும் 
 அது மண்வாசனை ” என்று சொன்னவர் ஆனால் நோய் விழுந்து அவருடைய  உடல்  சேறாகி விட்டது என்பதை பல சமயங்களில் கண்டிருக்கிறேன்
“ நான் எந்த நான்” என்று அவர் கவிதையில் கேட்பார் அந்த தத்துவ விசாரத்தை அவர் என்றும் மனதில் கொண்டிருந்தார் ஆனால் மனிதநேயத்துடன் கவிதையையோ மனிதர்களையோ அணுகுவதுதான் அவருடைய சிறந்த பாதையாக இருந்திருக்கிறது .அதுவே அவரின்                                    “ நானாக ”விளங்கியிருக்கிறது 
“ வியப்புகளின் விளிம்பு எல்லை 
ஆனந்தங்களின் பரிபூரணம் 
அனுபவங்களின் மகோன்னதம் “ என்று கவிதையை வரித்துக் கொண்டவர்
தொடர்ந்து நாங்கள் எல்லாம் எழுதிக் கொண்டிருப்பதை பற்றிச் சொல்லுகிற போது ஆனந்தம்  கொள்வார் .அப்படி அவர் ஆனந்தம் கொள்வதற்கே நிறைய எழுத வேண்டும் என்று எனக்கு தோன்றும்.
“ நில்லும் எனக்கினி நேரமில்லை
 நீண்ட வழி போக வேண்டும் அம்மா ”என்ற அவரின் ஒரு கவிதை சொல்வது  எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது . அந்த நீண்ட வழியை  காட்டியவராகத்தான் தோழர் தேனரசன்  இருந்தார்,
“ காலம் என்னைக் 
கவிஞனாய் சமைத்தது 
கவிதைகளால் நான்
 ஒரு காலத்தை விதைத்துவிட்டேன் “
 என்று சொன்னவர். புதிய எழுத்தாளர்களின் தலைமுறையில பலர் கவிதை வித்துக்களை தூது விட்டு சென்றிருக்கிறார் . பொள்ளாச்சி இளம் கவிஞர்கள் பட்டாளமே  அதற்கு அடையாளம் 
“வந்துபோகும் சுகதுக்கங்கள் 
அலை போல 
 வாழ்க்கைக் சத்தியமாய்  நிற்கும் 
கடல் போல” என்று கவிதையில் சொன்ன தோழர் தேனரசன் ”காணும் இயற்கையை கேட்கப் பழகியதால்
 கணக்கில்லாத ஞானம் கைவசமாகும் ”
என்று வழி காட்டியவர் .அந்த ஞானத்தை கவிதை இயக்கம்,  பள்ளி செயல்பாடுகள்,  சமூக அக்கறைகளில் தொடர்ந்து காட்டியவர்
 மரண பிச்சை என்ற அவர்களுடைய கவிதை ஒன்றில் இடம் பெற்றிருக்கிற எலும்புக்கூடு தோற்றம்தான்  அவரைப் பற்றிய நினைக்கிற கடந்தப் பல ஆண்டுகளில்  மனதில் வந்து நின்றது ”பச்சை அரும்புக்கு பாடம் ஆகிறதே  “ என்று  மரணத்தைப்பற்றி சொல்லியிருப்பார். கொரானா தொற்று  காலத்தில் அப்படி ஒரு மரணம் அவருக்கு வாய்த்தது என்பது நினைத்துப் பார்க்கையில் சங்கடம் தருவதாக இருக்கிறது 
”இந்த மழை போதாது
 இன்னும் இது பொழியட்டும் ”
என்ற ஆசையை நாம் இலக்கிய தளத்தில் விதைத்துக் கொண்டு இருப்போம். அது அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்
	


 
