சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 29 டிசம்பர், 2020

கவிஞர் சுரதா நூற்றாண்டு.. சிறப்புக் கூட்டம் சனிக்கிழமைக் காலையில் மக்கள் மாமன்ற நூலகம், மங்கலம் சாலை திருப்பூரில் கவிஞர் சுரதா நூற்றாண்டு.. சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் நாமக்கல் நாதனின் ” சுரதா என் ஆசான் “ நூல் வெளியீட்டுடன்.மற்றும் அவரின் உரையும் இடம்பெற்றது மற்றும் நாமக்கல் நாதனின்புதிய நூல் “ என் காலடித்தடங்கள் ” “ ( அவரின் இலக்கிய அனுபவக்கட்டுரைகள் )வெளியீடும் நடந்தது. நூல்களை பத்திரிக்கையாளரும் தமிழக அரசின் தமிழறிஞர் உதவித்தொகை பெறுபவருமான வின்சென்ட் வெளியிட திருக்குறள் மணியம் பெற்றுக்கொண்டார் . மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர் சி.சுப்ரமணீயம் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். நாமக்கல் நாதன் உரையில் : உலகின் 93 மொழிகளுக்குத் தாய்மொழியாக தமிழ் விளங்குகிறது அம்மொழிகளில் தமிழ்ச்சொற்களும் பாதிப்புகளும் உள்ளன. சுமார் 4000 வருட தமிழ் இலக்கியப்பாரம்பரியத்தில் செழுமையான இலக்கிய பங்களிப்பு இன்றைய நவீன தமிழ் இலக்கியம் வரை தழிழில்தொடர்கிறது. கவிதையோ இலக்கியப்படைப்போ எழுதுவது நல்ல மொழிப்பயிற்சியாகும். வாழ்க்கையின் தொழில்சார்ந்த கல்விக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் மொழிப்பயிற்சியும் பயன்பாடும் மிகவும் அவசியமென்பதை இளையத்லைமுறையினர் உணர்ந்து தமிழில் நல்லபயிற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும். கவிஞர் சுரதாவின் கவிதையும் திரைப்படப்பாடல்களும் நூற்றாண்டைக்கடந்து தமிழுக்கு உரம் சேர்ப்பவை ( இந்த இரு நூல்களும் காவ்யா பதிப்பகம் சென்னை வெளியீடு ) மக்கள் மாமன்ற நூலகம், மங்கலம் சாலை திருப்பூர் . நிகழ்ச்சியை மக்கள் மாமன்றம் ஏற்பாடு செய்திருந்தது. நூலகர் ஆறுமுகம், மாமன்ற நிர்வாகி பாலமுருகன், சுப்ரபாரதிமணியன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர் நிகழ்ச்சி ஏற்பாடு : மக்கள் மாமன்ற நூலகம் திருப்பூர் (திருப்பூர் பெருமாநல்லூரில் வசிக்கும் நாமக்கல் நாதன் இதுவரி 35 நூல்களை வெளியிட்டுள்ளார் . தமிழக அரசின் மூதறிஞர் உதவித்தொகை பெற்று வருகிறார் . 74 வயதுள்ள அவர் பல முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார் ) உவமைக் கவிஞர் சுரதா நூற்றாண்டு தன் ஆசிரியரைப் போலவே ஆசிரியரின் தாசனாகத் தன்னை அறிவித்துக்கொண்டதற்காக அல்ல, அவரைப் போலவே தானும் ஆசிரியரின் பாதையிலிருந்து விலகி தனிப் பாதை வகுத்துக்கொண்டதற்காகவே சுரதா என்கிற சுப்புரத்தினதாசன் நினைவுகூரப்படுகிறார். அவரது நூற்றாண்டு இப்போது தொடங்கியிருக்கிறது. இலக்கிய வெளியில் மரபுக் கவிதை தனது செல்வாக்கை இழந்துநிற்கும் இன்றைய நிலையில், மரபுக் கவிஞர்கள் மட்டுமின்றி, நவீனக் கவிஞர்களும் சுரதாவிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது. காவிரிக் கரையின் புதல்வராகவே தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் சுரதா. கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஊரான நரிமணத்துக்கு அருகே உள்ள பழையனூரில் 1921-ல் பிறந்தவர். இயற்பெயர் ராஜகோபாலன். சுத்தானந்த பாரதியின் தாக்கம் பெற்றவராக, பள்ளி நாட்களிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கியவர். குத்தூசி குருசாமி பதிப்பித்த பாரதிதாசன் கவிதைகளின் முதல் தொகுப்பை, பழையனூரில் டீக்கடை நடத்திவந்த அழகப்பன் படிக்கக் கொடுக்க அன்றிலிருந்து சுத்தானந்த பாரதியை மறந்துவிட்டு பாரதிதாசனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார். அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமானது திராவிட இயக்கத்தின் பிரதான மையம் என்பதால் இயல்பாகவே அவரும் திராவிட இயக்கச் சார்பாளராக இருந்தார். இராஜாமடம், ஒரத்தநாடு பள்ளிகளில் படித்ததும் அதற்கு ஒரு காரணமாக அமைந்தது. அவருடன் பயின்ற மற்ற மாணவர்களும் பின்னாட்களில் திராவிட இயக்கத்தின் முக்கிய ஆளுமைகளாக உருவெடுத்தனர். பாரதிதாசனின் தாசன் புதுவைக்குச் சென்று பாரதிதாசனைச் சந்திக்க முடிவெடுத்த அவர், வழிச்செலவுக்குப் பணமின்றி, கோயில் ஒன்றில் எட்டு நாட்கள் வெள்ளையடித்து அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு புதுவை கிளம்பினார். 1943 முதற்கொண்டு பாரதிதாசனிடத்தில் இரண்டு ஆண்டுகள் உதவியாளராக, மாதம் இருபது ரூபாய் ஊதியத்துக்குப் பணிபுரிந்தார். கவிதைகளைப் படியெடுக்கும் அந்தப் பணியே சுரதாவின் பயிற்சிக் களமாகவும் அமைந்தது. பாரதியைப் பரப்பும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட திரிலோக சீதாராம் தனது ‘சிவாஜி’ இதழில் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டு அவரைக் கவனப்படுத்தினார். பாரதியைவிட பாரதிதாசனே அறிவும் திறனும் அதிகம் வாய்க்கப்பெற்றவர் என்பது சுரதாவின் கருத்து. சிந்துக்குத் தந்தை பாரதி என்ற தனது ஆசிரியரின் கருத்தை மறுத்து அண்ணாமலை ரெட்டியாரே அந்தப் பெருமைக்குரியவர் என்ற சுரதா, அதுபோல தேசியக் கவி என்ற சிறப்பும் ராமசாமிராஜுவுக்கு உரியது என்றார். சுரதாவைப் பின்பற்றி உருவான பாரதிதாசனின் பரம்பரையும் பாரதியில் ஆர்வம் காட்டாது பாரதிதாசனையே முன்மாதிரியாகக் கொண்டது. அரசியலில் பெரியாரையும் கவிதையில் பாரதிதாசனையுமே சுரதா வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தனது எழுத்தியக்கத்தில் உள்ளடக்கம், வடிவம் என எதிலும் அந்தத் தாக்கம் வந்துவிடாதவாறு கவனமாகவும் இருந்தார். பாரதிதாசனிடமிருந்து சுரதா விலகி நிற்கும் புள்ளியும் அதுவே. பாரதிதாசனின் ‘புரட்சிக் கவி’ நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடிப்பதற்காக சென்னை வந்த சுரதா, அங்கிருந்து புதுக்கோட்டை சென்று சில காலம் தங்கினார். புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தாய்நாடு’ இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய அந்தக் காலத்தில் பி.யு.சின்னப்பாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் நடித்த ‘மங்கையர்க்கரசி’ திரைப்படத்துக்கு 1945-ல் திரைக்கதை, வசனம் எழுதினார். தமிழில் புத்தகமாக வெளியிடப்பட்ட முதல் திரைக்கதை அதுவே. திரைப் பாடல்களும் இலக்கியமே திரையுலகில் அறிமுகமான காலகட்டத்திலேயே படங்களுக்குத் தொடர்ந்து திரைக்கதை, வசனம் எழுதினார் என்றாலும் ‘ஜெனோவா’, ‘அமரகவி’, ‘புதுவாழ்வு’ உள்ளிட்ட மிகச் சில படங்களே வெளியாயின. பாரதிதாசனைப் போலவே அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்த திரைப்படக் கலை வடிவத்தை மிகவும் நேசித்தார் சுரதா. திரைப் பாடல்களையும் இலக்கிய வடிவங்களில் ஒன்றாகவே அவர் கருதினார். தகுதியானவர்களும் திறமையானவர்களும் திரைப்படப் பாடல்களை எழுதுகிறபட்சத்தில், அந்தப் பாடல்கள் இலக்கியத் தகுதியைப் பெறும் என்று அவரது கடைசி நாட்கள் வரையில் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பி.யு.சின்னப்பாவின் படத்துக்கு வசனம் எழுதிய அதே காலகட்டத்தில் தியாகராஜ பாகவதரின் படத்துக்கும் வசனம், பாடல்களை எழுதினார். பாகவதரின் ‘அமரகவி’ படத்துக்காக அவர் எழுதிய ‘யானைத்தந்தம் போலே பிறைநிலா’ பாகவதரின் பாடல்களிலேயே மிகவும் வேறுபட்டுத் தெரிவது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்துக்கு எழுதிய ‘அமுதும் தேனும் எதற்கு’ பாடல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. திரைப்படம் மட்டுமல்லாது இதழியல் பணிகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். ‘இலக்கியம்’, ‘காவியம்’, ‘ஊர்வலம்’ என்று பல்வேறு கவிதை இதழ்களை நடத்தியவர். காமராசன், இன்குலாப், அப்துல் ரகுமான் உள்ளிட்ட தமிழின் பிரபலக் கவிஞர்கள் பலரும் இந்த ஏடுகளின் வழியே அறிமுகமானார்கள். கவிஞர் பெருமன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி இளம் கவிஞர்களை ஊக்குவித்தார். அவரது தலைமையில் நடந்த கவியரங்கங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவிதைகளை வாசித்திருக்கிறார்கள். சுரதாவின் இந்த இடைவிடாத இயக்கமே தமிழில் இன்றளவும் மரபுக் கவிதை மரணிக்காமல் இருப்பதற்கான காரணம். தனது பெயரிலேயே பதிப்பகம் ஒன்றையும் தொடங்கி நடத்தினார் சுரதா. ‘அமுதும் தேனும்’, ‘தேன்மழை’ உள்ளிட்ட அவரது கவிதைத் தொகுப்புகள் மட்டுமின்றி, முக்கியமான சொற்பொழிவுகளையும் மேற்கோள்களையும் தொகுத்து வெளியிட்டார். ‘வெட்டவெளிச்சம்’ என்ற தலைப்பில் அவர் தொகுத்து வெளியிட்ட தகவல்கள், முகிலின் ‘அகம் புறம் அந்தப்புரம்’ புத்தகத்துக்கெல்லாம் முன்னோடி முயற்சி. தமிழ்ச் சொல்லாக்கம் குறித்த அவரது குறிப்புகளின் தொகுப்பு அகராதியியலாளர்களுக்கும் மொழியியலாளர்களுக்கும் நல்லதொரு ஆவணம். அவர் தொகுத்து வெளியிட்ட குறிப்புகளின் வழியே, அவருடைய பல்துறை ஆர்வத்தையும் பரந்துபட்ட வாசிப்பையும் புரிந்துகொள்ள முடியும். கவிஞன் பிறக்கிறான், கவிதையெழுத கலைமகளின் அருள்பார்வை கிட்ட வேண்டும் என்பதுபோன்ற நம்பிக்கைகளைக் கேலிசெய்த சுரதா, கடின உழைப்பும் தொடர்ந்த பயிற்சியும் கவிஞனை உருவாக்கும் என்றார். தேடித் தேடி வாசிக்காதவன் கவிதை எழுத முயலக் கூடாது என்பது அவரது கருத்து. எது கவிதை? திரைப் பாடல்களைப் போலவே புதுக்கவிதைகளையும் இலக்கிய வடிவங்களில் ஒன்றாக ஏற்றுக்கொண்டார் சுரதா. ஆனால், மரபிலிருந்து விலகி நின்ற உரைவடிவத்தைக் கவிதை என்று ஏற்கத் தயங்கினார். கவிதைக்கு உள்ளடக்கம் மட்டுமின்றி வடிவமும் அவசியம் என்று வலிறுத்திய சுரதா, வடிவத்தைப் பின்பற்றுவது மட்டுமே கவிதையாகிவிடாது என்று மரபுக் கவிஞர்களையும் எச்சரித்தார். 3,000-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதிய சுரதா, அவையனைத்தும் கவிதையாகிவிடாது, கொஞ்சம் தேறும் என்று கறாரான சுயமதிப்பீட்டையும் வெளியிட்டார். மரபுக் கவிதைகளின் உள்ளடக்கம் சார்ந்து தொடர்ந்து கட்டுடைப்புகளைச் செய்தவர் அவர். பிரபல நடிகைகளைப் பற்றிய ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பு பரபரப்பை உண்டாக்கியது. இத்தகைய அதிர்ச்சி மதிப்பீடுகள் அவரது முதல் தொகுப்பிலிருந்தே தொடர்ந்தன. முதல் தொகுப்புக்கு அவர் வைத்த தலைப்பு ‘சாவின் முத்தம்’.the hindu tamil