சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 14 நவம்பர், 2020

கொரானாவும் திருப்பூரும் : யுவராஜ் சம்பத் Rs 100 kanavu kanavu திருப்பூரை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற பலதரப்பட்ட மனிதர்களுக்கும் , என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தி பாதிப்புகளைஏற்படுத்தியிருக்கிறது இந்தப் பாழும் நோய் என்பது பற்றியும் எழுதாமல் இந்த கட்டுரை முடியாது.... அவர்களிலிருந்து, ஒரு துறைக்கு ஒருவர் என்ற அளவு கூட ( அது மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் ) இல்லாமல் ஒரு சிலரை மட்டும் நேரில் கண்டு அல்லது தொலைபேசியி உரையாடல் மூலம் அவருடைய கருத்துகளை கேட்டு அதையும் இங்கே பகிர்ந்து கொள்வதுதான் ஒரு நடுநிலையாலனின் செயலாக இருக்கும் என்பதால் அதயும் ... அவரவர் , அவர்களுடைய சொந்த ஊரில்,, என்னென்ன பொருள் உற்பத்தி செய்கிறார்களோ, அந்த பொருட்களை, அங்கிருக்கும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாங்கி, அதை எப்படியாவது , யாருக்காவது விற்று , வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்... ஆனால் இது எவ்வளவு நாளைக்கு என்று யாருக்கும் தெரியாது.. புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டுமல்ல , புலம்பெயர் நிர்வாகிகளும் அதயே செய்துகொண்டிருக்கிறார்கள்.. இவர் பெயர் அர்ஜுனன் என்று வைத்துக்கொள்ளுங்கள்... திருப்பூரில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு பனியன் துணி உற்பத்தி இயந்திரங்கள் இல்லாத காலத்தில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின், மிகவும் சிக்கலான வடிவமைப்பை உருவாக்கக்கூடிய இயந்திரத்தை இறக்குமதி செய்தார் ..அன்றைய காலகட்டத்தில் அதுதான் லேட்டஸ்ட் அதி நவீனமானது.. ஆனால் எந்த ஒரு மாற்றத்தையும் புதிதாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் மனோபாவம் கொண்ட திருப்பூர் உள்நாட்டு தயாரிப்பாளர்கள் அதை வெற்றிகரமாக பயன் படுத்த முடியாமல் , அவர் ஒரு பெரிய நிறுவனத்திடம் சரணடைந்து அதனால் பல லட்சங்களை இழந்தவர்... அதற்க்கு பின்னர் ஏற்றுமதியில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றவர்... ஆனால் இன்று 6 மாத காலமாக ஊட்டி காய்கறி வியாபாரம் செய்கிறார்... மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது மாற்றத்திற்கு தங்களை உட்படுத்திக் கொள்ள இயலாத தொழில்கள் இன்று காணாமல் போய்விட்டது.. அடுத்து என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை யூகிக்க முடியாத ஒரு தலைமுறை திருப்பூரில் இன்னமும் இருக்கிறது .. திருப்பூர் தொழிலதிபர்கள் தங்களுடைய பார்வையை விசாலமாக்கி கொள்ளாதவரை, கொரோனாவுக்குப் பின்னரும், ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ,அவர்களால் இந்த தொழிலுக்கு ஏற்படுத்தித் தர முடியாது என்பதே நிதர்சனமான உண்மை... இவர் பெயர் சிவசுப்பிரமணியம்.. covid-19 முன்னாள் இவர் திருப்பூரில் உள்ள பெரிய ஏற்றுமதி நிறுவனத்தின் மிக முக்கிய பணியில் இருந்தவர் சொந்த ஊர் நீலகிரி ..இங்கு வந்து தன்னோடு பணிபுரிந்த சக தோழியை மணந்து இன்று சொந்த வீட்டில் வாழ்ந்து வருபவர்...மனைவி இல்லத்தரசியாக மட்டும் இல்லாமல் அவரும் பனியில் இருக்கிறார்.. அவரின் வாழ்வாதாரமும் இந்தக் கொடிய நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருக்கிறது... தற்போது வாழ்வை நகர்த்த ஆன்லைன் வர்த்தகம் செய்கிறார்... அதிலென்ன ஆச்சரியம என்கிறீர்களா?? அவர் வாங்கி விற்பது ஆடைகளை அல்ல.. ஊட்டி வர்க்கியை.. இந்தத் தோழியின் பெயர் கோமதி .. திண்டுக்கல்லிலிருந்து, பொறியியல் பட்டம் பெற்று திருப்பூர் வந்து, ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார் .. இவரும் இவர் கணவரும் தற்பொழுது ஆன்லைன் வர்த்தகத்தில், திண்டுக்கல் மதுரை சேலைகளை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. குடும்பம் நடக்க வேண்டுமே சார் என்கிறார்கள்.. இவர் பெயர் நாகராஜன்... ஏற்றுமதியாளர்கள் துணிக்கு சாயமிடுகிற நிறுவனத்தில் வேலை செய்கிறார்.. தற்பொழுது தன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை வழி சாயம் ஏற்றுதல் மூலமாக கரூரில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு நூலில் சாயம் ஏற்றி கொடுக்கிறார்..,அவருக்கு மாற்றம் முன்னேற்றம்... இவர் பெயர் ஸ்ரீராம்... திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் துணை ஒப்பந்தக்காரர் ஆக இருக்கிறார்... தற்போதைய சூழலில் முகக் கவசம் மட்டுமே செய்து , தன்னோடு இருக்கிற மூன்று பணியாளர்களுக்கும் வேலை கொடுத்து , அவர்கள் குடும்பத்தையும் காப்பாற்றுகிறார்... இன்னும் சிலர் காய்கறி வியாபாரிகள் ஆகவும், நிரந்தரமில்லாத தெருவோரக் கடையில் , பலதரப்பட்ட பொருட்களை விற்றும், இன்னும் சிலர் வீட்டு சமையல் முறையில் சமைத்து பிரியாணி விற்பதையும் ,,இன்னும் சிலர் நிரந்தரமில்லாத எந்தெந்த தொழில்லெம்மாவோ செய்து கொண்டிருக்கிறார்கள் .. இவர்கள் அனைவரும் ஒரே ஒரு கருத்தை சொல்கிறார்கள்... அது இந்த ஊரின் அபரிமிதமான வளர்ச்சியை நிலையானது என்று எல்லோரும் நம்பி விட்டோம்.. ஆனால் இந்த ஒரு கொடிய நோய் எங்கள் எண்ணத்தை சிதைத்து விட்டது.. இனி இந்த ஊர் முன்னிருந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பது சந்தேகமே.. ஆனாலும் எங்களுக்கு உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை இந்த கொடிய நோய் தந்துள்ளது... அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்.. பார்வையற்ற ஒருவரை வழிகாட்டுபவர் என்று நம்பியதும், பொறுப்பில் இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதையும் இயற்கை எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடம்... இது எல்லோருக்கும் பொருந்தும் தானே, தோழர்களே !!!! வங்கிக் கடனும் தனி நபர் கடன்களும் மிக தாராளமாக கிடைத்து வந்த ஊரில் தற்பொழுது பணத்தட்டுப்பாடு.. ரொட்டேசன் நின்னு போச்சு சார்..ஒரு தெருவோர புரோட்டா கடை முதலாளியின் புலம்பல்... இதனால் இந்த ஊரின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்ப்படும் என்பது கண்கூடு.. உழைப்பை நம்பியே உருவான ஊர் திருப்பூர்.... உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஊர் திருப்பூர்.... ஆனால் சமீப காலத்திய வளர்ச்சி உழைப்பை பின்னுக்குத்தள்ளி வேறுவிதமான உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெற்றதனால், பாதிப்பு அதிகமாக இருக்கிறது... அந்த உத்திகள் தற்போது தோற்று விட்டன... தொழில்கள் வேறு பல நாடுகளுக்கும் சென்று விட்டன.. எங்களுக்கு இந்த ஊரை விட்டு அல்ல, இந்தியாவை விட்டே வெளிநாடுகளுக்கு சென்றால்தான், எங்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கும் போல் தோன்றுகிறது... ஆகவே ஆபிரிக்க நாடுகளின் பக்கம் எங்கள் பார்வை தற்பொழுது திரும்புகிறது.. பல மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளை நாங்கள் தொடர்புகொண்டு பேசி வருகிறோம் . இது பொதுவான குரலாக இருக்கிறது... இதுவும் நடப்பதற்கான சாத்தியக்கூறு உண்டு... நூறு வருடங்களுக்கு முன்னரே பனியன் தொழிலை இந்தியாவில் அறிமுகப்படுத்திய திருப்பூர் ,, எண்பதுகளில் மிக அதிகமான வளர்ச்சியை பெற்று, இந்தியாவையே , தன்னை நோக்கி பார்க்க வைத்த திருப்பூர் , இன்றைக்கு மிகச்சிறிய நாடுகளான வியட்னாமோடு கூட போட்டி போட முடியாத நிலைமையில் இருப்பதற்கு காரணம் என்ன ...( கொரானாவும் திருப்பூரும் -யுவராஜ் சம்பத் ரூ 100 ) யுவராஜ் சம்பத்..