ஒரு லட்சம் கோடி ரூபாய் 
( திருப்பூர் கவிதைகள் 2019 )
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 
12 வது மாநில மாநாட்டுச் சிறப்பு வெளியீடு 
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். 
திருப்பூர் மாவட்டம் 
2nd page 
ஒரு லட்சம் கோடி ரூபாய் 
திருப்பூர் கவிதைகள் 2019
 தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம். 
திருப்பூர் மாவட்டம் 
*
வெளியீடு :
தமிழ்நாடு
கலை இலக்கியப் பெருமன்றம் ,
திருப்பூர்
மாவட்டம்
மில்
தொழிலாளர் சங்கம், பிகேஆர் இல்லம்,
326, பி எஸ் சுந்தரம் சாலை, ஊத்துக்குளி சாலை
திருப்பூர்
மாவட்டம் *  0421- 2202488..விலை ரூ 30  
3rd page 
முன்னுரை 
திருப்பூர் பின்னலாடைத்துறை 
பின்னலாடை ஏற்றுமதி மூலம்  அந்நிய
செலவாணியாய் ஒரு லட்சம் கோடி ரூபாய் இலக்கை 2020ல் எட்டும் என்று கடந்த அய்ந்து
ஆண்டுகளாய் சொல்லப்பட்டது. .இது இப்போது சாத்தியமாகவில்லை. 2022ல் இது
சாத்தியமாகும் என்று இப்போது திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை
தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் தொழிற் கொள்கை, ஜிஎஸ்டி விதிப்பு போன்றவை
திருப்ப்பூர் தொழிற்துறையை முடக்கி உள்ளது. தொழிலாள தோழர்கள் தங்கள் அயராத
உழைப்பின் மூலம் இதை சாதிப்பார்கள்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 12 வது மாநில மாநாட்டை
ஒட்டி இத்தொகுப்பு நூல்  திருப்பூர்
தோழமைக்கவிஞர்களின் கவிதைகளைக்கொண்டு 
வெளியிடப்படுகிறது. திருப்பூர் 100 என்ற நூலை தமிழ்நாடு கலை இலக்கியப்
பெருமன்றம். திருப்பூர் மாவட்டம் சென்றாண்டு வெளியிட்டது . இந்த வகையான இலக்கிய
முயற்சிகள் தொடரும். இணையுங்கள் . சேர்ந்து செய்வோம்.
-  பி ஆர். நடராஜன்  ( திருப்பூர்
மாவட்ட செயலாளர் , தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் )
கே.சுப்பராயன்(பாரளுமன்ற
உறுப்பினர்  “ திருப்பூர் -100 “
            திருப்பூர் சிற்றூராக இருந்து இன்று
மாநகராக விரிந்து பரந்து பெருநகராகக் உருமாறி நிற்கிறது. இதன் வளர்ச்சிக்கு
நொய்யலும் பஞ்சு தொடர்பான தொழில் வளர்ச்சியும் பிரதானக்காரணங்களாக அமைந்து விட்டன.
அதிகாலை முதல் இரவு வரை “ ஜனசந்தடி” 
நிறைந்து வழியும் நகரமாக இருந்து வருகிறது. “ விடி நைட் “ என்று
விடிகிற வரை பணியாற்றிவிட்டு மீண்டும் பணியில் தொடர்கிறத் தொழிலாளர்கள் நிறைந்த
நகரம் திருப்பூர். இது நகராட்சியாக மாறி 100 ஆண்டுகள் முடிந்து
விட்டன. இந்த நூற்றாண்டு கால வரலாற்று மடிப்பில் எண்ணற்றச் சம்பவங்கள், சரித்திர
நிகழ்வுகள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை உரியபடி ஊடுருவிக் கண்டுணர்ந்து
நிகழ்காலத் தலைமுறைக்கு உணர்த்துவதற்காக    
“ திருப்பூர் -100 “ தொகுக்கப்பட்டுள்ளது.
                             “ தீதும்
நன்றும் “ நேர்மறையும் எதிர்மறையும் என எதிரும் புதிருமான பல்வேறு
நிகழ்வுகளைக் கொண்டது “ திருப்பூர் -100 “ .  செழித்து நின்ற நொய்யல் இன்று
செத்துக்கிடக்கிறது.செத்துக்கிடந்த மக்கள் இன்று செழிப்பில் புரள்கிறார்கள்.
கேட்பாரற்றுக்கிடந்த நிலபுலன்கள் கற்பனைக்கெட்டாத உயரத்திற்கு மதிப்பு கூடி
விட்டன.
                       இவற்றிற்கானக் காரணங்கள்
கண்டுணரப்படவேண்டும். அந்தப்பங்குபணியை சிறப்பாகச் செய்து முடித்திட , நாமறிந்த
நல்ல எழுத்தாளரும், புகழ்பூத்த பல பல கட்டுரைகளை, கதைகளை, நாவல்களைத்
தமிழுக்குத் தந்த அருமைநணபர் சுப்ரபார்திமணியன் பங்குபணி நன்றியோடு
நினைவுகூரத்தக்கது.
அவரது பங்கு பணி செழித்துச் சிறக்க
எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி
தங்களன்புள்ள
கே.சுப்பராயன் ( திருப்பூர் பாரளுமன்ற
உறுப்பினர்
மாநிலத் துணைச்செயலாளர், இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி )
Rs 100 திருப்பூர் கலை
இலக்கியப் பெருமன்றம் வெளியீடு.
“ திருப்பூர் -100 “--திருப்பூர்
கலை இலக்கியப் பெருமன்றம் வெளியீடு
சுப்ரபாரதிமணியன்
 1. கல்வி உடை : 
பறவைகளின் கூடுகளைப்பிய்த்தெறிந்து 
நீளும் கொடுங்கனவுக்கரங்கள்
இந்தியப் பண்பாட்டு மங்கையின் 
உடலை அலங்கரிக்கும் உடை அழகானது. 
பல நிறங்கள் கொண்டது. 
எந்தக் கோணத்திலும் அழகுதான், 
ஒரே கல்வி, ஒரே நாடு ,ஒரே மொழி என்று 
முகங்களை, பெயர்களை, ரத்தவகைகளை துடைத்துத் தயாராகிறது 
ஒரு காவி உடை. 
கற்கும் சமூகம் நோக்கிப் பாறாங்கற்கள் 
விழுந்து கொண்டே இருக்கின்றன. 
திடுக்கிட்டு விழிக்கிற போதெல்லாம் 
புதிய கொடுங்கனவு 
நினைவிலேயே இருக்கிறது.
 கொடுங்கனவும் கனத்த வாளாகும்
 காலம்  எதிர்வாள் கசப்பை
 நிழலற்றுப் போகச் செய்யும். 
2.
அந்நியன்
பலமாதங்களாக அவன் திரை விரிப்புகள் விற்பனையில் 
 ஈடுபட்டிருப்பதைப்
பார்த்திருக்கிறேன்.
ஒரு புளிய மரத்தடியோ, வேப்பமரத்தடியோ
நிழல் தரும் ஏதாவது மரத்தடியோதான் 
அவன் கடை ஸ்தலம்.
 அவன் உள்ளூர்காரனில்லை
.
 இந்த
மாநிலத்துக்காரனில்லை. 
ஓடியா, பீகார், வங்காளம்.. ஏதோ வட மாநிலத்துக்காரன். முகமே
சொல்லிவிடும்.
 பல்லாயிரம் தடவை
அவனின் திரைச்சீலைக் கடையைக் கடந்து வாகனத்தில் சென்றிருக்கிறேன். 
ஒரு முறை குளிர்பானப் பொத்தலை எங்கெறிவது என்றக்குழப்பத்தில்
பேருந்து சன்னல் வழியே 
எறிந்த போது  அவன்
அருகில் சென்று வீழந்தது. 
அவன் பார்வை தந்த கேள்வியில்
தலை குனிந்து கொண்டேன். 
 என் தலை அவன் முன்
பின்னர் நிமிரவேயில்லை
. புத்தக அலமாரியில் தூசு சேர்வதைத் துடைத்து 
அலுத்து போனதால் மனைவி திரைச்சீலை வேண்டுமென .
வாகனத்தில் செல்லும் போது சொல்ல
வாகனத்தை நிறுத்தி அவன் தலையை நிமிர்ந்து பார்த்தேன்  இன்று ....
விலைகுறைக்கச் சொல்லிக் கேட்டபோது 
காலை முதல் இன்னும் சாப்பிடவில்லை 
முதல் விற்பனையில் வரும் லாபமே 
சிற்றுண்டிக்கு என்றான்
தனக்குத் தெரிந்த கொச்சைத் தமிழில்.... 
நான் தூக்கி எறிந்த விலைஉயர்ந்த குளிர்பானப் போத்தலை தேடியது
என் கண்கள் ..
 வியாபாரமொழியாய் தமிழ் அவனுக்கு வந்து விட்டது.
சினேகித மொழி கைகூடவில்லை சக பயணிகளுக்கு.


 
