சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

திங்கள், 4 செப்டம்பர், 2017

நூல் வெளியீடு :
  ---------------------------
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் கிளை.
.

மாதக்கூட்டம் .3/9/17 மாலை.5 மணி..பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் ரோடு(மில் தொழிலாளர் சங்கம்.), திருப்பூர்


       நூல் வெளியீடு நடைபெற்றது “ பசுமை அரசியல் “  – சுப்ரபாரதிமணியனின் சுற்றுச்சூழல் கட்டுரைகள் தொகுப்பு நூலை வெளியிட்டு பேசினார் : கே.சுப்பராயன்.                    ( முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர், மற்றும்  இந்திய கம்யூ.கட்சியின் மாநில துணைச் செயலாளர் )


அவர் பேசுகையில்:  “ இன்றைக்கு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மனிதன் வாழ முடியாதபடிக்கு அவனை இக்கட்டில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. இயறகை சார்ந்த உணர்வுகளின் தேவை இன்னும் அதிகமாக உணரப்படும் காலம் இது. மக்களை அழுத்தும் காரணிகளில் முக்கியமாகச் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உள்ளன. எழுத்தாளர்கள் அதை மறை பொருளாக படைப்பிலக்கியங்களிலும், வெளிப்படையாக்க் கட்டுரைகளிலும் எழுதி வரும் செயலை  தொடர்ந்து செய்ய வேண்டும்


சுப்ரபாரதிமணியன் ஏற்புரை ;

பசுமையியல் இன்று சிதைந்து விட்டது, வெளிறிப்போய்விட்டது.
  தாவரங்கள், பிராணிகள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஒன்றாக இணைந்து ஒரே வாழிடத்தைத் தேர்வு செய்து கூடி  இருப்பதாகும் பசுமையியல் . பல உயிரினங்கள்  அவற்றின் வாழிடத்தில் ஆற்றலை ஒருங்கிணைத்து பரிமாறிக்கொண்டும் ஒரே உயிரினமாக வாழ்தலுக்கு  இன்றியமையாததாகக் கருதப்படுகிற உயிரினங்களின் பிணைப்பே பசுமையியலாக தொடர்ந்து வடிவமைத்திருக்கிறது, 
அந்த வடிவமைப்பு வெகுவாக சிதைந்து வரும் காலம் இப்போது.

   இந்தப் பசுமையியல்  சிதைவுக்கு பல காரணங்களை அரசியலாகக் கொள்ளலாம். வல்லரசுகளின் ஆதிக்கம், மூன்றாம் உலக நாடுகளின் அடிமைத்தனம், சுரண்டப்படுதல் அடிப்படைகளாகும்.
பின்நவீனத்துவ அரசியல் - விளிம்பு நிலைமக்கள், விளிம்புநிலை இயக்கங்களை முன்னிலைப்படுத்தியது. அப்படித்தான் அதிலொன்றான பசுமை இயக்கமும், பசுமைக்கருத்துக்களும் மக்களிடம் இயற்கை வளங்களை  சுரண்டுவதற்கு, சுற்றுச்சூழல்  கேட்டிற்கு எதிராக முன்வைக்கப்பட்டன. பசுமை  அரசியல் பலரின் புருவங்களை உயர்த்தச் செய்தது.  பசுமை இயக்கங்கள் சார்ந்த படைப்புகள், செயல்பாடுகள் தொடர்ந்தது .அந்தந்த பகுதி சூழல் கேடு பற்றிய பதிவுகள் நவீன இலக்கியத்தில் முன்வைக்கப்பட்டன.  அந்தப்பதிவுகள் இலக்கியப்பதிவாகவும், விழிப்புணர்வு விசயங்களாகவும் தொடர்ந்து  எழுதப்பட வேண்டும். பூமி சூடாகியும் பல்வேறு சுற்றுச்சூழல் கேடுகளை கண்டு வரும் சூழலில் இன்றைக்கு எழுத்தாளர்களின் முக்கிய கடமை அது . 

         நூல்  அறிமுகம்..:  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியனின் “ பொதுவுடமையரின் வருங்காலம் “  - நூலைப் பற்றி  கோவை ப.பா.ரமணி, ஈரோடு ஓடை துரையரசன்  ஆகியோர் பேசினர் .விழாவுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டக் கிளையின் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இரா. நடராஜன் நன்றி கூறினார். நியூ சென்சுரி புத்தக நிலையம் மேலாளர் ரங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இரு நூல்களையும் நியூ சென்சுரி புத்தக நிலையம்,  சென்னை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.திருப்பூர் 2202488