சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

                                          
            கனவு இலக்கிய வட்டம் 
    8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
     

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி  பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் ஒரு வாரம் நடந்ததையொட்டி குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி              

சுற்றுச்சூழலைக் காப்போம் “ என்ற தலைப்பில் நடந்ததற்கான பரிசளிப்பு விழா பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் புதனன்று நடைபெற்றது. திருப்பூர் வடக்குப் பகுதியைச் சார்ந்த பல்வேறுப் பள்ளிகளின்  210 பேர் ஓவியப்போட்டியில் பங்கு பெற்றனர். சிறந்த எட்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பரிசுகளை வழங்கினார். மனோகர் முன்னிலை வகித்தார். கண்ணன் தலைமை தாங்கினார்.  கூத்தம்பாளையம் முருகு மெட்ரிக்குலேசன் பள்ளி, பூலுவபட்டி ஏவிபி மெட்ரிக்குலேசன் பள்ளி , பாண்டியன்நகர் அரசு உயர்நிலைப்பள்ளி , பாண்டியன்நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி, ராஜீவ் காந்தி நகர் சாரதா வித்யாலயா  பள்ளிகளைச் சார்ந்த எட்டுப்பேர் பரிசுகளைப் பெற்றனர்.ஓவியக்கலையின் உயர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. கிருஷ்ணகுமாரி நன்றி கூறினார். குழந்தைகள் புத்தகக் கண்காட்சி   சார்ந்த அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

செய்தி : ஆ . ரூபா