சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வெள்ளி, 1 ஜூலை, 2016

காட்டின் பயிர்பச்சை, மரமட்டைகள் , பிராணிகள், பெரிய ஜீவன்கள் பற்றி
ஆட்டனத்தியின் கதைப்பதிவுகள் 
                                      சுப்ரபாரதிமணியன்
                                                                காட்டின் பயிர்பச்சை, மரமட்டைகள் , பிராணிகள், பெரிய ஜீவன்கள் பற்றி இலக்கிய அவதானங்களை பிலோ இருதயநாத், கிருஷ்ணன், தியோடர் பாஸ்கரன், முதல் ஆர் எஸ் நாராயணன் , பாமயன் வரைக்கும் கண்டு கொண்டு வருகிறோம். ஆட்டனத்தி அவர்களின் படைப்புகள் கவனம் பெறக்காரணமாக இருந்தது அவரின் காட்டிலாக்கா அனுபவங்களின் எழுத்து வடிவம்தான்.அதையே அவரின் பிரத்யேக தன்மை என்றும் வரையறுத்து விடலாம்.அவரின் முந்தைய நூல்களை விட இந்நூல் அந்த கிரீடத்தினாலேயே மின்னுகிறது என்லாம். அதைத்தான் நான் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அவரிடமும் வலியுறுத்தி வந்திருக்கிறேன். அவரின் முந்தையப் படைப்புகளின் மீதான கடும் விமர்சங்களின் வழியே இத்தொகுப்பை அவர் வந்தடைந்திருக்கிறார்.
அவரின் முந்தைய “ வனம்நாவலில் காணப்படும் ஒரு தொன்மத்தை பொதுமையாக்கி இன்றைய சூழலியல் பிரச்சைனைகளின் வடிவமாக்க் கொள்ளலாம். இனக்குழுவொன்றின் கதை அது . விவாசயத்திற்கு  துணைபுரியும் இரு பெண்கள், மகள்கள். தண்ணீர் பாய்ச்சலில் ஏரி உடைந்து போக  மூன்றாம் பெண் மதகாகி நின்று நீர் வழிந்து சேதமாகிறதைக் காக்கிறதையும்  ஒரு சம்சாரிக்கும் இருளச்சிக்குமிடையிலான காதல் உணர்வையும் இணைத்து அந்நாவலில் சொல்லிருந்த ஞாபகம். அவர் காடு “ நாவல் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். “யானை டாக்டரில் பத்துக்கும் மேற்பட்ட பிழைகள் இருப்பதைச் சொல்லிக்காட்டியிருக்கிறார். அந்த அளவில் காடு சார்ந்த விபரங்கள், வாழ்வியல் உண்மைகளை நல்லத் தரவுகளாக தன்னுள் கொண்டிருப்பவர்.இக்கதைகளின் ஆதாரமாக அந்தத் தரவுகள் , அனுபவங்கள் அமைந்திருப்பது இக்கதைகள பலமுள்ளதாக்குகிறது.அந்த வகையில் கிணற்றில் விழுந்து விட்ட சிறுத்தை,  கிணற்றில் விழுந்து விட்ட மயில், காட்டுக்குள் விரட்டப்படும் யானை, நல்ல சினேகபாவத்துடன் உறவாடும் நாய்கள் என்று பலவற்றைக்காட்டுகிறார்
     .கிணற்றில் விழுந்து விட்ட சிறுத்தையை மீட்டெடுக்கும்பணியில் ஈடுபடும் போது வீட்டிற்கு வந்து தங்கி விட்ட மகளுக்கு அவளின் வாழ்வை மீட்டெடுக்க திடீர் மின்னலும் கிளம்புகிறது. கிணற்றில் விழுந்து விட்ட மயிலை  மீட்டெடுக்கும்பணியில் ஈடுபடும் போது ஒருவனுக்கு இரண்டாம் மனைவியாய் ஒருத்தியும் கிடைத்து விடுகிறாள். யானை வேட்டை என்பது வெவ்வேறு விதமாயும் இருக்கிறது. காட்டுக்குள் யானையை விரட்ட வேண்டியிருக்கிறது. அதையே கும்கியாக்கி  குழந்தை போல் ஆக்கிவிடவும் முடிகிறது.அதற்கான தீனி வேண்டி திரிகிற போதுஅது பிறருக்கு எதிரியாகி விடுகிறது தீபந்தங்கள், துப்பாக்கி வேட்டு,மயக்க ஊசி என்று விரட்ட வேண்டியிருக்கிறது. புறாக்களை வேடிக்கையாக்கும் சூதாட்டத்தில் வரும் பணத்தில்உடன் படாமல் கல்லூரியில் சேர பணம் தேவைப்படும் இளைஞன்  அதை மறுத்து விடுகிற லட்சியங்களும் இதில் கதைகளாக உள்ளன. வாழ்க்கையின் இறுக்கங்கள், திசை  மாறிப்போகும்  அனுபவங்கள் இவற்றிலிருந்து த்ன்னை மீட்க ஆசைப்படுபவன் கிளிகளை வாங்கி பறக்க  விட்டு தன் மனதைக்குறியீடாக்கி  வெளிப்படுத்திக் கொள்கிறான் . “ வெச்ச குறி என்ற அந்தக்கதையின் மையம்தான் பல கதைகளில் ஊடாடி நிற்கிறது.. யானையோ, மயிலோ, பெண்ணோ, நாயோ, முதியவர்களோ விரும்புவதெல்லாம் இந்த ஒரு வகை விடுதலை உனர்வைத்தான். ஆனால் அவை அதை  அடைய எடுக்கும் முயற்சிகள் பல விபரீதங்களாகின்றன.             விடுபூக்கள் “ கதையில் கைவிடப்பட்ட முதியவர்கள் தங்களைத் தற்கொலைக்குள்  அமிழ்த்திக்கொள்வது துயரமானது. எந்தையும்.. “ கதையில் கைவிடப்பட்ட முதியோரைக் காக்க நவ இளைஞனுக்கு ஞானோதயம் கிட்டுவது பாக்கியம்தான். இந்த ஞானோதயம் பல கதாபாத்திரங்களுக்கும் ஏற்படுகிறது. மான் வேட்டையில் புலி “யான ஒருவனின் மனைவி அநியாயமாய் குத்தி சாய்க்கப்படுகிறபோது அந்த வேட்டைக்காரனுக்கு வேட்டை குறித்த வேறு பார்வை கிடைக்கிறது.. பரிகாரமாய் காட்டிற்குச் சென்று மான்கள் ருசிக்கும் உப்பை எங்கும் தூவிவிட்டு வருகிறான்.  யானையின் பார்வையிலும் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அது அன்பில் மூர்க்கத்தை இழந்து  குழந்தையாகி விடுகிறது.12 பேரைக்கொன்றவன் என்ற பார்வை மீறி அது குழந்தையாகும் அனுபவம் மனிதர்களிடமும் ஏற்றிச் சொல்லப்படவேண்டியதுதான்.
  தினசரி அனுபவங்களிலிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது. யானையைப் பராமரிக்கும் மாவுத்தன் யானையின் பிரசவம் ஊருக்குப்போயிருக்கும் மனைவியின் சிரமங்கள், பிரசவத்தை நினைவுக்குக் கொண்டு வர மனோத்துவ வைத்தியமாகிறது . இரு பிரசவங்கள். பிரசவிப்பவை நல்ல எண்ணங்களை. “ வெங்கடேசா  “கதையில் அவன் எல்லாம் தெரிந்தவன், இறுக்கமானவன். திடமானவன் . ஆனால் மனைவியின் பொருட்டு  கறி தின்னும் பழக்கத்தை ஒரு நிமிட  யோசிப்பில் மாற்றிக்கொள்வது ஒரு நல்ல அனுபவம். பல செய்திகள் பட்டியல்கள் துருத்தி நிற்பது காட்டுச்செடிகளிடையே தென்படும் களைகளாக இருக்கிறது.
 மிகுந்த சிரமங்களுடன் காட்டுக்குள் விரட்டப்படும் யானைகள் . ஆனால் வேறு யானைகள் தொடர்வண்டிகளில் அடிபட்டு இறந்து போவதும் துயரம்தான். இதை விடத்துயரம் பறவைகளே கதியாக இருப்பவனின் மனவி பறவை நோயால் இறந்து போவது நாராய் நாராய் “ என்ற அக்கதையில் இறந்து போனவளின் தங்கை  எடுக்கும் முடிவு எவ்வளவு சரியானது. வெற்று தியாகங்களை அந்த முடிவு கேள்விக்குறியாக்கி விடுகிறது. நாய்கள் வளர்ப்பில்  அக்கறை கொண்ட அதிகாரி தன் குழந்தையை அதன் பொருட்டே  இழப்பதும் கூட  காற்று வீசும் திசை பற்றிய அறிவு முதல் காட்டுத்தொன்மங்கள் வரை அறிந்த பல சம்சாரிகளைக் காட்டுகிறார்.  இந்த வகையிலானதுதான்.மனித அநுபவங்களை காட்டின் பயிர்பச்சை, மரமட்டைகள் , பிராணிகள், பெரிய ஜீவன்களோடு இயைந்து காட்டியிருப்பதில் தனித்துவமான கதைக்களன்களைக் கொண்டிருக்கிறது இத்தொகுப்பு. .