சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

                   திருப்பூர் மத்திய அரிமா சங்கம்
                    35 B., ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 603)
       

அரிமா விருதுகள் 2016 :   அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா            மத்திய அரிமா சங்கம், , காந்திநகர்,                       திருப்பூரில் நடைபெற்றது.


சிறப்பு விருந்தினராக. அம்சன் குமார் , சென்னை
( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய  விருது பெற்றவர்)  கலந்து கொண்டு தனக்கு அளிக்கப்பட்ட பாராட்டிற்கு நன்றி தெரிவித்துப் பேசினார்.


“ எழுத்தாளர்கள் கலைஞர்கள் வாழ்க்கையை ஆவணப்படுத்துவது என்பது மிகவும் முக்கியம். அவர்களின் வாழ்க்கை பற்றிய பல்வேறு விபரங்களை சேகரிப்பதும், பாதுகாப்பதும் அவர்களின் குடும்பத்தினரின் பொறுப்ப்ம் கூட ஆகும். ஆவணப்படுத்துவதை அரசாங்கம்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க்க்கூடாது. குடும்பத்தினரும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். எழுத்தாளர்கள் கலைஞர்கள் வாழ்க்கையை  வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள ஆவணப்படுத்துதலே சிறந்த வழி. அதுவும் ஊடகங்களின் பெரும் வளர்ச்சியில் ஆவணப்படுத்துதல் சிறந்த்தாகவும், சற்றே எளியானதாகவும் கூட உள்ளது. ஆவணப்படங்களே சமூகத்தின் மனச்சாட்சியாக விளங்குபவை. குறும்படங்கள், திரைபடங்களில் புனைவுத்தன்மை உண்டு. ஆனால் ஆவணப்படங்களில் யதார்த்தமும், நம்பகத்தன்மையும் அதிகம். அவை உணர்ச்சிமயம் கொண்டவை. இந்தியாவின் பல்வேறு எழுச்சிகளுக்கு ஆதாரமாக பல  ஆவணப்படங்கள் முன் மாதிரியாக இருந்திருக்கின்றன. முக்கியமாக  சுதந்திர காலகட்டம். மற்றும்  இன்றைய மக்களின் தன்னிச்சையான பல எழுச்சிகளில் சமூக ஊடகங்களின் பங்கு முக்கியமானது. அதிலும் ஆவணப்படங்களின் முக்கியத்துவமும் இருக்கிறது . “ என்றார்.
         அரிமா சுதாமா கோபாலகிருஷ்ணன்., சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்

விருது பெற்றவர்கள்  :L (எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் )
சக்தி விருது:
கலைச்செல்வி , திருச்சி
கனிமொழி ஜி , கடலூர்
நளினி வெள்ளியங்காட்டான், கோவை
மஞ்சுளா தேவி உடுமலை
சித்ரா, கோவை
தேன்மொழி, பாண்டிச்சேரி
தமிழ்ப்பாவை . உடுமலை
நாகரத்தினம், கோவை
இராஜகலா, ஈரோடு
கலைவாணி, டெல்லி
குறும்படம்:
செல்வி, கோவை
சு.கண்ணன், திருப்பூர்

ஓவியர்கள்:
திருப்புரைச் சார்ந்த மருதுபாண்டியன், சிராஜ் மற்றும்              கல்வியாளர் மருத்துவர் சு.முத்துசாமி
மற்றும்      
அவ்விழாவில்                திருப்பூர் இலக்கிய விருதுகளை  ( பட்டியல் பின்னால் இணைக்கப்பட்டுள்ளது )
அம்சன் குமார் , சென்னை ( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய  விருது பெற்றவர்) பரிசு வழங்கி கவுரவித்தார்.  
அரிமா சங்கத்தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம் வரவேற்றார். பரிசு பெற்ற எழுத்தாளர்கள் தங்களின் படைப்பு அனுபவங்களை வழங்கினர் .
திருப்பூர் இலக்கிய விருது 2016  விருது பெற்றோர்:சென்றாண்டின் சிறந்த நூல்களுக்கானப் பரிசு . ஜெயசாந்தி ( நாவல்) – சங்கவை –விருட்சம் பதிப்பகம், சென்னை
2. சுபசெல்வி ( சிறுகதைத் தொகுதி )- புளியமரத்தாணி-விஜயா பதிப்பகம் கோவை
3. பூரணா ( கவிதைத்  தொகுதி ) – ஆகாயத்தோட்டிகள்: என்சிபிஎச் சென்னை
4. உடுமலை ரவி ( கட்டுரை ) - முழு மது விலக்கு  , கொங்கு ஆராய்ச்சி மையம், உடுமலை
5. கொ.மா.கோ.இளங்கோ ( சிறுவர் இலக்கியம் ) – ஜீமாவின் கைபேசி., பாரதி புத்தகாலயம்,  சென்னை

தொடர்புக்கு: 81242 83081