சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

தேநீர் இடைவேளை(நாவல்),ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்,41-பி , சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் ,அம்பத்தூர், சென்னை - 600 098.பக் : 102, விலை : ரூ. 85/

ஒரு புறம் பெரிய பெரிய பஞ்சாலைகள் மூடப்படுகின்றன . மறுபுறம் நகருக்கு வெளியே சிறிய சிறிய ஆலைகள் முளைக்கின்றன . இங்கு ஆண்களும் , பெண்களும் நவீனக் கொத்தடிமைகளாய் படும் அவதியும் அவலமும் நம்மை திடுக்குற வைக்கிறது . இந்த நாவலின் கதாநாயகன் யார் ? அப்படி யாருமில்லை? வில்லன் ? அது இந்த சமூக அமைப்பே . அதுதான் இந்நாவல் .வழக்கமான கதை சொல்லும் பாணி இங்கு இல்லை . முதல் பகுதியில் 10 கடிதங்கள் . அந்தக் கடிதங்கள் மூலம் சுமங்கலித் திட்டம் என்கிற மாயவலை , வேலையின்மை எனும் நெருக்கடியால் பொறியில் சிக்கிய எலியாய் வாழ்க்கை ,வறுத்தெடுக்கும் நோய் , கடன் எனும் மூழ்கடிக்கும் புதைசகதி ,குடியிருப்பு என நாமம் சூட்டப்பட்ட கொட்டடி ; சிறைக்கொட்டடிக் கொப்பான சீரழிவு , உரிமையை கேட்கவும் முடியா விலங்கு ,வயிற்றுப்பசி மட்டுமல்ல வாட்டும் உடல் பசியும் வாழ்வின் ரணமும் வலியும் வேதனையும் என எவ்வளவோ செய்திகள் ; படிக்கும் போதே மனது வலிக்கிறது . மூலதனத்தின் மூர்க்க வெறியால் சின்னாபின்னமாக்கப்பட்ட -சிதைக்கப்பட்ட வாழ்க்கை சித்திரமே ஒவ்வொரு கடிதமும் எனில் மிகை அல்ல.மல்லிகா , ரங்கநாதன் , செந்தில் ,அந்தோணிராஜ் இன்னும் பலர் வருகின்றனர் . இவர்கள் தனித்தனியாகப் பேசுகின்றனர். ஆயினும் அதில் ஒரு தொடர்ச்சியும் இருக்கிறது .

அத்தொழில் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் அவலத்தை அழுத்தமாகவே பதிவு செய்கிறது .அதே சமயம் அடுத்த இரு அத்தியாயங்களை ஆவலோடுபுரட்டினால் ஏதோ ஒரு வெறுமை சூழ்கிறது .அந்தோணிராஜ் டைரிக்குறிப்புகளைச் சொல்லும் இரண்டாம் பாகமும் , செந்திலின் டைரிக் குறிப்பாய் நீளும் மூன்றாம் பாகமும் என்ன சொல்ல வருகிறது ? அந்தோணி ராஜ் மூலம் சொல்லவரும் அரசியல் செய்தியாகட்டும் செந்தில் மூலம் படைப்பனுபவமாகட்டும் எதைச் சொல்லுகிறார் ?என்னுள் எழும் கேள்வி கோவைஞானிக்கும் எழுந்திருக்கிறது . முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார் ; “இந்த நாவலில் ஷேக்ஸ்பியரைப் பற்றி இ.எம்.எஸ்.ஐப் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டுமா? நாவல் எந்த வடிவிலும் எதையும் எழுதி வைக்கலாம் என்ற பின் நவீனத்துவ விதியை இப்படி கடைப் பிடிக்கத்தான் வேண்டுமா ? மல்லிகா முதலியவர்களின் வாழ்க்கை பற்றி நாம் நமக்குள் தேடுகிறோம் . அவர்களுக்கெல்லாம் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது என்பது உண்மைதான் . கொட்டடிகளை விட்டு வெளியில் சென்ற பிறகு நோய்நொடிகளோடு வாழ்ந்து சாவார்கள் . இந்தக் கதையை ஏன் தொடர்ந்து சொல்லக்கூடாது ? செந்திலுக்கோ ராஜேந்திரனுக்கோ தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வழியில்லை . நாம் புரிந்து கொள்கிறோம் . யதார்த்தவாதம் என்ற வடிவத்திற்குள்ளாகவே இவர்களின் அவலங்களைச் சொல்ல முடியாதா என்ன? நாவலின் வடிவத்தைச் சிதைப்பது என்பது இப்படித்தான் இருக்க வேண்டுமா ? இப்படி வடிவத்தைச் சிதைப்பதின் மூலம் நாவலாசிரியருக்கோ நமக்கோ கூடுதலாக சுதந்திரம் கிடைக்கிறதா ? இப்படியெல்லாம் வாசகனைத் திணற அடிப்பதின் மூலம் நாவலாசிரியர் எதைச் சாதிக்க விரும்புகிறார் ?” இக்கேள்விகள் இந்நாவலோடு சம்மந்தப்பட்டது மட்டுமல்ல ..இவ்வளவுக்கு இடையிலும் முதல் பகுதி - அந்த பத்து கடிதங்கள் நெஞ்சைப் பிசையத்தான் செய்கின்றன . சிதைக்கப்பட்ட வாழ்வின் அவலங்களை உள்வாங்கி சமூகக் கோபத்தைப் பற்ற வைக்க இந்நூல்பயன்படுமே ! படியுங்கள்!