சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

புதன், 21 அக்டோபர், 2015

நூல்கள் வெளியீட்டு விழா

1.திருநாவுக்கரசு IPS அவர்களின் “ உன்னுள் யுத்தம்  செய் “                                     ( சுயமுன்னேற்ற நூல் )
2. சுப்ரபாரதிமணியனின் “ எட்டுத்திக்கும் “                                                                          ( பயண கட்டுரைகள் நூல் )

சிறப்புரை : திருநாவுக்கரசு  IPS
தலைமை : ரங்கசாமி (தலைவர் , மத்திய அரிமா சங்கம் )
இடம் :  மத்திய அரிமா சங்கம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர்,திருப்பூர் .
நாள்: 24/10/15 மாலை 7 மணி .. வருக...

நிகழ்ச்சி ஏற்பாடு: திருப்பூர் மத்திய அரிமா சங்கம்

(( “ உன்னுள் யுத்தம்  செய் “  ரூ160 தமிழ் வாசல் பதிப்பகம், மதுரை                                   
“ எட்டுத்திக்கும் “ ரூ110, என்சிபிஎச், சென்னை ))
/o:p>