சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வியாழன், 7 மே, 2015

சேவ் வெளியீடுகள்

டாலர் சிட்டி : திருப்பூரைச் சேர்ந்த கவிஞர்கள், இடம் பெயர்ந்த  தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவங்களையும் உணர்வுகளையும் கவிதை வடிவத்தில் மனம் நெகிழும்படி வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Environmental Impact : நொய்யல் ஆற்றின் தொடக்கம் முதல் அதன் முடிவு வரையுள்ள இருகரைகளில் நிகழ்ந்துவரும் மாசுபடிதல் பற்றியும், விவசாயத் தொழில் வீழ்ச்சி பற்றியும், வாழ்க்கை நெருக்கடி பற்றியும் நேரடியாக ஆய்வு  செய்து எழுதியுள்ள  ஆங்கில நூல்.

வேர்களும் விழுதுகளும் : தமிழக முன்னணி  இலக்கியப் படைப்பாளர்களைக் கொண்டு திருப்பூர் நகரில் நடத்தப்பட்ட  கருத்தரங்கக்  கட்டுரைகளின் தொகுப்பு. இடம்  பெயர்தலுக்கான காரணங்களையும், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை  நெருக்கடிகளையும் இதிலுள்ள கட்டுரைகள்  ஆழமாகவும், தெளிவாகவும், அக்கறையோடும் ஆய்வு செய்கின்றன.

Author speak on Migrant Worker :  இது “வேர்களும் விழுதுகளும்என்ற கட்டுடைத் தொகுப்பின் ஆங்கில மொழி வடிவ. சிறப்பான முறையில் மூலக்கட்டுரைகள் தெளிவாகவும் சுவையாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

Women workers in a Cage :  சுமங்கலி மற்றும் விடுதி திட்டத்தின் கீழ் திருப்பூர் ஆயத்த ஆடை தொழிற் சாலைகளில் வேலை செய்யும் பெண்கள் குறித்து ஒரு உண்மை அறிக்கை. கனவுகளோடும், கற்பனைகளோடும் இடம் பெயர்ந்து வந்து  அவலத்திற்கு உள்ளாகும் இளம் பெண்களின் துயரவாழ்வை வெளிப்படுத்தும் ஆங்கில நூல்.
கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள் : மேற்கண்ட நூலின் தமிழின் மொழிபெயர்ப்பு.

The Last Symphony : சுற்றுச்சூழல் சார்ந்த சுப்ரபாரதிமணியனின் தமிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு.
(குறும்படங்கள் )
சுமங்கலி  : ஜவுளித் தொழில் பின்னலாடைத் தொழில் துறையில் நவீன கொத்தடிமை முறையாய் உருவாகிவரும் சுமங்கலித் திட்டம் பற்றிய கவிதையின் காட்சிப்படிமம். இயக்குனர் திரு. ரவிக்குமார்.

நல்லதோர் வீணை : சுமங்கலித்திட்டம் குறித்த குறும்படம்
சோத்துப்பொட்டலம் : குழந்தைத் தொழிலாளர் பற்றியது

வெளியீடு

சேவ்’,
அய்ஸ்வர்யா நகர்,
கே.பி.என். காலனி, திருப்பூர் – 641608.
போன்: (0421) 2428100