சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,11 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 40 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 27 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

வீடு தேடி வரும் சினிமா இயக்கம் அறிமுகக் கூட்டம்
------------------------------------------------------------------------
வீடு தேடி வரும் சினிமா இயக்கத்தை சென்னை பரிக்‌ஷா ஞாநி துவங்கியுள்ளார். இதன் அறிமுகக் கூட்டம் பாண்டியன் நகர் சக்தி பில்டிங்கில் புதன் அன்று மாலை நடைபெற்றது. சக்தி மகளிர் அறக்கட்டளையின் தலைவர் திருமதி கலாமணி கணேசன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

 எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வீடு தேடி வரும் சினிமா இயக்கம் பற்றி அறிமுகப்படுத்திப் பேசினார். அதன் முதல் வெளியீடான                               விசாரணைஎன்ற முழு நீள நாடகம் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.கலாமணி பெற்றுக் கொண்டார்.


இத்திட்டத்தின் கீழ் இனி தொடர்ந்து திரைப்டங்களும் குறும்படங்களும் குறுந்தகடுகளாக வெளியிட சென்னை பரிக்‌ஷா ஞாநியின் “ கோலம் அமைப்பு ”  திட்டமிட்டுள்ளது. நம் வாழ்க்கையை அர்த்தமாக்கும் பலகதைகள் படமாக்கப்பட வேண்டும்.. இது வணிகச் சூழலை மீறி நல்ல படங்கள் வர வழி வகுக்கும்.வணிக நோக்கில் எடுத்து வெளியிட முடியாமல் இருக்கும் திரைப்படங்கள்  இத்திட்டத்தில் வெளியிடப்படும் . கூட்டத்தில் கவிஞர் ஜோதி, பேச்சாளர் சொக்கலிங்கனார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.