சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

புதன், 11 மே, 2011

அண்டை வீடு: பயண அனுபவம் பாதுகாப்பு

பத்து வருடங்களுக்கு முன்னால் தள்ளு ரிக்ஷாவில் உட்கார்ந்திருந்த நான் சிகரெட் குடித்ததற்காக கீழே இறக்கி விடப்பட்டேன். அந்த ஏழ்மையான ரிக்ஷாக்காரர் என்னை கேவலமாகத்தான் திட்டினார். இன்று அதே டாக்கா வீதிகளில் பேண்ட், சர்ட் போட்டு நடக்கிறேன். மாறுதல்தான். இது கல்வி அல்லது காலம் தந்த முன்னேற்றம்" இப்படிச் சொல்பவர் முப்பத்தைந்து வயது பெண்மணி. பெண்களுக்கான கல்வி என்பது சற்றே முன்றனேற்றமடைந்தள்ளதுதான் வங்கதேசத்தில். " மதர்சா பள்ளிகளில் படிக்கும் வீடுகளற்ற அனாதைக் குழந்தைகளில் இருக்கும் பெண் குழந்தைகள் முகமும் பயப்பட வைக்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் எப்படியிருக்குமோ"

இங்குள்ள பள்ளிகளை ஆங்கில வழிக்கல்விக் கூடங்களை, வங்காள மொழி கல்விக் கூடங்கள், மதரசா கல்விக் கூடங்கள் என்று பிரிக்கலாம். இவற்றில் மதரஸாவில் இஸ்லாமிய அடிப்படை விஷயங்களை அராபிக் மொழியில் கற்றுத் தருகிறார்கள். வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் குடும்பங்கள் இல்லாமல் போன இளம் வயதினர் அங்கு உள்ளனர்.. உள்நாட்டுப் போர்களால் கைவிடப்பட்டவர்கள் என பெரும்பாலும் அனாதைகளாய் மதரஸா பள்ளிகள் நிரம்பி வழிகின்றன. அரசு சலுகை பெற்ற பள்ளிகள், அரசாங்கப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்ற பிரிவுகள் இருகின்றன. வழக்கமாய் ஆங்கிலத்தை முதன்மைபடுத்தும் பள்ளியில் கட்டண விகிதம் அதிகமாகவே இருக்கிறது. மேல்தட்டு மக்களின் வாழ்க்கைக்காக அப்பள்ளிகள் இருக்கின்றன.

இலவசக்கல்வி 10 வயது வரை இருக்கிறது. சிலருக்கு மான்ய உதவியும் இருக்கின்றன. தெற்காசியாவில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதம் உள்ள நாடு. ஏழை வங்காளநாட்டில் தன்னார்வக் குழுக்கள் நடத்தும் குழந்தைத் தொழிலாளர்களுக்கான பள்ளிகள், மாலைநேரப் பள்ளிகளும் கணிசமான அளவு இயங்கி வருகின்றன. 1980களுக்கு ப் பிறகு ஆங்கிலக் கல்விக்கான மவுசு அதிகரித்து வருகிறது. 1992ல் தனியார் பல்கலைக் கழகங் களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டன.

34 அரசுப் பல்கலைக்கழகங்களும், 54 தனியார் பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன. டாக்காவில் பிரதான வீதிகளில் தென்படும் தனியார், அரசு பல்கலைக்கழகங்களின் கட்டிடங்கள் முனிசிபல் காம்ப்ளக்ஸ் போன்று நெருக்கமானவே அமைந்திருக்கின்றன. தனியார் பல்கலைக் கழகங்களில் 1 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் 65% ஏதாவது வேலை என்று தேடிக் கொள்கிறார்கள். பெரும்பாலும் தனியார் வேலைதான். பின்னலாடை, ஜவுளித்துறை தொழிலை ஏற்றுக் கொள்கிறார்கள். 12% வேலையற்றவர்களாக இருக்கிறார்கள். பங்களாதேஷ் யுனிவர்சிட்டி ஆப் இன்ஜினீயரிங் டெக்னாலஜி, டாக்கா யுனிவர்சிட்டி,இண்டிபெண்டட் யுனிவர்சிட்டி, BRAC தன்னார்வக் குழு பல்கலைக்கழகம் போன்றவை புகழ் பெற்றவை.

" கேடட் காலேஜ்" என்றொரு அங்கம் கல்வித் துறையில் இருக்கிறது. இதில் ராணுவப் படிப்பு கட்டாயம் மாதிரி, பிரைவேட் ஆங்கிலப் பள்ளி என்ற ஆங்கிலத்தைப் பிரதானமாகக் கொண்ட பள்ளிகள் புற்றீசல் போல் பெருகி வருகின்றன( தமிழ்நாட்டில் 2010ல் அரசு கொண்டு வந்துள்ள மாதிரிப் பள்ளிகள் பற்றி ஞாபகம் வருகிறது. இந்த மாதிரிப் பள்ளிகள் பிற்பட்ட மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். வெவ்வேறு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பள்ளி வடிவமைக்கப்படும், தேர்ந்த கல்வி இதன் நோக்கமாம். ஆனால் ஆங்கில வழிக் கல்விதானாம். தமிழகத்துக் கல்வியாளர்கள் பலர் இதை எதிர்த்துள்ளனர்).

மதர்சா பள்ளிகளின் வீச்சு மக்கள் மத்தியில் ஊடுருவி உள்ளது. சாப்பாடு, தங்குமிடம் உட்பட் அனைத்தும் இலவசம். 12 வது கிரேடு "அலிம்"முடிந்து 3 வருட பட்டப்படிப்பு உள்ளது. தீவிரவாதிகளை உருவாக்கும் பள்ளிகளாய் மற்றவர்களால் இப்பள்ளிகள் கணிக்கப் படுகின்றன. எல்லாவற்றிலும் மதிப்பெண் பெற குருட்டு மனப்பாட முறையேஇருக்கிறது.. தேர்வும், தேர்ச்சியும் பெற்ற ஆசிரியர்களுக்கான பயிற்சி திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. இஸ்லாமியப் பள்ளிகளில் இஸ்லாமிய அரசியல் ஒரு முக்கிய பாடம்.அரசியல் பாடம் படிப்பவர்களில் பெண்கள் கணிசமாக இருக்கிறார்கள்."மூன்று சக்கர ரிக்ஷாவில் இரும்புக் கதவுள்தான் உட்கார்ந்து இளம் பெண்கள் போக வேண்டி இருக்கிறது. திருட்டு ப்பயம். வன்முறை கூட.. ரிக்க்ஷாக்களுக்கு இரும்புக் கதவுகளைப் போட்டிருக்கின்றனர். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கல்வி முறை இல்லைதான்" என்பது பெண்களின் அபிப்பிராயமாக இருக்கிறது