சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

செவ்வாய், 24 ஜூன், 2008

ஓடும் நதி பற்றி "பால்கி"

ஒரு தொழிற்சங்கவாதியின் பார்வையில் : சுப்ரபாரதிமணியனின் :" ஓடும் நதி " நாவல்

பால்கி
======================================================

பால்கி ( மாநில செயலாளர் SNEA =BSNL அதிகாரிகள்

தொழிற்சங்க அமைப்பு )

=====================================================


சென்னை அமிருதா பதிப்பகத்தால் வெளிவந்திருக்கும் சற்று பெரிய நாவலான "ஓடும் நதி" வாசிப்பு சில பல தொழிற்சங்க தொடர் நடவடிக்கைகளால் தடைபட்டாலும், சுவாரசியமாய் வாசிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் அற்புத நாவல் என்பதை படித்து அறிந்தேன்.

சென்ற திண்ணை இதழில் சுந்தர் அர்னவா குறிப்பிட்டிருக்கும் தலித் பாத்திரம் வெளியேற்றப்பட்டிருப்பது, பொதுவுடமைவாதிகள் மீதான ஜாதீய விமர்சனம்

போன்றவற்றை மீறி மனதில் கொள்ளப்பட பல விசயங்கள் இந்த நாவலில் உள்ளன.


நதியின் இரு மருங்கிலும் உள்ள கரைகள் பலரால், பல நோக்கங்களுக்கு பயன்பட்டிருப்பதைப்போல இந்த நாவலில் ஆசிரியரால் கொண்டு வரப்பட்டிருக்கும் பாத்திரங்களான செல்லம்மிணி, மேரி, நீலியக்கா, ராஜேஷ்குமார், இப்ராகிம், செல்வம், சொக்கன் இப்படி ஏராளமானவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். ஆறு பிரிவுகளில் பிரிக்கப்பட்டிருக்கும் நாவலின் முதல் பிரிவில் செல்லம்மிணி மனது, செல்வம் இவர்களுக்கிடையேயான கடித உறவுகள் அதில் தங்களுது பிரச்சனைகள் பகிர்ந்து கொள்கிற லாவகம் அற்புதமாய் கையாளப்பட்டிருக்கிறது. இயல்பாகவே ஆசிரியரின் பல நூல்களில் அவர் காட்டும் சுற்றுப்புறசூழல் அக்கறை பல சமயங்களில் வாசகருக்கு உணர்த்தும் வகையில், காற்றில் கலந்த விஷம்-இராசாயன நெடி-தொழிற்சாலையின் பிரசவத்தால் ஏற்பட்டுள்ளது என்று எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. திருப்பூர் நெரிசலில் மூக்கினை சொறிபவர்கள் யாராக இருந்தாலும் - இந்த எழுத்துக்கள் நினைவுக்கு வரும் வகையில் இது அமைந்துள்ளது. நாகாலாந்தினை பார்க்காதவர்கள், நகரத்தின் நாசத்தில் வாழ்பவர்கள், இரைச்சலில் இரையாகும் நபர்கள் மட்டுமல்ல அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடமாக நாகாலாந்து வாழ்கின்ற பகுதி இருந்துள்ளது என உணர முடிகிறது.


செகந்திராபாத் பகுதியில் சொக்கனுடன் சென்றதும், சொந்த காரணத்தில் சொக்கன் திரும்பிவிட்டாலும் அங்குள்ள நபர்களுடன் இருந்த நாட்கள் செல்லமிணியின் நிலை எப்படி இருந்தது என்பதை அற்புதமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.


படிப்பறிவில்லாத சூழலில் சிக்கித்தவிக்கும் ஒரு பெண் தனது ஆசையின் தொடர்ச்சியாய் ஏற்படும் அதிர்வுகளாய் நிகழ்ச்சிகள் அமைகின்றன. மொழிதெரியாத இடத்தில் வாழும் பெண்களின் மனநிலை, சந்தடிசத்தங்கள் அதிகமாய் இருக்கும் இடத்தில் வாழும் சாதாரண குடிமக்களின் நிலைகள் அவற்றுடனே எழுதப்பட்டிருக்கும் கடுமையான நிபந்தனைகள் இதனுடன் ஒத்துப்போகும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறாள் பெண் என்பதை இந்த நாவலின் மையப் பாத்திரத்தின் வழியாக சொல்வதில் ஆசிரியர் அடைந்திருக்கும் வெற்றி பாராட்டுக்குரியது.


சுற்றுச்சூழலை மாசுபாடுத்தும் பணக்கார கணவான்களை ஆலயத்தில் அறிமுகமாக்கும் எழுத்துக்களில் தன்மனச்சாட்சியை பேசவைத்து சமூகத்தின் மீதான அக்கறையை ஆசிரியர் ஜெயபால் வக்கீல் மூலம் கொண்டு வந்துள்ளது புதுமையானது மட்டுமல்ல சமூக விரிவாக்கம் என்ற பெயரில் லாப கொள்ளையை உறுதிப்படுத்தும் ஆட்களுக்கு எதிராக போராடுவதற்கு உதவியானதும் கூட.


நாவலில் நாகாலாந்து, செகந்திராபாத், திருப்பூர், சுற்றியுள்ள பல இடங்கள் புழங்கப்பட்டிருப்பினும் அமைதி, கலவரம், மாசுபடும் நகரம் என்ற வகைகளுக்குள் அவை அடங்குகின்றன. நதியின் நீர் எல்லா இடங்களிலும் புதியதானதாகும் என்ற விதிக்கு ஏற்ப நாவலின் மையக்கருவான செல்லம்மிணி தான் சந்தித்த ஆட்கள் அனைவருக்கும் உதவும் வகையில் வாழ்வினை அமைத்திருப்பதை லாவகமாகவும் சற்றே பெண்களின் அவலத்தை உணரும் வகையிலும் வெளிப்படுத்தியுள்ளார்.


வாழ்வின் மிச்சங்களில் நதியின் மகத்துவத்தை உணருகிறோமோ இல்லியோ நாவலின் மூலம் ஓடும்நதியின் இயல்பை உணர்ந்திருக்கிறோம்.( ஓடும் நதி: ரூ150/- அமிர்தா பதிப்பகம் சென்னை பக்கங்கள் 350 )


( மாநில செயலாளர்SNEA =BSNL அதிகாரிகள் தொழிற்சங்க அமைப்பு )