சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
ஞாயிறு, 11 ஜனவரி, 2026
0 கோவை உலகப் பண்பாட்டு மையம் 12 ஆண்டுகளாக விருதுகளைத் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாண்டு அம்பை, க,. ரத்தினம், லோகமாதேவி, சுப்ரபாரதிமணியன் , மருத்துவர் கணேசன், கி. சிவா உள்ளிட்டோர் அவ்விருதுகள் பெற்றனர். பத்து லட்சம் ரூபாய் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது 26/12/26
படைப்பாளி உண்மைத் தேடுதலைக் கை விடும்போது ….சுப்ரபாரதிமணியன்
காலம் பண்பாட்டு வெளி இவற்றில் பயணம் செய்கிறவன் படைப்பாளி . கலாச்சார வெளியும் சமூகவெளியும் இணைந்து தான் அவன் படைப்புகள் உருவாகின்றன. மன உழைப்பை செலுத்தி அவன் படைப்பை உருவாக்குகிற போது பண்பாட்டு வெளியில் தான் அறிந்த மனிதர்களை கொண்டு வருகிறான் அவனுக்கு தெரிந்த நிலம், வெளி, காலம் அந்தப் படைப்புகளில் முக்கிய பங்களிப்பை செய்கின்றன
பண்பாட்டு வெளியில் மனித பண்பாட்டு நடத்தைகளை ஆவணப்படுத்தும் முக்கிய முயற்சிகளை அவன் எடுக்கிறான் அவற்றில் சமகாலத் தன்மை என்பது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அவற்றில் அந்த வழக்காற்றுகளில் நிகழ்த்துவதும் எழுத்தின் மூலம் பதிவு செய்வதும் முக்கியமாக இருக்கிறது..
படைப்பாளி மனித மனங்களை உயிரூட்டுகிறார். பார்வையாளன் அந்த ஆற்றலில் திளைத்து தன் வாழ்க்கையும் கொஞ்சம் திரும்பி பார்க்கிறார் என்ற கணம் படைப்பாளியின் தனித்த மனதில் இயங்காமல் பார்வையாளனையும் மனதில் கொண்டு தான் இயங்குகிறது .அப்படி இயங்குகிற போது அது கடந்த காலத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டி இருக்கிறது கடந்த காலத்தின் நீட்சியை நிகழ்வு காலமாகவே பார்க்கிறான். மக்களின் அனுபவங்கள் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் முக்கியமானவை. மக்களின் பண்புகள் அவை கோபமோ மகிழ்ச்சியோ எழுச்சியின் உச்சகட்டமோ எப்படியும் படைப்புகளில் வெளிவந்து தான் தீர்கின்றன
காலத்தில் பொழுதுகள் என்பதும் முக்கியமானதாக இருக்கிறது பகல் வெளிச்சம் கொண்டு சூரியனின் இயக்கத்தை காட்டிக் கொண்டே இருக்கிறது அதேபோல் மகிழ்ச்சியும் நிகழ்கால பண்பாடுகளும் வளர்வதற்கு நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் படிமங்களாக பகலாக பிரகாசிக்கிறது. இரவு வந்ததும் மனிதன் தான் பட்ட கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறதை அந்த இருட்டு காண்பித்து விடுகிறது. பின் மாலை பகலும் இரவும் கலந்த ஒரு நிழலாக இருக்கிறது. அங்கு சோகமும் மகிழ்ச்சியும் வேறு பண்புகளும் கூட ஆடி வருகின்றன. ஆகவே பகலிலும் இரவிலும் பின் மாலையிலும் பின் இரவிலும் முன் விடியலிலும் என்று அவன் படைப்புகளும் கூட பல பண்புகளை காட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கின்றன
எனக்கு ஒரு எல்லைக்கோடு தென்பட்டது அந்த எல்லைக்கு ஓட்டி அந்தபுறம் பேண்டசியும் சர்ரியலிசமும் என நடமாடிக்கொண்டிருந்தார்கள் சிலர் நான் இந்த எல்லையிலேயே, யதார்த்த எல்லையிலேயே நின்று நான் அநீதி மனிதர்களை அறிந்த மனிதர்களை அவர்களின் பண்புகளையும் அனுபவங்களையும் நான் அறிந்த காலத்திலும் வெளியிலும் பரப்பிக் கொண்டிருக்கிறேன்
பம்பரம் விடுதல் என்பது ஒரு சின்ன சாசக விளையாட்டு தான் அவற்றை சுழலவைக்க கயிற்றை சரியாக சுற்ற வேண்டும் எவ்வளவு சுற்று கயிறு சுற்றப்படுகிறது, போகிறது என்பது முக்கியம் குறைந்த சுற்றுகள் என்றால் அந்த பம்பரம் கொஞ்ச நேரம் சுழன்று நின்று விடும். அதிக சுற்று கயிறு என்றால் ரொம்ப நேரம் ஓடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது படைப்பு என்று வருகிற போது பம்பரம் சுற்றுவது போன்ற ஒரு செயல்பாடு இருந்து சுற்றுகிறது அது எவ்வளவு தூரம் சுற்றும் எவ்வளவு நேரம் சுற்றும் தெரியாது ஆனால் அது சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது வேடிக்கை பார்த்துக் கொண்டே காலம் கழிகிறது.. காலம் எழுத நிறைய அனுபவங்களைத் தந்து கொண்டேயிருக்கிறது
இந்தக் காலம் மனிதப் பண்புகளை மனதில் கொண்டு ஒரு விளையாட்டாகவே இலக்கியம் இருந்து கொண்டிருக்கிறது
சுற்றுகிறது அது எவ்வளவு தூரம் சுற்றும் எவ்வளவு நேரம் சுற்றும் தெரியாது ஆனால் அது சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது வேடிக்கை பார்த்துக் கொண்டே காலம் கழிகிறது.
இந்த காலம் மனிதப் பண்புகளை மனதில் கொண்டு ஒரு விளையாட்டாகவே இலக்கியம் இருந்து கொண்டிருக்கிறது.
அந்த விளையாட்டிலும் நேர்மையும், உண்மைத்தன்மையும் அவசியமாகிறது படைப்பாளி உண்மையைத் தேடுதலைக் கைவிடும்போது அது படைப்புத் தோல்வியில் செல்லும் விளைவுகளை உண்டாக்கும். உண்மையைத் தேடும் படைப்பளிகளை இந்த அமைப்பு இந்த விருதுகள் மூலம் அடையாளம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
( ஏற்புரைக்காக எழுதியது )
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா 11/1/26
பதினெட்டாம் திருப்பூர் குறும்பட விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை தாராபுரம் சாலை சேவ்அலுவலக அரங்கில் சுசீலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது
சமூக ஆய்வாளர் வியாகுல மேரி அவர்கள் விருதுகளை வழங்கினார்
அவர் உரையாற்றும் போது இப்படி குறிப்பிட்டார் :
“ இளைஞர்கள் தங்களுடைய சமூகம் சார்ந்த உறவுகளையும் விமர்சனங்களையும் வெவ்வேறு வகையில் படைப்புகளாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் இலக்கிய படைப்புகள் அதில் முதன்மை வைக்கின்றன. இப்படி குறும்படங்கள் சார்ந்தும் நிறைய இளைஞர்கள் இயங்குகிறார்கள் .இது திரைப்படத்திற்கு ஒரு படிக்கட்டாக இருக்கிறது.
சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற கைபேசி மூலம் திரைப்படங்கள் தயாரிக்கும் ஒரு நாள் பயிற்சியில் நிறைய இளைஞர்கள் பங்கு பெற்றார்கள் அவர்களிடமிருந்து நல்ல குறும்படங்களும் திரைப்படங்களும் வெளிவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது “என்று குறிப்பிட்டார்
திருப்பூர் சந்தோஷ் கிருஷ்ணன் இயக்கிய களிறு ஆவணப்படம் , ஈரோடு பெண் இயக்குனர் வைசியா தமிழ் இயக்கிய கொல்லம்மாள் , குறும்படம் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து எட்டுக் குறும்படங்களை தேர்வு செய்து விருதுகள் தரப்பட்டன
இந்த விழாவில் சுப்ரபாதிமணியின் எழுதிய ட்ரீம்ஸ் சேடோ என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல் வெளியிடப்பட்டது .இது அவர் எழுதிய திரை என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகும் சென்னை கோரல் பதிப்பகம் இதை வெளியிட்டிருந்தது .திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட அனுபவங்களை சுப்ரபாரதி மணியன் இதில் நாவலாக தந்திருக்கிறார்
இந்த நாவலை எல் ஆர் ஜி கலைக்கல்லூரி பேராசிரியர் திவ்யா வெளியிட சிறுகதை எழுத்தாளர் அங்கு லட்சுமி பெற்றுக்கொண்டார்
தூரிகை சின்னராஜ் எழுதிய இலையுதிர்காலம் என்ற பறவைகள் உலகம் பற்றிய நூல் வெளியிடப்பட்ட்து. திருப்பூர் கனவு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.
குறும்பட இயக்குனர்கள் எஸ் எல் முருகேஷ் ,சரவணன், பவானி கணேசன் , திவ்யா, அங்குலட்சுமி , கவிஞர்கள் ஆரோ ,எத்திராஜ் ,வாகை துரைசாமி உள்ளிட்டோர் திரையிடப்பட்ட குறும்படங்கள் பற்றிப் பேசினார்கள் .
சமூக ஆர்வலர்களும் குறும்பட ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள் படைப்பாளிகள் சார்பில் இயக்குனர் கோவை அருண் நன்றி கூறினார்
திருப்பூர் கனவு இலக்கிய அமைப்பு ,கனவு திரைப்பட ச் சங்கம் ஆகியவை இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தன . தூரிகை சின்னராஜ், புவனா உட்பட பலர் முன்னிலை வகித்தார்கள்.
சிறுகதை
பாட்டில்கள்: சுப்ரபாரதிமணியன்
அசோக மரங்களின் குவியல் அடர்த்தியான நிழலைக்கொண்டு வந்திருந்தது. மரத்தடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலிகள் திரைப்பட விழாவுக்கானது என்றில்லாமல் அயனக்ஸ் திரையரங்குகளின் நிரந்தரத்தன்மையால் உருவாக்கப்பட்டவை. மண்தரையின் ஈரம் இன்னும் குளுர்ச்சியைக் கொண்டு வர முயற்சித்தது
கோவா திரைப்பட விழா ஆரம்பித்து ஆறு நாட்களாகிவிட்டன.கோவாவின் முத்திரை எங்குமாக இருந்தது.பேசுபவர்களின் வாயிலிருந்து வரும் மது வாசனை முக்கியமானது . மது குறைந்த விலையில் எங்கும் கிடைப்பதே இங்கிருந்து போனவர்களை தாரளமாகப் புளங்கச் செய்தது.
தாடிக்கார்ர் ஒருவர் சுற்றிலும் போடப்பட்டிருந்த ஸ்டால்களில் விநியோகிக்கப்பட்ட அட்டைகளை சீட்டுக்கட்டை ஒன்றின் மேல் ஒன்று மடக்கி அடுக்குவது போல் அடுக்கிக் கொண்டிருந்தார். அதில் உணவு விபரங்கள், மத்திய அரசின் என் எப் டி சி ஸ்டாலில் கிடைக்கும் இந்திய இயக்குனர்களின் படங்களின் பட்டியல், பழமையான திரைப்படக்கலைபொருட்கள், திரைப்படம் சம்பந்தமான வெவ்வேறுப் போட்டிகளை அறிவிப்பவை என்றிருந்தன, படங்கள் பற்றியக் குறிப்புகளை அடுக்கி வைத்திருந்தார்.அந்த அடுக்கின் மேல் பகுதியில் சோவியத் ரஷ்யப்படங்களின் விபரங்கள் அழுத்தமான வர்ணஙகளில்
பளீச்சிட்டன. சட்டென மேலிருந்த சோவியத் அரங்கின் அட்டைகள்கவிழ்ந்து விழுந்து தூரமாய் தெரித்துப் போனது. அது ஒரு பெண் இயக்குனரின் காலடிக்குச் சென்று உட்கார்ந்தது. அவர் அதை எடுத்துப் பார்த்து வியந்து கொள்வதைப் போல் பார்த்துக் கொண்டார். . தார்க்கோவிஸ்கியின் மிரர் படத்தின் காட்சியை அந்தப்படம் காட்டியது
காட்டிக் கொண்டிருந்த்து. ட்ரினிடி மடாலயத்திலிருந்து துறவிகள் ஆந்த்ரேய் ருப்ளேவ், தானியல், மூவர் புனித உருவங்களை வரைவதற்காக மாஸ்கோவிற்குச் சென்று கொண்டிருக்கின்றனர். .மழைக்காக ஒதுங்குமிடத்தில் ஆடியும் பாடியும் அங்கிருப்போரைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ஒருவனைக் காவலர் பிடித்துச் செல்லும் காட்சி அதிலிருந்தது. அக்காட்சியை அப்பெண் இயக்குனர் பார்த்துக் கொண்டிருந்தார்.
”இன்னையிலிருந்து நாலு நாளைக்கு பிலிம் பஜார்க்கு போயிருவேன். என் படம் அதிலெ இருக்கு ...மார்கெட்டிங்க் பண்ணனும். வாய்ப்பு இருக்குமான்னு பாக்கணும். என்னோட படம் ஒரு நாள் ஸ்கிரினிங். இருக்கு”
”பாஸ்.. நாங்க பாக்கறதுக்கு வாய்ப்பு இருக்குமா
”விஸ்வம் நீங்க விரும்பிக்கேட்டதாலே முயற்சி பண்றேன். பிலிம் பஜார் ரெசிடென்சி ஸ்டார் ஓட்டலே நடக்குது. ஆன் லைனே பதிவு பண்ணுனதுனாலே பதினாலாயிரம் ரூபாய் கட்டணம். நேரடியாப் பண்ணுனா பதினெட்டாயிரம் ரூபாய். இந்த நிலமையிலெ மத்தவங்க நுழைய முடியுமான்னு தெரியலே. வாய்ப்பு இருந்தா சொல்றன்”
சூசன் ” அன்பே எல்லை “ என்ற முழுநீளத்திரைப்படம் எடுத்திருந்தார். .கோவையைச் சார்ந்த முஸ்லீம் சகோதரர்கள் இருவர் இருபது லட்சம் ரூபாய் போட்டுத் தயாரித்திருந்தார்கள்
“சென்சாருக்கு அனுப்பிச்சிங்களா சூசன்”
”இல்லே தம்பி குரு . அதுலே மதவாதக்கட்சிகள் பத்தி நேரடியான விமர்சனங்கள் இருக்கு. சென்சாருக்குப் போயி தப்பி வருமான்னு தெரியலே. ஜிப்சி படம் போயி படற பாடு தெரியும். எவ்வளவு வெட்டுக ..அது கோடிக்கணக்கான ரூபாய் பட்ஜெட் இது வெறுமனே இருபது லட்சம். பட்ஜெட். பல திரைப்பட விழாக்கள்லே , பல பிரிவுகளே பரிசு வாங்கறதுனாலே என் படத்து மேலே ஒரு அபிப்ராயம் உருவாயிட்டிருக்கு. அடுத்த கட்டம் சென்சாருக்கும் முயற்சி பண்ணனும்”
”உங்க படத்தெ யார் பாக்க வருவாங்க”
”கிருஷ்ணபிரபு …..பாரின் டெலிகேட்ஸ்.. படத்தெ டிஸ்ரிபுட்பண்ண விருப்பம் உள்ளவங்க வருவாங்க . .உங்களெ மாதிரி எழுத்தாளர்கள் பாத்துட்டு எழுதணும்”
”பாக்க வாய்ப்பு குடுங்க சூசன்”
கிருஷ்ணபிரபு கையில் வைத்திருக்கும் அவர் நடத்து சிறு பத்திரிக்கை தேடல் பிரதிகளை பார்க்கும் தமிழ்க்காரர்களுக்குத் தருவார். அவரின் கவிதைகள், மற்றும் சிறுகதைகளை ஆங்கிலத்தில் சிறு பிரசுரங்களாக அச்சடித்து இருப்பதை பிறருக்கு விரும்பித்தருவார்
”கிருஷ்ணபிரபு நீங்க மத்தவங்களுக்கு உங்க புத்தகங்களெ விரும்பிக் குடுக்கறீங்க. பலர் விருப்பமில்லாமெ வாங்குவாங்க. வெளிநாட்டுக்காரங்க்கிட்ட தர்றப்போ
அவங்க சந்தோசப்பட்டு பாராட்டுறதெச் சொல்லியிருக்கீங்க . அது மாதிரிதா வெளிநாட்டு டெலிகேட்ஸ் மரியாதை தருவாங்க. பாராட்டெ சந்தோசமாக் காம்பிப்பாங்க. நம்ம தமிழ் ஆளுக போலித்தனமா இருப்பாங்க. வெளிப்படையாப் பாராட்ட மாட்டங்க. படம் பாத்து கை குலுக்கி தலை அசச்சா படம் மொக்கைன்னு தெரிஞ்சுக்கணும். கட்டித்தழுவி இவ்வாண்டின் ப்ளாக்பஸ்டர்ன்னு சொன்னா நல்ல படம் .. புருவத்தெ உயர்த்துட்டுப் போனா உருப்படாதுன்னு அர்த்தம்.. சிலபேர் நக்கலா எங்கியோ இருக்கீங்கன்னு தப்புச்சுட்டுப் போயிருவீங்க”
”என்ன மாதிரி சாமியார்களுக்கு இலவசமா உங்க பில்ம் பஜார் ல உட மாட்டாங்களா”
”லோகு நீங்க சாமியாரா... கதர் உடுத்தறீங்க. முடி வெட்டறதில்லெ. இங்க வந்த பின்னாலே இயற்கை உணவே வுட்டிட்டீங்க. இப்போ ஜீன்ஸ் பேண்டுக்கு மாறிட்டிங்க
”அது சூசன். கோவா வெயில் கொடுமை தெரியும். பொண்டாட்டிமாருக இம்சை மாதிரி . வெயில்லே உடம்புலே சட்டை ஒட்டிப்போயிருது. அதுதா வேற வழியில்லாமெ இந்த யூனிபாமுக்கு மாறிட்டேன்”
”எதுக்கு அவ்வளவு ..ரூபா என்ரி பீஸ்..”
“பதினெட்டாயிரம்.. எபினேசர்.. நீங்க நல்ல சாப்பாடா தேடிச்சாப்புடுவீங்க. அந்த மாதிரி சாப்பாடு. மதியம் தண்ணி சப்ளை ஆரம்பச்சா ராத்திரி பத்து மணி வரைக்கு ம் இருக்கும் எவ்வளவு வேண்ணா குடிக்கலாம். காலையிலேயே பீர் சர்வ சாதாரணம் “
”நல்ல அனுபவமா இருக்கும் சூசன்”
ஆமா பிரான்சிஸ். நீங்க சினிமா பத்தி பல வருசமா எழுதறீங்க. கேமரா வெச்சிருக்கீங்க .,”நீங்க நிறைய பேசறீங்க . இது வரைக்கும் ஒரு குறும்படம் எடுத்ததில்லெ. எடுங்க. . ..நான் இந்த படம் எடுக்கறதுக்கு முந்தி ஒரு குறும்படம் முப்பது நிமிசத்திலெ நாயா அலஞ்சுதா எடுத்தேன். பிச்சையாப் பணம் வாங்கித்தான் எடுத்தேன்.அது இந்த படத்துக்கு விசிட்டிங்க் காட்டா இருந்துச்சு. உங்களெ மாதிரி எழுத்தாளர்கள் குறும்படங்களாச்சும் எடுக்கணும்”
”எங்களுக்கான ரசிகர்கள் தமிழ்லே இருக்காங்களா...ச்ச்… எங்களுக்கான வாசகர்களே இல்லெ ”
பிரான்சிஸ் இப்படிச் சொல்லியே தமிழ் வாசகர்களே , ”ரசிகர்களை முட்டாள் பண்ற வேலையெ செய்யாம வெளியில வாங்க”
” செரி... உங்க படம் பாக்க வாய்ப்பு இருந்தா சொல்லுங்கள். கதை என்ன”
”நடிகை கிட்ட வயசு என்னனு கேட்கறமாதிரி கதை சொல்லச் சொல்றது. நாம நண்பர்கள். ஒரே இடத்திலெ இருந்து வந்திருக்கம் . நமக்குள்ளே என்ன ரகசியம் வேண்டியிருக்கு
இரண்டு முஸ்லீம் தம்பதிகள். ஒரு தம்பதி வயசானவங்க. சமூகத்தாலே உறவினர்களாலே கை விடப்பட்டவங்க. இன்னொரு தம்பதி கலப்பு மணம் பண்ணீட்டவங்க. முஸ்லீம் பையன் . இந்து பொண்ணு. அவங்க பிரச்சினைகளைப் பத்தி.. ரெண்டும் ரெண்டு எழுத்தாளர்களோட சிறு கதைகள்.. இணச்சிருக்கேன்”
”நல்ல முயற்சி .பெஸ்ட் ஆப் லக். ..பிலிம் பஜார்லே நல்ல மார்கெட் ஆகணும் ”
”பெஸ்ட் ஆப் லக்”.
”எல்லோரும் கோரசாகச் சப்தமிட்டார்கள்”
”பெஸ்ட் ஆப் லக்” .... பைரவனின் குரல் தனியாக ஒலித்தது.
”பைரவனின் குரல் தனியாத் தெரியுது. அவர் மாதிரி வசதியானவங்கதா ஏதோ ஒரு முறையிலெ இந்தப்படத்துக்கு ஆதரவு தரணும். தாங்க்ஸ் பார் எவிரிபடி. தாங்கஸ். பிலிம் பஜார் அனுபவங்களுக்குப் பிறகு சந்திப்போம் அதுவரைக்கும் உங்ககூட நான் படம் பாக்க வாய்ப்பில்லை ”
” அ.. ..மிஸ் யூ சூசன் வெரி மச்”
”தேங்யு”
விஸ்வம் தினந்தோறும் பதிவு செய்யப்பட வேண்டியப் படங்களின் பட்டியலை சூசனிடம் கேட்பார். அவர் முன்பே ஹோம்வர்க செய்து அதிக ரேட்டிங் உள்ள படங்கள், அதிகமான உலகாளவிலானப் பரிசுகள் பெற்றப் படங்கள் என்பவற்றைத் தேர்வு செய்து வைத்திருப்பார். அவற்றைச் சொல்வார். . .சென்றாண்டு இணைய தளப் பதிவு ஆரம்பித்தபோது அவரே சேர்த்து படங்களைபதிவு செய்து விட்டுச் சொன்னார். இந்தாண்டு வேறு அறைக்குச் சென்று விட்டார். அதுவும் பிலிம் பஜார் வேலை என்று நான்கு நாட்கள் செல்கிறார். .இனி அவரிடம் பார்க்க வேண்டியப் படங்களின் பட்டியலைக் கேட்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. ஏதாவது மனதில் வரும்
படங்களைப் பார்க்க ஆரம்பித்தால் பொழுது வீணாகி விடும். எபினேசர் சிலவற்றைத் தேர்வு செய்து சொல்பவராக இருந்தார், தேர்வு செய்து தந்தார்.
”அடுத்த வருசம் நான் வருவனான்னு தெரியலே விஸ்வம்”
”அப்படியேல்லா சொல்லாதீங்க எபினேசர் சார். நிச்சயமா வருவீங்க .. நானும் வருவேன்”
”வயசெப்பத்தியில்லே. நிறைய நல்ல படங்கள் மார்கெட்லே கெடைக்குது. சீக்கிரம் ஸ்மார்ட் டிவி வாங்கி நெட் கனெக்சனோட பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ்லே படம் பாக்கலாமுன்னு இருக்கேன். இவ்வளவு தூரம் வர்றது, தங்கறது, வயசு காரணமான சிரமங்களைத் தவிர்க்கலாமுன்னு.”
”கல்யாணமின்னு ஒன்னு இருந்தா ரெண்டு மூணு நாள் எல்லாத்தையும் அனுபவிக்கலாம் சொந்தக்காரங்களோட. ரிசப்சன்னு வந்தப்புறம் ரெண்டு மணி நேர அவசரத்திலெ எல்லாரையும் பாத்துப் போயிர்ரம். அதுமாதிரி.
பிலிம் பெஸ்டிவல் மூணு நாள் கல்யாண விசேம்ன்னு சொல்றீங்களா”
”இல்லே. பத்துநாள் கல்யாண விசேசம். கண்ணெத் தொறந்துட்டு கொஞ்சம் கோவாவெச்சுத்துனா தெரியும் “
அவ்வளவு வேண்டாம் . மாண்டோவி நதிக்கரை, இந்த காம்ளக்ஸ், கலா அக்காடமி, ”மிரமர் பீச்சுன்னு போனிங்கன்னாலே இந்தக் கொண்டாட்டம் புரிஞ்சிரும்”
”கல்யாணக் கொண்டாட்டமா இதை ஆக்கிடலாம். இப்போ வரிசை நகர ஆரம்பிக்குது . வாங்க போலாம். பிலிம் பஜாருக்குப் பிறகு உங்களெப் பாக்கறன் .. பை..பை”.
சூசன் தன் ஜோல்னாப் பை அசைந்தாட விரைந்தார்.. அவரின் பையினுள் இருந்தத் தண்ணீர் பாட்டில் அசைந்து தொட்டிலில் உறங்கும் குழந்தையைப் போல் மிதந்து சென்றது.
”தண்ணி பாட்டிலெ வெளியே எடுத்துட்டுப் போட்டுப் போ சூசன். உள்ளே உடமாட்டாங்க”.
”செரி. ஆ.னா வயித்துக்குள்ள தண்ணி இருந்தா என்ன பண்னுவாங்க . நான் சொல்றது அந்தத் தண்ணீயெ.. மதுவெ.. முந்தியெல்லா இங்க தியேட்டர்லே உள்ளே கமகமன்னு வாசனை இருக்கும். இப்போ அந்த வாசனை கொறஞ்சிருக்கு ..ஹ.ஹ.ஹா..”
0
நுழைவு வாயிலில் பரிசோதனை கடுமையாகத்தான் இருக்கும்.தண்ணீர் பாட்டில் அனுமதியில்லை. கத்தி, கபடா, கீ செயின், அனுமதியில்லை. அறை சாவியை அடையாளம் கண்டு இயந்திரம் கத்தும். அறை சாவிதான் என்று கெஞ்ச வேண்டும். தங்கியிருக்கும் விடுதியின் வரவேற்பறையில் தந்து விட்டு வர பல சமயங்களில் தயக்கம் இருந்தது.
திரையரங்கின் உள் நுழைவு வாயிலை நெருங்கினான் சூசன். நம்மூர் என்றால் ” மது அருந்து விட்டு திரையரங்கிற்கு வராதீர்கள். வெளியேற்றப்ப்படுவீர்கள் “ என்ற அறிவிப்பு இருக்கும் அதிரடியாக.
இங்கு அந்த அறிவிப்பு இல்லை
பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதி இல்லை என்ற அறிவிப்பைப் பார்த்தபடி கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என்று குடித்தான்..இன்னும் அரை பாட்டில் தண்ணீர் பாட்டிலில் மிச்சமிருந்தது.. பாட்டிலை அங்கிருந்த பெட்டிக்குள் பாதியளவு தண்ணீருடன் போட்டான்.
வயிற்றிலிருந்த மது தண்ணீரை உள்வாங்கி வயிற்றை மத்தளமாக்கியிருந்தது அவனுக்கு.
0
வியாழன், 1 ஜனவரி, 2026
புதிய புத்தகம்
கால நேரம் எதுவுமில்லை
சூழலியல் : சமகால சவால்கள்..
சுப்ரபாரதிமணியன்
பின் அட்டைக் குறிப்புகள் :
சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளில் என் கவனம் சாயத்திரை நாவல் மூலம் அறிமுகமானது. பின்னர் புத்துமண், வெப்பம் போன்ற நாவல்களில் தொடர்ந்தேன்.
பொதுவாசகர்களுக்கான அக்கறை என்றுகட்டுரைத்தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தேன்.
அவை அதிகமான விற்ற என் நூல்களின் பட்டியலில் சேர்ந்தன.
குப்பை உலகம் முதல், புலரியின் சாம்பல் நிறம் வரை இதுவரை பதினைந்து சுற்றுச்சூழல் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன.’
அந்த வரிசையில் கடந்த ஓர் ஆண்டாக நான் வெவ்வேறு இதழ்களிலெழுதியவை இக்கட்டுரைகள்.
--- சுப்ரபாரதிமணியன்
சமர்ப்பணம் :
பேரா. அலிபாவா தமிழ்த்துறைத் தலைவர்
( திருச்சி பாரதிதாசன் பல்கலைக்க்ழகம் )
உயிர்மை இதழ்
சிறுகதை
வெட்டுப்பட்டவை : சுப்ரபாரதிமணியன்
இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின.
1. செல்வம், ஹெலன்.. இளம் விதவை.அவரது கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். மாரடைப்பு காரணமாக. ஹலனுக்கும் அவருக்கும் பதினைந்து ஆண்டுகள் வயது வித்யாசம்.. கணவர் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல உடல் கட்டுடன் இருப்பவர் ஹெலன்
2. மருத்துவர் ரகுராமன். மனோதத்துவ மருத்துவர். சமீபத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் ஞாயிறில் அவர்களின் கூட்டத்திலிருந்துத் தப்பிப்பதற்காக பிரார்த்தனைக்கு வருவதாக ஒரு பேச்சில் சொல்லியிருந்தார். நன்கு .புல்லாங்குழல் வாசிப்பார்..
3. தோழர் கே. குப்புசாமி.எண்பதுகளில் பொதுவுடமை இயக்கத்தில் உறுப்பினராகவும் தீவிரமானவராகவும் இருந்தவர். அப்போது கொஞ்சம் தெரு நாடகங்களில் நடித்திருப்தை பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.அதுவும் அயனஸ்கோவின் த லீடர், சங்கரப்பிள்ளையின் கழுதையும் கிழவனும் நாடகங்கள் தமிழில் நடத்தப்படபோது அதில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தது.. இப்போது ரியல் எஸ்டேட் வியாபாரம். பொதுவுடமைக்கட்சிகளுக்கு தாரளமாக நன்கொடை தருவது அவர் வழக்கம். பழக்க விசுவாசம் என்பார். ஆளும்கட்சிகளுக்கு அதிகம் தருவார். அவர் தேவ சங்கீதம் கேட்க இங்கு வருவார்.
4. நவீன சூத்திரதாரி என்ற சிறுபத்திரிக்கையைத் தொண்ணூறுகளில் நடத்திய ஆதி பக்தவச்சலம் அவ்வப்போது கவிதைகள் எழுதுவார்.தொகுப்பாக வந்ததில்லை. தீவிர பிஜேபி ஆதரவாளராகி விட்டார். ஜக்கி வாசுதேவ் முகசாயல் வந்து விட்டது அவரின் பேச்சிலும் கூட ஜக்கி பாதிப்பு. இப்போது. அவரின் முகநூல் குறிப்புகள் படிக்கப் பதட்டமாக இருக்கும். நிறைய வசவுகள்
எதிர்கட்சிக்காரர்கள் மீது இருக்கும். பயப்படவே வைக்கும்.
5. பாதிரியாரின் பேச்சில் பவுத்தம், ஜென், மற்றும் கிறிஸ்துவோடு பல விசயங்கள் இருப்பதால் அவற்றைக்குறிப்பெடுக்க வருபவர் குருலிங்கம். இளம் பெண்.கிறிஸ்துவ இலக்கியத்தில் போதனை என்றத் தலைப்பில் ஆய்வு செய்பவர்.
ஞாயிற்று கிழமை வழக்கம் போல லாரன்ஸ் பாதிரியார் திருப்பலியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இன்று தேவாலயத்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. ஈக்கள் மொய்த்தத் தின்பண்டம் போல்.
தேவாலயத்தினுள் ஆண்கள் அமர பதினைந்து வரிசையில் பத்து சேர்கள் வீதம் இடதுபுறமும், பெண்கள் அமர அதே போல வலது புறமும் போடப்பட்டிருந்தது
சிறுவர்,சிறுமியர் பீடத்திற்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்திருந்தார்கள்.கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருந்தார்கள்.
எலுசம்மா முன்னால் போய் கம்பளத்தில் அமர்ந்துக்கொண்டார்.அவளது மடியில் மேரி அமர்ந்திருந்தாள்.
"மேரி,கீழெ உட்காரு.
ஃபாதர் பாத்துட்டே இருக்கார்.அப்புறம் பூசெ முடிஞ்சதும் உன்னெ கூப்பிட்டு திட்டுவார்."
"சரிம்மா நான் கீழேயே உட்காருறேன்"
எலுசம்மா மடியிலிருந்து இறங்கி கீழே கம்பளத்தில் உட்கார்ந்தாள் மேரி. முதல் வாசகம் முடிந்த பின் ,பாடல் குழுவினர் பாடல் பாடினார்கள். அதை தொடர்ந்து
இரண்டாம் வாசகம் படிப்பதற்காக,
அலோசியஸ் எழுந்து பீடத்திற்குச் சென்றார்.
மைக் முன்னால் நின்று,அலோசியஸ் பைபிளை புரட்டினார்.
பிறகு எதிரே இருந்த மக்களை பார்த்தார்,
திருதூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்.
அதிகாரம் - 1 : 18 முதல் 22 வரை.
சகோதர,சகோதரிகளே,
"நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும்,'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை.கடவுள் உண்மையுள்ளவராய்
இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே.நானும்,
சில்வானும், தீமொத்தேயுவும் உங்கள் இடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிருஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல.மாறாக அவர் 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர்.அவர் சொல்லும் 'ஆம்' வழியாக கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறவேறுகின்றன. அதனால் தான் நாம் கடவுளை போற்றி புகழும் போது,அவர் வழியாக 'ஆமென்' எனச் சொல்லுகிறோம்.
கடவுளே எங்களை உங்களுடன் சேர்த்துள்ளார்.இவ்வாறு கிருஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர்
உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையை பதித்தார்"
அலோசியஸ் மீண்டும் மக்களை பார்த்து
"இது ஆண்டவரின் அருள்வாக்கு" என்றார் சற்றே புன்னகையுடன். அவர் தோள்கள் விரிந்தன சட்டென.
அனைவரும், இறைவனுக்கு மகிமை.
அலோசியஸ் இரண்டாம் வாசகத்தை படித்து முடித்து விட்டு பைபிளை மூடிவைத்தார்.பிறகு கீழே இறங்கினார்.
அடுத்ததாக நற்செய்தி வாசகம் படிப்பதற்காக
பாதிரியார் லாரன்ஸ் இருக்கையிலிருந்து எழுந்தார்.அப்போது
பாடல் குழுவினர் "அல்லேலூயா... அல்லேலூயா...
அல்லேலூயா... அல்லேலூயா... என்று பாடி நிறுத்த, பாதிரியார்
'நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன்.
நீங்கள் இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்ல'
என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா..."
என்று பாதிரியார் ராகத்துடன் பாட, தொடர்ந்து பாடல் குழுவினர்,
"அல்லேலூயா... அல்லேலூயா... அல்லேலூயா.. அல்லேலூயா..."
பாடி முடித்தனர்.அலைகளின் இரைச்சல் போல் ஓய்ந்தது.,
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு,அவர் அணிந்திருந்தவெள்ளை அங்கியின் மீது போட்டிருக்கும் சிவப்பு அங்கியை சரிசெய்தார்.சிலர் அப்போது தான் தேவாலயத்திற்கு
வந்து கொண்டிருந்தார்கள்.
பாதிரியாரின் கண்கள் அந்த ஐந்து பேரைத் தேடின
"பிலோ,நற்செய்தி வாசகம் வந்திருச்சு,
இப்ப சர்ச்சுக்குள்ளெ போன ஃபாதர் ஒரு மாதிரியா பார்ப்பார்.
அப்புறம் பிரசங்கத்துல நம்மளெ மேற்கோள் காட்டி பேச ஆரம்பிச்சிருவார்.அவர் அதிலெ கில்லாடி "
"அதுக்குன்னு வெளியவே நின்னிட்டு இருக்க முடியுமா? வாக்கா உள்ளே போலாம்"
பிலோவும்,லிசாவும் தங்கள் சேலை முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டுக்கொண்டு தேவாலயத்தினுள் நுழைந்தார்கள்.
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு,பைபிளை
திறந்தார். மக்கள் அனைவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்கள்.சடவுடன் சில் முதியோர்கள் எழுந்தார்கள்.
"பிதா,சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால..."
அனைவரும் நெற்றியில் சிலுவை அடையாளத்தை போட்டுக்கொண்டு, "ஆமென்" என்றார்கள்
"புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து,வாசகம்.
அதிகாரம் 15. இறைவசனங்கள் 18 முதல் 21 முடிய...
"அக்காலத்தில் இயேசு தன் சீடரை நோக்கி கூறியது:
உலகு உங்களை வெறுகிறது என்றால், அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்று தெரிந்துக்
கொள்ளுங்கள்.நீங்கள் உலகை சார்ந்தவர்களாக இருந்திருந்தால்,தனக்கு சொந்தமானவர்கள் என்னும் முறையில் உங்களுக்கு அன்பு செலுத்தி இருக்கும்.
நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்.
நீங்கள் உலகை சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.பணியாளர் தலைவரை விட பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்கு கூறியதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.என்னை அவர்கள் துன்புறுத்துவார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.என் வார்த்தையை கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைபிடிப்பார்கள்! என் பெயரின்பொருட்டு
உங்களை இப்படியெல்லாம்நடத்துவார்கள்.
ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துக்
கொள்ளவில்லை.'
இது வாழ்வு தரும் ஆண்டவரின் நற்செய்தி."
மக்கள் அனைவரும், "ஆண்டவரை உமக்கு மகிமை." என்றார்கள்
அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். இருக்கை இல்லாதவர்கள் சம்மணம் போட்டு,தரையில் விரித்து இருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்தார்கள். பாதிரியார் தொண்டையை கனைத்துச் சரிசெய்துவிட்டு, பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
"கிருஸ்துவின் அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவசனத்தில் புனித யோவான் என்ன சொல்கிறார்,நீங்கள் இந்த உலகை சார்ந்தவர்கள் அல்ல.
காரணம் நீங்கள் இயேசு கிருஸ்துவால் தேர்ந்துக்
கொள்ளப்பட்டவர்கள். அவருடைய பிள்ளைகள்.
ஆனால் இந்த மறை உண்மையை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை.இதை தான் ஒரு ஜென் ஞானி
சொல்கிறார்,
' மனிதன் தன் சொந்த நிழலில் நின்றுக்
கொண்டே, ஏன் இருட்டாக இருக்கிறது' என்று கவலை கொள்கிறான்.' என்றார்.
"மேலும்,இயேசு கிருஸ்து
மக்களுக்கு அன்பை போதிக்கிறார்.நீ உன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்' என்கிறார்.
இதைதான் ஒரு ஜென் தத்துவம், 'எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ, அப்போதல்லாம் அன்பாய் இருங்கள்.
எப்போதும் அன்பாய் இருப்பது சாத்தியமே' என்கிறது."
உடனே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் எழுந்தனர் ,அவர்கள் எழுந்ததில் அவசரம் இருந்தது.
"ஃபாதர் நீங்க என்ன எப்பவும் பிரசங்கத்துல ஜென் தத்துவங்களை சொல்றீங்க?"
"கிருஸ்துவமும், பௌத்தமும் கலந்ததே ஜென் என்று உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இதை சொன்னேன்"
"ஃபாதர் இது சர்ச், சர்வமத ஆன்மீக மேடையில்லை.
அதனால கிருஸ்வத்தை மட்டும் சொல்லுங்க.
இல்லெ எடத்தெ காலி பண்ணுங்க"
சத்தம் வலுத்தது. குரலில் ரகளை செய்யத் தொடங்கினார்கள்.
உடனே அருகே அருகில் அமர்ந்திருந்த மற்றவர்கள்,அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.குரல்களும் கைகளும் சமாதானப்படுத்த உயர்ந்தன.
"தம்பி,பூசெ முடியட்டும். அப்புறம் ஃபாதர் ரூம்ல
வெச்சு இதெ பேசிக்கலாம்"
இளைஞர்கள் அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தேவாலயத்திலிருந்து விரைசலாக வெளியே வந்தார்கள்.
அவர் எதிர்பார்த்த ஐந்து பேரும் இன்று வரவில்லை என்பது சிறு வருத்தமாக இருந்தது.
0
மக்கள் கூட்டமாக தேவாலியத்திலிருந்து வெளியே வந்தார்கள். சலசலப்புடன் கூட்டம் கலைந்தது.ஃபாதர் லாரன்ஸ் சர்ச் உள்ளறைக்கு சென்று அங்கியின் மேல் தரித்திருந்த சிவப்புடையை கழற்றி வைத்தார்.உதவியாளர் அன்று எடுத்த உண்டியலை எடுத்துக்கொண்டு ஃபாதர் ரூமுக்கு போனார்.ஃபாதர் அவருக்கு பின்னாலயே போனார்.சர்ச்சுக்கு வெளியில்,
இளைஞர்கள் கூட்டமாக நின்று கமிட்டி உறுப்பினர்களிடம் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். சத்தம் சற்று கூடிக்கொண்டிருந்தது.அவர் காதுகளில் விழும் அளவில் சத்தம் இருந்தது.
"இங்கெ பாருங்க நீங்க சொன்னதால தான் நாங்க பேசாம இருந்தோம்.இல்லெ பாதி பூசெயிலயே ஃபாதரெ வெளியெ துரத்தி இருப்போம்."
"இங்கெ பாரு தாமஸ்.எல்லா விசயத்திலயும்,
எடுத்தேன்,கவுத்தேன்னு பேசக்கூடாது."
"அவர் நம்ம சர்ச்சுல நின்னுட்டு,நம்ம மதத்தெ விட சிறந்தது பௌத்தமுன்னு சொல்லுவார்.அதுக்கு நாம தலையாட்டுனுமா?"
"அவர் சொல்றெ விசயத்துல இருக்குறெ நல்லதெ நாம எடுத்துக்கலாம். மத்ததை விட்டுடலாம்"
"மத்ததெ விட்டுடலாமா? இல்லெ மதத்தெ விட்டுடலாமா?
இங்கெ பாருண்ணெ இந்த சப்பக்கட்டு எல்லாம் வேண்டாம்.
இப்ப ஃபாதர் ரூமுக்கு போறோம்.இதெ பத்தி பேசுறோம்."
"ஆண்ட்டோ இப்ப தான் பூசெ முடிஞ்சு போயிருக்கார்.
கொஞ்சம் ஓய்வெடுப்பார்.இந்த நேரத்துல நாம போய் பிரச்சனை பண்ணுறது நல்லா இருக்காது.நாம எல்லாம் இப்ப வீட்டுக்கு போலாம்,மதிய சாப்பாடு முடிச்சிட்டு, சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு நாங்க கமிட்டி மெம்பர் வந்து ஃபாதர்கிட்டெ இதப்பத்தி பேசுறோம். அவர் ஒத்து வராட்டி,
இதபத்தி பிஷப் ஹவுஸ்ல புகார் பண்ணலாம்.அவங்க முடிவு பண்ணி,நம்ம சர்ச்க்கு புது ஃபாதரெ அனுப்புவாங்க.அதவிட்டுட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணுனா, நாளைக்கு நம்ம மதத்தை பத்தி அடுத்தவங்க கேவலமாக பேசுறெ நெனமைக்கு வந்துரும்"
"இங்கெ பாருங்க.
சார்லஸ் அண்ணன் சொல்றதுதான் சரி,நம்ம மதத்தை நாமளே கேவலப்படுத்தக்கூடாதுஅதனால சாயங்காலம் வரெ பொறுமையா இருங்க."
கமிட்டி மெம்பர் பேச்சை தட்டமுடியாமல்,
இளைஞர்கள் எல்லாம் சர்ச் வளாகத்திலிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள்.எறும்புகளின் வரிசையாய் சென்றார்கள்.
"இந்த பயலுகளெ சமாதானம் பண்ணுறதுக்குள்ளெ உயிரே போயிடுச்சு. சாயங்காலம் ஃபாதர்கிட்ட பேசி நாம ஒரு முடிவு எடுக்காட்டி,பயலுக பெரிய பிரச்சனை பண்ணீடுவானுங்க.
நம்மளெயும் விடமாட்டானுங்க"
"சரி சாயங்காலம் அஞ்சுமணிக்கு சுதா பேக்கரியில எல்லோரும் கூடுங்க.நல்ல ஸ்டாங்கா ஒரு டீ சாப்பிடுறோம்.அப்புறம் நேரா ஃபாதர் ரூமுக்கு போறோம்.பேசுறோம்."
"சரிண்ணே,அப்ப நாம கிளம்பலாமா?"
அனைவரும் தேவாலய வளாகத்திலிருந்து கலைந்து சென்றுக்
கொண்டிருந்தார்கள்.இதுவரை இங்கு நடந்தவற்றை எல்லாம் ஃபாதரின் உதவியாளர் பார்த்துவிட்டு,நேராக ஃபாதரிடம் போகிறார்.
"என்ன நிக்கோலஸ் கூட்டம் முடிஞ்சதா?"
"கூட்டம் முடிஞ்சது. முதல்லயே அந்த பயலுக போயிட்டாங்க. நம்ம கமிட்டி மெம்பர் மட்டும் தான் இவ்ளோ நேரம் பேசீட்டு இருந்தாங்க."
"என்ன பேசுனாங்கன்னு தெரியுமா?"
: அது தெரியலெ ஃபாதர்.நான் இங்கெ நம்ம தோட்டத்தில இருந்து தான் பார்த்தேன்.அதனால அவங்க பேசுன சில வார்த்தைகள் தான் கேட்டுச்சு.பிஷப் ஹவுஸ்,நாங்க பேசுறோம், கண்டீஷன்
அஞ்சுமணிக்கு மேலெ...இப்படிதான் கேட்டுச்சு."
"அவ்ளோதான் விசயம்.இதுபுரியலையா?"
"உங்களுக்கு புரிஞ்சதுங்களா? எனக்கு எதுவும் புரியலெ"
பொய்யாய் சில வார்த்தைகள் வந்து விழுந்தன.
"நிக்கோலஸ்,நம்ம கமிட்டி மெம்பர்ஸ் எல்லாம் சாயங்காலம்
அஞ்சு மணிக்கு மேலெ என்ன சந்திச்சு பேசப் போறாங்க.அவங்க கண்டீஷனுக்கு நான் ஒத்துக்காட்டி,அவங்க பிஷப் ஹவுஸ்ல என்ன பத்தி புகார் கொடுக்க போறாங்க.இவ்ளோ தான் விசயம்"
"ஃபாதர் எப்படி ஃபாதர்"
ஃபாதர் பதில் சொல்லாமல் சிரித்தார்.அவரின் வெண்மைப்பற்கள் பளிச்சிட்டன. முன்பே வெள்ளை ஆடையில் அவர் பளிச்சென்றிருந்தார்.
நிக்கோலஸ் தலையை சொரிந்தபடி நின்றார்.ஏகமாய் தாடியை வளர்த்துக் கொண்டார் சமீபத்தில்
"என்ன நிக்கோலஸ் என்ன வேணும் சொல்லு?"
"ஃபாதர்.. மாப்ளெ வந்திருக்காரு.இன்னைக்கு ஞாயிற்று கிழமை"
"உனக்கு ஒயின் பாட்டில் வேணும்.அதுதானே?"
நிக்கோலஸ் மௌனமாக சிரித்தார். அவனின் பற்களும் வெண்மையாகப் பளிச்சிட்டன.
"உள்ளெ போய் ஒண்ணு எடுத்துக்கோ"
உடனே,நிக்கோலஸ் உள்ளறைக்கு சென்று திருப்பலிக்கு பயன்படுத்தும் ஒயின் பாட்டிலில் ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் சுற்றி,பிறந்த குழந்தையை பாதுகாத்துக்கொண்டு வருவது போல கொண்டு வந்தார்.
ஃபாதரிடம் சொல்லிவிட்டு,வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்து மூடிவிட்டு,வண்டியை
அங்கிருந்து கிளப்பினார்.
வண்டி சத்தம் ஏதோ மயக்கத்திலிருக்கிற மாதிரி இருந்தது.
0
சமையல் அறையின் வாசம் எங்குமாய் பரவியிருந்தது,
"என்ன எலுசம்மா, சர்ச்சில நடந்த கூத்தெ பாத்தியா?"
"ஆமாக்கா,ஃபாதர் பிரசங்கம் வச்சிட்டு இருந்தாரு.திடீர்னு ஒருத்தர் எழுந்திரிச்சு, நிறுத்துங்கிறார்.ஃபாதர் அப்படி தப்பா எதுவும் சொல்லல. நல்ல விசயங்களெ தான் சொன்னார்."
"ஃபாதர் சொன்ன விசயத்துல இவனுங்களுக்கு பிரச்சனை இல்லை."
"அப்புறம் ஏன் இப்படி பண்ணுறாங்க"
திருவிழா சமயத்துல கலெக்ஷன் பண்ணுறெ பணத்துல கொஞ்சம் இவனுங்க சுருட்டிடுறாங்க.அதெ கண்டுபிடிச்ச ஃபாதர் இவனுங்களெ திட்டீட்டார். திட்டீட்டார்ன்னா கொஞ்ச அதிகமாவே திட்டீட்டார்.அன்னையில இருந்து இவனுங்க இந்த ஃபாதரை எப்ப இந்த சர்ச்சில இருந்து துரத்தலாமுன்னு காத்திட்டு இருந்தானுங்க.இப்ப ஃபாதரும் இப்படி பண்ணெ,இதெ இவனுங்க ஃபாதர் பங்கு மக்களெ மதமாற்றம் பண்ண பாக்குறார்ன்னு ரூட்டெ போடுறானுங்க. பவுத்தம், ஜென்ன்னு குழப்பறாங்க.. இதுதான் விசயம்."
” ஏக்கா நீ தான் இங்கெயெ இருக்குறெ? அப்புறம் வெளியில நடக்குறெ விசயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"
"அடிக்கடி என்னெ பாக்க அந்தோணியம்மாள்ன்னு ஒருத்தி வராளே? அவ எதுக்கு வர,என்ன பாக்கவெ? வெளியில நடக்குற சங்கதியெ எல்லாம் எங்கிட்ட சொல்லீட்டு சாப்பிட்டுட்டு போவா?"
"அப்ப அதுதான் உங்க உளவுத்துறையா?"
"அப்படியும் வெச்சுக்கலாம்.சரி வறுக்குறெ மீனெ ஃபிரிஜ்ல இருந்து வெளியில எடுத்து வை."
எலுசம்மா ஃபிரிஜ்ஜெ திறந்து மீனை எடுத்து வெளியில் வைத்தாள். அது மிளகாய்க் காரலுடன் சிவப்பாக இருந்தது. பிறகு வெங்காயத்தை வெட்டத் தொடங்கினாள்.சமையலறையில் அப்போதைக்கு வெங்காயம் வெட்டுப்பட்டது.அது சின்னக் குவியலாகிக் கொண்டிருந்தது.
0
வெளியே வெட்டுபட்டவையாக பல விசயங்கள் இருந்தன.
கிறிஸ்துவின் போதனைகள், ஜென், பவுத்தம். இவையெல்லாம் மீறி உள்ளூர் பகைமை, பொறாமை.வசூல் பிரச்சினை என்றபடி ..
அப்போதைக்கு வெட்டுபடலிருந்து தப்பிக்க சிலருக்கு ஒயின் பாட்டிலும் உதவியது.
0
சுற்றுச்சூழல் திரைப்பட விழா
இன்று 28/12/25 டாப்லைட் நூலகம் , பல்லடம் சாலையில் நடந்த சுற்றுச்சூழல் திரைப்பட விழாவில் ஆவணப்படங்கள்
குறும்படங்கள் என்று நிறைய திரையிடப்பட்டன
குழந்தைகள் மிகவும் ரசித்தார்கள்
களிறுஎன்ற ஒரு ஆவணப்படம் திருப்பூர் சந்தோஷ் இணைந்து ஈடுபட்டிருந்த படம் இந்த படம் இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். இன்றுதான் இந்த திரைப்பட விழாவில் பார்த்தேன் யானைகளுடைய வருகை யானைகள் உடைய இருப்பிடம், வாழ்விடம் மாறுதடங்கள் பற்றி விரிவாக பேசிய படம்.
இன்று டாப் லைட் நூலகத்தில் சிறார் செயல்பாடுகளில் ஓவியங்கள் சார்ந்த பயிற்சிகளை சின்ன ராஜீ நடத்தினார்கள் இன்று பொங்கல் அட்டை தயாரிக்கும் பணியும் சிதறல் ஓவியங்களும் முக்கியமான பங்கை வைத்தன சிறுவர்கள் தங்களுடைய படைப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தினர்
இன்று டாப் லைட் நூலகத்தில்அந. செந்தில் குமார் அவர்கள் எழுதிய ” வள்ளுவர் கரம் பிடித்து என்ற திருக்குறள் சார்ந்த நூல் வெளியீடு நடைபெற்றது . முத்துபாரதி வெளியிட சுப்ரபாரதிமணியன் பெற்றுக்கொண்டார்.
மாலை நிகழ்ச்சியில் பலர் பல முக்கிய நூல்கள் பற்றி அறிமுகங்களை நிகழ்த்தினார்கள் குழந்தைகள் கதை சொல்லுதல்முதல் பெரியோர்களின் ரசிப்பு வரை பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன
நான் சுற்றுச்சூழல் நாவல்கள் என்பதைப்பற்றி பேசினேன். காலையில் நடந்த சுற்றுச்சூழல் திரைப்பட விழாவின் தொடர்ச்சியாக என்னுடைய நூல்களைப் பற்றி பேசினேன். சாயத்திரை புத்துமண் முதற்கொண்டு சமீபத்திய வெப்பம் நாவல் வரைக்கும் சுற்றுச்சூழல் அம்சங்களை இடம்பெற்றிருப்பதைப் பற்றி பேசினேன்
விழாவை நூலகர் இந்துமதி, சிரிதர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். திருக்குறள்.ல் கணேசன் உட்பட தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்
கனவு., மறுபக்கம், ஆகிய அமைப்புகள் டாப் லைட் நூலகத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்தின
சுப்ரபாரதிமணியன்
ஞாயிறு, 21 டிசம்பர், 2025
ஒரு நாள் சுற்றுச்சூழல் திரைப்பட விழா 2025
0
( சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட உலகக் குறும்படங்கள், ஆவணப்படங்கள் , திரைப்படங்கள் திரையிடல்)
0
The shadow Dreams
சுப்ரபாரதிமணியனின் ” திரை “ ( உலகத்திரைப்பட விழா அனுபவ நாவல் )
நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீடு ..Rs 350 Coral Publn.
0
சுற்றுச்சூழல் கவிதைகள் வாசிப்பு , சுற்றுச்சூழல் கதைகள் வாசிப்பு
உரையாடல்கள், சிறார் செயல் பாடுகள்…
0
21/12/25 காலை பத்துமணி முதல்..
டாப்லைட் நூலகம், பல்லடம் சாலை, திருப்பூர்
வருக..
வரவேற்கும்: கனவு/மறுபக்கம்/டாப்லைட் நூலகம்
தொடர்புக்கு: இந்துமதி நூலகர் ( 95667 11643 )
காமராஜர் 122
முதன் முறையாக சென்றேன் அமரர் காமராஜர் நினைவு இல்லம் , விருதுநகரில்.
அவர் வாழ்க்கை பற்றிய பல தகவல்கள். அரிய புகைப்படங்கள். நல்ல பராமரிப்பு
பல லட்சக்கணக்கான செலவில் அமைக்கப்பட்ட அவரின் நினைவு மண்டபம் விருதுநகர் ஊருக்கு வெளியே சரியான பராமரிப்பு இல்லாமல் மோசமாகக் கிடக்கிறது. தமிழக அரசு அதை கவனிக்கலாம்
0
நம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கிறோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங்கள் நாட்டை வழிநடத்துவதற்குப் பதிலாக சொந்த வீட்டை மட்டும் வழிநடத்திக் கொண்ட அவலம் தெரிய வரும் சுயநலத்துக்காகவும் புகழுக்காகவும் அரசியலை அசிங்கப்படுத்தும் அது போன்ற தலைவர்களுக்கு மத்தியில் அத்திப் பூத்தாற்போல்தான் ஒருசில பெரும் தலைவர்கள் தோன்றுகின்றனர். பொதுநலத்தை உயிராகப் போற்றி தங்கள் பணியை செவ்வெனச் செய்கின்றனர். அரசியலில் லஞ்சம், ஊழல் அதிகாரத் துஷ்யப்பிரயோகம் ஆகியவை மலிந்த ஒரு தேசத்தில் இப்படிப்பட்ட ஒரு மாமனிதன் இருந்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. தொடக்கப்பள்ளி வரை கல்விகற்ற ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரான கதையைக் கேட்டிருக்கிறீர்களா! அவர் ஆங்கிலம் தெரியாமல் அரசியல் நடத்தியவர் மூத்தத் தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்கக்கூடாது என்று ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதற்கு முன் உதாரணமாக தனது முதலமைச்சர் பதவியையே துறந்தவர்.
'கல்வியே தேசத்தின் கண்களைத் திறக்கும்' என்று கூறி பட்டித் தொட்டிகளெல்லாம் பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் ஏழைப் பிள்ளைகளும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் புரட்சிக்கரமான மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தவர். தாம் முதலமைச்சராக இருந்தபோதும் வறுமையில் வாடிய தன் தாய்க்கு சிறப்புச் சலுகைகள் எதையும் தராதவர், சினிமாவில்தான் இதுபோன்ற கதாப்பாத்திரங்களைப் பார்க்க முடியும் என்று சொல்லுமளவுக்கு தமிழகத்தில் நம்ப முடியாத நல்லாட்சியைத் தந்து இறவாப் புகழ்பெற்ற அந்த உன்னத தலைவர் கர்ம வீரர் காமராஜர்.
இவரைப் போன்றத் தலைவர்கள் தமிழகத்தில் தொடர்ந்திருந்தால் நமது மாநிலம் தரணிப் போற்றும் அளவுக்கு உயர்ந்திருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. 1903 ஆம் ஆண்டு ஜீலை 15-ஆம் நாள் தமிழ்நாட்டின் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் காமராஜர், குடும்ப ஏழ்மையின் காரணமாகவும், படிப்பு ஏறாத காரணத்தினாலும் அவரால் ஆறு ஆண்டுகள்தான் கல்வி கற்க முடிந்தது.
12-ஆவது வயதில் தனது தாய்மாமனின் துணிக்கடையில் வேலைப் பார்த்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதான போது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது. அதே நேரம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று தனது 16-ஆவது வயதில் அவர் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சவுகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.
முதலமைச்சர் பதவி
1930-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வேதாரண்யத்தில் நடந்த காந்தி அடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்து கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அந்த முதல் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் மேலும் 5 முறை சிறைவாசம் அனுபவித்திக்கிறார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த பொறுப்பை அடுத்த 14 ஆண்டுகளுக்கு வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.
மிகவும் தயக்கத்தோடுதான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை. ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலை சிறந்த தலமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார். அவரது கால கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு
அப்படி அவர் என்ன செய்தார்?
அரசியலில் தன்னை எதிர்த்தவர்களையே ஒருவர் அரவனைத்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? காமராஜர் முதலமைச்சரான உடனேயே அதே பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், எம்.பக்தவத்ஜலம் ஆகிய இருவரையும் தன் அமைச்சரைவையில் சேர்த்துக்கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அவர் தனது அமைச்சர்களுக்கு சொன்ன அறிவுரை என்ன தெரியுமா? “பிரச்சினையை எதிர்கொள்ளுங்கள் அவை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை அதனை தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுங்கள் நீங்கள் ஏதாவது செய்தால் மக்கள் நிச்சயம் திருப்தி அடைவார்கள்” என்பதுதான்.
கல்விக்கு அளித்த முக்கியத்துவம்
அவர் நல்லாட்சியில் கல்வித்துறையிலும் தொழிற்துறையிலும் தமிழ்நாடு துரிதமான வளர்ச்சி கண்டது. மாநிலம் முழுவதும் பல புதிய பள்ளிகளை கட்ட உத்தரவிட்டார். பழைய பள்ளிகள் சீர் செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பதை உறுதி செய்தார். எழுத்தறிவின்மையை போக்க வேண்டும் என்பதற்காக பதினோராம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தினார். ஏழை சிறுவர்களின் வயிறு காயாமல் இருக்க மதிய உணவு வழங்கும் உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தார்.
ஜாதி வகுப்பு, ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிக்க விரும்பிய அவர் எல்லாப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் இலவச சீருடையை வழங்கினார். அவர் ஆட்சியில் தமிழ்மொழிக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் தமிழைப் போதன மொழியாக்கியதோடு அறிவியல் தொழில்நுட்பப் பாடப் புத்தகங்களும் தமிழில் வெளிவரச் செய்தார். அரசாங்க அலுவலகங்களுக்கு தமிழ் தட்டச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நீதிமன்றங்களிலும் வழக்குகளை தமிழில் நடத்த ஊக்குவிக்கப்பட்டது.
வேளாண்மையும் தொழிற்துறையும்
காமராஜரின் ஆட்சியில் விவசாயம் நல்ல வளர்ச்சி கண்டது. வைகை அணை, மணிமுத்தாறு அணை, கீழ்பவானி அணை, பரமிக்குளம் சாத்தனூர் அணை என்று பல அணைக்கட்டு திட்டங்கள் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டன. தொழிற்துறையிலும் முத்திரை பதித்தார் காமராஜர். நெய்வேலி பழுப்பு நிலக்கரி சென்னை ஆவடி ராணுவ தளவாடத் தொழிற்சாலை சென்னை ஹிந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் என பல பெரியத் தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாயின. அவரது மாட்சிமை பொருந்திய ஆட்சியைக் கண்டு இந்திய பிரதமர் நேரு இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு என்று பாராட்டினார்.
இப்படிப்பட்ட சிறந்த நல்லாட்சியை வழங்கியதால்தான் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வளவும் செய்த அவர் அடுத்து செய்த காரியம் அரசியலுக்கே ஒரு புதிய இலக்கணத்தை கற்றுத் தந்தது. காங்கிரஸ் கட்சி அதன் துடிப்பையும் வலிமையும் இழந்து வருவதாக உணர்ந்த காமராஜர் எல்லா மூத்த காங்கிரஸ் தலைவர்களும் தங்கள் அரசியல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டு நலனுக்காக கட்சிப்பணிகளில் ஈடுபட வேண்டும் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி பிரதமர் நேருவிடம் பரிந்துரை செய்தார்.
காமராஜர் திட்டம்
இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு 'காமராஜர் திட்டம்' என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர். அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.
இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர். அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை 'கிங்மேக்கர்' என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும். தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.
எளிமையான வாழ்வு
அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு உயரிய “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு. சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்ததால் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை காமராஜர். ஆம் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை மேலும் சிறு வயதிலேயே கல்வியை கைவிட்டதை நினைத்து வருந்திய அவர் தான் சிறைவாசம் சென்ற போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கில நூல்களை வாசிக்க கற்றுக்கொண்டார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த போதும் அவருடைய தாய் விருதுநகரில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டில்தான் வாழ்ந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
தன் குடும்பம் என்பதற்காக தன் தாய்க்குக்கூட எந்த சலுகையும் வழங்கியதில்லை. அவர் தனக்கென வைத்திருந்த சொத்துக்கள் என்ன தெரியுமா? சில கதர் வேட்டி சட்டைகளும், சில புத்தகங்களும்தான். பதவிக்குரிய பந்தா எப்போதும் அவரிடம் இருந்ததே இல்லை எந்த நேரத்திலும் எவரும் அவரை தடையின்றி சந்திக்க முடியும். அதனால்தான் அவரை கர்ம வீரர் என்றும், கருப்பு காந்தி என்றும் இன்றும் போற்றுகிறது தமிழக வரலாறு. அப்படிப்பட்ட ஒரு கன்னியமான நேர்மையான இன்னொரு தலைவனை தமிழக வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் இனி சந்திக்குமா என்பது சந்தேகமே?
முறையான கல்விகூட இல்லாத ஒருவர் நாட்டின் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகி இவ்வுளவும் செய்திருக்கிறார் என்றால் “துணிந்தவனால் எதையும் செய்ய முடியும் என்றுதானே பொருள்” நல்லாட்சி என்ற வானம் வசப்பட்டதற்கு அவருடைய சமதர்ம சிந்தனையும், நாடும் மக்களும் நலம்பெற வேண்டும் என்ற வேட்கையும், சுயநலமின்றி சமூக நலத்தொண்டு செய்ய வேண்டுமென்ற நல் எண்ணமும்தான் காரணம். அதே காரணங்கள் நமக்கும் வானத்தை வசப்படுத்த உதவும். வாழ்க்கையில் நம்பிக்கையோடும் விடாமுற்சியோடும் போராடினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!
ஆதாரம் : http://www.vallamai.com/
நன்றி : ஜெயந்தி பத்மநாபன் (லேடி ஸ்விங்ஸ் வலைதளம்)
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் 100 வயது
. சந்தித்தேன் . காந்தி கிராமியப் பல்கலைக்கழகம், சின்னளப்பட்டியில்.
திருப்பூரில் வாழ்ந்த சர்வோதய சங்க நடவடிக்கைகளின் போது திருப்பூர் வாழ்க்கை பற்றிய சில விசயங்களைப் பகிர்ந்து கொண்டார். கொஞ்சம் வாசிக்கிறார். தன் காரியங்களை தானே செய்து கொள்கிறார்.
0
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் (பிறப்பு: 1926) தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகி மற்றும் போராளி. இவரும், இவரின் கணவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன் என இருவரும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடினர். உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும், நிலமற்ற விவசாய கூலிகளுக்கு நிலத்தை பெற்றுத்தருவதிலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் போராடி ஏழை மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற இவர் தன் கணவருடன் வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் பங்குகொண்டார். தன்னுடைய உயரிய சேவைக்காக 2008ல் ரைட் லவ்லிவுட் விருதைப் பெற்றார். 2020 இல் இந்திய அரசின் பத்ம பூசண் விருதைப் பெற்றவர்.
பிறப்பு மற்றும் கல்வி
[தொகு]
1926 ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் குடும்பத்தில் ராமசாமி-நாகம்மாள் தம்பதிக்குப் பிறந்தார் கிருஷ்ணம்மாள். இவருடன் சேர்த்து மொத்தம் 12 குழந்தைகள். பட்டிவீரன்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு வரை படித்தார். மதுரையில் பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார் அங்கு ஆங்கில கல்வி பயின்றார்.இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆலிஸ் மகாராஜா என்பவர் கிருஷ்ணமாவை தன்னுடனே தங்க வைத்துக் கொண்டார். இவரே கிருஷ்ணம்மாவுக்கு டாக்டர் சௌந்தரம் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.அதன் பிறகு, டிவிஎஸ் ஐயங்காரின் மகளான செளந்திரம்மாளின் இலவச இல்லமான மீனாட்சி விடுதியில் சேர்ந்தார்.[1]
இளமைக்காலம்
[தொகு]
ஏழ்மை மற்றும் சமூக நீதி பற்றிய ஆர்வம் வர இவரது தாயார் நாகம்மாளின் பேறுகால இன்னல்கள் காரணமாக இருந்துள்ளன.[2] 1946 இல் காந்தி மதுரை வந்தபோது அவரால் ஈர்க்கபட்டு காந்தியம் மற்றும் சர்வோதய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். அங்கு சர்வோதயாவில் பணி செய்த சங்கரலிங்கம் ஜெகன்னாதனைக் கண்டார், பின்னாளில் அவரது மனைவியானார். சங்கரலிங்கம் ஜெகன்னாதன் வளமையான குடும்பத்தினைச் சேர்ந்தவராக இருந்தாலும் 1930ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்க அறைக்கூவலுக்கு செவிமெடுத்து அதில் பங்கு பெற்றார்.[3] ஒரு கட்டத்தில் கிருஷ்ணம்மாள் காந்தியுடன் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார்.[2] மேலும் அவர் 1958ல் மார்டின் லூதர் கிங்கை சந்தித்துள்ளார்.[4] 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சேர்ந்து பல ஆண்டுகள் சிறையில் இருந்தார்.[3] சுதந்திர இந்தியாவில் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்த சங்கரலிங்கம் மற்றும் கிருஷ்ணம்மாள் 1950ல் சூலை மாதம் 6 ஆம் நாள் திருமணம் செய்து கொண்டனர்.[2]. பின்னர் அவர் 2006ல் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தின் பவள விழாவிற்குத் தலைமை தாங்கினார்.[5]
நிலமற்றவர்களுக்கு நிலம்
[தொகு]
1950 மற்றும் 1952 இடையே இரண்டு ஆண்டுகளாக சங்கரலிங்கம் ஜெகநாதன் வட இந்தியாவில் வினோபா பாவே பூமிதான இயக்கத்தில் பங்கு கொண்டார். அப்போது ஆறில் ஓரு பங்கினை நிலமற்றவர்களுக்கு தங்கள் நிலங்களிலிருந்து நிலக் கொடையாக வழங்க நிலப்பிரபுக்களைக் கேட்டுக்கொண்டு வினோபா பாவேவுடன் பாத யாத்திரையாக சென்றார். இதற்கிடையில் கிருஷ்ணம்மாள் தனது ஆசிரியர் பயிற்சியினைச் சென்னையில் முடித்தார்.
செயல்பாடுகள்
[தொகு]
கிராமத்தில் உள்ள ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும்,நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்குவதன் மூலம் காந்திய சமுதாயத்தை உருவாக முடியும் என்று உறுதியாக நம்பினார்கள். உழுபவருக்கு நிலம் (Land for the Tillers' Freedom (LAFTI) திட்டத்தை 1981 ல் தொடங்கினார்கள்.[6]
நாகை மாவட்டத்தில் கீழ வெண்மணி என்னும் சிற்றூரில் 42 தாழ்த்தப்பட்ட உழவுத் தொழிலாளர்கள் உடலுடன் கொளுத்தப்பட்ட நிகழ்ச்சி 25-12-1968இல் நடந்தது. அக்கொடுமையைக் கண்டு "உழுபவனின் நில உரிமை இயக்கம்" (லாப்டி) என்னும் அமைப்பைத் தொடங்கினர். இறால் பண்ணைகளுக்காக விளைநிலங்கள் காவு கொடுக்கப்படுவதை எதிர்த்துப் போராடினார்கள்.
2013 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தம் கணவர் மறைந்த பின்னரும் சேவையே வாழ்க்கை என்று உழைத்து வருகிறார் கிருஷ்ணம்மாள். அமைதிக்கான நோபல் பரிசுக்கும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆவணப்படம்
[தொகு]
கிருஷ்ணம்மாள்-ஜகன்னாதன் தம்பதியினரின் சேவையை மையக் கருத்தாகக் கொன்டு, அரவிந்த் மாக் இயக்கத்தில் சைய்யது யாஸ்மீனால் தயாரிக்கப்பட்ட 'தட் பையர்டு ஸோல்' ('That Fired Soul') என்ற குறும்படம் 2014 சென்னை சர்வதேச குறும்பட விழாவில் திரையிடப்பட்டது.
பெற்ற விருதுகள்
[தொகு]
• சுவாமி பிரணவானந்தா அமைதி விருது(1987)
• ஜம்னலால் பஜாஜ் விருது (1988
• பத்மஸ்ரீ விருது (1989)
• பகவான் மகாவீர் விருது (1996)
• சம்மிட் பௌன்டேசன் விருது --சுவிட்சர்லாந்து (1999)
• ஓப்ஸ் பரிசு --சியாட்டில் பல்கலைக்கழகம் (2008)
• மாற்று நோபல் பரிசு
• ரைட் லைவ்லிஹூட் விருது
• பத்ம பூசண்[7] (2020) wikipidia
புதிய புத்தகம்
கால நேரம் எதுவுமில்லை
சூழலியல் : சமகால சவால்கள்..
சுப்ரபாரதிமணியன்
பின் அட்டைக் குறிப்புகள் :
சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளில் என் கவனம் சாயத்திரை நாவல் மூலம் அறிமுகமானது. பின்னர் புத்துமண், வெப்பம் போன்ற நாவல்களில் தொடர்ந்தேன்.
பொதுவாசகர்களுக்கான அக்கறை என்றுகட்டுரைத்தொகுப்புகளை வெளிக்கொணர்ந்தேன்.
அவை அதிகமான விற்ற என் நூல்களின் பட்டியலில் சேர்ந்தன.
குப்பை உலகம் முதல், புலரியின் சாம்பல் நிறம் வரை இதுவரை பதினைந்து சுற்றுச்சூழல் கட்டுரை நூல்கள் வெளியாகியுள்ளன.’
அந்த வரிசையில் கடந்த ஓர் ஆண்டாக நான் வெவ்வேறு இதழ்களிலெழுதியவை இக்கட்டுரைகள்.
--- சுப்ரபாரதிமணியன்
சமர்ப்பணம் :
பேரா. அலிபாவா தமிழ்த்துறைத் தலைவர்
( திருச்சி பாரதிதாசன் பல்கலைக்க்ழகம் )
உயிர்மை இதழ்
சிறுகதை
வெட்டுப்பட்டவை : சுப்ரபாரதிமணியன்
இன்றைய பிரார்த்தனை நிகழ்வுக்கு லாரன்ஸ் பாதிரியார் ஐந்து பேர்களை எதிர்பார்த்தார். அவர்கள் வந்திருக்கிறார்களா என்று அவரின் கண்கள் விசாலமாகித் தேடின.
1. ஹெலன்.. இளம் விதவை.அவரது கணவர் சமீபத்தில் இறந்து விட்டார். மாரடைப்பு காரணமாக. ஹலனுக்கும் அவருக்கும் பதினைந்து ஆண்டுகள் வயது வித்யாசம்.. கணவர் ராணுவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல உடல் கட்டுடன் இருப்பவர் ஹெலன்
2. மருத்துவர் ரகுராமன். மனோதத்துவ மருத்துவர். சமீபத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் ஞாயிறில் அவர்களின் கூட்டத்திலிருந்துத் தப்பிப்பதற்காக பிரார்த்தனைக்கு வருவதாக ஒரு பேச்சில் சொல்லியிருந்தார். நன்கு .புல்லாங்குழல் வாசிப்பார்..
3. தோழர் கே. குப்புசாமி.எண்பதுகளில் பொதுவுடமை இயக்கத்தில் உறுப்பினராகவும் தீவிரமானவராகவும் இருந்தவர். அப்போது கொஞ்சம் தெரு நாடகங்களில் நடித்திருப்தை பெருமையாகச் சொல்லிக் கொள்வார்.அதுவும் அயனஸ்கோவின் த லீடர், சங்கரப்பிள்ளையின் கழுதையும் கிழவனும் நாடகங்கள் தமிழில் நடத்தப்படபோது அதில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தது.. இப்போது ரியல் எஸ்டேட் வியாபாரம். பொதுவுடமைக்கட்சிகளுக்கு தாரளமாக நன்கொடை தருவது அவர் வழக்கம். பழக்க விசுவாசம் என்பார். ஆளும்கட்சிகளுக்கு அதிகம் தருவார். அவர் தேவ சங்கீதம் கேட்க இங்கு வருவார்.
4. நவீன சூத்திரதாரி என்ற சிறுபத்திரிக்கையைத் தொண்ணூறுகளில் நடத்திய ஆதி பக்தவச்சலம் அவ்வப்போது கவிதைகள் எழுதுவார்.தொகுப்பாக வந்ததில்லை. தீவிர பிஜேபி ஆதரவாளராகி விட்டார். ஜக்கி வாசுதேவ் முகசாயல் வந்து விட்டது அவரின் பேச்சிலும் கூட ஜக்கி பாதிப்பு. இப்போது. அவரின் முகநூல் குறிப்புகள் படிக்கப் பதட்டமாக இருக்கும். நிறைய வசவுகள்
எதிர்கட்சிக்காரர்கள் மீது இருக்கும். பயப்படவே வைக்கும்.
5. பாதிரியாரின் பேச்சில் பவுத்தம், ஜென், மற்றும் கிறிஸ்துவோடு பல விசயங்கள் இருப்பதால் அவற்றைக்குறிப்பெடுக்க வருபவர் குருலிங்கம். இளம் பெண்.கிறிஸ்துவ இலக்கியத்தில் போதனை என்றத் தலைப்பில் ஆய்வு செய்பவர்.
ஞாயிற்று கிழமை வழக்கம் போல லாரன்ஸ் பாதிரியார் திருப்பலியை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். இன்று தேவாலயத்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. ஈக்கள் மொய்த்தத் தின்பண்டம் போல்.
தேவாலயத்தினுள் ஆண்கள் அமர பதினைந்து வரிசையில் பத்து சேர்கள் வீதம் இடதுபுறமும், பெண்கள் அமர அதே போல வலது புறமும் போடப்பட்டிருந்தது
சிறுவர்,சிறுமியர் பீடத்திற்கு முன்னால் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்திருந்தார்கள்.கொஞ்சம் விளையாட்டுத்தனமாய் இருந்தார்கள்.
எலுசம்மா முன்னால் போய் கம்பளத்தில் அமர்ந்துக்கொண்டார்.அவளது மடியில் மேரி அமர்ந்திருந்தாள்.
"மேரி,கீழெ உட்காரு.
ஃபாதர் பாத்துட்டே இருக்கார்.அப்புறம் பூசெ முடிஞ்சதும் உன்னெ கூப்பிட்டு திட்டுவார்."
"சரிம்மா நான் கீழேயே உட்காருறேன்"
எலுசம்மா மடியிலிருந்து இறங்கி கீழே கம்பளத்தில் உட்கார்ந்தாள் மேரி. முதல் வாசகம் முடிந்த பின் ,பாடல் குழுவினர் பாடல் பாடினார்கள். அதை தொடர்ந்து
இரண்டாம் வாசகம் படிப்பதற்காக,
அலோசியஸ் எழுந்து பீடத்திற்குச் சென்றார்.
மைக் முன்னால் நின்று,அலோசியஸ் பைபிளை புரட்டினார்.
பிறகு எதிரே இருந்த மக்களை பார்த்தார்,
திருதூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம்.
அதிகாரம் - 1 : 18 முதல் 22 வரை.
சகோதர,சகோதரிகளே,
"நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும்,'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை.கடவுள் உண்மையுள்ளவராய்
இருப்பதுபோல் நான் சொல்வதும் உண்மையே.நானும்,
சில்வானும், தீமொத்தேயுவும் உங்கள் இடையே இருந்தபோது நாங்கள் அறிவித்த இறைமகன் இயேசு கிருஸ்து ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும் 'இல்லை' என்றும் பேசுபவர் அல்ல.மாறாக அவர் 'ஆம்' என்று உண்மையையே பேசுபவர்.அவர் சொல்லும் 'ஆம்' வழியாக கடவுள் அருளும் எல்லா வாக்குறுதிகளும் நிறவேறுகின்றன. அதனால் தான் நாம் கடவுளை போற்றி புகழும் போது,அவர் வழியாக 'ஆமென்' எனச் சொல்லுகிறோம்.
கடவுளே எங்களை உங்களுடன் சேர்த்துள்ளார்.இவ்வாறு கிருஸ்துவோடு நமக்கு இருக்கும் உறவை அவர்
உறுதிப்படுத்துகிறார். அவரே நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையை பதித்தார்"
அலோசியஸ் மீண்டும் மக்களை பார்த்து
"இது ஆண்டவரின் அருள்வாக்கு" என்றார் சற்றே புன்னகையுடன். அவர் தோள்கள் விரிந்தன சட்டென.
அனைவரும், இறைவனுக்கு மகிமை.
அலோசியஸ் இரண்டாம் வாசகத்தை படித்து முடித்து விட்டு பைபிளை மூடிவைத்தார்.பிறகு கீழே இறங்கினார்.
அடுத்ததாக நற்செய்தி வாசகம் படிப்பதற்காக
பாதிரியார் லாரன்ஸ் இருக்கையிலிருந்து எழுந்தார்.அப்போது
பாடல் குழுவினர் "அல்லேலூயா... அல்லேலூயா...
அல்லேலூயா... அல்லேலூயா... என்று பாடி நிறுத்த, பாதிரியார்
'நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்து விட்டேன்.
நீங்கள் இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்ல'
என்கிறார் ஆண்டவர் அல்லேலூயா..."
என்று பாதிரியார் ராகத்துடன் பாட, தொடர்ந்து பாடல் குழுவினர்,
"அல்லேலூயா... அல்லேலூயா... அல்லேலூயா.. அல்லேலூயா..."
பாடி முடித்தனர்.அலைகளின் இரைச்சல் போல் ஓய்ந்தது.,
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு,அவர் அணிந்திருந்தவெள்ளை அங்கியின் மீது போட்டிருக்கும் சிவப்பு அங்கியை சரிசெய்தார்.சிலர் அப்போது தான் தேவாலயத்திற்கு
வந்து கொண்டிருந்தார்கள்.
பாதிரியாரின் கண்கள் அந்த ஐந்து பேரைத் தேடின
"பிலோ,நற்செய்தி வாசகம் வந்திருச்சு,
இப்ப சர்ச்சுக்குள்ளெ போன ஃபாதர் ஒரு மாதிரியா பார்ப்பார்.
அப்புறம் பிரசங்கத்துல நம்மளெ மேற்கோள் காட்டி பேச ஆரம்பிச்சிருவார்.அவர் அதிலெ கில்லாடி "
"அதுக்குன்னு வெளியவே நின்னிட்டு இருக்க முடியுமா? வாக்கா உள்ளே போலாம்"
பிலோவும்,லிசாவும் தங்கள் சேலை முந்தானையை எடுத்து தலையில் முக்காடு போட்டுக்கொண்டு தேவாலயத்தினுள் நுழைந்தார்கள்.
பாதிரியார் மைக்கின் முன்னால் நின்று கொண்டு,பைபிளை
திறந்தார். மக்கள் அனைவரும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்றார்கள்.சடவுடன் சில் முதியோர்கள் எழுந்தார்கள்.
"பிதா,சுதன் பரிசுத்த ஆவியின் பெயரால..."
அனைவரும் நெற்றியில் சிலுவை அடையாளத்தை போட்டுக்கொண்டு, "ஆமென்" என்றார்கள்
"புனித யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து,வாசகம்.
அதிகாரம் 15. இறைவசனங்கள் 18 முதல் 21 முடிய...
"அக்காலத்தில் இயேசு தன் சீடரை நோக்கி கூறியது:
உலகு உங்களை வெறுகிறது என்றால், அது உங்களை வெறுக்கும் முன்னே என்னை வெறுத்தது என்று தெரிந்துக்
கொள்ளுங்கள்.நீங்கள் உலகை சார்ந்தவர்களாக இருந்திருந்தால்,தனக்கு சொந்தமானவர்கள் என்னும் முறையில் உங்களுக்கு அன்பு செலுத்தி இருக்கும்.
நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்.
நீங்கள் உலகை சார்ந்தவர்கள் அல்ல. எனவே உலகு உங்களை வெறுக்கிறது.பணியாளர் தலைவரை விட பெரியவர் அல்ல என்று நான் உங்களுக்கு கூறியதை நினைவில் வைத்துக்
கொள்ளுங்கள்.என்னை அவர்கள் துன்புறுத்துவார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.என் வார்த்தையை கடைப்பிடித்திருந்தால் தானே உங்கள் வார்த்தையையும் கடைபிடிப்பார்கள்! என் பெயரின்பொருட்டு
உங்களை இப்படியெல்லாம்நடத்துவார்கள்.
ஏனெனில் என்னை அனுப்பியவரை அவர்கள் அறிந்துக்
கொள்ளவில்லை.'
இது வாழ்வு தரும் ஆண்டவரின் நற்செய்தி."
மக்கள் அனைவரும், "ஆண்டவரை உமக்கு மகிமை." என்றார்கள்
அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தார்கள். இருக்கை இல்லாதவர்கள் சம்மணம் போட்டு,தரையில் விரித்து இருந்த சிவப்பு கம்பளத்தில் அமர்ந்தார்கள். பாதிரியார் தொண்டையை கனைத்துச் சரிசெய்துவிட்டு, பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
"கிருஸ்துவின் அன்பான சகோதர சகோதரிகளே,
இன்றைய இறைவசனத்தில் புனித யோவான் என்ன சொல்கிறார்,நீங்கள் இந்த உலகை சார்ந்தவர்கள் அல்ல.
காரணம் நீங்கள் இயேசு கிருஸ்துவால் தேர்ந்துக்
கொள்ளப்பட்டவர்கள். அவருடைய பிள்ளைகள்.
ஆனால் இந்த மறை உண்மையை நம்மால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை.இதை தான் ஒரு ஜென் ஞானி
சொல்கிறார்,
' மனிதன் தன் சொந்த நிழலில் நின்றுக்
கொண்டே, ஏன் இருட்டாக இருக்கிறது' என்று கவலை கொள்கிறான்.' என்றார்.
"மேலும்,இயேசு கிருஸ்து
மக்களுக்கு அன்பை போதிக்கிறார்.நீ உன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்' என்கிறார்.
இதைதான் ஒரு ஜென் தத்துவம், 'எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ, அப்போதல்லாம் அன்பாய் இருங்கள்.
எப்போதும் அன்பாய் இருப்பது சாத்தியமே' என்கிறது."
உடனே எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சில இளைஞர்கள் எழுந்தனர் ,அவர்கள் எழுந்ததில் அவசரம் இருந்தது.
"ஃபாதர் நீங்க என்ன எப்பவும் பிரசங்கத்துல ஜென் தத்துவங்களை சொல்றீங்க?"
"கிருஸ்துவமும், பௌத்தமும் கலந்ததே ஜென் என்று உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இதை சொன்னேன்"
"ஃபாதர் இது சர்ச், சர்வமத ஆன்மீக மேடையில்லை.
அதனால கிருஸ்வத்தை மட்டும் சொல்லுங்க.
இல்லெ எடத்தெ காலி பண்ணுங்க"
சத்தம் வலுத்தது. குரலில் ரகளை செய்யத் தொடங்கினார்கள்.
உடனே அருகே அருகில் அமர்ந்திருந்த மற்றவர்கள்,அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.குரல்களும் கைகளும் சமாதானப்படுத்த உயர்ந்தன.
"தம்பி,பூசெ முடியட்டும். அப்புறம் ஃபாதர் ரூம்ல
வெச்சு இதெ பேசிக்கலாம்"
இளைஞர்கள் அவர்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தேவாலயத்திலிருந்து விரைசலாக வெளியே வந்தார்கள்.
அவர் எதிர்பார்த்த ஐந்து பேரும் இன்று வரவில்லை என்பது சிறு வருத்தமாக இருந்தது.
0
மக்கள் கூட்டமாக தேவாலியத்திலிருந்து வெளியே வந்தார்கள். சலசலப்புடன் கூட்டம் கலைந்தது.ஃபாதர் லாரன்ஸ் சர்ச் உள்ளறைக்கு சென்று அங்கியின் மேல் தரித்திருந்த சிவப்புடையை கழற்றி வைத்தார்.உதவியாளர் அன்று எடுத்த உண்டியலை எடுத்துக்கொண்டு ஃபாதர் ரூமுக்கு போனார்.ஃபாதர் அவருக்கு பின்னாலயே போனார்.சர்ச்சுக்கு வெளியில்,
இளைஞர்கள் கூட்டமாக நின்று கமிட்டி உறுப்பினர்களிடம் வாதம் செய்து கொண்டிருந்தார்கள். சத்தம் சற்று கூடிக்கொண்டிருந்தது.அவர் காதுகளில் விழும் அளவில் சத்தம் இருந்தது.
"இங்கெ பாருங்க நீங்க சொன்னதால தான் நாங்க பேசாம இருந்தோம்.இல்லெ பாதி பூசெயிலயே ஃபாதரெ வெளியெ துரத்தி இருப்போம்."
"இங்கெ பாரு தாமஸ்.எல்லா விசயத்திலயும்,
எடுத்தேன்,கவுத்தேன்னு பேசக்கூடாது."
"அவர் நம்ம சர்ச்சுல நின்னுட்டு,நம்ம மதத்தெ விட சிறந்தது பௌத்தமுன்னு சொல்லுவார்.அதுக்கு நாம தலையாட்டுனுமா?"
"அவர் சொல்றெ விசயத்துல இருக்குறெ நல்லதெ நாம எடுத்துக்கலாம். மத்ததை விட்டுடலாம்"
"மத்ததெ விட்டுடலாமா? இல்லெ மதத்தெ விட்டுடலாமா?
இங்கெ பாருண்ணெ இந்த சப்பக்கட்டு எல்லாம் வேண்டாம்.
இப்ப ஃபாதர் ரூமுக்கு போறோம்.இதெ பத்தி பேசுறோம்."
"ஆண்ட்டோ இப்ப தான் பூசெ முடிஞ்சு போயிருக்கார்.
கொஞ்சம் ஓய்வெடுப்பார்.இந்த நேரத்துல நாம போய் பிரச்சனை பண்ணுறது நல்லா இருக்காது.நாம எல்லாம் இப்ப வீட்டுக்கு போலாம்,மதிய சாப்பாடு முடிச்சிட்டு, சாயங்காலம் ஒரு அஞ்சு மணிக்கு நாங்க கமிட்டி மெம்பர் வந்து ஃபாதர்கிட்டெ இதப்பத்தி பேசுறோம். அவர் ஒத்து வராட்டி,
இதபத்தி பிஷப் ஹவுஸ்ல புகார் பண்ணலாம்.அவங்க முடிவு பண்ணி,நம்ம சர்ச்க்கு புது ஃபாதரெ அனுப்புவாங்க.அதவிட்டுட்டு தேவையில்லாம பிரச்சனை பண்ணுனா, நாளைக்கு நம்ம மதத்தை பத்தி அடுத்தவங்க கேவலமாக பேசுறெ நெனமைக்கு வந்துரும்"
"இங்கெ பாருங்க.
சார்லஸ் அண்ணன் சொல்றதுதான் சரி,நம்ம மதத்தை நாமளே கேவலப்படுத்தக்கூடாதுஅதனால சாயங்காலம் வரெ பொறுமையா இருங்க."
கமிட்டி மெம்பர் பேச்சை தட்டமுடியாமல்,
இளைஞர்கள் எல்லாம் சர்ச் வளாகத்திலிருந்து கலைந்து செல்லத் தொடங்கினார்கள்.எறும்புகளின் வரிசையாய் சென்றார்கள்.
"இந்த பயலுகளெ சமாதானம் பண்ணுறதுக்குள்ளெ உயிரே போயிடுச்சு. சாயங்காலம் ஃபாதர்கிட்ட பேசி நாம ஒரு முடிவு எடுக்காட்டி,பயலுக பெரிய பிரச்சனை பண்ணீடுவானுங்க.
நம்மளெயும் விடமாட்டானுங்க"
"சரி சாயங்காலம் அஞ்சுமணிக்கு சுதா பேக்கரியில எல்லோரும் கூடுங்க.நல்ல ஸ்டாங்கா ஒரு டீ சாப்பிடுறோம்.அப்புறம் நேரா ஃபாதர் ரூமுக்கு போறோம்.பேசுறோம்."
"சரிண்ணே,அப்ப நாம கிளம்பலாமா?"
அனைவரும் தேவாலய வளாகத்திலிருந்து கலைந்து சென்றுக்
கொண்டிருந்தார்கள்.இதுவரை இங்கு நடந்தவற்றை எல்லாம் ஃபாதரின் உதவியாளர் பார்த்துவிட்டு,நேராக ஃபாதரிடம் போகிறார்.
"என்ன நிக்கோலஸ் கூட்டம் முடிஞ்சதா?"
"கூட்டம் முடிஞ்சது. முதல்லயே அந்த பயலுக போயிட்டாங்க. நம்ம கமிட்டி மெம்பர் மட்டும் தான் இவ்ளோ நேரம் பேசீட்டு இருந்தாங்க."
"என்ன பேசுனாங்கன்னு தெரியுமா?"
: அது தெரியலெ ஃபாதர்.நான் இங்கெ நம்ம தோட்டத்தில இருந்து தான் பார்த்தேன்.அதனால அவங்க பேசுன சில வார்த்தைகள் தான் கேட்டுச்சு.பிஷப் ஹவுஸ்,நாங்க பேசுறோம், கண்டீஷன்
அஞ்சுமணிக்கு மேலெ...இப்படிதான் கேட்டுச்சு."
"அவ்ளோதான் விசயம்.இதுபுரியலையா?"
"உங்களுக்கு புரிஞ்சதுங்களா? எனக்கு எதுவும் புரியலெ"
பொய்யாய் சில வார்த்தைகள் வந்து விழுந்தன.
"நிக்கோலஸ்,நம்ம கமிட்டி மெம்பர்ஸ் எல்லாம் சாயங்காலம்
அஞ்சு மணிக்கு மேலெ என்ன சந்திச்சு பேசப் போறாங்க.அவங்க கண்டீஷனுக்கு நான் ஒத்துக்காட்டி,அவங்க பிஷப் ஹவுஸ்ல என்ன பத்தி புகார் கொடுக்க போறாங்க.இவ்ளோ தான் விசயம்"
"ஃபாதர் எப்படி ஃபாதர்"
ஃபாதர் பதில் சொல்லாமல் சிரித்தார்.அவரின் வெண்மைப்பற்கள் பளிச்சிட்டன. முன்பே வெள்ளை ஆடையில் அவர் பளிச்சென்றிருந்தார்.
நிக்கோலஸ் தலையை சொரிந்தபடி நின்றார்.ஏகமாய் தாடியை வளர்த்துக் கொண்டார் சமீபத்தில்
"என்ன நிக்கோலஸ் என்ன வேணும் சொல்லு?"
"ஃபாதர்.. மாப்ளெ வந்திருக்காரு.இன்னைக்கு ஞாயிற்று கிழமை"
"உனக்கு ஒயின் பாட்டில் வேணும்.அதுதானே?"
நிக்கோலஸ் மௌனமாக சிரித்தார். அவனின் பற்களும் வெண்மையாகப் பளிச்சிட்டன.
"உள்ளெ போய் ஒண்ணு எடுத்துக்கோ"
உடனே,நிக்கோலஸ் உள்ளறைக்கு சென்று திருப்பலிக்கு பயன்படுத்தும் ஒயின் பாட்டிலில் ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் சுற்றி,பிறந்த குழந்தையை பாதுகாத்துக்கொண்டு வருவது போல கொண்டு வந்தார்.
ஃபாதரிடம் சொல்லிவிட்டு,வெளியே வந்து தனது இருசக்கர வாகனத்திலுள்ள பெட்டியில் வைத்து மூடிவிட்டு,வண்டியை
அங்கிருந்து கிளப்பினார்.
வண்டி சத்தம் ஏதோ மயக்கத்திலிருக்கிற மாதிரி இருந்தது.
0
சமையல் அறையின் வாசம் எங்குமாய் பரவியிருந்தது,
"என்ன எலுசம்மா, சர்ச்சில நடந்த கூத்தெ பாத்தியா?"
"ஆமாக்கா,ஃபாதர் பிரசங்கம் வச்சிட்டு இருந்தாரு.திடீர்னு ஒருத்தர் எழுந்திரிச்சு, நிறுத்துங்கிறார்.ஃபாதர் அப்படி தப்பா எதுவும் சொல்லல. நல்ல விசயங்களெ தான் சொன்னார்."
"ஃபாதர் சொன்ன விசயத்துல இவனுங்களுக்கு பிரச்சனை இல்லை."
"அப்புறம் ஏன் இப்படி பண்ணுறாங்க"
திருவிழா சமயத்துல கலெக்ஷன் பண்ணுறெ பணத்துல கொஞ்சம் இவனுங்க சுருட்டிடுறாங்க.அதெ கண்டுபிடிச்ச ஃபாதர் இவனுங்களெ திட்டீட்டார். திட்டீட்டார்ன்னா கொஞ்ச அதிகமாவே திட்டீட்டார்.அன்னையில இருந்து இவனுங்க இந்த ஃபாதரை எப்ப இந்த சர்ச்சில இருந்து துரத்தலாமுன்னு காத்திட்டு இருந்தானுங்க.இப்ப ஃபாதரும் இப்படி பண்ணெ,இதெ இவனுங்க ஃபாதர் பங்கு மக்களெ மதமாற்றம் பண்ண பாக்குறார்ன்னு ரூட்டெ போடுறானுங்க. பவுத்தம், ஜென்ன்னு குழப்பறாங்க.. இதுதான் விசயம்."
” ஏக்கா நீ தான் இங்கெயெ இருக்குறெ? அப்புறம் வெளியில நடக்குறெ விசயம் எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?"
"அடிக்கடி என்னெ பாக்க அந்தோணியம்மாள்ன்னு ஒருத்தி வராளே? அவ எதுக்கு வர,என்ன பாக்கவெ? வெளியில நடக்குற சங்கதியெ எல்லாம் எங்கிட்ட சொல்லீட்டு சாப்பிட்டுட்டு போவா?"
"அப்ப அதுதான் உங்க உளவுத்துறையா?"
"அப்படியும் வெச்சுக்கலாம்.சரி வறுக்குறெ மீனெ ஃபிரிஜ்ல இருந்து வெளியில எடுத்து வை."
எலுசம்மா ஃபிரிஜ்ஜெ திறந்து மீனை எடுத்து வெளியில் வைத்தாள். அது மிளகாய்க் காரலுடன் சிவப்பாக இருந்தது. பிறகு வெங்காயத்தை வெட்டத் தொடங்கினாள்.சமையலறையில் அப்போதைக்கு வெங்காயம் வெட்டுப்பட்டது.அது சின்னக் குவியலாகிக் கொண்டிருந்தது.
0
வெளியே வெட்டுபட்டவையாக பல விசயங்கள் இருந்தன.
கிறிஸ்துவின் போதனைகள், ஜென், பவுத்தம். இவையெல்லாம் மீறி உள்ளூர் பகைமை, பொறாமை.வசூல் பிரச்சினை என்றபடி ..
அப்போதைக்கு வெட்டுபடலிருந்து தப்பிக்க சிலருக்கு ஒயின் பாட்டிலும் உதவியது.
0
புதன், 3 டிசம்பர், 2025
1
கனவு, டாப் லைட் நூலகம் ஏற்பாடு செய்திருந்த கவிதை முகாம் :30/11/25
இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன.
1.சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்ப்பு செய்த “ சுற்றுச்சூழல் பிரார்த்தன”
போப் ஆண்டவர் எழுதிய கால நிலை மாற்றம் பற்றிய ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பு அது.
2. தூரிகை சின்னராஜ் எழுதிய “ இயற்கைக்கு செயற்கையாக சிரிக்கத் தெரியாது “ பிரபல ஓவியர்கள் பற்றியக் கட்டுரை
இரண்டும் திருப்பூர் கனவு பதிப்பகம் வெளியீடு
பல்லடம் எஸ் எல் முருகேசு இயக்கிய “ தண்ணி டம்ளர் “ குறும்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது
இது குடிக்கு எதிரானக் குரலை முன்வைத்தது.இவர் முன்பே முப்பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்களை இயக்கியவர். சுப்ரபாரதிமணியனின் சிறுகதைகளை மையமாகக் கொண்ட பள்ளி மறு திறப்பு , இரக்கம் உள்ளிட்டவை அவை.
0
கவிதை வாசிப்பு.. கல்லூரி மாணவி சிந்து நதி
கவிக்கோ ஆவணப் படம் திரையிடல்.
பல்லடம் புத்தகக் கண்காட்சி முத்திரை வெளியீடு
இவற்றுடன்
கவிதை முகாம் தொடங்கியது
ஐந்து குறும்படங்களால் களை கட்டியது
கவிதை முகாம் குறும்பட முகாம் ஆகிப் போனது
0
அமளி துமளி
2009ல் வெளிவந்த தாண்டவகோன் குறும்படம் திரையிடப்பட்டது.
அவரின் குடும்ப உறுப்பினர்கள் நடிகர்கள்
துள்ளல் மிகுந்த ஆரவாரமான படம்
எங்கோ சென்றிருக்க வேண்டியவர்
கொஞ்சம் பிசகி விட்டது
இனி மான் வேகம் தான்
0
முகாமின் துவக்கமாக கவிக்கோ அப்துல்ரகுமான் பற்றிய ஒரு மணி நேர ஆவணப்படம் திரையிடப்பட்டது.
Oபொதுவாக ஆவணப்படம் என்பது உண்மைத்தன்மையின் அடிப்படையில் எடுக்கப்படுவதால் அதில் சுவாரசியத்தை எதிர்பார்க்க முடியாது, சுருங்கச் சொன்னால் பார்வையாளர்களை அமைதியாக ஒரு மணி நேரம் உட்காரவைப்பது கடினம்.
ஆனால் விதிவிலக்காக கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றிய ஆவணப்படம் 51 நிமிடம் ஒடியதே தெரியாத அளவிற்கு நிறைய தகவல்களுடன் சுவராசியமாக சென்றது.
எண்பதுகளில் பலரும் எழுத்தாளர்கள் சுஜாதா,சாண்டியல்யன் ஆகியோரது கதைகளில் கிறங்கிக் கிடந்த காலகட்டத்தில், கவிதை மூலமாக பலரையும் தன்வசப்படுத்தியவர் கவிக்கோ.
அவரது எழுத்துக்களை வாசித்து அதன் மூலம் அவரை நேசித்தவர்கள் பலர் அவரைப்பற்றிய முழுமையாக அறிந்து கொள்ளும் நோக்கில் அரங்கில் குழுமியிருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை ஆவணப்பட இயக்குனர் பிருந்தா சாரதி பூர்த்தி செய்திருந்தார்,கொஞ்சம் புகைப்படங்களும் அதை விடக் கொஞ்சமான வீடியோக்களையும் மட்டுமே வைத்து மிக நேர்த்தியாக இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.கீட்டத்தட்ட 35 பேரை பேட்டி எடுத்து அதனை அழகாக எடிட் செய்யப்பட்டுள்ளது, ஒரு சில வினாடிகளே கடந்து செல்லும் காட்சிகளாக இருந்தாலும் அதிலும் அலட்சியம் காட்டாமல் மிக நுணுக்கமாக அந்த காட்சிகளை பதிவு செய்யப்பட்டுள்ளன, ஒளிப்பதிவு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம், தெளிவாக, வித்தியாசமான பிரேம்களாக ரசிக்கும்படி வைத்திருந்தார்.ஆவணப்படத்தின் நிறைவில், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வரவேற்புரை நிகழ்த்தினார்,கவிஞர் ஜெயபாஸ்கரன் 'தாய்மொழி நாள்' என்ற தலைப்பில் மிக அருமையாக பேசினார், ஆவணப்படம் குறித்து பேசும் போது நம்மிடம் அதிகம் போனால் நுாறு ஆளுமைகள் இருப்பர், அவர்களைப் பற்றி பேச, எழுத ஆவணப்படம் எடுக்க இயலாமல் போவது வருத்தம் தருகிறது, அந்த வருத்தத்தை துடைக்கும் முயற்சியாக இந்த ஆவணப்படம் வந்திருப்பதாக குறிப்பிட்டார்,சிவகுமார் தலைமை தாங்கினார் அஜயன் பாலா வாழ்த்துரை வழங்கினார்.இயக்குனர் பிருந்தா சாரதி ஏற்புரை நிகழ்த்தினார் அவரது ஏற்புரையில் கவிக்கோ ஆவணப்படம் இரண்டாம் பகுதியும் வெளிவருகிறது என்றார்.
மற்றும் தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களுடன் இணைந்து, தமிழ்க் கவிதை உலகில் முக்கியமான பங்களிப்பை செய்தவர். அவரது படைப்புகள் மூலம் தமிழ்க் கவிதை வடிவத்தை செழுமையாக்கினார். தமிழில் ஹைக்கூ, கஜல் போன்ற பிறமொழி இலக்கிய வடிவங்களை அறிமுகப்படுத்துவதிலும், பரப்புவதிலும் முக்கியப் பங்காற்றினார்.
அவரது முதல் கவிதைத் தொகுப்பான 'பால்வீதி' மூலம், உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழியாக கவிதையை வெளிப்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தினார். 'ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்காக 1999 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழன்னை விருது, தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், 2017 ஜூன் 2 அன்று காலமானார். அவரது நினைவாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஹைக்கூ பரிசுப் போட்டி போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சிறந்த கவிஞர்களுக்கு பரிசு வழங்குவதற்கு தேவையான வைப்பு நிதிக்காக தனது வீட்டையே விற்கச் சொன்னார் ,சினிமாவிற்கு பாட்டெழுத பலமான அழைப்பு வந்தபோதும் மறுத்துவிட்டார் என்பது உள்ளீட்ட பல தகவல்கள் மூலம் கவிக்கோ மீதான மரியாதையை அதிகப்படுத்தும் அந்த ஆவணப்படம் அடுத்த முறை எங்காவது திரையிட்டால் அவசியம் பாருங்கள்..dinamalar
ட
மாலையில் நடைபெற்ற படிப்போம் பகிர்வோம் நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அறிமுகம் செய்து பலர் பேசினர்.
நூலகர் இந்துமதி .. தூரிகை சின்ன ராஜ்.சிரிராம் ஆகியோரின் ஒருங்கிணைப்பு.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)