சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 22 ஜூன், 2015

அணைப்பு : சுப்ரபாரதிமணியன்


எட்டாவது நிறுவனத்திலிருந்து  அம்மினி  நேற்றுதான் விலகினாள். விலகினாள் என்றால் அந்தக் கணினி நிறுவனத்திலிருந்து தூக்கி எறியப்பட்டாள்.
 நேற்று ஒரு மோசமான நாளாக இருக்கும் என்று அம்மினி காலையிலேயே நினைத்திருந்தாள். அது எப்படி மோசம் என்று அவளுக்குத் தெரியவில்லை. சமிக்ஞை சொல்லும் எந்தக்கனவும் அவள் காணவில்லை.பள்ளிக்குடம் ஏதோ கனவில் வந்து போயிருந்த்து. காலையில் எழுந்தபோது முன்வாசலுக்கு வந்த போது  அப்படியெதுவும் அபசகுணம் தென்படவில்லை. குறிசொல்பவன் அந்த வீதியில் அலைந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் ஏதாவது சொல்லி விட்டுப்போனானா திரியவில்லை. அதையெல்லாம் அவள் மந்தில் கொள்வதில்லை.
மாலையில் அந்தக்கடிதம் அவளுக்குத் தரப்பட்டு விட்டது. “ உங்கள் சேவைக்கு நிறுவனம் மிக்க மகிழ்ச்சி தருகிறது. பொருளாதாரச் சிரமங்கள், மற்றும் தொழில்நுட்பத்துறையில் தென்படும் சிரமசிசை காரணமாக ஆள் குறைப்பு செய்கிறோம். தங்களின் ஒத்துழைப்பிறகு நன்றி “ எந்த நிலையிலும் வீட்டிற்கு அவள் தகவல் தரப்போவதில்லை. அப்புச்சியின் சாவுக்கு போனபோது இது எததனாவது கம்பினி அம்மினி என்று பல்ரும் கேட்டார்கள். அம்மினியின் அப்பா  தபால் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஒரே துறையில் 35 வருடம் பணிபுரிந்த தியாகி அவர். . முதல் நிறுவந்த்திலிருந்து அடுத்த நிறுவந்த்தில் சேர அம்மினி முடிவெடுத்த போது அவர் அதிர்ச்சியுற்றிருந்தார்.
“ ஒரே கம்பனியில இருக்கறதுதானே அம்மினி பெருமை “
“ என்னப்பா.. காலம் ரொம்பத்தா மாறி போச்சு. இப்பவெல்லா ந்ல்ல கம்பனி, ந்ல்ல கம்பனின்னு மாறிட்டு இருக்கறதுதா பேஷன். வருமானத்துக்கு வழி. மூளையே மூலதனம் “
‘ ஒவ்வொரு கம்பனி மாறப்பவும் சம்பளம் அஞ்சாய்ரமாவது ஏறுமே அப்பா”
”என்ன இருந்தாலும் ஒரே கம்பனி நல்லதில்லையா”
“ ஒரே புருசன்கிட்ட வாழ்ற மாதிரி நெனக்கறீங்களா. புருசன், கம்பனி இதெல்லாம் சம்பந்தமில்லையப்பா ” 
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இருந்த பணத்தைப் பொட்டல் காட்டில் ஒரு இடம் சகாயமாய் கிடைக்கிறதென்று எல்லாவற்றையும் சுருட்டி அப்பாவிற்கு அனுப்பி விட்டாள். இனி என்ன செய்வது என்பது யோசனையாக இருந்தது. நாளைக்கு தகவல் தெரிந்தால் புஷ்பா முதல் ரத்திகா வரை எலோரும் விசாரித்து விட்டு வங்கிக் கணக்கில் பணம் போட ஆரம்பித்து விடுவார்கள். இது அவர்கள் மத்தியில் சாதாரணம். வேலையிழப்பு என்று தெரிந்தால் பணம் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும். பிறகு முடிகிற போது தந்துவிடலாம். புஷ்பா முதல் ரத்திகா வரை எல்லோருக்கும் அவளும் செய்திருக்கிறாள். வேலையிழப்பு என்று வந்து விட்டால் பரஸ்பரம் உதவி என்பது அவர்களின் நட்பில் சாதாரண விதி.
அடுத்து தான் சேரவிருக்கும் நிறுவனம் எதுவாக  இருக்கும் என மெத்தையில் சாய்ந்து கொண்டே யோசித்தாள். வானம் வெளிறிப் போய் நீலத்தைக் காட்டிக் கொண்டிருந்தது, கொஞ்ச நேரத்தில் நட்சத்திரங்களும் மினுங்க ஆரம்பித்து விடும்.. தூக்கத்தை கட்டுப்படுத்த வேண்டாம் என்று தோணியது அவளுக்கு.
 பதினைந்தாவது திருமணத்திற்கு சென்ற வாரம் அம்மினி சென்றது ஞாபகம் வந்தது.இந்த நகரத்திற்கு வந்த பின் பதினைந்தாவது திருமணம். எட்டு நிறுவனங்களில் மாறியிருக்காவிட்டால் பதினைந்தை எட்டியிருக்க முடியாது. தொட்டு பார்க்க முயன்றவர்களில் எத்தனை பேர், முயற்சியில் தோல்விகண்டு தூற்றியவர்கள் எவ்வளவு பேர் என்பதையும் அம்மினி யோசித்துப் பார்த்திருக்கிறாள். திருமணமான பதினைந்து பேரும் அந்தப்பட்டியலில் இருந்தார்கள். “இதெல்லாம் எனக்குத் தேவையில்லை “ என்பதை இந்த பதினைந்து பேரிடம் தெரிவித்திருக்கிறாள்.இன்னும் சிலரிடமும். ஒரே நிறுவனத்தில் இருந்திருந்தால் இந்த மறுப்பு வார்த்தைகள் விரோதத்தைக் கொண்டு வந்திருக்கும். அதுவே அங்கிருந்து துரத்தியிருக்கும் சிலசமய்ம் உடம்பு காயம் பட்ட்டிருக்கும். மனசு எவ்வள்வோ காயப்பட்டிருக்கிறது அம்மினிக்கு.
சந்திரமுகி தொலைபேசி செய்திருந்தாள். “ ஒரே நாள்லே ரொம்ப போர் அடிக்குதா .ப்ப்புக்கு போலாமா. எந்த சிக்கலும் இல்லை, ஜாக்கிரையாக டாக்சியில் அறைக்குத் திரும்பி விடலாம்.. தெரிஞ்ச அண்ணன்மார் டாக்சி டிரைவர்கள் இருக்கிறார்கள் தெரிய்மெ உனக்கு“
“ எதுவுமில்லாமெ ஒரு கிராம்த்துப்பொண்ணா இருக்கற காலம்ன்னு தோணுதடி”
“ செரிடி ..ஒரு நாள்ல் வர்ற் ஞானோதயம் சீக்கிரம் மாறிரும். அம்மினி.. ஜாக்கரதை தேவைதா.” எதிரில் இருந்த வால் போஸ்டரைப் பார்த்துக் கொண்டாள். அதில் சன்னலுக்கு அப்பால் இருந்த வானத்தின் நீலம் அச்சாக பிரதிபலிப்பாகிக் கொண்டிருந்தது.  நீண்ட்தொரு ஏரி இன்னும் நீலமாய் அறையின் அகலத்திற்கு விரிந்து கிடந்த்து. தூரத்தில்  மலைகள் நீலப்பச்சையுடன் நின்றிருந்தன.
இந்த தனி அறை அடுத்த நிறுவனத்தில் சேருகிற வரைக்கும் தேவையா என்ற் எண்ணம் வந்தது. எங்காவது கூட்டு அறைக்குச் சென்றால் செலவு குறையும். மற்ற வர்களின் கஷ்டமும் புரியும்.
செகடந்தாளி ஆரம்ப்ப் பள்ளி  இந்த வாரம் இரண்டு நாள் கனவில் வந்து விட்டது. அங்கு தெரிந்தவர் என்று யாரும் இருக்கப் பாவதில்லை. போனால் வா என்று அடையாளம் காண யாருமில்லை. ஏன் இந்தப்பள்ளிக்கூடம் கனவில் வந்து இப்போது பயமுறுத்துகிறது. அப்பா பல் ஆண்டுகள் வேலை செய்த எளச்சிபாளையம் தபால் நிலையமும் அதைப் பள்ளிக் கட்டிடம் போலத்தான் இருக்கும்.. இரண்டிற்குமிடையில் கட்டிட வேறு பாடு இல்லாமை அவளை அவ்வப்போது அங்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. ஒரு நடை போய் அந்த இரண்டு கட்டிடங்களைப் பார்த்து விட்டு வரலாம் என்று தோன்றியது.சன்னலுக்கு வெளியே மின்னல் கீற்று பட்டது மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு. ரொம்பநாள் கழித்து மழைச்சாரல் படுமாதிரி உடம்பை பால்கனியில் கிட்த்தலாம் என்று தோன்றியது அவளுக்கு.


இருபத்தொன்றாம் புலி  அது அவளின் படுக்கையில் பொம்மையாய் சாய்ந்து கிடந்த்து. ஏகதேசம் ஒருவருடக்  குழந்தையின் எடையிருந்தது. அவள் அறை மாற்றும் போதெல்லாம் புலி பழதாகி விடுவது போல் அங்கேயே விட்டுச் சென்று விடுவாள். அடுத்த அறைக்குச் செல்லும் போது புலியும் மாறியிருக்கும்.
“ என்ன புலிக்கட்சிகாரியா நீ “ என்று பலரும் கேள்வி கேட்டிருக்கிறார்கள்.புலிகள் இந்தியாவில் 30% இவ்வாண்டில் அதிகமாகியிருப்பது அவளுக்குச் மகிழ்ச்சியே தந்திருக்கிறது. புலிகள் காப்பகம் என்ற கோசம் அங்கிருந்த பழங்குடிகளைத் துரத்தியிருக்குமா. அதனால் அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்து விட்டார்களா.”
“ என்னடி இது கட்டிப் புடிச்சு தூஙகறதுக்கு உனக்கு வேற எதுவும் கெடைக்கலியா “
“ இருக்கட்டுமடி’
“ பேஷனா டிராகானாச்சும் வாங்கிப் போடு”
“ அது திறந்த வாயும் செவப்பு நாக்குமா கெடக்குமே. அதுக்கு இது மேல்தா”
“ பட்டிக்காட்டுக்காரிங்கற வகையில பசு மாடு பொம்மை ஒண்ணும் வாங்கிப் போட்டுக்க மாட்டியே,,”
அவள் இருபத்தொன்றாம் புலி  பொம்மையை அணைத்து    அதன் உடம்பு மயிர்கள் தரும் அருவருப்பை மீறி மெல்ல கண்ணயர ஆரம்பித்தாள்.
“ அடுத்த நிறுவனம் பதினெட்டு மாடியாய்  கனவில் வந்து போனது . சிங்கிள் டவராக இருந்தது அது. டுவ்ன் டவ்ரில் விமானம் மோதி செத்துப்போன க்ருஷாங்கினியும் ஞாபகம் வந்து அப்போதையத் தூக்கத்தையும் குலைத்தார்கள்.
ரொம்ப் நேரம் ஆகும் என்று தோன்றியது தூக்கம் வர. வானம் இருட்டாகி எதையெதையோ சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்த்து.

வியாழன், 18 ஜூன், 2015

அமராவதிக்குப் போயிருந்தேன் 
------------------------------------------------------------------
       சுப்ரபாரதிமணியன்



 அமராவதிக்குப் போயிருந்தேன்   அமராவதியும் ஜீவனில்லாத நதியாகி விட்டது. ஆனால் தாராபுரம் பகுதி அமராவதி பகுதிக்குப் போகையில்  ஆறுதலாக இருக்கும். சாயக்கழிவு, வீட்டுக்கழிவு எதுவும் கல்க்காமல் சற்றே சுத்தமாக அமராவதி காணப்படும். இவ்வாரம் சக்தி விருது அளிப்பதற்காக –பெற்றவர் சவுதாமின், ஓய்வு பெற்ற ஆசிரியை, ஹோமியோ மருத்துவர், சுயமுன்னேற்ற நூலகளை எழுதிவருபவர்- தாராபுரம் சென்றேன். நண்பர் குள்ளாளக்காளி பாளையம் பாலசுப்ரமணியம் அவர்களுடன் சென்றேன்.

 தாராபுரம் அவ்வளவு அழுக்கிலாத, அவ்வளவு குப்பையில்லாத நகரம்( உடுமலையிலிருந்து எங்காவது கிளம்பி வந்து விடத் தோன்றும் போதெல்லாம் நான் வருவது தாராபுரம்தான் என்பார் ஆனந்த விகடன், பசுமை விகடன் நிருபர் ஜி.பழனிச்சாமி என்கிற ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ) என்ற பெருமையுடன் அமராவதி பகுதியில் அமராவதி தெளிந்த நீராய் ஒடும். கையில் அள்ளிக்குடிக்கலாம் என்பார் பாலு. அவர் சொல்வது வாஸ்தவம்தான். முன்பு பல முறை சாயப்பட்டறைகள் தாராபுரம் இருக்கும் அமராவதி ஆற்றின் கரையில் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போது ஒன்றுபட்ட போராட்ட்ங்களின் மூலம் அவை தவிர்க்கப்பட்டிருக்கிறன. சுண்ணாம்புக்காட்டில் இருக்கும் தடுப்பணையில் நீர் பொங்கி வழிகிறது. மாணவர்கள் நீச்சலடித்து மகிழ்கிறார்கள்.ஈஸ்வரன் கோவில் பகுதியில் நீர்த்தடமாய் தண்ணீர் தென்படுகிறது. அகலமான,  அந்தஸ்தான நதி அமராவதிதான். தாராபுரம் பகுதியில் மணற்கொள்ளையால் அது ஜீவன் இழந்து விட்டது. ஆனால் அங்கிருந்து 50 கி.மீ தள்ளிப்போனால் அதன் கதியே வேறுதான். திருமூர்த்தி மலையில் உருவாகி குளித்தலைக்கு அருகிலுள்ள மாயனூரில் காவிரியில் கலக்கிறது அமராவதி.  தாராபுரம் போலவே அரவக்குறிச்சி, கரூர் தாலூக்கா விவசாயத்திற்கும் வீட்டுப்பய்ன்பாட்டிற்கும் அம்ராவதி பயன்படுகிறது. ஆனால் கரூர் சாயக் கழிவால் சுக்காலியூர் முதல் ராயனூர் வரை விவசாயம் கெட்டு விட்டது. அமராவதி நதி நெடுக 29 கி.மி நீளத்திற்கு இருக்கும் சாய்ப்பட்டறைகளால்  நிலத்தடி நீரும் அமராவாவதியும் நஞ்சாகி விட்டது.வயலில் உப்பு படர்ந்து விடுகிறது. மீன்கள் செத்து விடுகின்றன.  ஒரு ஏக்கருக்கு 40 மூட்டை நெல் விளைந்த இடத்தில் 19 மூட்டை கிடைப்பதே அபூர்வம். மாடுகள்., கன்னுகள் குடிக்கக் கூட அருகதையற்றது அப்பகுதியில் அமராவதி நீர். உடல் நோய்களும் சாதாரணம். அமராவதி பகுதியில் அமராவதி அமரத்துவம் பெறக்காரணம்  மண்ற்கொள்ளைதான்.

 இந்திரா( இன்றைய அகில இந்திய காங்கிரசின் மகளிர் பிரிவு தேசிய செயலாளர்) மணற்கொள்ளை பற்றி எடுத்த முயற்சிகள் தோற்றுப் போய்  அதை எழுத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு சிறுகதைத் தொகுதி , ஒரு நாவல் , ஒர் கட்டுரைத் தொகுதி  என்று எழுதி வெளியிட்டவர் அரசியலில் மூழ்கிவிட்டார். 9 ஆண்டுகளுக்கு முன் சங்கராண்டாம் பாளையம் பகுதி அமராவதி கரை மனலில் உட்கார்ந்து இந்திரா மணற் கொள்ளை பற்றி விவரித்தது இன்னும் நினைவில் உள்ளது.. ஸ்ரீராம், க.சீ. சிவகுமார், முருகானந்தம், பாலு  என்று அவருடன் அமர்ந்து அமராவதி பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அன்று கடை மடைக்கு தண்ணீர் போகாத அரசியல் பற்றி ஸ்ரீராம் சொன்னார். இன்றும் மழை, வெள்ள காலங்களிலும்  கூட கடை மடைக்கு தண்ணீர் போகாத பிரச்சினை இருக்கிறது என்கிறார் பாலு.. பிரதான சாலை ஓரத்து வயல்களில் வாத்துக்கள் நீரில் முகத்தை அழுத்திக்கொண்டு இரையும், பூச்சிகளும் தேடிக் கொண்டிருக்கின்றன, இரு புற வயல்கள், நடுவில் பாதை அழகாகவே அமைந்திருக்கிறது. பாண்டவர் வந்து தங்கி ஓய்வெடுத்த அம்மன் கோவில் இன்றைக்கும் பல நல்ல காரியங்களுக்கு முக்கிய இடமாக உள்ளது.

எஸ்விராஜதுரை, தியோடர் பாஸ்கரன், சிருஷ்ங்கினி, சரஸ்வதி ராம்நாதி போன்ற எழுத்தாளர்களின் சொந்த பூமியாகவும் இது உள்ளது.
 இந்தியாவின் பல பகுதிகளில் மாடுகள் வளர்ர்ப்பில் கட்டுப்பாடு , மாட்டிறச்சி தடை என்று பல ரூபங்களில்  மாடுகளின் பிரச்சினை தென்படுகிறது. அமராவதி நீரை மாடுகளுக்குக் கொடுக்க முடியவில்லை. சாணியில் ரத்தமும் கலந்து வரும் அபாயம். சினை பிடிக்க பெரும் சிரம்ப்பட வேண்டியிருக்கிறது. தொடர்ந்து முயற்சிகள் செய்தால் ஒரு ஆண்டில் பலன்கிடைக்கலாம். அதுவும் பலமுறை தோல்விதான்.  சினை பிடிக்காத காரணத்தாலே 20,000 ரூபாய் மதிப்புள்ள மாடுகள் மூவாயிரம் ரூபாய்க்கு  இறைச்சிக்காக விலை போகின்றன. அமராவதியை ஒட்டகத்தில் கடக்கலாம் என்றும் சொல்லக் கூடிய அளவில் வறண்டு வருகிறது. தாராபுரம் பகுதில் அது தண்ணீர் தடத்துடன் காணப்படுவது தாராபுரம் மக்களுக்கு பல விதங்களில்  ஆறுதல் தருகிற விசயமாகும். அமராவதி அணை கட்டப்பட்டபோது, ஆண்டுக்கு மூன்று முறை அணை நிரம்பும், 10 டி.எம்.சி தண்ணீர் இருப்பு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. ஆனால் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து தண்ணீர் குறைந்து கொண்டே வருவதால், ஒரு முறை அணை நிரம்புவதே பெரும்பாடாக உள்ளது. இந்த அணை காரணமாக உடுமலை வட்டத்தில் உள்ள தலைமடை பகுதியில் 25 கி.மீ. தொலைவுக்கு ஆறு மாதங்களுக்கு மட்டும் நீர்வசதி கிடைக்கிறது. எஞ்சிய 125 கி.மீ. பகுதிகளில் வறட்சிதான் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ளது. கோடை காலத்தில் இப்பகுதி மக்கள் மட்டுமின்றி,காலங்காலமாக இப்பகுதியில் வாழ்ந்து வரும் உயிரினங்களும் நீரின்றி செத்து மடியும் அவலமும் தொடர்கிறது..

. சமீபத்தில் பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டப்படுவதில் சமீபத்திய சர்ச்சைகள் தொடர்கின்றன. பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு காவிரி ஆணையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நீர் வளத்துறை, மத்திய மின்வாரியம்,தமிழக அரசு ஆகியவற்றின் அனுமதியைப் பெற வேண்டும், ஆனால் இவை  பின்பற்றாமல் கேரள அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு, நில அளவை, நில ஆய்வுப் பணிகளை "முல்லைப் பெரியாறு பாணி"யிலேயே நடத்தி வருகிறது அணை கட்டும் முயற்சியிலேயேஎ இருக்கிறது. வைகோ போன்றவர்களின் தொடர்ந்த போராட்டங்கள் அந்த முயற்சிஅயை மந்தப்படுத்தி வருகின்றன.

பாம்பாற்றின் குறுக்கே கட்டும் அணையால் கிடைக்கும் கூடுதல் நீரை பயன்படுத்தும் உரிமையை கேரள அரசு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அமராவதி பாசன விவசாயிகள் கருதுகிறார்கள்.. திட்டம் நிறைவேறும் காலத்தில் அமராவதி பகுதியில் விவசாயம் மட்டுமின்றி, கரூர்,திருப்பூர் மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாக இருக்கும் அமராவதி அணையின் நீரை  முழுக்க இழக்க வேண்டிய  பெரிய சிக்கலும் இருக்கிறது.

Kanavu,       8/2635, Pandian nagar, Tiruppir  641 602  ( ph. 9486101003 )

வெள்ளி, 12 ஜூன், 2015

 :மு.வ.வின் :கி.பி.2000                                                                                                                                                          =சுப்ரபாரதிமணியன்     
     பிரான்ஸ் காப்காவின் எழுத்துக்களின் பாதிப்பில் உருவான சமீபத்திய படமொன்று மு.வ. அவர்களின்  67 ஆண்டுகளுக்கு முன்   எழுதப்பட்ட
கி. பி. 2000 நாவலோடு வெகுவாக ஒத்திருப்பது ஆச்ச்ர்யம் தந்தது. பாதர்ஸம் மென்  என்ற நார்வே நாட்டுப்படத்தில்  வரும் கதாநாயகன் நம்முடையதைப் போல அல்லாத ஓர் உலகத்தை உருவாக்குகிறான் காதல் ஜோடியின்  முத்த்த்தைப் பார்ப்பவனுக்கு  அது உயிர்ப்பே இல்லாத எந்திர முத்தம் போல் தென்படுகிறது. சட்டென விரக்தி மேலிட தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறான். மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இருந்தாலும் உயிரும் உணர்வும் அற்றவர்கள் போல அர்த்தமில்லாதவர்களாக  உலாவுகிறார்கள் என்பது அவனுக்குத் தெரிகிறது.  மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஹியூகோ  என்ற சுத்திகரிப்புத் தொழிலாளியைச் சந்திக்கிறான். அவனின் அறையின் சுவற்று விரிசலிலிருந்து கேட்கும் இனிய இசை  மறுபக்கத்திற்கு தப்பிச் செல்ல வழி காட்டும் என நினைக்கிறான். ரக்சியமாக  சுவற்றை உடைக்கும் போது அது ஒரு வீடாகவும், யதார்த்த உலகிற்கு மாறுபட்டதாகவும்  இருப்பதாகக்க் காண்கிறான். கை நீட்டினால் அவனுக்குத் தேவையானதெல்லாம் கிடைத்து விடுகிறது. வாழும் யதார்த்த உலகம் அல்லாத இன்னொரு உலகத்தைக் கான்கிறான்.  மரணமோ, கனவுகளோ அங்கில்லை ஆனால் தனிமையின் கொடுமையை உணர்கிறான்.
     கி பி 2000 நாவல் தன்னிலையில் சொல்லப்பட்டிருக்கிறது. தொழிற்சாலையிலிருந்து வீட்டிற்கு மாலையில் திரும்பும் கதாநாயகன் மிகுந்த மனச்சோர்விற்கு உள்ளாகுகிறான். காணும் யதார்த்த உலகம் அவனைச் சுடுகிறது. வாடுகிறான். இந்த அளவில் உருகும் நிலைமையும் தீமையே என்று தோன்றுகிறது.  செயற்கையான மறதியைத் தேடிக் கொள்ள முடியவில்லை அவனால்.  நஞ்சு உண்டு ஒரே மரப்பாக மறந்து மாய்வது மேலானது என்றாலும் கோழைத்தனமானது என்று நினைக்கிறான்.. கர்ப்பமாயிருந்தாலும் விறகு சுமக்கும் ஏழைதாயாலும் மாணவன் ஒருவன் கல்லூரியில் பணம் கட்ட முடியாததும் அவனை அன்று மிகவும் வருத்தமுறச் செய்கின்றன. பொல்லாத உலகம் அவனுக்குப் பிடிப்பதில்லை. அவனின் நண்பன் ஒருவனின் கடிதம் ஓர் அத்யாயம் முழுக்க விரிகிறது. கல்லூரி நாட்களில் அவனுக்கு தமிழ்நாட்டு லெனின் என்ற பட்டப்பெயர் இருந்தது. அவனின் இரண்டு குழந்தைகளும், மனைவியும் வறுமையால் வாடுகிறார்கள். ஓய்வு இல்லாத உழைப்பு வெறுப்பை உண்டாக்குகிறது.  ஊரிலுள்ள தாய்க்கு மாதாமாதம் பணம் அனுப்ப வேண்டியிருக்கிறது. அவன் தம்பி உடல் நல்க்குறைவால் சிரமப்படுகிறான். அவனுக்கு எலும்புருக்கி நோய். தேர்தல் நேரம் என்பது அலுவலக்த்தில் தலைமைக் கணக்கருடனும் பிறருடனும் பகையைமையைத் தோற்றுவிக்கிறது. குடுமப்ச் சிரமங்கள் அவனைத் தர்கொலைக்குத் தூண்டுவதாகவும், ஆறுதல் பெற வேண்டியும் அக்கடிதத்தை எழுதியிருப்பதாகக் குறிப்பிடுகிறான். ஆ.க. என்ற நண்பன் ஒவ்வொரு நொடியும் மூச்சுத்துணறுகிறேன் என்ற தன் நிலையையும் ஒவ்வொரு நொடியும் வாழ்க்கை  எனக்குத் திணறலாகவே உள்ளது என்ற நண்பர் நிலையினையும் மறந்து அடுத்தடுத்து வந்தக் கொட்டாவிகள்  அவனைத் தூக்கமென்னும் இன்பக் கரைக்கு இழுத்துச் செல்கின்றன. உறக்கத்தில் புதிய கனவுலக்த்தைக் காண்கிறான்.  என்பது மீதி ஒன்பது அத்யாயங்களில் நாவலில் விரிகிறது.
     அளவளாவி என்ற பெயரில் பெரிய பெரியக்கட்டிடங்கள் தென்படுகின்றன. பொது உடை  பொது உடமையின்  முதல் படியாக இருக்கிறது. நண்பர் என்ற பெயருடன்  பொதுத்  தொண்டர் எல்லாவற்றையும் அறிமுகப்படுத்துவதுகிறார். இயல்பாய் பாடலாம். ஓவியம் தீட்டலாம். நடிக்கலாம். மதமாச்சர்யம் அல்லாமல் இருக்கலாம். செல்லியின்  கவிதையை விளக்கிச் சொல்லும் ஒருவர்  காணப்படுகிறார். கார் என்பது சக்கரம் இல்லாமல் ஓட்டுனர் தேவையில்லாமல்  எங்கும் எளிதில் போகக் கூடியதாக இருக்கிறது. ரஸ்யர்கள், சீனர்கள் போன்று வெளிநாட்டினரும் தென்படுகின்றனர். அந்த உலகில் வாழ வலியுறுத்தப்படும் மூன்று விதிகளில் முதல் விதி “ உலகத்தில் மக்கள் வேற்றுமையை மறந்து  அன்பு பாராட்ட வேண்டும்” என்பதேயாகும். அங்கு அவரவர் பழக்கத்திற்கு ஏற்றவகையில் உணவு கொள்வதற்காக பலவகை உணவுப் பிரிவுகள் இருக்கின்றன். படிப்பு குறிப்பிட்ட கால நேரத்தில் அடங்குவதில்லை. உணவு விடுதியும் ஒரு தொழிற்சாலையாக அமைந்து மக்களுக்கு வேண்டிய உணவு தருகிறது.  வீடுதோறும் நெசவுத்தறியும், காய்கறித்தோட்டமும் இருந்த  நிலை போய் ஊருக்குப் பொதுவான நெசவாலையும் காய்கறிப்பண்ணையும் அமைந்திருக்கிறது. மூன்று நாள் விடுமுறை கோலாகலம். வீடுதோறும் சமையலறை அமைத்து பெண்களை ஓய்வில்லாமல் உழைக்கச் செய்யாமல் பொது சமையலறை அமைத்து பெண்கள் ஓய்வில்லாமல் உழைக்கச் செய்யாமல் பொது சமையலறை இருக்கிறது. அச்சுக்கூடமும், நாடக அரங்கும் கூட்டுறவு முறையில் பொதுவானதாக இருக்கிறது. உயர்ந்தக் கட்டிடங்களாய் பள்ளிக்கூடம், கல்லூரி போன்றவை அமைந்திருக்கின்றன.  முதல் மாணவனுக்குப் பரிசு கொடுக்கும் பழக்கம் இல்லை. பள்ளி விடுமுறையில் தொழிற்சாலைக்குச் செல்லலாம். பல வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பெண்களே. வரலாறு என்பது அரசபரம்பரை, தொன்மையான காலம் என்றில்லாமல் கடந்த கால நிகழ்ச்சிகளாய் அவற்றின் சொல்லாடலாய் 1640ம் ஆண்டுக் கல்கத்தாவையும், 1940ம் ஆண்டு சென்னையையும் பற்றிச் சொல்வதாக இருக்கிறது.  பிச்சை எடுக்கும் பழக்கம், ரிக்சாக்களில் மனிதர்கள் இழுபட்டது, டிராம் வண்டி நெரிசல் உட்பட பல அதில் இருந்தன. மக்களுக்கு உணவு, உடை முதலியன கொடுப்பதற்கு வியாபாரம் என்ற வழக்கம் இருந்தது சொல்லப்படுகிறது. உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் காலையில்  படிப்பும், மாலையில் தொழிற்சாலைக் கல்வியும் பயிற்சியும் பெறுகின்றனர். ஆனால் சாதி முறை தொழில் என்ற குறுகிய பாகுபாடு இல்லை. திருடுகிறவர்கள், கொள்ளையடிக்கிறவர்கள்  வாழத்தெரியாதவர் என்று தனிப்பகுதியில் வாழ அனுமதிக்கப்பட்டு திருத்தப்படுகிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கென்ற சிகிச்சை: பழ உணவும், சூரிய ஒளியும், ஊற்று நீரும் என்றாகிறது. பதினைந்து வயதிற்கு மேல் குறைந்தது  அய்ந்து ஆண்டுகள்  தொழிற்சாலையில் தொழிலாளியாக இநுருந்தால்தான் கல்லூரியில் சேர இடம் கிடைக்கும் வருடம் நாலு மாதம் உலகம் சுற்ற ஏற்பாடு செய்யப்படும். வழக்கறிஞர் என்ற ஒருவர் இல்லாத உலகம் அது. கல்லூரியில் படிக்காதவர்  தேர்தலில் நிற்க்கக் கூடாது. குடவோலை தேர்தல் முறை.  நூறு வய்திற்கு மேல் இருப்பவர்கள் பெரியோர் என் அழைக்கப்படுவர். தேர்தலில் அறுபது சதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு. பேரின்பம் என்று குழந்தைகள் வளரும் இடம்  இருக்கிறது.. அது பெரியவர்களின் உலகமாயும் இருக்கிறது, தீராத னோய்களையும் பொல்லாத விபத்துகளையும் வாழ்கையிலிருந்து அக்ற்றிவிட்டால் காதல் சாகப் போவதில்லை. அவனுக்காக காதலியும் சாக வேண்டியதில்லை. நூறு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு பேரின்பத்தில் குழந்தைகளோடு பழகி அமைதி நிலையில் உயிர் விடுபவர்கள் என்ற உலகமும் அது. இயந்திரங்கள் உள்ள உலகம் என்பதால் உழைப்பாளர்களுக்கு நிறைய ஓய்வு கிடைக்கிறது. இந்தப் பேரினப உலகத்தை தன் கனவின் நிலையாக மு.வ யதார்த்தில் தன் கனவின் நிலையாக மு.வ. யதார்த்தத்திலிருந்து  வேறுபட்ட “உட்டோபியன்” உலகமாகப் பார்த்திருக்கிறார் இந்நாவலில்.அல்லது சிந்தனை களத்தில்.
    இதில்குடும்ப  உறவுகள் பற்றியக் கற்பனைஉலகின் பாத்திரங்கள் மிகவும் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. மனத்தூய்மையும் அன்பும் பிரதானமான மு.வ.வின் வழக்கமான கதாபாத்திரங்கள் இதில் குடும்ப உறவுகளின் சிடுக்குகளுக்குள் அகப்படவில்லை. குடும்ப உறவுகளின் விசித்திரத் தன்மை பற்றி எழுதுவதும் கட்டுடைப்பதும் அவரின் மனதிற்கு அதிர்ச்சி தருவதாகவே இருந்திருக்கும். சனாதன மனம் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதுதான்.
     மு.வ்.வின் கற்பனை உலகில் குழந்தைகள் அபூர்வமாக்த்தான் வெளிப்பட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் இடம் பெறும் அத்யாயத்தில்தான் இயந்கை சார்ந்த எண்ணங்களும் வெளிப்படுகின்றன.     ” நிலாவை நோக்கி   குழந்தை வா வா என்றழைக்கிறான். அது வரவில்லை. அதை உருத்து நோக்கி டுப்..டுப் என்றான். வெற்றி பெற்றது போல் மகிழ்ந்தான். டுப்..டுப் என்பதன் பொருள்  திட்டுவதாகும். அவன் ஏதாவது இடையூறான தவறுகள் செய்யும் போது நான் தப்பு, தப்பு என்று சொல்லி வந்தேன். என் பெரிய மகன்   நான் இல்லாத வேளையில்  இதை           “ துப்...துப்” என்று தவறாக எண்ணிக் கொண்டு அவனுடைய பள்ளிக்கூட அறிவால்  துப்பாக்கியை நினைவில் வைத்துக் கொண்டு நிலாவைப் பார்த்து அதன் ஒத்துழையாமையை வெறுத்து டுப்..டுப் என்றான்” என்ற சுவாரஸ்யமான பகுதி இருக்கிறது.
      விலங்குகள் இல்லாத உலகில் மனிதர்கள் வாழ்வது போல் இந்த கற்பனை உலகம் இருக்கிறது. பூனை பற்றி மட்டும் இப்படியொரு குறிப்பு நாவலில் இடம் பெற்றிருக்கிறது. “ பழங்காலத்தில் பூனைக்கு மனிதர்களை விட மிகுதியான வல்லமை இருந்த்து. மக்களின் வேலைகளைக் கெடுத்துவிடக்கூடிய வல்லமை அதற்கு இருந்த்து. அதனால் அந்தக் காலத்து மக்கள் பூனைகுறுக்கே வந்தால் மிகவும் கவலைப்பட்டார்கள்ல். தொடங்கின வேலையை விட்டு விட்டார்கள் . இந்தக் காலத்தில் பூனைக்கு அந்த வல்லமை இல்லை. “ பகுத்தறிவு சார்ந்த உலகின் மாதிரியாக மு.வ. இதைத் தந்துள்ளார்..
     அறமும் மனத்துய்மையும் கொண்ட மனிதர்களை மு.வ. அவரின் பிற நாவல்களில் படைத்திருப்ப்பார்.. கடமை உணர்வு, நாட்டுப்பற்று மொழிப்பற்று பற்றி இவரின் கதாபாத்திரங்கள் பிற நாவல்களில் பிரசங்கங்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். திருவள்ளுவரின்  அறனெறி இவருள் தந்த பாதிப்புதான். இவரின் உரையெழுதும் பணிக்கு முக்கியமான அடிப்படியாக்க் கூட இருந்திருக்கிறது. இதில் இவரின் கற்பனை உலக்த்தில் இவரின் முந்தின நாவல்களின் மாதிரி வடிவ கதாபாத்திரங்களும், லட்சிய மனிதர்களும்  இடம் பெற்றிருக்கிறார்கள். பொதுவுடமைத்தத்துவம் இவருள்  பெரும் பாதிப்பை நாற்பதுகளிலேயே ஏற்படுத்தியிருக்கக் கூடும். உலகப் போர்களில் உலக எதேச்சதிகாரத்திற்கான ரஸ்யாவின் குரலும் பங்கும் மு.வ.வை பாதித்து சோவியத் ரஸ்யாவின் சோசலிச உலக்த்தைப் பற்றியக் கனவை இந்த நாவலில் விரித்திருக்கிறது என்று சொல்ல்லாம் . இந்த நாவல் வெளிவந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மு.வ. ரஸ்யா செல்கிறார். என்வே ரஸ்யாவைப் பார்க்காமல் அந்தப் பொதுவுடமைச் சமூகம் பற்றியக் கற்பனையில்தான் இந்த நாவலை எழுதியிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.
     ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984,விலங்குப்பண்ணை,சுஜாதாவின்  சொர்க்கத்தீவு, வ ராவின்  கோதைத்தீவு  போன்ற நாவல்கள் எதிர்காலம் பற்றிய விபரீதக்கற்பனைகளாகவும், அதிகார உலகத்தைக் கட்டுடைக்கிறதாகவும் அமைந்திருக்கின்றன், ஆனால் மு.வ்.வின் கற்பனை உலகம் அமைதியான பேரினப் வாழ்க்கையின் நப்பாசையாக இருக்கிறது. நாற்பதுகளில் கற்பனை விஞ்ஞானக் கதைகளின் பெரும் விளைச்சலில் ரஸ்யாவின் நெபோக்கோ போன்றோர் உச்சத்தில் இருந்த போது பொதுவுடமைக் கற்பனை உலக்ம் மு.வ.வின் பார்ர்வை வேறு கோணத்தில் அமைந்திருக்கிறது இதில். இரண்டாம் உலகப் போரின் விளைவுகளும், சோவியத் வெற்றியும் கூட இந்நாவல் வெளிவந்த காலத்தில்தான் நிகழ்ந்தவை. பொதுவுடமை உலகம் பற்றிய கற்பனையை விரித்து கி.பி.2000 நாவலில்  மு.வ. எழுதியிருக்கும் இதன் 1947ம் ஆண்டில்தான் மு.வ்.வின் கற்பனையான அன்பும், அறனெறியும் கொண்ட உலகிற்கு எதிரான வகையில் சோதனினை முயற்சியில்   அணுகுண்டு செய்யும் முடிவை சோவியத் ரஸ்யா வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதப்போர்களுகளும், தகவல் தொழில் நிட்பமும் விஸ்வரூபித்து வளர்ந்திருக்கும் இன்றைய விபரீத  உலகில் மு.வ.வின் அறமும், மனத்தூய்மையும், அமைதியுமான கற்பனை உலகை யாரும் ஏக்கத்தின் வெளிப்பாடாகவேக் கொள்வர். அந்த ஏக்கம் நிறைவேறக் கூடியதாக், முடியாதத்தாக இன்றையச் சூழலில் இருப்பதை இந்த நாவல்  அல்லது கற்பனை நூல் பெருமூச்சாக வெளிப்படுத்துகிறது எனலாம்.

       சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602






கரிகாலன் விருது :
-----------------



            "புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது"
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
           மலேசியா ரெ கார்த்திகேசுவின் "நீர் மேல் எழுத்து" சிறுகதைத் தொகுப்பை முன் வைத்து...


                                     சுப்ரபாரதிமணியன்
--------------------------------------------------

தஞ்சை பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை மூலம்  வழங்கும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கை சார்பான           ” கரிகாலன் விருது “  பெற்றிருக்கும் மலேசியா ரெ.கார்த்திகேசு அவர்களின் தொகுதி
 ” நீர் மேல் எழுத்து “

            கல்கி வைரவிழா போட்டியில் ரெ. கார்த்திகேசுவின் "ஊசி இலை மரம்" பரிசு பெற்றபோது அயலக இலக்கியத்திற்கு கிடைத்த கௌரவம் குறித்த பெருமிதமும் முணுமுணுப்பும் இருந்தது. அந்த முணுமுணுப்பு 2003ல் அவரின் சிறுகதைத் தொகுப்பு "ஊசி இலை மரம்" வெளிவந்த பின் அவரின் படைப்புகள் தொகுப்பாக வெளிவராரது குறித்ததாக பின்னர் இருந்தது. அந்த முணுமுணுப்பை உடைத்துக் கொண்டு வந்திருக்கிறது இத்தொகுப்பு நீண்ட இடைவேளைக்குப்பின்.
            இரண்டாம் குழந்தைப் பருவமான முதுமையில் பெரியவர்களை மிகவும் பாதிப்பவர்களும், அவர்களுடன் இணக்கமாக இருப்பவர்களும் குழந்தைகள்தான். அக்குழந்தைகளை உலகத்தில் இதில் மூன்றில் ஒரு பங்கு சிறுகதைகளில் காட்டுகிறார். மல்லி என்ற குழந்தை மழை நிறத்தை, வயிற்றுக்குள் இருக்கும் எலியை, மூளை வளர்ச்சி குறைந்த பையனை என்று பலவற்றை அணுகும் குழந்தைத்தனமான அனுபவங்களாய் விரிகின்றன. முதுமையும் குழந்தைமையும் ஒன்றாகிறது. ரெ.கா. தொடர்ந்து விஞ்ஞானச் சிந்தனைகளை சிறுகதைகளுக்குள் கொண்டு வருகிறவர். இத்தொகுப்பில் இன்னொரு மூன்றிலொரு பங்கு கதைகள் கடவுள் என்ற மாயை மற்றும் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி பற்றியும் விரிவாய் பேசுகின்றன. அணு ஆயுத மோதல் உலகையே நிர்மூலமாக்கி விடுவது பற்றிய அச்சம் விரவியிருக்கிறது. சூன்ய உலகத்தை தவிர்க்கிற முயற்சிகளை விளக்குகிறார். விஞ்ஞான தேடல் சாதாரண வாழ்க்கையை நிர்மூலமாக்குவதையும் பாலியல் உணர்வு அற்றுப் போன உலகில் ஒரு விஞ்ஞானி வாழ முடியாத ஆதங்கத்தையும் மூத்த விஞ்ஞானியை சகா இளைய வயது விஞ்ஞானி கொல்வதை உச்சமாய் எடுத்துக் காட்டுகிறார். விஞ்ஞான உலகின் இன்னொரு அபாயபுறம் சுட்டிக் காட்டப்படுகிறது. இதில் குறிப்பாக கணினி உலகத்தில் மனிதம் மரத்துப்போய் குடும்பத்திலிருந்து அந்நியமாகும் சூழலும் காட்டப்படுகிறது. "எதிர்காலம் என்ற ஒன்று" என்ற கதை முதல் பல கதைகள் சுஜாதாவின் நீட்சியாக வெளி வந்துள்ளன. அதை சுஜாதாவும் உலகளாவிய இணையச் சிறுகதைப் போட்டியின் மூலம், அங்கீகரித்திருக்கிறார்.
            எவ்வளவு பெரிய முரடனுக்குள்ளும் ஒரு மனிதன் உள்ளார்ந்து இருப்பதை கொண்டாடும் கதைதான் 'கொஞ்சம் மனிதன்.' வேலப்பனின் முரட்டுத்தனம் உருகி கைகுலுக்கிச் செல்லும் மனிதனாக மாறிவிடுகிற அற்புதம் மனித நேயத்தை சுலபமாகச் சுட்டுவதாகும். மௌனமாய் எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் முதியவர் ஒருவர் அவர் பார்வையில் வியாபார ரீதியாய் அணுகும் மகனை ஒரே வார்த்தை பதிலால் குப்புற வீழ்த்தி விடுகிறார். விளிம்பு நிலையிலான ஒரு பெண், வழக்கறிஞர் பெண்ணொருத்தி ஆகியோரை முன் நிறுத்தி நியாயங்கள் எதிர் கொள்ளும் அவமானங்கள் "சேர்ந்து வாழலாம் வா" குறுநாவலில் விரித்து சொல்லப்படுகிறது. எந்த நிலையிலான பெண்ணாக இருந்தாலும் சரி அவன் முன் நிறுத்தப்படும் துரோகங்களுக்கு எல்லையில்லைதான்.
            எழுத்தாளன் என்ற வகையில் அவன் எதிர் கொள்ளும் உலகம் அவ்வளவு உவப்பாகத்தானில்லை. எழுத்தாளனுக்கு உலகம் தரும் கௌரவமும் அத்தகையதே. அதுவும் சிறு பத்திரிகை வாசிப்பும், தொடர்ந்த செயல்பாடுகளும் மனிதனை சற்றே வக்கிரமாக்கி விடுவதும் தெரிகிறது. அதிகமாக சிறுபத்திரிகைகள் படிப்பதனால் ஏற்படும் தாக்கம் விசனத்திற்குரியதாக சிந்தனையை மாற்றி விடுகிறது. இதை பலர் குறிப்பிடுவதை கவனித்திருக்கிறேன். இதை இவரும் சில கதைகளில் குறிப்பிடுகிறார்.
            'ஆக்கலும் அழித்தலும்' கதையில் குழந்தை கிறுக்கி சுவரைக் கெடுத்துவிட்டதாக அங்கலாய்ப்பு கொள்ளும் வேளையில் அதை சுலபமாக சுத்தமாக்கி பிரச்னை தீர்வது போலத்தான் சிறுபத்திரிகை படைப்பு சார்ந்த அதீத குழப்பங்களும், சிடுக்குகளும் என்பதை சில இடங்களில் குறிப்பிடுகிறார். தான் கொண்டாடும் படைப்புகள் மேல் சுமத்தப்படும் வீணான குற்றச்சாட்டுகள் மனதை நோகடித்திருப்பதை சில இடங்களில் காணலாம். சிடுக்கான சுந்தர ராமசாமியின் கதையொன்றை முன் வைத்து எழுப்பப்படும் கேள்வி அதற்கு எதிர்வினையாக இன்னொரு கதையை பகடி செய்து எழுத வைத்திருக்கிறது.
            பிற கதைகளில் உள்ளார்ந்து விரவிக் கிடக்கும் கிண்டல் தன்மை இக்கதையில் உச்சமாகி இருக்கிறது. எளிமையும், தீர்க்கமான உண்மையும் விரிந்து பரவும் இத்தொகுப்பின் கதைகளை அவ்வகை சிடுக்கு கதைகளுக்கு எதிர்வினையாகவே அமைந்திருப்பதை தீவிர வாசகன் கண்டடைவான். அது முதிய எழுத்தாளரின் பக்குவப்பட்ட தன்மையையே காட்டுகிறது. புன்னகை ஒரு கீற்று போலச் சிறியதாக இருந்தாலும் வசீகரமானது என்று ஒரு அமிர்த வரியை ஒரு சிறுகதையில் கார்த்திகேசு எழுதியிருக்கிறார். வக்கிர மனங்களின் ஆழமான வடுக்கள் எவ்வளவு அபாயகரமானது என்பதை இக்கதைகள்மலேசியா சூழலில் தீவிரமாகக் காட்டத் தவறதில்லை.


            (விலை: RM 25/- உமா பதிப்பகம், கோலாலம்பூர், மலேசியா.)
வாஸந்தியின்  “ மீட்சி”  சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து....

அலையின் திசையில்  மாற்றம் தேடி..
=====================================================================


                                                               =  சுப்ரபாரதிமணியன்
================================================================================
ஒரு சமூகத்தின் வளர்ச்சியோ மேம்பாடோ அந்த சமூகத்தில் பெண்கள் நிலையை  முன் வைத்தே கணக்கிடப்படுகிறது.  வாஸந்தி அவர்களின் படைப்புகள் இந்திய சமூகத்தின் ஒரு பகுதி சமூகப் பெண்கள் பற்றியோ, பெரும்பான்மைப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருப்பவர்களையோ முன் நிறுத்துபவை. அவரின் கடைசியாக  வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு சர்வதேச அரசியலை முன் வைத்து அல்லது உலகின் பல்வேறு நாடுகளின் பிரசிசினைகளை முன் வைத்து ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை  அல்லது ஊடாடிய அரசியல் அனுபவப் பார்வை என்ற அளவிலும், ஒரு தமிழ் வாசகன் சென்றடைய வேண்டிய வெவ்வேறு களங்களை முன் நிறுத்தியவை. இத்தொகுப்பில் அவ்வகைக்கதைகளின் முன்மாதிரியாக புத்தகத் தலைப்புக்கதையை மட்டும் சொல்லலாம். அதுவும் கூட ஈழமக்களை முன் வைத்து அந்த மண்ணில் நடந்ததாக இல்லாமல் இந்திய மண்ணில் அகதிகளாக இருந்து ஈழ மண்ணுக்குப் போக ஆசைப்படுகிறவர்களின் மன உணர்ச்சிகளை மையமாகக் கொண்டே அமைந்திருக்கிறது. இந்திய மண் அவர்களுக்கு வழங்காத நியாயத்தையும் அவர்களை கவுரவமாக நடத்தாததையையும் உறுத்தலாக்கியிருக்க்றது. அந்த வகையில் இத்தொகுப்பின் கதைகளின் மையங்களை சாதாரண் விளிம்பு நிலை மக்களைப் பற்றினதாகவே பெரும்பாலும் எடுத்துக் கொள்ளலாம்.   முதுமை பற்றிய பிரஸ்தாபங்களை இரண்டில் ஒரு பகுதி கதைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன். பெருகி வரும் முதியோர் இல்லங்களில் புழுங்கித் தவிக்கும் இதயங்கள் தென்படுகின்றன்.  அல்லது முதுமை ஒரு தொல்லை தரும் நோயாக பீடித்திருப்பது பற்றி பேசுகிறது.  முதுமை சாந்த நோய்கள் பலவீனராக்குகிறது. ஒரு குழந்தைத்தனத்திற்கு கொண்டு  செல்கிறது.  முதுமை குறித்த எதிர்ப்புணர்வு செருப்பை எடுத்து  வீசி விட்டுப் போகச் செய்கிறது.  இருத்தியலியல் அளவில் இந்த முதுமையோ, துன்பங்களோ தற்கொலைக்கு கொண்டு செல்லும் க்தைகளையும் பார்க்கிறோம் இதில்.
aaaaஅதிகாரமும், சுயநலமும்   மனதளவில் இருக்கும் உணர்ச்சிகள் அனைத்தையும் பிடுங்கி ஒரு பண்டமாக மாற்றிவிடுதைப்பற்றி பல ஆய்வுகள் உள்ளன.இதில் கலைக்கோ, இலக்கியத்திற்கோ இடமில்லை. இதில் பாட்டு கற்றுக் கொள்ள முடியாமல் போகிறது.  அல்லது கற்றுக் கொண்ட பாட்டை  தொடர்ந்து பயிற்சியின் மூலம் மீட்டெடுக்க முடியவில்லை.  இந்தக் குறை ஏதோ வகையில் அழுத்திக் கொண்டே இருக்கிறது, கர்ப்பத்தில் இடம் பெறாத பூச்சியும் அதை தொடர்ந்து இம்சைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. சாமார்த்தத்தை தேவாரம், திருவாசகம், தியாகப்ரும்மம்ன்னு நிறுத்திக் கொள்ளலாம் என்று ஆவேசமும் படுகிறது.  அமுதாவும், கம்லாவும், சண்முகநாதனும் இந்த ஆவேசங்களுக்குள் அலைபடுகிறார்கள்.எல்லோரும் கலைஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ரசிகன் ரொம்பவும் முக்கியம் என்ற பாவனை வெளிப்படுகிறது. கலை  மேல்  அபரிமிதமான காதல் இருக்கும் போது  எந்த அவமானமும் உறைக்காது என்பதும்  தெளிவாகிறது.
நுகர்வு சந்தை சமூக உறவிலிருந்து மனிதனை துண்டிக்கும் அவலத்தை தற்கொலைகள் மூலம்  ராமப்பாவைக் கொண்டு காட்டுகிறார். கோபம் பொருள் ஈட்ட வேண்டியுள்ள அற விழுமியங்களை அழித்து விடும் அவலம் கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுகிறது. கோபம்  வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்த்துப் போராடும் குணத்தை   கோடிட்டாலும் அதைநிர்மூலமாக்கி  இல்லாதாக்கி விடுகிறது. இத்தகைய மனிதனது உலகம் உருவாக்குபவை இயந்திர பொம்மைகளை.இந்த இயந்திர பொம்மைகள் சலித்துக் களைத்துப் போகிறார்கள். முன் எப்போதானக் காலத்தை விட இக்காலத்தில் தான் இந்த பெண் பொம்மைகள் அதிகம் உற்பத்தி செய்யப்படும் அவலம் பற்றி இவை பேசுகின்றன.மிரசுவிடம் அடைபட்டிருக்கும் பெண்  வெளியேறத்துடிக்கும் ஆவலும், படிக்க ஆசைப்படுவதும் எதேச்சையாக நிகழ்ந்து விடுவதில்லை. இந்த  ஆசைதான் உடல் உபாதை மீறி காசியில் அலைய வைக்கிற்து. காது கேட்காமல் டமாரமாகவே இருந்து விடுவதில் இருக்கும் சவுகரியம் நல்லது என்று படுகிறது. இக்கதைகளின் உரைநடையில் நனவும் கனவும் முயங்கிய உணர்வு  வாசிப்பில் சுவாரஸ்யத்தைக் கொண்டு வந்து விடுகிறது.உரையாடலில் தென்படும் சாதாரணதன்மையை  மீறிய அறிவுஜீவித்தன்மையோ, தர்க்கரீதியான தனமோ, நாடகீய உட்கூறுகளோ சுவாரஸ்யத்தினைத் தருகிறன்றன.  தொடர்ந்து மனிதர்களை இணைக்கும் கண்ணிகளாக மனித நேயமும், அன்பும் இக்கதைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.முன் முடிவுகள் இன்றி இயல்பாக இக்கதாபாத்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.பிராமணியச் சூழலும், கர்நாடக மாநிலப் பின்ணணியும், கன்னட வார்த்தைப் பிரயோகங்களும் பல கதைகளை சுவாரஸ்யமாக்குகின்றன. 
இத்தொகுப்பின் தலைப்புக்கதையின் விடுதலை உணர்வை  பெரும்பான்மையான கதைகளில் பார்க்க முடிவது எதேச்சையானதல்ல. இலங்கையிலிருந்து வந்து அகதி வாழ்க்கை வாழ்ந்து அவமானப்பட்டு அதிலிருந்து மீட்சிக்கு அவர்கள் முயல்கிறார்கள். முதுமையிலிருந்து விடுபட்டு குழந்தைத்தனத்துள் அகப்பட்டுக் கொள்ள பல முதியவர்களுக்கு ஆசை இருக்கிறது. காது மநதமாக் இருந்து உலகின் கசடுகளை  அறிந்து கொள்ளாமல் இருப்பதே  சுப்பம்மாவிற்கு விடுதலையை அளிக்கிறது.மீராசுதாரிடம் இருந்து விடுபட்டு படுக்கையிலிருந்து படிக்கப் போக ஆசைபடுவது லட்சுமிக்கு மீட்சியாக இருக்கிறது.. மீட்சிக்கான இடம் சிலருக்குக்  காசியாக் அமைந்து விடுகிறது.  கேட்கிற பாடல் கொண்டு வரும் அசாதாரணத்தன்மையும் பய்மும் கூட தப்பிக்க வழி சொல்கிறது.  ஞானிகளாக இருப்பதை விட அசடாக இருப்பது மேல் என்று பலருக்குப் பட்டு விடுகிறது. ஆண்கள் காலாகாலமாய் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பெண்களின் பங்கு குறைத்து கணிக்கப்படுகிறது. காலகாலமாய் பெண்கள் சிசுக்களிலிருந்தே கொல்லப்பட்டு வரும் அவலத்தை தயங்காமல் சொல்பபட்டிருக்கின்றன..பெண்கள் சுய மதிப்பும், பொருளாதாரச் சுயச்சார்பும் பெற்று விட்டால் மட்டுமே சமுதாயத்தில்  ஆரோக்கியமான  மாற்றம் உருவாகும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்  வாஸ்ந்தி அவர்கள். ஒடுக்குமுறையாளர்களோடு ஒன்றிப்போய் மற்றவர்களுடனான தொடர்பு இல்லாமல் தனிமை கொண்டு வாழ்ந்து துன்பங்களிலிருந்து விடுபடுதலை ஒரு அரசியல் நிலையாகப் பார்க்கும் ஒரு கோணத்தை போன தொகுப்பில் இவர் வெளிப்படுத்தினாலும், இத்தொகுப்பு அதிலிருந்து மாறுபட்டு லவுகீக தளத்தில் அலைவுறும் பெண்களைப் பற்றி அதிகம் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாம்.உலகின் மீதான் நேசம், போராட்ட உணர்வுகள், தங்களின் கடமையை உணர்ந்து செயல்படுதல்  என்பதே பெண்களின் மீட்சிக்கான வரலாறாக அமைந்துள்ளது. முடக்கப்பட்ட,  மறைக்கப்பட்ட விசயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை வாஸந்தியின் எழுத்துக்கள் தேடுபவை.ஆரோக்கியமான சமூகத்தில் பெண்கள் வெறும் உற்பத்திக் கருவிகளாகவும், இயந்திரங்களாகவும் இல்லாமல் மீட்சி கொண்டவர்களாக இயங்க வேண்டும் என்ற ஆசையை அவரின் எழுத்துக்கள் தொனிப்பவை. பெண்கள் என்ற பாகுபாட்டில் அக்கறை கொள்ளாவிட்டாலும் அவர்களைப் பற்றி அதிகம் பேச ஆசைப்படுபவை. சமூகத்தின் செயல்பாடுகளால் திருப்தியுறாத எதிர் செயல்பாடாய் இக்கதைகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.படைப்பாளி மனதில் வைத்திருப்பதையெல்லாம் கொட்டி விடமுடிவதில்லை.கொட்டுவதில் அள்ள கொஞ்சம்  இருந்து கொண்டே இருக்கிறது.அதைத்தான் இத்தொகுப்பின் கதைகளும்  சொல்ல முயல்கின்றன.

                                    சுப்ரபாரதிமணியன்
                                                      subrabharathi@gmail.com

  

புதன், 10 ஜூன், 2015

சமூகத்திற்குப் பயன்படும் எழுத்து
  
தோழர் ஆர். நல்லக்கண்ணு                                                                                              

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்
                 
 NCBH      நியூ சென்சுரி புக் ஹவுஸ்  வெளியிட்ட சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா



* 07-06-2015 ஞாயிறு மாலை மில் தொழிலாளர் சங்கக் கட்டிடம், ஊத்துக்குளி சாலை, திருப்பூரில் நடைபெற்றது . 
* தலைமை :   இரா. சண்முகம் ( திருப்பூர் மாவட்டத்தலைவர்,  க.இ.பெ.மன்றம் ) தாங்கினார்.  வரவேற்புரை: ரங்கராஜ் ( மேலாளர்,NCBH   கோவை ) வழங்கினார் .
.சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் பற்றி தோழர் ப.பா இரமணி ( மாநில செயலாளர், க.இ.பெ.மன்றம்) , தோழர் ரவி ( திருப்பூர் மாவட்டச் செயலாளர் இந்திய கம்யூ .கட்சி ) நடேசன், தமிழக ஆசிரியர் கூட்டணி, ஆர். ஈஸ்வரன் ( மாநில துணைச் செயலாளர், தமுஎகசங்கம் ) ஆகியோர் பேசினர்.


சிறப்புரை:   தோழர் ஆர். நல்லக்கண்ணு                                     ( மூத்த தலைவர் , தேசிய நிர்வாகக் குழு, இந்திய கம்யூ .கட்சி). அவரின் உரையில்:


சுப்ரபாரதிமணியன் ஆரம்பத்தில் தாமரை போன்ற முற்போக்கு இதழ்களில்  தன் எழுத்துப் பணியைத் துவங்கியவர். கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து எழுதி 12 நாவல்கள் உடப்ட 45 நூல்களை வெளியிட்டு சாதனை புரிந்திருக்கிறார்  எனலாம். திருப்பூர் போன்ற பெரும் வணிக நகரத்தின் மக்களின் வாழக்கையை சரியாக பிரதிபலித்து வருகிறார். .உலகமயமாக்கலில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதையும் முதலாளித்துவ சுரண்டலையும் படைப்புகளில் வெளிப்படுத்தி உள்ளார். நொய்யலைப் பற்றி கவிஞர் வெள்ளியங்காட்டன் எழுதிய கவிதை எனக்குப் பிடிக்கும். அந்த ஜீவநதி இன்றைக்கு மாசுபட்ட நதியாகி விட்டது.நதியை நாம் வெகுவாக சுரண்டி விட்டோம். அதை சுப்ரபாரதிமணியனின் “ சாயத்திரை “ நாவல் பிரதிபலித்தது. திருப்பூர் மக்களின் இன்றைய வாழ்க்கையை அது பிரதிபலிக்கிறது. பழைய நொய்யல் சார்ந்த திருப்பூரையும் பிரதிபலிக்கிறது. அதி பல தொன்மக்கதைகளும் உள்ளன. ராவுத்தக்கவுண்டர் பற்றிய  ஒரு தொன்மக்கதை எனக்குப் பிடித்தது.  பெயரில் ஒரு சாதித்தமத்துவம் உள்ளது. பஞ்சகாலத்திலும் பல்ருக்கு வாரி வழங்குபவர் அவர். ஆனால் பஞ்சத்தை எதிர்கொள்ள முடியாமல் செத்துப் போகிற  அவலம் அதில். ஏழைகளுக்கு உதவி செய்தும் முறையான நீர் மேலாண்மை செய்தும்  உதாரணமாக அவர் காட்டப்பட்டிருக்கிறார். தொழிலால் சிதைந்த  திருப்பூர் வாழ்க்கை அதில் உள்ளது, தொழில் இயறகையோடு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். அது இல்லாமல் பேராசை எண்னத்துடன் செயபடும் முயற்சிகள் காலப்போக்கில் பிரசினைகளை சந்திக்க  நேர்வதை  “  சாயத்திரை “ நாவலில் சொல்கிறார். அது சிறந்த நாவலுக்கான் அது தமிழக அரசின் பரிசு பெற்ற நாவலாகும். இந்தி, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளம் என் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறப்பு கொண்டதாகும்.. நீடித்த வளர்ச்சி தேவை. அது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமே பெற முடியும். அதற்கென்று இருக்கும் அறத்தைப்பற்றி இவரின் “ சூழல் அறம் “ கட்டுரைத் தொகுப்பு சொல்கிறது.  இன்றைய வாழ்வில் நாம் குவித்துக் கொண்டிருக்கும்  பலவகைகுப்பைகள் பற்றி அந்த நூல் எடுத்துரைக்கிறது. இவர் சுற்றுச்சூழல் சார்ந்து பல நூல்களை எழுதியுள்ளார். அதில் ஒன்றுதான் “ சூழல் அறம் “. 

சுற்றுச்சூழலை வைத்து எழுதும் முன்னணி படிப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.                            ” சமையலறைக்கலயங்கள் “ நாவல் இரு பெண்களை வைத்து திருப்பூர் பனியன் கம்பனி தொழில் வாழ்க்கையைச் சொல்கிறார்.  ஆப் நைட், புல் நைட் என்று கேள்விப்ப்ட்டிருக்கிறேன். இந்நாவலில் தொழிலாளர்கள் வெடி நைட் செயவதாக எழுதியுள்ளார். அதிசியமாக உள்ளது. எட்டு மணி நேர வேலை உரிமையை போராடிப் பெற்றோம். ஆனால் வெடி  நைட் என்று தங்கள் உழைப்பை மக்கள் செலுத்த வேண்டிய கட்டாயத்தால் பெண்கள் உள்ளனர். பதமா போன்ற பெண்களின் வாழ்க்கை  தொடந்து கொண்டிருக்கிறது.எல்லா மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் இங்கு வந்து குவிந்திருக்கிறார்கள், குழந்தை உழைப்பைப் பற்றியும் நாவல்களில் பேசுகிறார். கனகு என்ற பையன்  குழந்தைப் ப்ருவத்தை இழந்து  தொழிலாளியாகிற அவலம் , பள்ளிப் படிப்பு இழந்து போனதைப் பற்றி “ பிணங்களின் முகங்கள் “ நாவலில் எழுதியுள்ளார். சமீபத்தில் தினமணி பத்திரிக்கை இந்நாவல் ஒவ்வொருவரின் நூலக்த்திலும் இருக்க வேண்டிய நாவல் என்று பாராட்டியிருக்கிறது. பெண்கள் மீதான் வன்முறை பற்றி இந்த நாவலும் பேசுகிறது. இவர் பல நாடுகளுக்கு பயணம் சென்றிருக்கிறார். அந்த அநுபவங்களை  “ மண் புதிது ”  நூலில் பதிவு செய்தைருக்கிறார். லண்டன் போன்ற நாடுகளில் தமிழர்களின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறார். அங்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்குள் இருக்கும் பாகுபாடுகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்..நாட்டிய அரங்கேற்றம் போன்றவை நட்த்தப்படுவதில் இருக்கும் ஆடம்பரம்,  புலம்பெயர்ந்த சூழலில்அவர்களின் வாழ்க்கையை நுணுக்கமாக எழுதியுள்ளார்

. உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவித்து பருத்தி நகரம் போன்ற  நூல்களையும் வெளியுட்டுள்ளார். அதிலொரு கட்டுரையில் பங்களாதேஷ் சென்று அங்கு பெண்கள் குறைந்த கூலி தரப்பட்டு சுரண்டப்படுவதையும் குறிப்பிட்டுள்ளார்.உள்ளுர் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் முயற்சிகளில் அக்கறை காட்டி எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளார்.”  கனவு “  என்ற இலக்கிய காலாண்டிதழை 29 ஆண்டுகளாக நடத்தி பல நூறு படைப்பாளிகளீன் படைப்புகளை பிரசுரித்து ஊக்கம் தந்து வருகிறார். தனி மனித படைப்பாளியாக நிண்று விடாமல் எழுத்தாளர்களை ஊக்குவைப்பது, இலக்கிய இதழ் நட்த்துவதன் மூலம் ஒரு இயக்கமாகவே செயல்படுகிறார்.. இந்த அளவில் அவரின் விரிந்த அளவிலான பணி வெகுவாகப் பாரட்டப்பட வேண்டியதாக உள்ளது.


கடந்த 25 ஆண்டுகளாக உலகமயமாக்கலின் தாக்கம் இந்திய சமூகத்தில்  மிக மோசமாக இருந்து வருகிறது.முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு எல்லை இல்லை என்பது போலாகி விட்ட்து. சந்தைக்கு கட்டுப்பாடு இல்லை என்பதால் முன்றாம் உலக நாடுகளின் வர்த்தகங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன, தொழில் வளர்ச்சி என்பது இயற்கையோடு இணைந்ததாக சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். ஆனால் முன்னேற்றம் என்று வருகிற போது சுற்றுச்சூழல் குறித்த அக்கறை புறக்கணிக்கப்படுகிறது.. இது அபாயகரமான விளைவுகளை தட்ப வெப்ப சூழ்நிலைகளில் ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் ஒரு வடிவம்தான் இன்றைக்கு நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அதிக சூடும் ., வெப்பமாற்றமும். அய்ம்பூதங்களையும் கொள்ளையடித்துச் சுரண்டுவதன் பலனை இன்றைய வெப்பசூட்டால்  உணர்கிறோம். இயறகையை நம்மிலிருந்து பிரிக்காமல் அதன் பலனை அனுபவிக்க வேண்டும்...மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. . குழந்தை உழைப்பும், பெண்களின் உழைப்பு மற்றும் பாலியல் சுரண்டலும் உச்ச கட்டத்திலிருக்கிறது. குழந்தைப்பருவத்தை அனுபவிக்காத குழந்தைகள், தங்களீன் சுதந்திரத்தை அனுபவிக்காத பெண்கள் என்று அவர்கள் மாறி வருகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை  உணர்வதற்காக எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில்  அவற்றை வெளிப்படுத்துகின்றனர். சமூக நோக்கமும், உணர்வும் கொண்டு எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.சமூகப் பார்வை எழுத்தாளர்களுக்கு அவசியம் தேவை. நச்சு இலக்கியம் ஒழிக்கப்பட எழுத்தாளர்கள் எழுத வேண்டும். புதிய சமூகத்தை  உருவாக்கும் பணியில் எழுத்தாளர்கள் ஈடுபட வேண்டும். சுப்ரபாரதிமணியனின் படைப்புகள் அந்த வகையில்  திருப்பூரின் மனச்சாட்சியின் குரலாகவும், உலக மயத்திற்கு எதிரான குரலாகவும் அமைந்து வருகின்றன  . அவர் தொடர்ந்து இலக்கிய உலகில் சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்.

சொந்தக்கவலை , ஊர்க்கவலைகளால் கண் முன் நடக்கும் சமுதாய அவலங்களை கவனிக்க மக்கள் மறந்து விடுகின்றனர்.  பிரச்சினைகளின் ஆழம் அறிந்து கவிஞர்களும் சமுதாய அக்கறை உள்ள எழுத்தாளர்களும் எழுத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர்.  பிரச்சினைகள் தானாக மாறும் யாராவது வந்து மாற்றுவார்கள்  என அசந்து போன நிலையில் மக்கள் உள்ளனர். அந்நிலையை மாற்றி சமுதாய்ப் பிரச்சினையை திரும்பிப் பார்க்க வைக்கும் உணர்வுகளைத்தூண்டும் எழுத்துக்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றுச்சூழல், இயற்கை, சமுதாய்ப் பிரச்சினைகள் சார்ந்த நூலக்ள் மக்களுக்கு விழிப்புணர்வு ஊற்படுத்தும் வகையில் அடிக்கடி வெளிவர வேண்டும். மக்களிடம் உந்துதல் ஏற்பட்டு சமுதாயம் சார்ந்த அக்கறை தானாக வெளிப்படும். எதையும் ஆழமாகப் படிக்கிற ஆழமாகப் புரிந்து கொள்கிற தன்மை அதிகரிக்க வேண்டும். இலக்கியக் கூட்டங்கள், புத்தக அறிமுகக் கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படவேண்டும். இலக்கியங்கள் குடும்பத்தை நேசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இதனால், குடும்ப உறவுகளில், நல்ல மாற்றங்கள் ஏற்படும். மனித இயற்கையைப் புரிந்து வாழ வேண்டும்.இயற்கையை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இயற்கையை அழித்தால்  அது நம்மைப் பழிவாங்கும் .