சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 23 ஜனவரி, 2020

திருப்பூர் இலக்கிய   விருது 2020  
                                               Tiruppur Literary Award  2020
                  
வணக்கம் . வாழ்த்துக்கள்  
             திருப்பூர் இலக்கிய   விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்..
படைப்பிலக்கியம் , கலை இலக்கிய, சமூக மேம்பாட்டுப்பணிக்காக  இவ்வாண்டு விழாவில்  28 படைப்பாளிகள் இதன் கீழ் கவுரவிக்கப்படுகிறார்கள். தங்களுக்கும்  இவ்விருதை    அளித்து கவுரவிக்க இருக்கிறோம். தாங்கள் அவசியம் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
விழா நாள் : 9/2//20  ஞாயிறு, பிற்பகல் 3-6  மணி.
இடம்: திருப்பூர் புத்தகக் கண்காட்சி அரங்கம்,  கேஆர்சி செண்டர், டைமண்ட் திரையரங்கு எதிரில் , மங்கலம் சாலை , திருப்பூர் .(  திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து  5 நிமிட நடை.)
தங்களின் படைப்பு அனுபவத்தை 10 நிமிட அளவில் பேச தயாரிப்புடன் வரவும். தங்களைப் பற்றியக் குறிப்புகளை  தபாலில் உடனே அனுப்பி வைக்கவும்..நிகழ்ச்சி குறித்த நேரத்தில் துவங்கும். இதையே அழைப்பிதழாக எடுத்துக் கொள்ளவும்.அழைப்பிதழும் பின்னர் அனுப்பப்படும்..தூரமிருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து செலவு வழங்கப்படும்.  தங்கள் ஒப்புதலை தபால் / கைபேசி / மின்னஞ்சல் மூலம் தெரிவித்து உதவ வேண்டுகிறோம்.)
.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறோம்.
திருப்பூர் இலக்கிய   விருது 2020 குழுவுக்காக:  
( துருவன் பாலா  99941 49922). தபால் முகவரி : 44, ராமையா காலனி பிரதான சாலை , திருப்பூர் 641 602/ email: tiruppurawards@gmail.com

விருது பெற்றோர்:
2020 திருப்பூர் இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் ..
கோவை முனைவர் சித்ரா
ஈரோடு செழியன் கோ. ( கலைக்கோவன்)
திருப்பூர் கனல்
பொள்ளாச்சி வாமனன்
சக்திமங்கலம்  உமையவன்
சென்னை கணேச குமாரன்
செஞ்சி தமிழினியன்
கம்பம் மானசீகன்
ஈரோடு சந்திரா மனோகரன்
கோவை  கா சு வேலாயுதம் -பத்திரிக்கையாளர்
கோவை மு. வேலாயுதம் –பதிப்பாளர்
திருனெல்வேலி ராமபாண்டி-பேராசிரியர்/ செயல்பாட்டாளர்
திருப்பூர் ஓவியர் பித்தன் நடராஜன்
கோவை கவிஜி
சென்னை கு. விநாயகமூர்த்தி
அயலகம் :
சிங்கப்பூர் சித்ரா ரமேஷ்
ஆஸ்திரேலியா ஆ சி கந்தராஜா
இலங்கை ஜே. வஹப்தீன்
புதுவை எழுத்தாளர்கள்
சுந்தர முருகன் / தெ.குப்புசாமி / டேவிட் பிரபாகர்/ கு.அ.தமிழ்மொழி / கு. சிவமணி/ வளவதுரையன்