சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 12 மே, 2019

c/o காஞ்சிரபளம் :  ஒரு தெலுங்கு திரைப்படம் : சுப்ரபாரதிமணியன்
பி நரசிம்மராவுக்கு பிறகு தெலுங்கு திரைப்பட உலகில் ஒரு பெரிய நீண்ட இடைவெளி இருப்பதாக நினைக்கிறேன். அவரின் மாபூமி , மட்டி மனுஷலு.,ரங்குலகலா போன்ற படங்கள் 90 களில் இந்திய திரைப்படத்திற்கு தெலுங்கிலிந்து சில நல்ல படங்களாக அமைந்தன. சில நல்ல ஆவணப்படங்களையும் எடுத்திருக்கிறார். செகந்திராபாத்தில் இருந்த போது அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். அவ்வப்போது விஸ்வநாத் என்ற இயக்குனர் தரப்பில் இருந்து சில வெகுஜன படங்கள் ரசிக்க கூடியதாக இருந்தன .ஆனால் இந்திய திரைப்பட விழாக்களிலும் உலக திரைப்பட விழாக்களிலும் தெலுங்கு பிரிவில் இருந்து சரியான படங்கள் இல்லாததை நான் கடந்த 15 ஆண்டுகளாக கண்டிருக்கிறேன்
 இந்த ஆண்டு நான் பார்த்த படம் c/o காஞ்சிரபளம். இயக்குனர் மகா வெங்கடேஷ் .இந்த படம் என்னை மிகவும் பாதித்தது. தொழில்முறை நடிகர்கள் எவரும் இல்லாமல் ஒரு சிறு பகுதியை சார்ந்த சாதாரண மக்களைக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்த படம் .. சாதாரண கதை சாதாரண மனிதர்கள். சாதாரண நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படம். ஒரு உச்சபட்ச கலை சாதனையாக இருப்பதை  தெரிந்து கொண்டேன் வழக்கம்போல் காதல் கதை தான்.ராஜி ஒரு என்கிற 49 வயதான ஒரு அலுவலக கடைநிலை ஊழியராக வேலை செய்கிறவன் பிரம்மச்சாரியாக இருக்கிறான் அவனுடைய தினசரி வாழ்க்கையில் நடைப்பழக்கம். ஏதாவது தேநீர் கடைக்கு சென்று  தேநீர் பருகுவது .அலுவலகம் செல்வது, அலுவலகத்தில் சாதாரண வேலைகள் பிறகு மாலையில் திரும்பி அந்த தெருவில் உள்ள சிலருடன் உட்கார்ந்து மது அருந்துவது ,இதுதான் அவனின் தினசரி வாழ்க்கை. இந்த வாழ்க்கை அம்சங்களில் இருந்து ஒரு திருப்பத்தை தருவதற்கு ஒரு 42 வயது பெண் ராதா வருகிறாள் அந்த அலுவலகத்திற்கு புதிதாக வேலைக்கு செல்கிறாள்  அந்த ஒடியப் பெண்ணுக்கு இந்தி தெரியும். தெலுங்கு தெரியாதுஇந்த படம் விசாகப்பட்டினத்தில் ஒரு சிறு பகுதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த அலுவலகத்தில் பலரும் தெலுங்கு பேசுகிறார்கள். இந்த ஓடிய பெண் ஹிந்தியில் பேசி பழகுகிறாள். இந்த சூழலில் மதிய நேரத்தில் அந்த அலுவலத்தில் இருக்கும் ஆறு ஏழு அலுவலர்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது ராஜி என்ற கடைநிலை ஊழியர் தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம் . அந்த பெண் வந்த பின் அவள் ராஜுவை எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடும் இடத்திற்கு அழைக்கிறாள். மற்றவர்களும் முகம் சுழித்தாலும் அதை தடுப்பதில்லை. பிறகு மெல்ல அவளுடைய கதையை கேட்கிறபோது அவள் விதவை அவளுக்கு 20 வயதில் ஒரு பெண் இருக்கிறாள் என்ற தகவல் கிடைக்கிறது .அந்தசிறு  பெண் அவருடைய சகோதரனுடைய வீட்டில் வாழ்கிறார் .தகவல் பரிமாற்றங்கள் தினசரி வாழ்க்கை என்று வருகிறபோது ராஜுவுக்கு ராதாவின் மேல் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது .சர்க்கரை நோயால் அவதிப்படும் ராதாவை தினசரி நடைப்பயிற்சி ,யோகா பயிற்சிக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறான். இருவருக்கும் நட்பு வளர்கிறபோது அவள் தெலுங்கு கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறாள். ராஜு உதவுகிறான் .பக்கத்தில் இருக்கும் ஒரு மலைக் கோயிலுக்கு செல்ல விரும்புகிறாள். பாதயாத்திரை செல்வது நல்லது என்று அவன் கீழ்ப்பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு அவளைக் கூட்டி செல்கிறான் .சர்க்கரை வியாதி மற்றும் உடல் உபாதைகளால் அவள் படும் சிரமத்தை  உணர்கிறான் அவள் கடவுளை கூப்பிட்டாலும் ராஜி கும்பிடுவதில்லை .நான் மனிதர்களையே பெரும்பாலும் மதிக்கிறவன் வணங்குகிறவன் என்று சொல்கிறான். பிறகு இருவருக்கும் ஒரு வகையில்  காதல் அரும்புகிறது அப்போது அந்த பெண்  ஏன் நீதிருமணம் செய்யக்கூடாது என்று கேட்கும் போது அவன் கொஞ்சம் தடுமாறுகிறான்.. இருவரும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள் .ராதா அவர்களின் மகளிடம் இதை சொல்கிற போது அவள் இந்த வயதில் உனக்கு என்ன இப்படி ஒரு ஆசை வந்த்து என்று திட்டுகிறாள் .ஆனால் அவள் ராஜீவின் தொலைபேசி எண்ணை வாங்கி அவருடன் பேசி அவருடைய மனதை புரிந்து கொண்டு அம்மாவின் விருப்பமும் சரிதான் என்று உணர்கிறாள் .ஆனால் ராதாவின் சகோதரர்  தடையாக இருக்கிறார். ராதாவை அடிக்கிறார் ஒரு அறையில் பூட்டி வைக்கிறார். ராஜுவுக்கு தகவல் சென்று அவர் வருகிறபோது ராதா தன்னுடைய மகளின் உதவியால் அந்த வீட்டிலிருந்து தப்பிக்கிறாள் .தப்பித்து செல்லும் இடத்தில் ராதாவின் சகோதரர் சிலரை கூட்டிவந்து அவர்களை   அடிக்கிறார்.ஒரு தொடர் வண்டி சாலை . அந்த தொடர்வண்டி சாலையின் அந்தப்புறம் காஞ்சிரபளத்தில் உயர்ந்த சாதியினர் வசிக்கக்கூடிய குடியிருப்புகள்  இருக்கிறன. இந்தப் பக்கம் ராஜூ போன்ற சாதாரண தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கிற குடியிருப்புகள் இருக்கின்றன. அந்த தொடர்வண்டிப் பாதை அருகில் ராதாவையும் ராஜாவையும் பிடித்து அடிக்கிறார்கள் .அப்போது ஒரு தொடர் வண்டி கடந்து போகிறது .அதன் பின்னால் அந்தப் பகுதியில் சாதாரண மக்கள் எல்லாம் ஒன்று திரண்டு ராஜுவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக நிற்கிறார்கள். திருமணம் செய்து கொள்கிறான் .இந்த திருமணத்தோடு இந்த படம் முடிகிறது. ஆனால் ராதா அவனிடம் கேட்கிறாள் ஏன் இவ்வளவு ஆண்டுகள் நீ திருமணம் செய்துகொள்ளவில்லை . ஆண்கள் மீது மோகம் கொண்ட மனிதன் கே என்று கூட அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்களே என்று கேட்கிறபோது அவன் தனக்கு ஏற்பட்ட காதலை சொல்கிறான். இந்தப்படம்  நான்கு தளங்களில் வெவ்வேறு நபர்களின் கதையையும்  கொண்டிருக்கிறது .நான்கு தளங்களில்  ஆணும் பெண்ணும் வேறு வயதினர். வெவ்வேறு சாதி மதம் சார்ந்தவர்கள் .அதில் ஒருவர் ஒரு சாதாரண மது கடையில் வேலை செய்யும் மனிதர் .தினந்தோறும் இரவில் ஒரு விபச்சார பெண் அங்கு வந்து ஒரு மது பாட்டிலை வாங்குகிறது மூலம் அவனுக்கும் அவளுக்கும் இடையில் ஒரு நட்பு ஏற்படுகிறது. அவளைப் பற்றி தெரிந்து கொள்கிறான் அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான் அவள் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பெண் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்கள் அவளின் விபச்சாரம் நடவடிக்கை மற்றும் அவளின் தாய் எய்ட்ஸ் நோயால் இறந்து போனது போன்றவற்றால் அவளின் நடவடிக்கைகளை கண்டிக்கிறார்கள். மதுக் கடையில் வேலை செய்யும் அவனும் அந்த முஸ்லிம் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள் திருமண நாளன்று அவன் காத்திருக்கிறான் .முஸ்லிம் பெண் வரவில்லை அவளுடைய அறைக்கு சென்று பார்த்தபோது அதில்  இறந்து கிடக்கிறாள். எப்படி இறந்தாள் என்பது தெரியவில்லை .இது ஒரு கதை .இன்னொரு கதை .ஒரு சிறுவன் தன் பள்ளியில் உள்ள ஒரு சிறுமி மீது தீராத அன்பு வைத்திருக்கிறான்  நன்கு பாடக்கூடிய அவளுக்கு பாடுவதற்காக அவன் மரோசரித்திரா படத்தின் படப் பாடல் புத்தகத்தை வாங்கி தருகிறான். ஆசிரியையும் கூட ஆதரவு தருகிறார். அவள் நன்கு பயிற்சி செய்து பள்ளி விழா ஒன்றில் பாடுகிறார். ஆனால் அந்த சிறுமியின் தந்தை அதை கண்டித்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் .டெல்லிக்கு  அனுப்பி அவளை வேறு பள்ளிக்கு மாற்றி விடுகிறார். இந்த சிறுவன் அவளை தேடி திரும்ப திரும்ப அவளது வீட்டுக்கு செல்கிறான் .இறுதியில் அவள் வேறு ஊருக்கு சென்று விட்டது தெரிகிறது இந்த சிறுவனின் அப்பா ஒரு சிற்பி அல்லது கடவுளின் உருவங்களை செய்கிற வேலை செய்கிறவர் .அவர் தான் வேலை செய்து கொண்டிருக்கிற ஒரு இடத்தில் வருமானம் போதவில்லை அல்லது தன் முதலாளி நிறைய சம்பாதிக்கிறார் .தனக்கு சரியான ஊதியம் தருவது இல்லை என்பதற்காக எதிர்த்து கேட்கிறான். திக்குவாய் உள்ளவர். அவர் ஏதாவது உணர்ச்சிவசப்படுகிற போதும் பேசுகிறபோதும் தாளில் எழுதி தான் காண்பிப்பார் ம்முதலாளியிடம் முரண்பட்டு  அடிவாங்கி வெளியே வருகிறார் தன்னிடம் உள்ள நகைகளை எல்லாம், விற்று நிலத்தை அடமானம் வைத்து கொஞ்சம் காசு சேர்த்து தன் தொழிலை தானே செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ,அப்போது வருகிற விநாயகர் சதுர்த்தியின்போது ஒரு 30 அடி உயரமுள்ள ஒரு விநாயகர் சிலை செய்ய அவருக்கு வேலை தரப்படுகிறது..அந்த ஊர் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அதை செய்யச் சொல்கிறார்கள் அவை அவர் செய்ய ஆரம்பிக்கிறார். இந்த சிறுவன் அப்பா 30 அடி உயரமுள்ள சிலையை செய்ய ஆரம்பிக்கும்போது தொடக்கவிழாவில் வைத்து கும்பிடும் விநாயகர் படத்திற்கு அந்த சிறுமியிடம் வந்து வணக்கம் செய்கிறான் .கும்பிடுகிறான்.  அந்த சிறுமி உடனான நட்பை விநாயகர் வளர்க்க விநாயகர் உதவ வேண்டும் என்று வேண்டுகிறான். அந்த சிறுமி வெளியூருக்கு மாற்றப்பட்டதால் வந்து விநாயகரிடம் மீண்டும் மன்றாடுகிறான் .விநாயகர் இப்போது முப்பதடி சிலையாக நிற்கிறார் .வரும் திருவிழாவிற்கு அந்த ஊர் மக்களின் சார்பாக அவர்தான் கொலுவில் வைக்கப்பட்ட உள்ளார். அந்த விநாயகர் மேல் குற்றஞ்சாட்டுகிறான் சிறுவன். நான் உன்னை நம்பி இருந்தேன் என் நட்பை நீ மதிக்கவில்லை என்று இரவில்  கற்களால் அந்த விநாயகர் சிலையின் சில பகுதிகளை சேர்த்து விடுகிறான். அந்த கிராமத்துக்காரர்கள் வந்து அந்த சிலையை திருவிழாவிற்கு எடுத்துச் செல்ல எத்தனிக்கும் போது சிலை சேதம் அடைந்து இருப்பது தெரிகிறது.   சிலை சேதம் அடைந்திருப்பதை சீர்திருத்த முயற்சி செய்கிறார் .ஆனால் இயல்வதில்லை உள்ளூர்காரர்கள் கோபப்படுகிறார்கள் . கடைசியில் ஒரு இரவில் அந்த சிலைக்கு முன்னால் உள்ள ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார் .இது ஒரு கதை
இன்னொரு கதையில் வருகிற ஒரு பிராமணப் பெண் வழியில் அடித்துப் போடுகிற ஒருவனை தட்டிக் கேட்கிறார் .பிறகு தன் தோழி ஒருத்திக்கு நேர்கிற சிறுசிரமங்களுக்காக அந்த ஊரில் உடற்பயிற்சிசாலை  வைத்து நடத்தி வருபவரிடம்  சந்தித்து உதவி கேட்கிறாள். அவரும் உதவுகிறாள். அந்த தோழிக்கு சில மனிதர்கள்  அடித்து பயமுறுத்த அந்த உடற்பயிற்சி நிலையத்துக்காரர்  அனுப்பும் அந்த ஆள் முன்பு அந்தப் பெண்ணால் திட்டி அடிபட்டவர். பக்கத்தில் உள்ள வீடுகள் பக்கத்து உறவினர்களால் தன்னை பின் தொடர்வதற்காக அடிக்கப்பட்டவர். ஆனால் உடற்பயிற்சிகாரர் சமாதானம் செய்து வைத்து இப்போது அந்தப் பெண்ணுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு சொல்கிறார். அவரும் செய்கிறான் ஆனால் அதற்காக அய்நூறு  ரூபாய் கேட்கிறான். நாங்கள் பணம் எல்லாம் தர முடியாது ஒரு நாள் உனக்கு பார்ட்டி தருகிறோம் என்கிறார்கள்.  பார்டி என்கிறபோது குளிர்பானங்கள்கேக்  சாப்பிடலாம் என்கிறார்கள் . அப்படித்தான் அவனும் அவன் நண்பர்களும் இந்த இரண்டு பெண்களுடன் ஒரு நாள் சிற்றுண்டியை சாப்பிடுகிறார்கள் .அந்தப் பெண் பரதநாட்டியம் பயில்கிறவள் . தந்தை மட்டும் இருக்கிறார். அவள் சொல்கிறாள். எங்களின் பெற்றோருடைய உதவி இல்லாமல் நாங்கள் எங்கும் சென்றதில்லை இப்படி வந்து இருப்பது. அபூர்வம். கடற்கரைக்கு ஒருநாள் நாம் செல்லலாமா என்று கேட்கிறாள். அவர்கள் ஒத்து கொண்டு அந்த வாரம் கடற்கரைக்கு செல்கிறார்கள். பிராமணப் பெண்ணுக்கும்  கிறிஸ்துவ இளைஞனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்ள உடற்பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர்  உதவுவதாக சொல்லி அவனை இந்த அடிதடி வேலைகள் வேண்டாம் என்று ஒரு நண்பரிடம் வேலைக்கு அனுப்புகிறான். ஒரு முதல் மாத சம்பளம் வாங்கிய கனவில் அந்த கிறிஸ்துவ இளைஞன் இருக்கிறான். தனக்குக் கல்லூரித் தேர்வு இருப்பதால் ஒரு மாதம் சந்திக்க இயலாது என்று அந்தப் பெண் சொல்லி விட அவன் முதல் மாத சம்பளத்துடன் அவளைச் சந்திக்க திரும்புகிறான்.  கிறிஸ்துவ பையனுடன் நட்பு அவரின் அப்பாவுக்கு தெரிந்து அவர் தூக்குப் போட்டுக் கொள்ள முயல  அவர் சொல்கிற ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். இது ஒரு காதல்
 இந்த காதல் விவகாரம்  நான்கு தளங்களில் நடக்கிறது. ராஜுவிடம் முதலிரவில் ராதா  காதல் அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்கிறபோது அவன் சிறு வயதில் தான் அந்த சிறுமியை காதலிப்பதாக சொல்கிறான் .20 வயதில் முஸ்லீம் விபச்சார பெண்ணை காதலித்ததாக சொல்கிறான் அவள் எப்படி கொல்லப்பட்டார் என்பது தெரியவில்லை என்கிறான். பிறகு 30 வயதில் பிராமணப் பெண்ணை, நாட்டியக்காரியை- ஒரு கல்லூரி மாணவியை - காதலை சொல்கிறான். இந்த காதல்கள் எல்லாம் தோல்வியடைந்ததால் தனக்கு திருமணத்தில் அக்கறை இல்லை என்று சொல்கிறான். ஆனால் தான் ஆண்களுடன் பழகுவதால்  கே என்று முத்திரை குத்தப்படுவது அந்த சிறு கிராமப் பகுதியில் உள்ளவர்கள் பஞ்சாயத்தில் அவனை அப்படி குற்றம்சாட்டி, வெளியேற்ற விரும்புவது ஆகியவை அவனை அவள் மீது காதல் கொள்ள செய்ததை சொல்கிறான். இந்த படத்தில் வருகிற நான்கு கதைகளில்  காதலர்கள் வெவ்வேறு வகையாக இருந்தாலும் வெவ்வேறு நபர்கள் ஆக இருந்தாலும்  தன்னைத் தான் அதில் அடையாளம் கண்டு கொள்கிறான் அல்லது தான் தான் அவர்கள் என்று சொல்கிறான் .இது ஒரு புதிய குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கிறது. இந்த படத்தில் உள்ளூர் மக்கள்தான் படத்தின் கதாபாத்திரங்களாக  நடித்திருக்கிறார்கள். பல்வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் .அவர்களின்  வாழ்க்கை முறைகளைப் பற்றியும் நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. சுந்தரம் சுனிதா அந்த இரு பள்ளி வாழ்க்கை, காதல் மதுக்கடை ஆண் முஸ்லிம் பெண் நட்பு. அவள் எப்படி செத்துப் போனாள் என்பது அவனுக்குத் தெரிவதில்லை, பார்கவி மற்றும் ஜோசப் காதல் மதத்தால் தடைபடுகிறது ,மதம் தான் எங்கும் தடையாய் இருக்கிறது என்று அந்த பெண் சொல்கிறாள். இந்த கதையில் வருகிற இசைக்கோர்ப்பும் புரகதா பாடல்களும் சிறப்பம்சங்கள் ..சிறு ஊரின் இரு பகுதிகளையும் பிரித்து ஓடுகிற தொடர்வண்டியின் சப்தமும் சாதாரண மக்களின் இயல்பான வசனங்களும்  இயல்பானவை . இவை அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை ஒரு தீவிரமான கலைத்தன்மை உள்ள படைப்பாக உயர்த்தி இருக்கிறது இதன் இயக்குனர் மகா வெங்கடேஷ்.. மகா கலைஞன்