” நகரமயமாக்கல், உலகமயமாக்கலால்
சுற்றுச்சூழல் சீர்கேடும்,  சுற்றுச்சூழல்
பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன. இதை எழுத்தாளர்கள் எழுத்தில்
வெளிபடுத்தியும்  வாசகர்கள் அதையுணர்ந்து
இயறகையை மேம்படுத்தவும் சிந்தனைகளைக் கொள்ளவேண்டும்..இன்றைய மத , சாதியச் சூழலில்
மனித நேயத்துடனான படைப்புகளையும் செயல்களையும் மேற்கொள்ள வேண்டியது
அவசியம்.மானுடம் மேன்மையடைய கலை இலக்கியப்பயன்பாடுகள் இருக்கவேண்டும்  ” என்று சக்தி விருதுகள் 2018 பரிசளிப்பு விழாவில் சிறப்புரை:
ஆற்றிய தோழர் பொன்னீலன்( சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர் மற்றும்   இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க
தேசியத்தலைவர் ) அவர்கள் குறிப்பிட்டார் .
* திருப்பூர்  சக்தி விருது 2018 – வழங்கல்   நிகழ்வு -  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்..,  திருப்பூர் 
மாவட்டம் * 6/5/18. ஞாயிறு  அன்று (மில் தொழிலாளர் சங்கம்.), பி.கே.ஆர் இல்லம் பி.எஸ் சுந்தரம் வீதி, , ஊத்துக்குளி சாலை, திருப்பூரில்
நடைபெற்றது ., 
2 நூல்கள் வெளியீடப்பட்டன :நூல்களைப்
பொன்னீலன், இந்திய .கம்யு. மாவட்டச்செயலாளர் ரவி ஆகியோர் வெளியிட்டனர். 
     1.* சுப்ரபாரதிமணியன்- ” மணல் ” சிறுகதைத் தொகுப்பு 
2. பேரா. அறச்செல்வி தொகுத்த “ ஒற்றைக் கால் தவம் “ சிறுகதைத் தொகுப்பு 
:கீழ்க்கண்டோர் சக்தி விருது 2018- ,படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, சமூக
சேவை, ஓவியம், அயலக இலக்கியம் ஆகிய பிரிவுகளில் விருது பெற்ற்பின்    : பெண் படைப்புலகம் என்ற
தலைப்பில் உரையாற்றினர் 
லட்சுமி அம்மா –தஞ்சாவூர்.,
இன்பாசுப்ரமணியன் –சென்னை,
உமா மோகன் –பாண்டி,
பத்மபாரதி –பாண்டி,
இரா. ஆனந்தி , ரஜினி பெத்துராஜா-இராஜபாளையம், அமுதா பொற்கொடி –சென்னை,
: ஸ்ரீலதா-சென்னை , ,                       கேவி சைலஜா-
திருவண்ணாமலை,
மலர்விழி-பெங்களூரு, ராஜி ரகுநாதன்-  ஹைதராபாத், சோபா பிரேம் குமார் -குன்னூர்,மூகாம்பிகை-பொள்ளாச்சி, துடியலூர் வித்யா –கோவை,
வியாகுலமேரி,
ரமாராஜேஷ்-திருப்பூர்  ,
சாந்தகுமாரி சிவகடாட்சம் –சென்னை ,
அயலகம்: கவுசல்யா சுப்ரமணியன் –கனடா,
எம் எஸ்.லட்சுமி,  சீதாலட்சுமி ( சிங்கப்பூர் ), உ.சரசு, பாமா( மலேசியா ), லாவண்யா-அமெரிக்கா,
* ஸ்ரீலட்சுமி ( திரைப்பட
நட்சத்திரம் )         ராசி அழகப்பனின்
வண்ணத்துப்பூச்சி ( திரைக்கதை நூல் ) வெளியீட்டில் பங்கேற்று தன் நடிப்பு
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் . 
நடுவர்களாக இருந்து எழுத்தாளர்களை  தேர்வு
செய்த வழக்கறிஞர்கள் சி. இரவி, சுகன்யா, சுப்ரபாரதிமணீயன் ஆகியோர் தேர்வு அனுபங்களை
விளக்கினர். 
* நூல்கள் அறிமுகம் : கீழ்க்கண்ட   நூல்கள் பற்றி  முத்துபாரதி 
பேசினார்.
ஒரு பாமரனின் வாழ்க்கை-
ஆர்கேலட்சுமணன்( தமிழில் :புதுவை யுகபாரதி )
சதுர பிரபஞ்சம் –கோ.வசந்தகுமாரன்
கவிதை நூல்
தேதி குறிக்கப்பட்ட வனம்- வையவன்
கவிதை நூல்
பாரதியார் பன்முகங்கள்-கேஎஸ்
சுப்ரமணியன் கட்டுரைகள்                     
( தொகுப்பாக்கம் : லதா ராமகிருஷ்ணன் )
* இதழ்கள் அறிமுகம் : 
உயிரோசை, நிழல், பேசும் புதிய
சக்தி
மற்றும்...பாடல்கள், கவிதைகள் வாசிப்பு..கருத்துரைகள்...
வழங்கப்பட்டன. 
செய்தி : தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்...திருப்பூர் 2202488


 
