சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.                                               திருப்பூர்  மாவட்டம் 3/12/17
முதல் நாவல் அனுபவம் :
நாவலாசிரியர்  இரா.முருகவேள் உரையில்..

நாற்பது ஆண்டுகளில் தமிழகம்தான் எவ்வளவு மாறிவிட்டது? கோவலனும் கண்ணகியும் யாருமறியாமல் புகாரை விட்டு வெளியேறி காவிரியின் வடகரையின் வழியாக ஸ்ரீரங்கம் நோக்கி நடக்கின்றனர். எனவே நாங்களும்...

புகாரிலிருந்து திருக்கடையூர் வந்து மாதவியின் வீடு என்று சொல்லப்படும் ஷன்மதிக் குளத்தைப் பார்தோம். அதை நம்ப பெரிய கற்பனை வளம் தேவைப்படும்.  எத்தனை அவநம்பிக்கை இருந்தாலும் ஏகாந்தமான அந்தச் சூழலில் சற்றே இருண்ட வானிலையில் அந்தக் குளத்தைப் பார்த்த போது எங்கோ யாழிசை கேட்கத்தான் செய்தது.

காவிரியின் வடகரைப் பயணம் அற்புதமானதாக இருந்தது. உண்மையில் இப்படியொரு கண்கவரும் பசுமையை நாங்கள் கண்டதே இல்லை.  புகாரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை நெடுஞ்சாலையில் செல்லாமல் கிராமங்கள், சிறு நகரங்கள் வழியாகவே சென்றதால் தமிழ் சினிமா இயக்குநர்களால் மறக்கமுடியாத எண்பதுகளுக்குப் போய்விட்டது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆனால் புதுப் புனல் பொங்கி வரும் காவிரியைத்தான் காணவில்லை. திருச்சியை நெருங்க நெருங்க அந்த கண்கவரும் பசுமை குறைவதைக் கண்கூடாகக் காணமுடிந்தது. காவிரி பிரம்மாண்டமாக மாறி அருகிலேயே வரத் தொடங்கியது. அதில் ஓரளவு தண்ணீரும் இருந்தது ஆச்சரியமளித்தது. இந்த வழியில் தானே கோவலனும் கண்ணகியும் நடந்திருப்பார்கள்?

ஸ்ரீரங்கத்தின் தெருக்கள் அக்காலத் தமிழக நகரங்கள் எப்படியிருந்திருக்கும் என்பதற்கு அடையாளமாக மிஞ்சியிருந்தன. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு என்றுதான் தெரியவில்லை. ஸ்ரீரங்கம் பிரம்மாண்டமான கருங்கல் கோவில். சிலப்பதிகாரக் காலத்தில் கருங்கற்களால் கோவில் கட்டும் பழக்கம் இல்லை என்கிறார்கள். பின்பு பல்லவர் காலத்திலேயே அது பரவலாக்கப்பட்டதாம். எப்படியிருந்தாலும் ஸ்ரீரங்கம் இப்போதிருக்கும் வடிவத்தில் அப்போது இருந்திருக்காது. ஆனாலும் இந்த மண்தானே?

ஸ்ரீரங்கத்திலிருந்து மதுரை வரைக்குமான பயணம் முற்றிலும் வேறு விதமாயிருந்தது. கொடும்பாளுருக்கு முன்னிருக்கும் குன்றைக் கண்டோம். இதைத்தான் சிறுமலை என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. கொடும்பாளூருக்கும் நெடுங்குளத்துக்கும் இடைப்பட்ட கரையைச் சென்று சேர்ந்தால்  வழி மூன்றாகப் பிரியும் என்கிறார் இளங்கோவடிகள். அவர் சொல்லும் மூன்று வழிகள் வேறு. கொஞ்சம் கற்பனையும் சிம்பலிசமும் கலந்த வழிகள். முற்பிறவியை அறிந்து கொள்ள உதவும் வழி, காடுகள் வழியே செல்லும் வழி, நேர் வழி என்று மூன்று வழிகள். ஆனால் உண்மையாகவே மூன்று வழிகள் இருந்தன. நேராக மதுரைக்குச்
செல்லும் வழி, திண்டுக்கல் வழி, காரைக்குடி வழி. ஆனால் இளங்கோவடிகள் என்ன பயணிகளுக்கு வழிகாட்டிப் புத்தகமா எழுதி வைத்திருக்கிறார்

மாங்குளம் அருகே இருக்கும் சமணர் குகைகள் சிலப்பதிகாரத்தில்  இடம்பெறவில்லை என்றாலும் அதையும் பார்த்துச் செல்லலாமே என்று கிளம்பினோம். அக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து மதுரை
செல்லும் வழி சற்றே சுற்றி மாங்குளம் அழகர் மலை வழியாக மதுரையை அடைந்ததாம். உண்மையில் சிலப்பதிகாரத்தில் இந்த வழியாக அவர்கள் பயணம் செய்ததாக இல்லை.இருந்தாலும் ஒரு நாற்பது கிலோமீட்டர் சுற்றிச் செல்வதால் எந்தப் தவறும் இல்லை என்று முடிவு செய்து சென்றோம். பக்கத்தில் மதுரை என்று ஒரு பெருநகர் இருக்கும் அடையாளமே இல்லாமல் அவ்வளவு பழமையானதாக  வெறுமையானதாக எங்கோ எட்டாத இடத்தில் இருப்பது போன்ற தோற்றத்துடன் இருந்தது மாங்குளம். மீனாட்சி புரம் கிராமத்திலிருந்து ஒரு கிமீ  மலைமீது ஏறினால் குகையைப் பார்க்கலாம். ஒரு வித்தியாசமான அனுபவமாக குகையில் தங்கலாம் என்று முடிவு செய்தோம்.  குகையின் முற்றத்தில் அமர்ந்து     இரவு கவிவதையும் பறவைகள் வீடு திரும்புவதையும் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு அற்புதமான அனுபவம்.

தண்ணீரே இல்லாவிட்டாலும் வைகையையும் அதற்கு அப்பால் தெரிந்த மதுரையின் கட்டடங்களையும் பார்த்தவுடன் சிலப்பதிகார காலத்துக்கு அருகில் வந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. இந்த இடத்தில்தான் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் ஓடத்தில் வைகையைக் கடந்திருக்க வேண்டும்.

ஒரு சோகம் நிறைந்த காவியமான சிலப்பதிகாரத்தின் உக்கிரமான உச்சகட்டம் இங்கேதான் நிகழ்கிறது. ஒவ்வொரு முறை அக்கதை கேட்கும் போதும் மதுரை என்றால் ஒரு சங்கடமான உணர்வு வரும். இந்த இரைச்சலில் அந்த உணர்வு திரும்பவும் தோன்றுகிறதா என்று உள்நோக்கிப் பார்க்க முயன்றேன். மதுரை பழக்கமானதுதான். ஆனால் நாங்கள் தேடி வந்த மதுரை வேறு. எந்த இடமாக இருந்தாலும் இந்த நான்குகிலோமீட்டர் சதுரத்துக்குள்தானே நடந்திருக்க வேண்டும்?
இங்கிருந்து கண்ணகி சென்ற வழி குறித்து இரண்டு முக்கியமான கருத்துக்கள் இருக்கின்றன. ஒன்று கண்ணகி குமுளி அருகே இருக்கும் வண்ணாத்திப் பாறைக்கு அருகே சென்று கோவலனோடு சேர்ந்தாள் என்பது. இதுதான் கண்ணகி கோவில் இருக்கும் இடமும். இன்னொன்று நெடுவேள் குன்றம் என்பது திருச்செங்- கோடுதான். அங்கேதான் ஒரு மார்பகம் இல்லாத சிலை ஒன்று இருக்கிறது என்பது.
பேராசிரியர் சாந்தலிங்கன் திருச்செங்கோட்டில் இருப்பது அர்த்தநாரிஸ்வரர் சிலை. கண்ணகி அல்ல என்று சொல்லியிருந்தார். ஏராளமான தமிழறிஞர்களும் இந்த முடிவுக்குத்தான் வந்திருந்தனர்.  எனவே சிலப்பதிகாரம் சொல்லும் இடம் குமுளிக்கு அருகில் இருக்கும் இடமாகத்தானிருக்க வேண்டும் அங்கேயே போவது என முடிவு செய்தோம்.

இரா.முருகவேள் உரையில்..

வன உரிமைச் சட்டம்