சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

புதன், 19 ஜூலை, 2017

காவிக் கூட்டம் இன்னும் பயங்கரமானதாக மாறும்
கமல்ஹாசன் எச்சரிக்கை

கமல்ஹாசனை சந்தித்த வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ். மாநிலச் செயலாளர் எஸ்.பாலா.


சங் பரிவாரத்தின் நடவடிக்கைகள் இன்னும் பயங்கரமாகவும், தீவிரவாத தன்மையுடையதாகவும் மாறும் என்றும், அதை எதிர்த்த போராட்டங்கள் கட்டாயம் வெற்றி பெறும் என்றும் திரைக்கலைஞர் கமல் ஹசன் கூறியுள்ளார்.பிக் பாஸ்நிகழ்ச்சியால்கலாச்சார சீர்கேடு நடப்பதாகவும், அந்நிகழ்ச்சியைத் தடை செய்துவிட்டு அதைத் தொகுத்து வழங்கும் திரைக் கலைஞர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி இந்து மக்கள் கட்சி பரபரப்பைத் தூண்டியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக கமல் பேட்டியும் கொடுத்துவிட்டார்.அனைத்து ஊடகங்களிலும் இந்த பிக் பாஸ் கமல்தொடர்பாகவே செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆனால், இப்போதைய இந்தியாவின் பிக் பாஸ் ஆக இருக்கும் பிரதமர் மோடியைப் பற்றியும், அவரது ஆட்சியைப் பற்றியும் தன்னைச் சந்தித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் களிடம் கமல்ஹாசன் கூறிய கருத்துகளைத் தமிழில் மின்னம் பலம் இணைய ஏடு தவிர எந்த ஊடகமும் சிறிதாகக் கூட வெளியிடவில்லை.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தேசிய அளவில் மதவெறிக்கு எதிரான பிரச்சாரம் ஜூலை 5 முதல் 12 வரை நடைபெற்றது.இதன் முடிவில் தேசிய மனிதஉரிமை ஆணையத்தைச் சந்தித்துமோடி அரசின் கீழ் இந்தியாவில் சிறுபான்மையினர், ஒடுக்கப் பட்டோருக்கு எதிராக நடக்கும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமாறு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுக்க இருக்கிறார்கள்.இந்த முயற்சிக்கு ஆதரவு கேட்டு ஒருபக்கம் மக்களைச் சந்தித்த ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இன்னொருபக்கம் திரைக் கலைஞர்கள் கமல்ஹாசன், ரோகிணி உள்ளிட்ட ஆளுமைகளையும் சந்தித்தனர்.கடந்த ஜூலை 10ஆம் தேதி கமல்ஹாசனை சென்னையில் அவரது இல்லத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் முகமது ரியாஸ் சந்தித்தார்.

அப்போது, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் கொடுக்க இருக்கும் மனுவைக் கமலிடம் கொடுத்து முறைப்படி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அதை கமலும் ஏற்றுக் கொண்டார்.இந்தச் சந்திப்பில் முகமது ரியாஸோடு, ஜனநாயக வாலிபர்சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, டி.கதிர், பத்திரிகையாளர் ஜாபர் ஆகியோர் உடன் இருந்தனர்.இந்தச் சந்திப்பின் போதுகமல்ஹாசன் மோடி ஆட்சிதொடர்பாக தனது கருத்துக்களையும், மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றிய கருத்துகளையும் முன்வைத்தார்.கமல்ஹாசனைச் சந்தித்தபோது பல விஷயங்களை மனம் விட்டுப் பேசினார். மோடியின் இஸ்ரேல் பயணம் பற்றி பேச்சு தொடங்கியது. பாலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் கொடிய தாக்குதல்கள் குறித்து இஸ்ரேலுக்கு மூன்று நாள்கள் பயணம் மேற் கொண்ட பிரதமர் மோடி ஒருவார்த்தைகூட பேசாதது துரதிர்ஷ்டவசமானது. இந்தியாபாலஸ்தீனத்தை கைவிட்டுவிட் டது.

குஜராத்தின் பிஞ்சுக் குழந்தைகளைப் போலத்தான் பாலஸ்தீனத்தின் பிஞ்சுக் குழந்தைகளும் என்பதை மோடியும் அவரது கூட்டாளிகளும் மறந்துவிடக் கூடாதுஎன்று கவலையோடு கூறினார் கமல்.மேலும், ‘தேசத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் சங் பரிவாரங்களின் போக்கு பலப்பட்டுள் ளது. இதற்காக 100 வருடங்கள் அவர்கள் முயற்சித்து வந்ததுதான் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பலன். மோடியின் ஆட்சியில் இப்போதுள்ளதைவிட மிகப்பெரிய ஆபத்தை இனி எதிர்பார்க்கலாம். சங் பரிவாரங்களின் நடவடிக்கை இனிஇன்னும் தீவிரமாகவும் பயங்கரமாகவும் இருக்கும்.ஏகாதிபத்தியத்தை நோக்கிச் செல்லும் ஆட்சியாளர்கள் எப்படி அழிந்து போனார்கள் என்பதை சரித்திரம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது. அதனால் நாட்டின் இந்தப் போக்கில் மாற்றம் வராது என்றுகருத வேண்டியதில்லை. போராட்டங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். இந்தப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இளைஞர்களே.

இந்தத் தீமைக்கு எதிரான போராட்டத்தில் உயிரே போனாலும் பரவாயில்லை என்று உறுதியோடு போராடுகிற அமைப்புகள் வர வர இந்தப் போராட்டம் வெற்றி பெறத்தான் செய்யும். இதற்கான வழிகாட்டும் அமைப்பாக வரலாற்றில் இந்தியாவேஎதிர்பார்க்கும் அமைப்பாக ஜனநாயக வாலிபர் சங்கம் இருக்கிறது. பெரும்பான்மையாக உள்ள சாதாரண மக்களுக்காக ஆட்சி அதிகாரத்தை எப்படி மாற்றிக் காட்ட முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டிய தலைவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்தான் என்பதை மறந்துவிட வேண் டாம் என்று ஊக்கம் தந்தார் கமல் ஹாசன்’’ என்றார் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் முகமதுரியாஸ்.