சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வியாழன், 24 செப்டம்பர், 2015

மேக வெடிப்பு
சுப்ரபாரதிமணியன்
---------------------

     340 மி.மீ மழைக்கு உத்தரகாண்ட் தாங்கவில்லை. 40க்கே தமிழ்நாடு தாங்கவில்லை.கடந்த மே மாதம் (2014) பெய்த மழை சில உயிர்களை பலிவாங்கியது. வேலூரில் கூட ஒரு சிறுமி மழையால் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனாள். மேகம் வெடித்து கொட்டியது போல் நான்கு நாட்கள் மழை பெய்து ஓய்ந்தது. சென்றாண்டு ஜீன் 14ல் உத்தரகாண்ட்டில் நிகழ்ந்த கொடுமையான மேகவெடிப்பு பல உயிர்களை பலி வாங்கியது. ஓராண்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகமே.
            ஒரு நாளில் 340 மி.மீ மழை கொட்டி எல்லாவற்றையும் சீர் குலைத்து விட்டது. 340 எண்ணுக்குள் அப்படியொரு அபாய எச்சரிக்கை . மேக வெடிப்பு என்று வானம் மக்கள் மேல் தகர்ந்து விழுந்து விட்டதைப் போன்று மழை கொட்டித் தீர்த்து கொண்டது. இயற்கை சார்ந்த பேரழிவு என்று சொல்லிக் கொண்டாலும் மனிதனின் தொடர்ந்த பேரழிவு நடவடிக்கைகளால் வந்த விதைதான் அந்த 340.
தேவர்களின் பூமி, பூலோக சொர்க்கம்  என்று சுற்றுலாவாசிகளாலும், பக்தர்களாலும் வர்ணித்து பூசிக்கப்பட்டது உத்தரகாண்ட் பிரதேசம். வடக்கில் திபெத், கிழக்கில் நேபாளம். அதன் எல்லைகள். மலை ஏறுதல், சிகரம் ஏறுதல், படகு சவாரிகள், இயற்கை எழில் என்று சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பிரதேசம். நிறைய ஏரிகளைக் கொண்ட நைனிடாலும், மலைகளின் ராணியான மசூரியும் இங்குள்ளது. ஜீன் 14ல் தங்கு பெய்த பெருமழை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
மனிதப் பிணங்களும், கால்நடைகள் பிணங்களாயும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. சிவபெருமானின் சிலை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டேயிருந்து விட்டு மெல்ல அடித்துச் செல்லப்பட்டது. நெடியக் கட்டிடங்கள் உருக்குலைந்து சிவபெருமானுடன் அடித்துச் செல்லப்பட்டன. எங்கும் வெள்ளம். தொடர்ந்த நிலச்சரிவுகள் . டேராடூன் வானிலை மையம் தந்த எச்சரிக்கையை பற்றி யாரும் பெரிதாய் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. கேதார்நாத், பத்ரிநாத்தில் மேகவெடிப்பு நிகழப் போகிற அபாயமும், வானிலை அறிக்கைகளும் யாத்ரிகர்களையும், சுற்றுலாவாசிகளையும் உத்ரகாண்ட் பொது மக்களையும் அவ்வளவாக பாதிக்கவில்லை. இன்னொரு பெருமழை என்றே நினைத்திருந்தனர். ஆனால் நிகழ்ந்த பெருமழையின் பாதிப்பு பல லட்சக்கணக்கான மக்களின் வீடுகளைக் காணாமல் போயும், தங்களின் சுவடு தெரியாமல் இறப்பு மூலம் காணாமல் ஆக்கி விட்டது. நதிக்கரை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் கட்டிடங்கள் மக்களின் மனதைப் போல் நொறுங்கின இடிபாட்டுக் கட்டிடங்களை ஒரு சேர குவித்து வைத்திருப்பது போன்ற உத்தரகாண்ட் பகுதி கட்டிட அமைப்புகள் சுலபமாக சரிந்து விழுந்து மறைந்து போயின. தொடர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்கள், தொடர்ந்த பயணங்களால் நில அதிர்வு, பிடிப்பு இல்லாமல் போன மண்ணின் தன்மை, தொடர்ந்த இயற்கை சார்ந்த நிராகரிப்புகள் பல லட்சக் கணக்கான மக்களை நிலைகுலைய வைத்து விட்டது. உயிரிந்தோர் ஆயிரம். காணாமல் போனோர் பல ஆயிரம். உயிர் வாதையிலிருந்து மீட்கப்பட்டோர் பல லட்சம் பேர். “சாம் தாம்கள்என்றழைக்கப்டும். நான்கு புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத, கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பிணக்காடாக மாறின. பல மடங்களும், ஆசிரமங்களும் நீரில் மூழ்கின. ரிஷிகளும் தாங்கள் கைவிடப் பட்டதை எண்ணிக் கதறினர். ரிஷிகேஷ் வழியாகப் பாயும் கங்கை நதியின் கரையோரப் பகுதியும் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பவில்லை.
2004ல் வந்த சுனாமி தேசத்தையே உலுக்கியது. இதற்குஇமாலய சுனாமிஎன்று பெயர் சூட்டிக் கொண்டார்கள். இயற்கை விபரீதம் எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கியது இமயமலையின் ஆன்மீக சாரத்தையும் உலுக்கிவிட்டது. உத்தரகாண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக காடழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவும் நில அபகரிப்பும் தொட்ர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்த யாத்திரிகர்களின் வருகையும் போக்குவரத்தும் இமாலயத் தவறுகளாய் படிக்கட்டமைத்து இமாலய சுனாமியை உருவாக்கிவிட்டது. யாத்திரை பருவம்  எனப்படும் யாத்ரீகள் அதிகம் காணப்படும் காலத்தில் நடந்ததால் மட்டுமே இது பேரழிவாகத் தெரிகிறது.  மற்றபடி அவ்வப்போது பெய்யும் பேய் மழைதான் ஜீனிலும் அங்கு பெய்தது. மலைப் பகுதிகளின் காடுகள் மழை நீரை கணிசமாக தம்மிடம் இருத்திக் கொள்கின்றன. வெள்ளம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன. மரங்களும், தாவரங்களும் இல்லாத வெறும் மண் நிரம்பிய மலைச்சரிவு மழைக்கு சிரமப்படும். மண்ணைக் கரைத்து நிர்மூலமாக்கும். அதே வகையான மலைச் சரிவுகளின் காடுகள் ஒரு வகையில் மழைக்கு பாதுகாப்பையும் தருவதாகும். மரங்களின் மீது மழை துளி விழும் போது  மழையின் வேகம் குறையும். மரங்களின் கீழே விழுந்து கிடக்கும் குப்பைகள் தண்ணீர் வேகமாக ஓடாமல் சற்றே வேகத்தைக் குறைக்கிறது. மழை நீரும் மெல்ல மெல்ல மண்ணுக்குள் இறங்குகிறதுமரங்களின் வேர்களும் நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்படாமல் அவை காக்கும். எனவே மரங்கள் பெரு மழையின் போக்கையும் மாற்றக் கூடியதுதான். மண் அரிப்பும் பெருமழையுடன் சேர்ந்து கட்டிடங்கள் நிலை குலைய வைத்துவிட்டது. 9000 கி.மீ உயரம் கொண்ட மிகப் பெரிய மலையான இமயமலை மேக வெடிப்பால் அதிர்ந்து விட்டது.
 இமயமலை உருகி வருவது இன்னும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.  பூமிவெப்பமடைதலில்  துருவங்களில் உள்ள பனிப்படிவங்க்ள் உருகுகின்றன.கடல் நீர்மட்டம் உயர்கிறது.  கடல் அரிப்புகளும், கடல் நீர் ஊருக்குள் புகுவது நிகழ்கிறது.  தமிழ்நாட்டில் வடசென்னையைச் சார்ந்த பல மீனவர் குப்பங்கள் கடல் அரிப்பால் சேதம்டைந்து காணாமல் போய் விட்டது. பல கடல் மத்தியிலான திட்டுகளும் காணாமல் போய் விட்டன.  மேற்கு வங்கத்தில் பல தீவுகள் காணாமல் போய் விட்டன.. கடற்கரையோர நக்ரங்களும், கிராமங்களும் , புராதனச் சின்னங்களும் இவ்வகை கடல் மட்ட உயர்வால் அழிந்து போகாமல் இருக்க  அய்.நா. சபை இவ்வாண்டினை( 2014) “ சிறு தீவுகளும் கால மாற்றங்களும் “ என்றத் தலைப்பில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்கிறது. குரல் உயர்த்துங்கள்- கடல் மட்டத்தை உயர்த்தாதீர்கள் “ என்ற குரல் தீவிரமாய் முன் வைக்க வேண்டிய காலம் இது.
உத்தராயண் காலத்தில் உச்சமான ஒரு நாளில் சூரியன் இமயமலையின் தலை உச்சியில் சஞ்சரித்துகோடை சந்தியை உலகுக்குக் காட்டி வியப்பளித்தது. தொடர்ந்து வந்த நாட்களின் மேக வெடிப்பு மழை இயற்கையை நாம் நிராகரித்து வருவதன் எச்சரிக்கையைகோடை வெடிப்பாக்கிஅதிரவைத்து விட்டது.