சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 1 அக்டோபர், 2014


ஹயான் சூறாவளி - சுப்ரபாரதிமணியன்

7000 தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் நாட்டை 2013 நவம்பரில் ஒரு சூறாவளிப் புயல் நிலை குலைய வைத்தது. அதன் பெயர் ஹயான்.
சூறாவளி என்பது பூமியைப் போல் ஒரே திசையில் சுழன்றடிக்கும் அடர்த்தியானதும், உருண்டையானதும் நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று சொல்லலாம். பெரிய அளவில் உண்டாகும் சூறாவளிகள் பெரும்பாலும் குறைந்த காற்றழுத்த மண்டலப் பகுதிகளில் உண்டாகின்றன. என்கிறார்கள். புவிக்கு வெளியே செவ்வாய் கிரகம், நெப்டியூவின் போன்ற வேறு கோள்களிலும் சூறாவளிகள் உண்டாகின்றன.  சூறாவளிகள் அலைகள் போல் உருவாவதுண்டு. இரண்டு முதல் ஆறு நாட்கள் வரையான அற்ப ஆயுள் காலத்தை கொண்ட இந்தச் சூறாவளிகள் மனிதனின் ஆயுளையும் அற்பமாகச் செய்யும் ஆற்றல் கொண்டது.

இந்தச் சூறாவளிகளை துருவமண்டலங்கள் அல்லது வெப்ப மண்டலத்துக்கு வெளியே உள்ள மண்டலத்தில் இருக்கும் விரைவான காற்றோடைகள் வழி நடத்திச் செல்லும் இயல்புடையவை. உள்ளிருக்கும் வெப்பம் காரணமாகவும் மழையுடன் வெப்ப மண்டலச் சூறாவளிகள் வெப்பத்தன்மை கொண்டவை. இந்த சூறாவளிகளுக்கு பொதுவான் உருவமைப்பு பண்புகள் இருக்கும் குறைந்த காற்றழுத்தம் பரப்புகளாக உள்ளதால் ஏதாவது ஒரு பகுதியின் காற்று மண்டலத்தில் மிகக் குறைவான காற்றழுத்தம் இருக்கும் இடத்தில் இவை மையம் கொள்ளும் காற்றின் வேகம் அதிகமாகும்போது உயரத்தின் திசை மாறும்போதும் மீசோ சூறாவளிகள் உருவாகின்றன. குழாய் போன்ற உருண்ட வடிவில் சுழலும் இடியுடன் கூடிய புயலின் சலன படிவம் சுழல் காற்றை தன்னிடம் இழுத்து உருண்டையான மாதிரியை மேலெழச் செய்கிற தன்மை கொண்டதாகும். செங்குத்தாகச் சுழலும் மீசோ சூறாவளிகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் அளவுகோளிலும், நூற்றுக்கணக்கான மீட்ட்ருக்கும் மத்தியில் அமையும். பொதுவாக ஆறு வகைகச் சூறாவளிகள் உள்ளன. துருவ மண்டல சூறாவளிகள் (போலா சைக்கோன்). துருவப் பகுதிகளை நோக்கிய சூறாவளிகள் (போலார் லோ) வெப்பமண்டலச் சூறாவளிகள் (எஸ்க்ட்ரா ட்ராபிகல் சைக்லோன்), சப்டிராபிக்கல் சைக்லோன் மற்றும் மீசா சைக்லோன் அவை.
சூறாவளிகளை மந்திரவாதியின் கண் என்று அழைப்பர். இது பெரிய கரும்புள்ளியில் மூன்றில் ஒரு பங்கு அளவு கொண்டது. இது கண் போல் இருப்பதால் மந்திரவாதியின் கண் எனப்பட்டது. இந்த  மந்திரவாதியின் கண்ணில் ஒரு வெள்ளை மேகமும் இருக்கிறது.

இந்தியாவை பல புயல்கள் தாக்கியிருக்கின்றன. தனுஷ்கோடி புயல் 1964ல் தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்குப் பகுதியையும் தாக்கியது. தனுஷ்கோடி நகரம் முழுவதும் புயலால அழிந்து போனது. 2011ல் வங்கக் கடலில் தென்கிழக்கு திசையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மெல்ல மெல்ல வலுவடைந்து “தானே” புயலாக மாறியது. புதுச்சேரிக்கும் கடலூருக்கும் இடையே டிசம்பரில் கரையைக் கடந்து பெருத்த உயிர்ச் சேதங்களை உண்டாக்கியது. 2008ல் சால்புயல் வட இந்தியப் பெருங்கடற் புயல்காலத்தின் போது ஏற்பட்டதாகும். இலங்கையிலும் இந்தியாவிலும் பலத்த சேதங்களை உண்டு பண்ணியது. லம்புயல் அல்லது நீலம் புயல் 2012ல் வங்கக் கடலில் உருவான தீவிரப் புயலாகும். இதற்குப் பின்னால் மையம் கொண்ட அந்தமான் கடலிலிருந்து தோன்றி ஆந்திரா, ஒரிசா பகுதிகளை கடந்து சேதம் உண்டாக்கியது.

2013 நவம்பர் முதல் வாரத்தில் பிலிப்பைன்ஸில் அதிக சேதம் விளைவித்த ஹயான் சூறாவளி ஏற்படுத்திய சோகம் அளவிட இயலாததாகிவிடும். போலந்தில் நடந்த காலநிலை குறித்த ஒரு மாநாட்டில் ஹயான் புயலைக் குறிப்பிட்டுப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசு பிரதிநிதி மேடையிலேயே அக்காட்சியை மனதில் கொண்டு வந்து கதறி அழுததும் மாநாட்டில் பங்கு பெற்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அவர் புவி வெப்பமடைவதுதான் இந்த இயற்கைச் சீற்றங்களுக்கு காரணம் என்று கூறி இப்படியே காலத்தைக் கடத்துவது பைத்யக்காரத்தனம் என்றும் சொன்னார். இந்த வகை கால நிலை பைத்தியக்காரத்தனத்தை உடனே நிறுத்த அழுகையுடன் கெஞ்சினார். அதுவே பின்னர் நடைபெற்ற வார்சா மாநாட்டின் முக்கிய முழக்கமாகவும் மாறி உலக நாடுகளை புவி வெப்பமடைதலுக்கு எதிராக பல யோசனைகளைத் தந்தது.
ஹயான் சூறாவளி 32 கி.மீ வேகத்தில் பிலிப்பைன்ஸைத் தாக்கியது. பல ஊர்கள் அழிந்து பிணக்காடாகின. ஆண்டுதோறும் 25 புயல்கலை எதிர்கொள்ளும் பிலிப்பைன்ஸ் மக்கள் ஹயான் புயலையும் அது போன்றதே என்று கருதினர். அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை ஏறத்தாழ 12 மணி நேரம் கோரத் தாண்டவமாடி பிலிப்பைன்ஸ் நகரங்களை சிதைத்தது. 20 அடிக்கும் மேலான உயரத்தில் எழுந்த அலை கடலோர கிராமங்களை சிதைந்தன. அரைக் கோடிப் பேர் வீடிழந்து முகாம்களில் தங்கினர்.அவ்வளவு சேதத்தையும் பிலிப்பைன்ஸில் செய்துவிட்டு அது வியட்நாமை தாக்கியது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக வியட்நாமில் சேதம் ஓரளவே குறைந்தது. அடுத்து அது சீனாவைத் தாக்கியது. சீனா சுதாகரித்துக் கொண்டு தப்பித்தது. பிலிப்பைன்ஸின் அழிவு பல காலத்திற்கு மீட்பு பணிகளுக்காக காத்திருக்கச் செய்துவிட்டுப் போய்விட்டது. அதைத் தொடர்ந்து உலக நாடுகளும் பல சோதனைகளைச் சந்தித்தன.

பருவநிலை மாறுதல்களால் ஏற்படும் சூறாவளிகள் பயமுறுத்திக் கொண்டேயிருக்கின்றன.பருவநிலை மாறுதல்களே ஒரு பெரும் சூறாவளிதான். பெட்ரோலியப் பொருட்கள் மீதான அதிகாரம், சுற்றுச்சுழலையும், உயிரினப் பல்வகைமையையும் அழிப்போரின் சூறாவளிகளும் அபாயகரமானவை  .
அமெரிக்கா 1918ம் ஆண்டிற்குப் பிற்கான அதிக குளிரைக் கண்டது. 1895ம் ஆண்டுக்கு பின்னான மிகப் பயங்கரமான பனிப்புயலை அது எதிர் கொண்டது. இங்கிலாந்தில் 1988ம் ஆண்டிற்குப் பின்னான குறைந்த வெட்பம் உள்ள டிசம்பராக இருந்தது. 1900 ஆண்டுக்கு பின் அதிக அளவிலான குளிரை நார்வே எதிர்கொண்டது. ரஷ்யாவில் 1900ம் ஆண்டுக்கு பின்னான அதிக வெப்ப நிலையை சந்தித்தது. இஸ்ரேலில் டிசம்பர் மாதத்தின் 50 செண்டிமீட்ட்ர் அளவிலான அடர்த்தியான பனிப்பொழிவில் இஸ்ரேலும் நடுங்கியது. குவின்ஸ்லாந்தில் மழை சுத்தமாக இல்லாமற் போய் மிகுந்த வறட்சியும், வெப்பமும் என்றானது. பிரேசிலின் தென் கிழக்கு கனமழையால் வெள்ளம், நிலச்சரிவை சந்தித்தது. அர்ஜண்டினா கடும் வெப்பத்திலும்  வெப்ப அலையாலும் தகித்தது. ஆர்டிக் கடல் உறைந்து போயிருந்த நிலையில் மறு துருவமான அண்டார்க்டிக்கில் பனிக்கட்டிகள் வெப்பத்தில் உருகி வெள்ளம் பெருக் கெடுத்தது. உலகம் முழுக்க பருவ நிலை மாறுதல்களால் ஏற்பட்ட இந்த மாற்றங்களைப் போல் பிலிப்பைன்ஸில் ஹயான் சூறாவளி 315 கி.மீ வேகத்தில் புரட்டிப் போட்டு பிலிப்பைன்ஸின் பொருளாதாரத்தையே சிதைத்தது. பிலிப்”பைன்”ஸ்   பிலிப் ‘பேடு’ஸ் என்றாகிவிட்டது. உலகத்தை உலுக்கிவிட்டது அது.

- 4தமிழ்மீடியாவிற்காக: சுப்ரபாரதிமணியன்