” கனவு “ ஆண்டுதோறும் பள்ளி மாணவமாணவியருக்கான ” கதை சொல்லி...” போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டு இப்போட்டிக்கு தமிழகம் முழுக்க இருந்து 430 கதைகள் வந்திருந்தன. அதில் 25 கதைகள் பரிசுக்குறியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ5,000 பரிசு பகிர்ந்தளிக்க்கப்பட்டது. அதில் 110 கதைகள் பெருமாநல்லூர் பாலசமுத்திரம் விக்னேஸ்வரா பள்ளிமாணவர்கள் எழுதியிருந்தனர். அதில் 7 கதைகள் பரிசிற்குறியதாக தேர்வு பெற்று பரிசளிப்பு விழா விக்னேஸ்வரா பள்ளியில் வெள்ளியன்று நடைபெற்றது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசையும், சான்றிதழ்களையும், புத்தகங்களையும் பரிசளித்துப் பேசுகையில் , “ கதை சொல்லும் மரபு பாட்டிகள், பெரியவர்கள், புத்தகங்கள் என்றிருந்தது. இப்போது அதை தொலைக்காட்சி வரிசைகள் எடுத்துக்கொண்டுவிட்டன. கதை சொல்வதிலிருந்து மாறுபட்டு எழுதிப்பார்க்கும் முயற்சியும் முக்கியமானது. அது குழந்தைகளிடம் எழுத்துப்பயிற்சியையும், கற்பனையையும் வளர்க்கிறது. பாடத்திட்டங்களிலும் தனி கவனமும், தீவிரமும் பெறற் இந்த கதை எழுதும் பயிற்சி ஒரு வகையில் பயன்படும் “ என்றார், விழாவுக்கு பள்ளி தாளாளர் முருகசாமி தலைமை தாங்கினார். கவிஞர் சுந்தரக்கண்ணன் முன்னிலை வகித்தார். கதைகளை கவிஞர் சுபமுகி, வழக்கறிஞர் சி.ரவி, பொறியாளர் பழ.விசுவநாதன், கவிஞர் மதுராந்தகன் ஆகியோர் பரிசிலித்து தேர்வு செய்திருநதனர்.
செய்தி: சுந்தரக்கண்ணன்
-

