திருப்பூரில் இருப்பது போன்று தனியான பனியன் தொழிற்சாலைக் கட்டிடங்களோ, தனிப்பகுதிகளோ இல்லாமல் டாக்காவின் பிரதான வீதிகளில் பலமாடிக் கட்டிடங்களில் சிலவற்றை பனியன் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்திருப்பது நகராட்சி பலமாடிக் கட்டிடங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்சின் சில மாடிகளை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருப்பது போன்றதாகவே பனியன் தொழிற்சாலைகள் டாக்கா நகரில் தென்படுகின்றன. அவ்வப்போது உயரமான பனியன் தொழிற்சாலை செங்கல் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பனியன் தொழிலார்கள் காயமடைவதும் மரணமடைவதும் குறித்து அலோசியஸ் புள்ளி விபரங்கள் தந்தார். அதிர்ச்சிகரமான நிலநடுக்க அதிர்வாகத்தான் அது இருந்தது.

1858 முதல் 1930 வரை ஐந்து மிக முக்கியமான நிலநடுக்கங்களால் பங்களாதேஷ் நிலைகுலைந்திருக்கிறது. 1762இ 1934ல் மிகப்பிரம்மாண்டமான நிலநடுக்கங்கள் 8.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. அப்போதெல்லாம் இந்தியாவிலும் பாதிப்புகள் அதிகம்தான்.
250 - 300 வருடங்களுக்கு ஒருமுறை நிலநடுக்கம் ஏற்படும் என்று ஜப்பானிய நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலர் 100 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்கின்றனர்.
வெள்ளம், புயல் காரணமாய் டாக்கா ஆண்டுகள் தோறும் பாதிக்கப்படுவதுண்டு, இதில் நிலநடுக்கம் தரும் அதிர்வும் அபாயகரமானதாக இருக்கிறது.
இந்தியாவில் 2001ல் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமான 2 லட்சம் பேர் இறந்தனர். சுனாமி 2004ல் 3 லட்சம் மக்களை பலி கொண்டது. காஷ்மீரில் 2005ல் நிகழ்ந்த நிலநடுக்கம் 80000 பேரை சாகடித்தது.

2010 செப்டம்பர் 10ல் நிகழ்ந்த நிலநடுக்கம் கூட டாக்காவை பெரிதும் பாதித்திருக்கிறது. நொடிகளில் தெருக்களின் பல கட்டிடங்கள் சாய்ந்து விட்டன. வீதியெங்கும் ஓலம். மக்கள் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருந்து நெரிசலால் சாவுகள். முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. தீப்பிடித்து சில கட்டிடங்கள் எரிந்து கொண்டிருந்தன. வாகனங்கள் நகராமல் நின்று விட்டன. சிதைந் கருகிய இடல்கள் ஆங்காங்கே தென்பட்டன. குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஓடினர் பெண்கள். வீதிகள் சிதிலமடைந்து தாறுமாறாய் இருந்தன. நகரம் சிதைந்தது என்கிறார் சேரில் கண்ட ஒருவர்.
கடந்த பத்தாண்டுகளில் நிலநடுக்கம் இந்தோனேஷிய நிலப்பரப்பு பகுதியை ஒட்டி நிறைய நிகழ்ந்துள்ளன. அது வங்கதேசத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை என்பதன் பாதிப்பு அது. 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹிமாலயன் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கங்கள் வங்க தேசத்தைப் பாதித்திருக்கிறது. 1897ல் நிகழ்ந்த ஷில்லாங் நிலநடுக்கம் கிழக்கு வங்காளத்தை மிகவும் பாதித்தது. பிரம்மபுத்ரா நதியின் போக்கு திசை மாறியது. யாமுனா நதி புதுப்போக்கில் அமைந்தது.
சிட்டகாங், டாக்கா ஆகியவை நிலநடுக்க பாதிப்புப் பகுதிகளாகவே விஞ்ஞாளிகள் கருதுகிறார்கள். டாக்காவின் பெருநகர வளர்ச்சி சென்ற பத்தாண்டில் குறிப்பிடத்தக்கது. திட்டமிடல் இல்லாமல், கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. கட்டிட விதிகள் மீறப்படுகின்றன. தண்ணீர் நிரம்பிய பகுதிகளில் கட்டிடங்கள் வந்துள்ளன. ஏரிகள் குளங்களில் கட்டிடங்கள் கிளம்பியுள்ளன. அவையும் பலமாடி வீட்டுக் குடியிருப்புகளாகவும், கமர்ஷியல் காம்ப்ளக்ஸ்களாகவும் மாறியுள்ளன. பல பழைய கட்டிடங்கள் பராமரிக்கப்படுவதில்லை. பழைய அரசாங்கக கட்டிகங்கள் பராமரிப்பின் நிராகரிப்பில் உள்ளன. பழைய நகரத் தெருக்களின் குறுகிய பாதைகளும் நெரிசலும் நில அதிர்வை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 1.8 லட்சம் கட்டிடங்கள் சிட்டகாங்கில், 1 லட்சம் கட்டிடங்கள் டாக்காவில் மிகவும் அபாயகரமான நிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய அதிர்வு ஏற்படுமானால் டாக்காவில் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவர். அமு பகல் என்றால் முக்கால் லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என்று ஆராய்ச்சிக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து டாக்கா கட்டிடங்களால் விரிவடைந்துகொண்டே வருகிறது. பில்லர்களைக் கொண்ட அடிமட்டங்களால் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சென்னையில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது முதலமைச்சர் கருணாநிதி ‘ஏய்யா... ஏன்ற நாற்காலியை புடுச்சு உலுக்கறீங்க’ என்றார். நாற்காலி பயம் எப்போதும் அவருக்கு. நாற்காலிகளில் சௌகரியமாக உட்கார வேண்டுமானால் நிலநடுக்க தடுப்பு நடவடிக்கைகளில் அக்கறை கொள்வது, அப்போது மட்டும் கலக்கமடைந்து தற்கால நிவாரணங்களைத் தேடுவது நல்லதல்ல என்கிறார்கள். இயற்கை மனிதனின் செயல்கள் மீது கோபம் கொண்ட விளைவு என்பது நம்பிக்கையாய் எல்லோர் மனதிலும் புதைந்து வருகிறது.
சுப்ரபாரதிமணியன்
pls vist
http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3844