சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

பாலியல் சுற்றுலா

புத்தமத நாடான தாய்லாந்து ‘பாலியல்’ சுற்றுலாவிற்குப் பெயர் போனதாக விளங்குகிறது. பொருளாதார வளர்ச்சியின் முன்மாதிரியாக முன்பெல்லாம் குறிப்பிடப்பட்ட தாய்லாந்து 2006-07ம் ஆண்டுகளில் ராணுவ ஆட்சியில் பிடிபட்டது. அரசியல் கட்சிகளின் இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. தொண்ணூறுகளின் இறுதியில் பொருளாதாரச் சிக்கல்களின் பெரும் பள்ளத்திலிருந்து மீண்டது. இந்தியா, சீனா மற்றும் ஆசிய நாடுகளின் கலாச்சாரத் தாக்கத்தாலும் புத்தமதத்தின் பின்பற்றலாலும் கீழ்படிந்திருந்த தாய்லாந்தில் 2500 ஆண்டுகால புத்தமத போதனைகள் அந்த நாட்டை எந்த வகையிலும் பாலியல் ‘விபச்சார’த்திலிருந்து மீட்டு விடவில்லை. புத்த போதனைகள் ஒரு எல்லையில் நின்று வேடிக்கை பார்க்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. வறுமை ஒருவகையில் ‘தாய்’ கிராமப் பெண்களையும், சிறுமிகளையும் விபச்சாரத்துள் தள்ளி விட்டது. அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்க புத்தமதத் துறவிகளைவிட, தன்னார்வக் குழுக்கள்தான் அதிக அளவு செயல்பாடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ‘மத்திய வழி’ என்றொரு போதனை புத்தமதத்தில் இருக்கிறது. அந்த போதனைகூட விபச்சாரத்தை வெகுவாகக் கண்டிப்பதில்லை என்கிறார்கள். உலகின் 50வது பெரியநாடு, அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதன்மையானது, உலகின் சிறந்த குடும்பப் பொறுப்பான மனைவிகள் உள்ள நாடு என்ற பெருமைகளை மீறி, பாங்காக் போன்ற நகரங்களின் மற்ற உள் கிராமங்களின் விபச்சாரம் இன்னொரு வகை நிலையின் குறியீடாகவும் இருக்கிறது.
அந்த நாட்டின் இயற்கை வளம், யானைகள், அடர்ந்த காடுகள், திரைப்பட முயற்சிகளுக்கான குறைந்த செலவு போன்றவை அமெரிக்கப் படங்கள் நிறைய எடுக்க வசதிகளாக அமைந்திருக்கிறது. பெருமளவில் அமெரிக்கப் படங்கள் அங்கு எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதே சமயம் 80 ஆண்டுகால தணிக்கைக் குழு சிக்கல்களால் அந்நாட்டுப் படங்களுக்கு ஏற்படும் சிதைவுகள், தடைகள் சுயமான இயக்குனர்களை நல்ல படங்களை எடுக்கவிடவில்லை. கடந்த ஏழு ஆண்டுகளில் சொந்த நாட்டின் அரசியல், பொருளாதார, தணிக்கைக் குழுவின் சிக்கல்களை மீறி உலக அளவில் பேசப்படும் படங்களைத் தந்தவர்களில் பெக் எக் ரத்தன் ரருங் மிக முக்கியமான இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறார்.
பெக் எக் அமெரிக்காவில் திரைப்படக் கல்வி பயின்றவர். பேய், சண்டை, மூன்றாம்தர நகைச்சுவையே தாய்லாந்து படங்களின் அம்சங்களாக இருந்திருக்கின்றன. அமெரிக்க சாயல் படங்களும், திகில் படங்களும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு திரையிடலுக்காக எடுக்கப்படுகின்றன. பெக்எக்கின் ‘69’ என்ற முதல் படம்கூட நகைச்சுவை கலந்த படமாகத்தான் இருந்திருக்கிறது. ‘டிரான்சிஸ்டர் லவ் ஸ்டோரி’ என்ற படம் நகைச்சுவை அம்சங்களை மீறி தீவிரத்தொனியைக் கொண்டிருந்தது. கிராமப்புறத்தைச் சார்ந்த பான் என்ற இளைஞன் திரைப்படப் பாடல்களால் ஆகர்ஷிக்கப்பட்டவன். உள்ளூரில் ஒரு விவசாயியின் பெண்ணைச் சுற்றித் திரிகிறான். திருமணம் செய்து கொள்கிறவன் ராணுவத்தில் வேலை கிடைப்பதால் சென்று விடுகிறான். எதேச்சையாய் திருவிழாவொன்றில் நடக்கும் பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு பாங்காக் நகரத்திற்குத் திரைப்பட வாய்ப்பிற்காகப் போகிறான். சாதாரண துப்புரவாளனாக இசைப் பதிவுக்கூடத்தில் வேலை கிடைக்கிறது. இரண்டு ஆண்டுகள் சிரமப்பட்டு ஒரு பெண்ணின் சிபாரிசால் கச்சேரியில் பாடத்துவங்குகிறான். ஆனால் அவனுக்கு உதவுபவன் ஓரினப் பாலுறவுக்குத் தூண்டுவதால் அது சாவில் முடிந்து போக தப்பித்து ஓடுகிறான். கரும்புக் காட்டொன்றில் வேலை செய்து வருபவன் அதன் மேலாளரியின் நடவடிக்கை பிடிக்காமல் தப்பி எதேச்சையாக திருட்டில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று விடுகிறான். கர்ப்பமாய் அவன் கிராமத்தில் விட்டுவந்த மனைவி குழந்தை பெற்று வளர்ப்பவள், நகரத்திற்கு அவனைத் தேடி வருகிறாள். அவனுக்கு ‘மழை நீரை’ பொட்டலப் பரிசாகக் கொண்டு வருகிறாள். அடுத்த நாள் சந்திப்பதாக சொன்னவன் சாவுப்பிரச்னையில் பான் மாட்டிக் கொண்டுவிட, நிர்க்கதியாக வீடு திரும்புகிறாள். உள்ளூரில் மருத்துவப் பிரதிநிதியாக வரும் ஒருவனின் நட்பும், உத்தரவாதமும் அவளுக்கு இன்னொரு குழந்தையைத் தந்து விடுகிறது. சிறையிலிருந்து திரும்புபவன் கிராமத்திற்குத் திரும்புகிறான். மனைவிக்கு அவன் பரிசளித்த டிரான்சிஸ்ட்டர் புழுதிபட்டுப் பயனில்லாமல் போய்விட்டது. பெக் எக்கின் ‘பிளாய்’ படம் அவரின் சிறந்த படங்களில் ஒன்றாகும். பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பும் விம், அவனது முன்னாள் தொலைக்காட்சி நடிகையான மனைவி டாங்குடன் ஒரு சாவுசடங்கிற்காகக் காத்திருக்கிறான் ஒரு விடுதியில். அங்கு வந்து தன் அம்மாவிற்காகக் காத்திருக்கும் இளம் வயதுப் பெண்ணுடன் டாங் கணவனை இணைத்துப் பார்த்து சந்தேகப்படுகிறாள். ஏழு வருடத் திருமண வாழ்க்கையை முறித்துப் போட்டபடி டாங் கிளம்பிவிடுகிறாள். அவளின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஒருவன் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு பாலியல் அத்துமீறல் நடக்கிறது. தப்பிவருகிறாள். இதனிடையில் விடுதியில் வேலை செய்யும் ஒரு பெண் உலர்சலவைப் பிரிவிலிருந்து ஒரு உடுப்பை எடுத்து வருகிறாள். அதை அணியும் இன்னொரு ஆண் பணியாள் அவளுடன் உடல் உறவு கொள்கிறான். ஒரு பக்கம் டாங்கின் அலைபாய்தலும் சிரமங்களும், இன்னொருபுறம் விடுதிப்பெண்ணின் உற்சாகமான உடல் உறவும் களிப்பும் என்று படம் செல்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற உடல் உறவுக் காட்சிகளுக்காக தாய்லாந்தில் இப்படம் தடை செய்யப்பட்டது. சர்வதேசப் பரிசுகள் பெற்றபின் பின்னால் சீரமைப்பு செய்யப்பட்டு தாய்லாந்தில் வெளிவந்தது.
இவரின் இவ்வாண்டுப் படம் ‘நிம்ப்’. இளம்புகைப்படக்காரர் காதலியுடன் ஒரு காட்டிற்குச் செல்கிறார். அதில் பெண் காணாமல் போவதும் ஒரு மரம் இயற்கையில் குறியீடாகி அழிவின் உச்சமாக பயமுறுத்துவதும் இப்படத்தில் மையமாக இருக்கிறது.
தாய்லாந்தின் சிறந்த பத்துப் படங்களில் ஒன்றாக ‘நிம்ப்’ கணிக்கப்பட்டிருக்கிறது. திருப்தியில்லாத திருமணமும் அது வாழ்க்கையைப் பயமுறுத்திக் கொண்டிருப்பதையும் மரம் என்ற குறியீட்டை மையமாகக் கொண்டு பெக் எக் இயக்கியிருக்கிறார். கலைப் பட வகையில் அவரின் சமீபப் படங்கள் இருப்பது ஒரு குற்றச்சாட்டாக அவர்மீது வைக்கப்பட்டது. வெளிநாட்டு ரசிகர்களுக்காக கலைப்படங்களை இயக்குபவர் என்ற முத்திரை அவர்மீது குத்தப்பட்டிருந்தது. திகிலும் மோசமான நகைச்சுவை, சண்டை, பாப் கலாச்சாரம் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து தாய்லாந்து படங்களின் போக்கை வெளிநாட்டு ரசிகர்களின் கவனிப்பிற்காய் மாற்றியவர்களில் குறிப்பிடத்தக்கவர் பெக் ஏக். என் மேல் உள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து நான் தப்பிப்பதற்காகவே என்னைப் பாதித்த அமெரிக்க திகில் படங்களின் வரிசையில் அடுத்ததாய் ஒரு திகில் படத்தை எடுக்கவிருக்கிறேன் என்கிறார்.