சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 3 மே, 2014

அணுத்திமிர்

அணுத்திமிர்


விஞ்ஞான விசயங்களில் எழுத்தாளனில் கற்பனை நிசர்சனமாகிற பல முன்னுதாரணங்கள் உள்ளன. அணு உலை விபத்து சார்ந்த "தி சைனா சிண்ட்ரோம்" என்ற ஆங்கிலத் திரைப்படம் மார்ச் 16, 1979ம் ஆண்டு வெளியாசை. அது வெளிவந்து 12 தினங்கள் கழித்து அப்படத்தில் இடம் பெற்ற விசயங்கள் பெனிசில்வேனியா பகுதி அணு உலை விபத்தில் நிகழ்ந்தது. கூடங்குளம் பற்றிய செய்திகளின் போது இப்படம் பற்றியச் செய்திகள் மனதில் நிழலாடியது.
            பெண் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் தன் பத்திரிக்கைக் குழுமத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் அணு உலைக்கு செய்தி சேகரிப்பிற்குச் செல்கிறார் அவர்கள் உள்ளிருக்கும் போது திடீரென மூட ஆயத்தம் நடக்கிறது. அணு உலை குளிர்விப்பான் செயலிழந்து வருவது பதற்றத்தை உருவாக்குகிறது. "சைனா சிண்ட்ரோம்" என்ற குளிர்விப்பான் செயலிழப்பு ஏற்படுத்தும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உயர் வெப்பம் வெளிப்படணும் கட்டிடம் வெப்பத்தால் சிதைவதும், கதிர் வீச்சும் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. அது பூமியை ஊடுருவி அமெரிக்காவின் நேர் எதிர்ப்புறம் இருக்கும் சைனாவை அடைந்துவிடும். இது அணு உலையின் முக்கிய நிர்வாகியின் பார்வைக்கு தொலைக்காட்சி நிருபர் கொண்டு செல்கிறார். கதிர் வீச்சுப் பதிவுகளை தேடுகிறார்கள். அதைச் சேகரிக்கிறவர்களிடமிருந்து ஆவணங்கள் பறிக்கப்படுகின்றன. அணு உலையில் சேதமும், கதிர் வீச்சும் உணரப்படுகிறது. அணு உலை அதிகாரிகள் உண்மையை மறைக்கின்றனர். அங்கு நடந்த பதற்ற நிலையைப்பற்றி தொலைக்காட்சி நிருபர் நேரடி ஒளிபரப்பில் கண்ணீருடன் விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நேரடி ஒளிபரப்பு திடீரெனத் துண்டிக்கப்படுவதோடு திரைப்படம் முடிகிறது. இதில் காணப்பட்ட இந்த அணு உலை விபத்து இப்படம் வெளியான 12 தினங்களில் நிகழ்ந்தது. இதை "மூன்று மைல் தீவு" விபத்து என்று குறிப்பிடுகிறார்கள். 1986ல் உக்ரேன் செர்னோபில் அணு உலை விபத்து, 2011ல் ஜப்பான் புருஷிமா விபத்து போன்றவை இதற்கு ஒப்புவமையான விசயங்களாகும். இதே காரணங்கள் கூடங்குளத்திலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்பது பொய் ஆகும் நிரூபணத்தைக் காட்டுகிறது இது.

            கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக உலகின் பல்வேறு அணு மின் திட்டங்கள் வேகமாக மூடப்பட்டு வரும் வேளையில் இந்தியாவில் கூடங்குளம் போன்றவற்றில் அரசு அக்கறை காட்டி வருகிறது. ஜப்பான் (29%), ஜெர்மன் (27%), சுவிட்சர்லாந்த் (38%) என அந்த அளவுக்கு அணுமின் சக்தியை தேவையாகக் கொண்டிருப்பதை ஒப்பிட்டால் இந்திய அணுமின் சக்தி மிகச் சாதாரணமானதே. இந்தியாவில் 2% மட்டுமே. 63% (நிலக்கரி அனல் மின் நிலையங்கள்), 23% (நீர் மின் சக்தி) என்று இங்கு கிடைக்கிறது.

            அப்படியொன்றும் அணுமின் சக்தி மலிவானதல்ல. அனல், நீர், காற்று அணுமின் திட்டங்களில் முதலீடு செய்யப்படுவதை விட அதிக லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. அணுமின் திட்டங்களில் முதலீடு செய்யும் பணத்தை அவ்வளவாகத் திரும்பப் பெற முடியாது என்ற நிலை இப்போது இருக்கிறது. புவி வெப்பமடைதலில் 27% கரியமிலவாயு காரணமான மின் உற்பத்தியால் வெளியாகிறது. ஆனால் அணு உலை தயாரிப்புகளில் இதுவும் குறையவில்லை. வழக்கமாய் 50% கரிய மிலவாயு குறைப்பு நல்லது. அணு மின் உலையால் 2% தான் சாத்யம்.

            பாதுகாப்பான அணு உலை எதுவும் இல்லை என்றுதான் பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட அணு உலைகளில் இருக்கும் 440 அணு உலைகளில் 1000 அணு உலை விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. சிறிய அளவு விபத்துகள் வெளியில் தெரிவதில்லை. ஜப்பான் புருஷிமா அணுமின் நிலையத்தில் எல்லா பாதுகாப்புகளையும் மீறி மின் இணைப்பு துண்டிப்படைந்த பின்பு, சுனாமி தாக்கிய பின் குளிரூட்டும் வசதிகள் தகர்ந்ததால் வெப்பம் அதிகமாகி வெடி விபத்து நடந்தது. தொழில் நுட்ப காரணங்கள் மட்டுமில்லாமல், தொழில் நுட்ப கோளாறு விதிகளை கடைபிடிக்காததால் நடைபெறுகின்றன.

            பேராபத்துக்களும், சுற்றுசூழல் மாசுபடல் இல்லாத காற்று,  சூரிய ஒளி, சிறிய நீர் மின் திட்டங்கள் மாற்று மின் சக்தி திட்டங்களாக உள்ளன. இந்தியாவில் 300 நாட்களுக்கு மேல் ஒரு ஆண்டுக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு பெரும் அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும். அணுமின் திட்டங்களை விட குறைந்த செலவில் ஆபத்து ஏதுமின்றி மாற்று எரி சக்தி மூலமாக மின்சக்தி பெற முடியும். கட்டுமானத்தில் பெரும் செலவு, விபத்து சமாளிப்பு, கழிவு சமாளிப்பு செலவுகள் என்று அதிக செலவாகக் கூடியதை மலிவானது என்று தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் மூலம் சொல்லப்பட்டு வருகிறது. சில ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு கூடங்குளம் அணு மின் நிலையம் கட்டப்பாட்டாலும், அணுமின் திட்டம் நிறைவேற்றப்படும் போது பல லட்சம் கோடி தேவையாக இருக்கும். இந்த செலவீனம் பெரும் பாரமாய் வந்து போகும் அரசாங்கங்களுக்கும், செத்துப் போகும் மக்களுக்கும் அமையும்.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதி மணியன்

வெள்ளி, 2 மே, 2014

சாணித்துகள் முட்கள்: அபிமானியின் “ நீர் கொத்தி மனிதர்கள் ” நாவல்

சுப்ரபாரதிமணியன்விளிம்புநிலை மக்களைப்பற்றியும்  குறிப்பாக தலித் மக்களைப்பற்றியும் கடந்த 20 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பவர்  அபிமானி.  பலசமயங்களில் நம்பிக்கையே அவர்களின் ஊக்க சக்தியாக இருப்பதைச் சுட்டிக்காடுபவர்.   என்றைக்காவது ஒருநாள் போராட்டங்கள், எதிர்ப்புக்குரல்கள் மூலம் நல்ல வாழ்க்கை அவர்களுக்குச் சாத்தியம் என்பதை சூசகாகமாக வெளிப்படுத்துபவர். கிராமங்களில் நிலம் முழுக்க ஆதிக்க சாதியினரின் கையில் இருக்கிறது.இன்னும் கூட தலித்துகளில் பெரும்பான்மையோர்   விவசாயக் கூலிகள். ஆதிக்க ஜாதியினரின் பாலியல் கொடுமைகள் பற்றி நிறைய எழுதி உள்ளார்.  காவல்துறையினருக்கும் ஆதிக்க சாதியினருக்கும் இடையிலான உறவு குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார்.ஒவ்வொரு நாளும் இரண்டு தலித்துகள்  கொல்லப்படுகிற இந்தியச்சூழல்.  மனித உருவங்கள் சாதியின் கொடுமையான வன்முறையைப் புரிந்து கொள்ள இயலாத அவலங்கள் பற்றி நிறைய எழுதியிருக்கிறார்.
இவரின் முதல் நாவலில் தண்ணீர் பிரச்சினையை முன் வைத்து தலித்துகள் அவர்களின் உட்சாதிகள் குறித்த முரண்பாடுகளையும் பிரச்சனைகளையும் விவாதத்திற்குக் கொண்டு வருகிறார். சாம்பாக்கமார் ( பறையர்), பகடைகள் எனும் அருந்ததியர் போன்றோரின் உள் முரண்பாடுகளும் அவர்களின் வாழ்வியலையும் சொல்ல இந்நாவல் அவருக்குப் பயன்பட்டிருக்கிறது. மற்றும் துலுக்கக்குடி எனும் முஸ்லீம்களின் வாழ்வும். கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை பெரிதாகவே இருக்கிறது. பொதுக்கிணறு, பொது நீர்க்குழாய்  எல்லோரும் புழங்கும் இடங்களாக இருக்கின்றன. விவசாயக்கூலி வேலைக்குப் போய் வரும் பொன்னாபரணத்திற்கு   தொண்டை தாகம் தீர்க்க்க்கூட வீட்டில் தண்ணீர் இல்லை. படுக்க வரும் கணவனிடம் கூட “ கழுவறதுக்கு தண்ணி இருக்கா “ என்று ஒதுக்கி விடுகிறாள்.  துலுக்கக் குடி முஸ்லீம் பெண்கள் தண்ணீர் பிடிப்பதில் சற்றே அதிகாரம் காட்டுகிறார்கள். இஸ்மாயில் சாயபு செய்வினை செய்து எல்லாரையும் முடக்கி விடுவானோ என்ற பயம் பலருக்கு இருக்கிறது.  சொக்காரன்மார் பாடை சாங்கியத்திற்கு கூட தண்ணீர் கிடைப்பதில்லை. செத்த பிணத்தை குளிப்பாட்ட தண்ணீர் கொண்டு வருவது பெரும் சிரம்மாக இருக்கிறது. தண்ணீர் கொண்டு வரும் பிரச்சினைகளில் மனிதர்கள் குறிப்பாய் பெண்கள் கரிக்கட்டையாய் ஆகிறார்கள். பனை ஓலைப் பட்டையில் தண்ணீர் சேந்தும் அவலம். உடைந்து போன மண்குட்த்தை கூட மாற்ற முடிவதில்லை. சைவபிள்ளையார் வெள்ளாக்குடி நாச்சீயாரும் சேரி கிணத்துக்கு தண்ணீருக்கு வர வேண்டிய தண்ணீர் தட்டுப்பாட்டுச் சூழல். . குண்டி காயந்தால் குதிரையும் புல்லைத் தின்னும் என்பது போல் தண்ணீர் பிரச்சினையை முன் வைத்து எல்லோரும் அலைகிறார்கள். சக்கிலிக்குடி கறி வாங்க பகடைகளும் அலைகிறார்கள். சக்கிலிப்பையன் சுவர் மேல் உட்கார்ந்து பேசுவது கூட வாறு சாதிக்காரர்களை எரிச்சலூட்டி கையை நீள வைக்கிறது. நாடக்கமார்களின் அதிகாரமும் ஒரு புறம். 50 குடிகள் தலித் இருக்கும் கிராமத்தில் 20 குடிகள் முஸ்லீம்கள் செய்யும் அதிகாரம் இன்னொரு புறம். சாணித்துகள் முட்களின் உரசலாய் வாழ்க்கை எல்லோருக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காடாவிளக்கு போய்  அரிக்கன் விளக்கு வந்தாலும் சேரிகள் போய் பெரும் கட்டிடங்கள் வந்தாலும் தண்ணீர்ப் பிரச்சினை ஏதாவது ரூபம் எடுத்துக் கொண்டே இருக்கிறது. புது வீடுகள், புது காலனிகள் வந்தாலும் வீட்டு தனிக்குழாய்கள் வந்தாலும் தண்ணீர் ஏதாவது வகையில் பிரச்சினைகளாக விசுவரூபித்துக் கொண்டு வருவதை இந்நாவல் சொல்கிறது. சூழலியல் பற்றி யோசிப்பில் இப்போது முன் நிற்பது  தண்ணீர் வணிகப் பொருளாகிப் போனதும், தண்ணீரால் மூன்றாம் உலக யுத்தம் என்பதும்தான்.   “ எல்லோருக்குமான தண்ணீர்” என்பது சுத்தமான குடிநீர் உபயோகத்தை முன் நிறுத்துகிறது. தண்ணீர் பண்டமாகி விட்டது. தண்ணீரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் உலகளவிலான ஏற்பாடுகள் பயமுறுத்தவே செய்கின்றன.” தண்ணீர் விற்பனைக்கல்ல “ என்று  தண்ணீரை ஒரு அடிப்படை உரிமையாகவும் கோரி பெரும் போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. தண்ணீர் தனியார்மயமாக்கல் என்பது தோல்வியடைந்து வருவதை பல நாடுகளின் போராட்டங்கள் சுட்டுகின்றன.
இந்நிலையில் கிராமங்களில் தண்ணீர் பிரச்சினை சாதிய அடையாளங்களோடும், சாதிய பிரச்னைகளொடும் இருந்து வருவதை இந்நாவல் சொல்கிறது. இந்துக்களின் சாதிப்பிரிவுகள் பாம்புகளின் நீளம் போல் நீண்டு கொண்டு தொடர்கின்றன.  இதில் மேலே இருப்பவர்கள் தங்களை  அதிக்கத்தின் மூலம் அப்படியே நிலைநிறுத்திக் கொள்ள முயல்கின்றனர்.    கீழே உள்ளவர்களை எவ்வகையிலும் உயர வழியில்லாமல் செய்கின்றனர். நீர்தேவைகள் சம்பந்தமான வசதிகளும் அவர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டன.இவை ஆங்கிலேயர்களால் முதலில் வசதி வாய்ப்பு என்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பின்னர் சுதந்திர காலம் தொட்டு விரிவுபடுத்தப்பட்டன.  சாதி அமைப்புகளும் உட்பிரிவுகளும் ஆழமாக வேர் விட்டன.  சாதியக் கட்டுப்பாடுகள் ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களை இன்னும் இன்னும்  சிரமமாக்கியது. இதில் நீர் விநியோகம் சார்ந்த  முறைகளும் சாதிய கட்டுப்பாட்டிற்குள் வந்தன. இந்த வெவ்வேறு நிலைகளை இந்நாவலின் பல பக்கங்களில் காணலாம்.
போராட்டங்கள் மூலம் தங்கள் பிரச்சினையை சொல்ல மனிதர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். பறையர்களுக்கு வழிகாட்டவும் போராடச் சொல்லவும் பண்டாரம் இருக்கிறான். பம்பாய் போய் விட்டு வருகிற வெள்ளையனும் அவர்களின் வாழ்க்கைப் போக்குகளிலிருந்து மாறுபட்டு இருக்கிறான்.  கொத்தனார் அந்தோணி தலித் பெண்ணை காதலித்தாலும்  அது கூட நிறைவேறாததாக இருக்கிறது.
தலித்துகள், உட்சாதிகள் குறித்த நுணுக்கமான பார்வை வைக்கப்பட்டிருக்கிறது. சாம்பாக்கமார்களுக்கும் அவர்களை ஒதுக்கி வைக்கும் பிள்ளை, துலுக்கர், நாடார், மறவர், கோனார் ஆகியோர்களுக்கும் சாம்பாக்கமார்களுக்கும் அவர்களால் ஒதுக்கப்படும் சக்கிலியர்களுக்கும் இடையில் ஏற்படும் முரண்செயல்களும் சம்பவங்களாய் விரிக்கப்பட்டிருக்கின்றன. தலித்துகளின் உடல்கள் தீண்டத்தகாதவை என்று பிற சாதியினர் அவர்களின் உடம்ப்பைச் சுற்றி அமைத்துக் கொள்ளும்  வேலிகள் நிறைய இருக்கின்றன. அவர்களின் உடம்பு மட்டுமா. அவர்கள் குடிநீர் பிடிக்க பொது குழாய்க்குச் செல்லும் இடங்களில் அவர்களின் மண் குடங்களோ, பித்தளைப் பாத்திரங்களோ உயர்சாதியினரின் புழங்கு பாத்திரதில் மோதிக் கொள்வது கூட எவ்வளவு கோபத்தை அவர்களிடம் கிளப்புகிறது . சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக இதில் ஒரு போராட்டம் வருகிறது. வாழ்க்கையிலும்  வாழ்விடங்கள் சாதி வாரியாகப் பிரித்துப் போடப்படுகின்றன.  உறவுகளூம், உணவு உண்ணும் முறைகளும் கூட  இவ்வறு பிரித்துப்போட்டு  சாதிய அடையாளம் காட்டப்படுவதை இறுதி பாகம் சொல்கிறது.கிணற்றடிகளும் பொது தண்ணீர்க்குழாய்களும் கலவரம் கிளம்பும் இடமாக மாறி இருப்பதை விரிவாகச் சொல்கிறார்.சாதிய ஆதிக்கம் வெவ்வேறு காலத்திற்கும் வெவ்வேறு சாதிகளின் கைகளுக்குச் செல்கிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளும் புகைச்சல்கள்,  ஒரு சாதிக்கு இன்னொரு சாதி அடிமையாக இருக்க வேண்டிய அவலம்.மனப்போக்கு.
நாவலின் வடிவமும் அது சொல்லும் விசயங்களும் வெவ்வேறானவையல்ல  என்பது விளங்குகிறது. நிகழ்கால வாழ்க்கையைச் சொல்ல புது மொழியோ, உருவகங்களோ, புது வடிவமோ தேவையில்லை. வாழ்வின் நடைமுறையோடும், புழங்கு மொழியோடும் நகர்த்திக் கொண்டு போவதே இந்நாவலின் சிறப்பு என்று சொல்லலாம்.அரசியல் மாற்றங்களோ, சமூக மாற்றங்களோ செல்ல வழி காட்டும்  தனி நபர்களின் கதைகளின் மூலம் சமூக எழுச்சியைத் தொட்டுச் செல்வதை கோடிடுகிறார். தனி மனிதர்களும் சமூகமும் வேறு வேறு துருவங்களாய் அமையாமல் சமூகத்தின் வலியின் படிமமாகவே இந்நாவல் அமைந்திருக்கிறது. அதில் தலித் விடுதலையும் அடங்கி இருக்கிறது.  அரசாங்க உத்தியோகச் சூழல் அபிமானியை நடுத்தர வர்க்க ஆளாக்கி விட்டிருந்தாலும் அவரின் உறவுகளும் சாதி ஆக்கிரமிப்புக்குள் இருப்பதை தொடர்ந்து எழுதி வருகிறார். தலித் சமூகத்தின் மாற்று உண்மைகளை  அவர்களின் வாழ்கையை மாற்றி அமைத்துக் கொள்வதற்கான புது சக்திகளை இவரின் படைப்புகளிலிருந்து பெற முடியும்.அதில் இந்நாவலும் ஒன்று.
( ரூ 250.  நீர் கொத்தி மனிதர்கள் : அபிமானியின் நாவல், காவ்யா பதிப்பக வெளியீடு, சென்னை )

பாரின் சரக்கு பாலிசி

 பாரின் சரக்கு பாலிசி

சுப்ரபாரதிமணியன்



கூரியரில் மோதிரம் வந்தது.
அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று   அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது.

“ அடப்பாவி கிளம்பீட்டியா “  என்றுதான் கத்தினான்.உடனே அவளைப்  பார்க்கவேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுரிதாரில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள்  தேவி..முப்பது வய்தில் அவள் முகத்தில் இல்லாத அழகையெல்லாம் அவன் கண்டிருக்கிறான்
தினம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பிய காலம் உண்டு. பிரியலாம் என்று கூட ஒரு குறுஞ் செய்தியில் சொல்லித்தான் பிரிந்தார்கள். அனுப்பியவள்  தேவி… .குறுஞ்செய்தியும் , இப்போது இந்தக் கூரியரும்…மோதிரம் போன்ற வஸ்து சுலபமாக  திருடு போகாமல் கூரியரில்பத்திரமாக  வந்து சேர்ந்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. தொலைந்திருந்தாலும் ரூபாய் அய்ந்தாயிரம் நஷ்டமாயிருக்கும். தொலைந்தது தெரியாமல் கூட போயிருக்கலாம், மோதிரம் அவளிடம்தான் இருக்கிறது என்று அருணகிரி நினைத்திருப்பான். இப்போது தேவி உறவை முறித்துக் கொண்டது நிச்சயமாகி விட்ட்து..

“ யூ டூ ஷரோன் ” என்று வாய் விட்டுச் சொன்னான்.


அவளை ஷரோன்  என்றுதான் கூப்பிடுவான். கூரியர் முகவரி பார்த்தான், மீண்டும் தேவி ஆகி விட்டிருந்தாள்.
தேவி பனியன் கம்பனி மெர்சண்டைசிங்கில் சேர்ந்தபோது  அந்தப்பிரிவு மேனேஜர் “ யூ டூ கம்பம் “ என்றான். தேவி முழித்த முழிப்பில் சாயப்பட்டறைகள் மூட உத்தரவு இட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்ட சாயப்பட்டறை தொழிலாளியின் திகைப்பு போலத்தான் இருந்த்து. அவனே விளக்கமும் சொல்லிவிட்டான் கேட்காமலே.
.” உங்க ஊரும் கம்பமா.. கம்பம் பள்ளத்தாக்கு எனக்குப் பிடிச்ச எடம். பச்சையாக எங்கயும் கெடக்கும் அந்த ஊர்லைருந்து எதுக்குப் பஞ்சம் பொழைக்க வர்றீங்கன்னுதா.”
அருணகிரி அண்ணாமலை தீபம் ஊர்க்காரன்.   பல ஏக்கர் பரப்பளவில் இருந்த பனியன் கம்பனியில் இன்னொரு ஓரத்தில் பாக்கேஜ் செக்சனில் அவனுக்கு வேலை.வழக்கமான சந்திப்புகள். புன்முறுவல்கள்.. அப்புறம் காபி ஷாப்புகள், சோடா ஹப்புகள் .இண்ட்ட்னெட்செண்டர்கள் என்று திரிந்த போது பிரிவு அவஸ்தை தருவது என்பது தெரிந்தது..

ஊரின் மத்தியில் இருந்தது மொழிப்போர் நினைவுச் சின்னம்.லேசாக மழைத் தூறிக்கொண்டிருந்து. ஒதுங்கி நிற்பதற்கு இடமில்லை என்பது போல்  நினைவுச்சின்னத்தின் அருகில் ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு தொழிற்ச்சங்கம் அதன் அழுக்குத்தனத்துடன் ஓரமாய் நினைவுச்சின்னத்தையொட்டியிருந்தது.
“அதென்னங்க அ நொண்டியடிக்குது. ”
“நானும் ஒரு நாள் ஆச்சர்யப்பட்டுத்தா ஒதுங்கிப் பாத்தேன். அப்புறந்த தெரிஞ்சது  தமிழ்  அ தா அது. அகரம் . முதல் எழுத்து.இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே செத்துப் போனவங்க நினைவுச் சின்னம் இது.”

” பனியன் கம்பனி, ரெண்டு கட்டிங் டேபிள், ரெண்டு  பவர் டேபிளுக்கு இருக்கற மரியாதை இந்த ஊர்லே எந்தச்  சிலைக்கோ, எந்த நினைவுச் சின்னத்துக்கோ இல்லைதா. ..”

மழை சற்றே வலுக்கத் தொடங்கியிருந்தது.” இன்னும் கொஞ்சம் ஒதுங்கி ஏதாச்சும் சிலைக்கடியிலாச்சும் ஒதுங்கியிருக்கலாம் ”

” ஒதுங்கறதே நம்ம பொழப்பாப்போச்சு, இன்னம் கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம். ”

இன்னும் கொஞ்சம் தள்ளி அண்ணாவும் பெரியாரும் பக்கம்பக்கம் நின்றிருந்தார்கள்.அவர்களின் தலைக்கு மேல் ஒரு கூடாரமும் உண்டாகியிருந்தது. அதில் எப்போதைக்குமாக கொஞ்சம் காவல்  துறையினர் காவலுக்கு இருந்தார்கள். முன்பு நாலைந்து பேர். இப்போது அவர்கள் இருவராகியிருந்தனர். அண்ணாவும் பெரியாரும் இருவர். காவல்துறையினரும் இருவர் அவர்களின் காவலுக்கு. அங்கு கொஞ்சம் நின்று வலது பக்கம் பார்த்தால் குமரன் நினைவுச் சின்னம் இருந்தது. குமரன் நினைவுச்சின்னம் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அண்ணா பெரியார் நிற்பது பலருக்குப் பிடிக்கவில்லை. குமரனுக்கு முக்கியத்துவம் இல்லை, மாற்ற வேண்டும்  என்றார்கள். சப்தம் போட்டார்கள்.கொஞ்சம் கடுசாய் வார்த்தைகள் வந்து விட்டன. காவல்துறை அண்ணா பெரியாரை காத்துக் கொண்டிருந்தார்கள்.

காதர்பேட்டையிலிருந்து திமுதிமுவென்று  நாலைந்து நைஜீரியர்கள் அவர்களைக்கடந்து போயினர். தூறல் மழை அவர்களின் உடல் நிறக்கறுப்பை இன்னும் அழுத்தமானக் கறுப்பாக்கியிருந்தது.  மழையில் நனைந்து போகும் யானையைப் போல் இருந்தனர்.
” இவங்களையும் வாழ வைக்கிற ஊர். நம்மளெ வாழ வைக்காதா..”

” அதுதா வாழ வைக்குதே, அப்புறம் என்ன கேள்வி. ”
” வாழ வக்கறத்ன்னா அந்த அர்த்தமா. பத்து மணி நேர வேலை. கொஞ்சம் காசு. .கொஞ்சம் சொகுசுன்னு… அதில்லை.. ”

” அப்புறம்… ”
” உன்னை நான் நேசிக்கட்டுமா ”
” அட சக்கை. இவ்வளவு அழகான தமிழ்லே கேட்டுட்டே. லவ் யூன்னு கேட்கறதுக்கு பதிலா இப்பிடி பர்மிசனோட வந்தது நல்லா இருந்துச்சு.”


மழை ஒதுங்கிக் கொண்டாலும் இருவரும் நெருங்கி நின்று கொண்டே இருந்தனர்.சட்டென கதகதப்பு  கூடிக்கொண்டிருந்தது. மழை கொண்டு வந்துப்போன லேசான குளிரை அவர்கள் எல்லா திசைகளிலும் கடத்திக் கொண்டிருந்தார்கள்.சிலைகளும், மொழிப்போர் நினைவுச்சின்னமும் அந்தக்கதகதப்பில் ஈரம் தவிர்த்து  தங்களை  சற்றே சூடாக்கிக் கொண்டன.


அடுத்த முறை நொய்யல் கரையில்தான் ச்ந்தித்துக் கொண்டார்கள்.சாய்த்தண்ணீரும் சாக்கடைக்கழிவுகளும் பல வர்ண நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தன. ” என்ன இங்க வரச் சொல்லீட்டீங்க..”
” அதோ பார் ”
” வளம்”  நினைவுச் சின்னம் நொய்யலின் நடுமத்தியில் நின்றிந்தது.  நொய்யல் ஓர மேட்டைச்சரிபடுத்தி பாலம் ஏற்படுத்தியிருந்தது வளம் அமைப்பு…அதன் நினைவாய் தூண் ஒன்று  சிமென்ட் நிறத்தில் நின்று கொண்டிருந்தது.
“ஊருக்குள்ள இருக்கற சிலைகளெ , நினைவுச்சின்னங்களெ  ஒரு ரவுண்டு கூட்டிகிட்டுப்போயி காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா ”

‘ இந்த ஊர்லே டாலர், பவுண்டுன்னு இருக்கறதெத்தவிர காட்டறதுக்கு வேறெ என்ன இருக்கு. ”
” இருக்கே .. இதோ ”  கறுத்த நிறத்தில் நொய்யல் சலசலத்து ஒடிக்கொண்டிருந்தது. நொய்யல் நதியின் மத்தியிலும் அங்குமிங்குமாய்  பல வர்ணங்களில் பாறைகள் இருந்தன. அவ்வப்போது அப்பாறைகள் வர்ணம்டைத்துக் கொண்டன. ஏதோ விசேசம் என்று சொல்லிக் கொண்டன. சமீபத்திய விசேசம். பொங்கல் விழா. நாலைந்து நாட்கள்   கரகாட்டம், கும்மியாட்டம், அண்ணன்மார் சுவாமி கதை என்று அந்தப்பகுதியில் மேடை போட்டு நடத்தினார்கள். எல்லாவற்றுக்கும் கூட்டம் சேர்ந்தது.
” ஷங்கர் படத்துலே எல்லாத்துக்கும் பெயிண்ட் அடுச்சு வுட்ட மாதிரி  பாறைகளுக்கு பெயிண்ட் அடுச்சு வுட்ட ஊர்  இதுவாத்தா இருக்கணும். ”

அவள் மல்லிகைப்பூ கேட்டாள்.
” என்ன திடீர்ன்னு” ”
” ஏதாச்ச்சும்  கேட்கணும்ன்னு தோணுச்சு. தலைங்கற பாறையிலெ கொஞ்சம் வெள்ளைப் பெயிண்ட் அடிக்கலாமுன்னு. வேற இங்க சுண்டலும் பலூனுமா கெடைக்கப் போகுது ”
” கொஞ்ச தூரம் போனா மெக்டுவல் இருக்கு..”

அவன் அலைந்து திரிந்து கொண்டிருப்பது அவனின் வெஸ்பா  சப்தம் அங்கங்கு கேட்டதில் தெரிந்தது.யுனிவர்சல் திரையரங்கு  ஓரத்தில் தெரிந்த ஒரு தையல் செக்சன்  பக்கமிருந்து ஏதோ இயந்திரங்களின் பலத்த ஓசை கேட்டது. அவள் அம்மா தையல் வேலை செய்தவள்.  ரவிக்கைகளும் பழைய துணிகளும் தைத்து அவளை பள்ளிப்படிப்பு வரைக்கும் கடத்திக்கொண்டு  படிக்க வைத்திருக்கிறாள்.  அவளுக்கும் பனியன் கம்பனி என்றதும் தையல் செக்சன்தான் ஞாபகம் வந்தது. தையல் மிசினில் உட்கார்ந்து ஓயந்து போன்தற்குக் காரணம் தையல் மிச்சின் கொடுத்த  சூடும், அது சார்ந்த் கொப்பளங்களும் அது சார்ந்த இன்னும் வியாதிகளும்தான். தையல்காரனின் மகளாய் அவள் தொடர வேண்டாம்  என்று முடிவெடுத்திருந்தாள்.

அவன் திரும்பி வந்து போது  அவன் கையில் மினுமினுக்கும் ஜரிகைப்பொட்டலம் ஒன்று இருந்தது.
” மல்லிகைப்பூவே  கெடைக்கலே. நாளைக்கு  முகூர்த்தம்வேற. இது கல்யாண சீசன்….பெரிய  டிமாண்ட்  ” .
மினுமினுக்கும் ஜரிகையில் ஒளிந்திருந்தது சின்ன தங்க மோதிரம்.
” பொன் வைக்கிற எடத்திலே பூன்னு சம்பரதாயமா கையாலாகாத்தனத்தை மறச்சு சொல்வாங்க. இப்போ இங்க அதுக்கு மாறா..தலைகீழா .. பூ வெக்கற எடத்திலே பொன். ”

” தலையிலெ பூவும் வெச்சு வுட்டிட்டீங்க.. ஒதுங்க எடம் தேடற மாதிரி. அதுக்கு பர்மிசன்  கேட்கற மாதிரி ..”
நினைவுச்சின்னங்களும் , சிலைகளும்  பார்த்து அலுத்துப்போகவே கொஞ்சம் லாட்ஜ் பக்கமும் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.

கல்யாணம் செய்து கொண்டால் வெட்டிப் போட்டிருவாங்க என்று அவள் சொன்னான். அவனும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது.
” பொட்ட்டலம் கட்டி பாலாறுலே வீசிருவாங்களே.”
“ நொய்யல்லியே அதுக்கு சவுகரியம் இருக்கு. சாயத்தண்ணியிலே அடையாளம் காணாமப்போகப் பண்றது சுலபம் “
சேர்ந்து வாழலாம் என்று தீர்மானம் செய்த போது சில மாதங்கள் ஓடியிருந்தது. சாயப்பட்டறைகள் மூடல்கள் என்று என்று வந்தபின் ஊரில் நிரம்ப கம்பனிகள் காலியாகிச் சும்மா கிடந்தன. நாலு பெரிய கம்பனிகள் பார்கள் ஆயின. ஏழு சாயப்பட்டறைகள் பால் கம்பனிகள் ஆயின. நொய்யல் கரையில் இருந்த ஒன்பது சலவைப்பட்டறிகள் ஈமு கோழி பண்ணைகள் ஆயின..

” இந்த சமயத்திலே ஊடு புடிக்கறது சுலபம். நிறைய வூடுக சும்மா கெடக்குது. . ஜாதி மதம்ன்னு விலாவாரியா கேட்க மாட்டாங்க.”
ஊர் விட்டு வந்த் பின் இந்த நகரத்தில் தங்களின் ஜாதி அடையாளம் தெரியாமல்  திரிவது சுலபமாக இருந்தது. அதற்காகவே புழுதி, வெயில் சாயக்கழிவுகள், பிளாஸ்டி குப்பைகள் மீறி அவர்களுக்கு  ஊர் பிடித்து விட்டது.
” நல்ல காசு. டாலர் பவுண்டுன்னு பத்து வருசத்தில நம்ம பர்ஸ்லே புழங்கும் . சாயம், அழுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”
”  ஜாதி கேட்காட்டியும் புருசன் பொண்சாதியான்னு கேட்காமலா இருப்பாங்க..””  “ கேட்டா ஆமான்னு சொல்லிட்டாப் போச்சு. “
“  என்ன ஆமான்னு சொல்லப் போறீங்க்..”
“ எல்லாத்துக்கும் ஆமாதா. உங்கூட படுத்து சொகம் காண்றதுக்கு எவ்வளவு ஆமா வேண்ணா போடலாம்”
எல்லாம் சுலபமாகவே நடந்தது. லைன் வீடுகளைத் தவிர்த்தார்கள்.தனியாய் ஒரு வீடு தென்பட்டது. வீட்டுக்காரர் நாலு வீதி தள்ளி இருந்தார்.அது பெரிய சவுகரியம். அவளுக்கு கமலி பெண்கள் விடுதியில்  இருந்த அவஸ்தை முடிந்தது. அவன் லாட்ஜில் மாத வாடகையில் இருந்த உப்புசம் தீர்ந்தது.
“ சின்னதா ஒரு நஸ்டம்”
” தெரியலையே”
“ முந்தியெல்லா  மீட் பண்றப்போ நான் ஒரு குட்டிக் கதை.. நீங்க் ஒரு அறுவை ஜோக் சொல்வமே.”
“ ஆமா அது கட்டாயிருச்சு.”
“ செரி ஒரு குட்டிக் கதை சொல்லீர்ரன்.. கடைசி மனிதன் இருந்த வீட்டுக்கதவு தட்டப்பட்டது.”
“ இது நான்  படிச்சதுதா. உபயம் சுஜாதா..”
“ நான் என்  பங்குக்கு மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் சொல்றேன். “
“ அதுவும் உபயம் சுஜாதாதானா..”
” இன்னமும் இதை பாலோ பண்ணனும். ஞாயிற்றுக்கிழமையாச்சும் குட்டிக்கதை, கடி ஜோக்ஸ் சொல்லிக்கணும் “
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாடியில் நின்று பட்டம் விட்டார்கள் டீல் விட்டு அறுத்து விடுதலில் அவன் மன்னன்.மாஞ்சா போடுவதிலும் மகா மன்னன், சாயப்பொடி, கோந்து, கண்ணாடித்தூள்  போன்றவற்றைக் கலந்து பசை தயாரிப்பான். அன்று பட்டம் விட்ட போது பட்டத்தைக்  கடந்து சென்ற விமானத்தைக் காட்டிச் சொன்னான்: “  உன்னோட இதிலெல்லாப்   பறக்கணும் ”
அது அங்கு குடிபோய் ஒரு வாரத்திற்கப்புறம் எதுவும் தொடரவில்லை. எல்லாம் தலை கீழாகிவிட்ட்து. இரண்டாம் நாள் தேவி அவளின் தூரத்து உறவினர் ஒருவரை அவள் குடி போன வீதியில்  பார்த்தாள். “இந்த வூட்லே என்ன பண்றே “
“ இங்கிருக்கறவைய பாக்க வந்தன்”
“ காலியாத்தானே கெடந்தது. யாருஇருக்கறா”
“ ஒரு குடும்பம்”
“ குடும்பம்ன்னு இருந்த மாதிரி தெரியலே”
அவரை அந்த வீதியில் அடிக்கடி பார்ப்பதாய் தோன்றியது. அவரும் வேவு பார்ப்பதாய் தோன்றியது.பிரம்மை.. பயம்… அலைக்களித்த்து.  ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும். அருவாள் சகிதமாய் நாலைந்து பேர் வருவர் என்பது அவன் அணைப்பில் அவள் கிடந்தபோது விருக்கென்று தள்ளி போகச் செய்திருக்கிறது.
“ வேறு எடம் பாத்தரனம்”
“ நிறைய அட்வான்ஸ் கொடுத்திருக்கம் “
“ அட்வான்ஸ்க்காக அடிபடமுடியுமா.. வெட்டி பொட்டலமாக் கட்டிருவாங்க. ரெண்டு பக்கமும் ஜாதி வெறி புடுச்ச மறவர்கதானே இருக்காங்க் “
கமலி பெண்கள் விடுதிக்கு தேவி திரும்பி விட்டாள். அழுக்குப் படுக்கை, பாத்ரூமுக்கு க்யூ. கலர்கலராய் அஜினோமோட்டா சாதங்கள். அலுத்துவிட்டது எப்போதோ அவளுக்கு,
.’ என்ன கமல் கவுதமின்னு சொல்லிட்டிருந்தே ஊத்திருச்சா..”
“ என்ன திருப்தி பண்ண முடியலையா..யார்…..   எவர் “
“ நல்ல திருப்திதா. உசிரு எப்போ போகுமுன்னு ஊசலாட்டம் ..’
இதற்கிடையில் தேவியும் மெர்ச்சண்டைஸில் இருந்த கிராக்கி காரணமாக வேறு கம்பனிக்குப் போய் விட்டாள். அவனைத் தவிர்த்தாள்.
“ என்ன அவாய்டு பண்றேயா.. ”
”இப்போ நெனச்சாலும் உடம்பு நடுங்குது…யோசிச்சுப் பார்த்தா ஒர்க் அவுட் ஆகாதுன்னு தீர்மானமா தெரிஞ்சது  நீயும் படுக்கை சபலமெல்லா இல்லாமெ யோசிச்சுப் பாரு…”
முன்பு இண்டர்னெட்கபேயில் இருவரும் சென்று பொழுது போக்கியபோது  ஒரு நாள் அருணகிரி “ பேசிக் இன்ஸ்டிங்ட் “ பட்த்தில் இடம் பெற்ற உடலுறவுக் காட்சிகளை காட்டினான். அதன் பின்னரான சந்திப்புகளீல் அவள் அப்படத்து கதாநாயகி ஷ்ரோன் ஸ்டோன் போலத்தான் அவனுடன் படுக்கையில் இயங்கினாள்.
” ஷ்ரோன் ஸ்டோன் நடிச்ச மத்த படங்களைப் பாக்கறையா “
“ இது ஒண்ணுக்கே இடுப்பு வலி தீரலையாமா. “ அதற்கப்புறம் அவளை செல்லமா ஷரோன் என்றுதான் கூப்பிட ஆரம்பித்து தொடர்ந்தான்.
“ வாழ்க்கையிலே யாரையாச்சும் முன் உதாரணமா வெச்சுட்டு
பாலோ பண்ணனும் “
“ என்க்கு ஷரோன்.. உங்களுக்கு “
“ உனக்கு இப்பதா  ஷ்ரோன்.  எனக்கு எப்பவும் மு.வ தா..”
“ அவர் ஒழுக்கத்தை கம்பல் பண்றவர். “
“ லிவிங் டுகதர் பத்தியும்  கதை எழுதியிருக்கறார். “
அவளுக்கு அவன் அணிவித்திருந்த மோதிரம் திரும்பி வந்து விட்டது. நிச்சயார்த்த மோதிரமா. நட்பு சின்னமா  எதுவுமில்லை. இனி ஒட்டும் இல்லை உறவுமில்லை. சரி என்னதான் சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாமே என்று அவளின் கைபேசி எண்ணை முடுக்கினான். இன்னும் எண் மாறவில்லை. குறுஞ்செய்தியில் பிரிவு  சொல்லி பிரிந்தவள்.. .எடுக்கிறாளா. நிராகரிப்பாளா…
“ சவுக்கியமா தேவி..”
“ சவுக்கியம் .. எப்பவாச்சும் இப்பிடி ஹலோ சொல்லிக்கலாம் அதுதா நல்லது”
“ செரி ..” அவனுக்கு தொண்டை கமறியது.

“ உனக்கு தொண்டை கமறியலையா ஷரோன் .”
“ அதைத் தாண்டி வந்திட்டேன், உசிரு முக்கியமில்லையா.. என்ன ஷரோன்னுட்டிங்க..”
“ ரொம்ப நாளா அப்பிடி கூப்பிட்டு பழக்கமாயிருச்சே.’
‘ நீங்க்தானே யாரையாச்சும் பாலோ பண்ணனும். உங்களுக்கு மு.வ.ன்னீங்க..”
“ உனக்கு ஷரோன்னே “
“ உம் “
“ மோதிரத்தைத் திருப்பி அனுப்பிச்சிருக்கீங்க “
“ அதுவும் ஷ்ரோன் வழிதா. அவங்க் வழி  தனி வழி..”
“ எப்பிடி  “
“ டாம் டாம் பத்திரிக்கை இந்த இஷ்யூ முப்பத்தஞ்சம் பக்கம் பாருங்க  “
டாம்டாம் புதிதாய் வந்திருக்கும் வாரப்பத்திரிக்கை, ஊர் முழுக்க விளம்பரங்கள் பார்த்திருந்தான். பாண்டியன் நகர்  தாய்த்தமிழ்ப்பள்ளி முக்கு பெட்டிக் கடையில் டாம்டாம் அந்த வார அட்டையில் திரிஷாவுக்கும் நயன தாராவுக்கு  என்னென்ன வித்தியாசங்கள் என்று தலைப்பிட்டு திரிஷா மார்பைக்காட்டி சாய்ந்து சிரித்தாள். முப்பத்தைந்தாம் பக்கத்தைப்புரட்டினான்.இடையில் சமீரா ரெட்டியின் டீசர்ட்டை கன்னாபின்னாவென்று கிழிக்கும் ஆடம்சாக்ஸ் கண்ணில் பட்டார்.
எனக்குத் தேவை  “ பேஸிக் இன்ஸ்ட்ங்ட் “ ஷ்ரோன் ஸ்டோன்.
முப்பத்தஞ்சாம் பக்கம் . அட..முப்பத்தஞ்சாம் பக்கம்  நடுப்பக்கமல்லவா.. ஷரோன் மார்புகளின் பிளவு தெரிய தொடையை அகல விரித்துக்க் கொண்டு மேசை மேல் உட்கார்ந்திருந்தாள். ஷரோன் பற்றிய செய்தியை பரபரவென்று படிக்க ஆரம்பித்தான்.
மகா நட்சத்திரம்  கூரியரில் காதலனுக்கு மோதிரத்தைத் திருப்பி அனுப்பியிருந்தாள்.



-----------------சுப்ரபாரதிமணியன்--------------

புதன், 9 ஏப்ரல், 2014



செவ்வாய், 25 மார்ச், 2014

உறைந்த சித்திரங்கள் – கேரள சர்வதேசத் திரைப்பட விழா


                                                     
தொடர்ந்து புத்தகம் படிக்காதவர்கள் கழுதைகள் போல் திரிவார்கள் “   18வது கேரள சர்வதேசத் திரைப்பட விழா தொடக்க விழா படத்தில்   ( அன்ன அரபியாஇஸ்ரேலியப்படம்; இயக்குனர் அமோஸ் கிட்டாய்ஒரு முக்கிய கதாபாத்திரம் சொல்லும் வசனம் இதுதிருவனந்தபுரத்தில் துவக்க விழா படம் திரையிடப்பட்ட நிசகாந்தி அரங்கின் முகப்பிலேயே புத்தக்க கண்காட்சி., திரைப்பட விழாவின் அலுவலக பகுதி அமைந்த கைரளி திரையரங்கு சுற்றிலும்  திரைப்பட சம்பந்தமான பல புத்தக அரங்குகள் கேரள திரைப்பட விழாவை  ரம்மியமாக்கியிருந்தது. (  அன்ன அராபியா: 85 நிமிடப் படமான இது ஒரேசீக்குவன்ஸ் ஷாட்டில் “  எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இடையில் எந்த வெட்டும் கிடையாதுஇஸ்ரேலில் யூதர்கள்அரேபியர்கள் இணைந்து வாழும் ஒரு சிறு பகுதியை மையமாகக் கொண்டு  யால் என்ற பத்திரிக்கையாளப் பெண் அங்கு சென்று சிலரை பேட்டி காண்பது இதன் மையமாகும்  இடிந்த நிலையிலான வீடுகள், சேர்ந்த எலுமிச்சை தோட்டம் அங்கு வசிக்கும் சிலரின் மனப்போக்குகளும், விசித்திரங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பெண்ணின் பேட்டி மூலம் வெளிக்கொணரப்படுகிறது.).


திரைப்பட விழாவின் அலுவலகம்  அமைந்த பகுதியில் முன்பெல்லாம் சுற்றுச்சூழல் பற்றிய சுவரொட்டிகள், வாசகங்கள் கவனத்தை ஈர்க்கிற  விதமாய்  காணப்படும். கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து கண்ணில்
பட்டவை  என்டோ சல்பான் அபாயம் பற்றியவை ( இவ்வாண்டு வெளிவந்திருக்கும் என்மகஜே “  என்ற சிற்பியின் மொழிபெயர்ப்பிலான மலையாள நாவல்   என்டோசல்பான் பாதிப்பால் சீரழிந்த மக்களின் துயர வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. ) இவ்வாண்டு  “ மேற்குத் தொடர்ச்சி மலையைப் காப்பாற்றுவோம் “  என்ற வாசகங்களுடன்  அவ்வகையில் பல பதாகைகள் தென்பட்டன. கஸ்தூரி ரங்கன் அறிக்கை சம்பந்தமாக பல போராட்டங்கள் கேரளமெங்கும் நடைபெற்று வருகின்றன.

பெண்கள் மீதான் வன்முரை பெருகி வரும் சம்யத்தில் பெண்கள் திரைப்பட விழா படங்கள் நடைபெறும் திரையரங்குக்களுக்குச் சென்று வர  இலவச ஆட்டோக்களும், டாக்சிகளும்  விழா அமைப்பாளர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது பெண்களுக்கு கொஞ்சம் பாதுகாப்புணர்வை தந்தது ( அவற்றின் பெயர்கள் :She Taxi,   women friendly autos ) .மிதிவண்டி மன்றங்கள் என்ற பெயரில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையை வெளிப்படுத்தும் பதாகைகள், பூட்டப்பட்ட சைக்கிளுடன் காந்தி பூங்கா தெருவில் காணப்பட்டது  :     ” மிதி வண்டியைப் பயன்படுத்துங்கள். உங்கள் உடல் நலதற்காக, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக  ” என்ற வாசகங்கள் பளிச்சிடுகின்றன )
சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையிலான படம் என்ற வகையில் சென்ற ஆண்டின் தேசிய விருது பெற்ற         ” பிளாக் பாரஸ்ட் “  இவ்வாண்டு போட்டிப்பிரிவில் இடம்பெற்றிருந்தது. ஒருவகையில் மிட்டுவும், மிலியும் தங்கள் பெற்றோர்களால் கை விடப்பட்டவர்கள்விடுமுறையைக் கழிக்க  வீட்டிற்குச் செல்ல இயலாத சூழலில்  காட்டில் வசிக்கும் லூக் மாமாவிடம் செல்கிறார்கள். ஆதிவாசிகளின் வாழ்வியலும் காடும், விலங்குகளும்  அவர்களுக்குத் தரும்  அனுபவங்களும் அவர்களை வேறு உலகில் இருக்க வைக்கிறது. இந்த மலையாளப்படத்தில்  தலைநகரில்  தலைமை செயலகத்திற்கு அருகிலான சாக்குப்படுதாவீட்டில் பஞ்சான் பிறக்கிறான். மரங்கள் வெட்டப்படுவது, காடழிப்பு சம்பந்த்மாக அவன் அப்பா சிறைக்குப் போய் விட்டு விடுதலை ஆனபோது அவன் அப்பாவை வரவேற்க தலைநகருக்குச் செல்கிறான். அவன் அப்பா மலையில் காற்றாடிகள் போட்ட முதலாளிகளின் மிரட்டலால் காட்டிற்குள் தலைமறைவாகிறான்.அவனைத் தேடி பஞ்சான் இரு நகரக் குழந்தைகளோடு செல்கிறான். அவன் அப்பா சொன்ன தொன்மக் கதையொன்று  அவனை வழிநடத்துகிறது.

விழாவின் சிறந்த படத்திற்கான   பரிசைப் பெற்ற படம்    ” பர்விஷ்என்ற ஈரான் திரைப்படம் .தன் தந்தை மறுமணம் செய்து கொள்கிற போது  அவரின் சமையல் வேலை , வீட்டைப் பாதுக்காக்கிற வேலையில்  ஈடுபட்டிருந்த  அவரின் அய்மபது வயது மகன்  பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறான. வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறான். அப்பா தனி வீட்டு வாடகை கொடுத்தாலும்  அவரின் ஆதிக்கம் அவனை இம்சிக்கிறது.தேடிக்கொள்கிற காவலாளி வேலையில் தன்னைப் பொருத்திக்கொள்வதில்லை. நாய்கள் செய்யும் தொல்லைகள் பார்ர்த்து விஷம் வைத்துக் கொல்கிறான்.குழந்தையொன்றை தள்ளிக் கொண்டு போய் குழந்தை வண்டியை நிராவதாரமாக்கிப் போகிறான்சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் உலர் சலவையகத்து இடத்து முதியவனைக் கொல்கிறான். மனம் விசித்திரமாய் செயல்படுவது அவனுக்கே தெரிகிறது. அவனின் விசித்திரம் பார்வையாளர்க்குப் பதட்டத்தை  ஏற்படுத்துகிறது.


பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த படமாக ஆஸ்திரேலியாவின்ராக்கெட்இருந்தது.மலைப்பிரதேசத்தில் பெரும் சாபத்துடன் வாழ்கிறான் அச்சிறுவன். அவன் அம்மாவின் இரட்டைப்பிரசவத்தில் தப்பித்தவன் அவன். அவன் உயிரோடு இருப்பதே சாபம் என்கிற பாட்டிஇன்னொரு  அணை கட்டப்படுவதற்காக  அவர்களின் மலைப்குதி  கட்டாயமாக kali செய்யப்படுகிறது.அம்மாவும் இடையில் இறந்து போகிறாள்கன்னிவெடிகள், ஆயுதங்கள் விரவிக்கிடக்கும் பகுதி. ஜீவாதாரத்திற்கே சிரமம். அவன் அப்பா மலைப்பகுதியை விட்டு  தொழிற்சாலை உள்ள நகரப் பகுதிக்குச் செல்லும் யோசனையில் இருக்கிறான். புது இடத்தில் நடக்கும் ராக்கெட் திருவிழா சிறுவனுக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த மழை கொட்டுகிறது. ராக்கெட் விடும் போட்டியில் சிறுவன் வெற்றி பெறுகிறான்.
பார்வையாளர்கள் துருக்கியின்கதை சொல்லியில் அமிழ்ந்து போனார்கள். அஷிஸ் புகழ் பெற்ற நாடக நடிகராக இருந்தவர்புகழின் உச்சியில் இருந்தபோது பல பெண்களால் கவரப்பட்டு புற்று நோய் உபாதையில் இருந்த மனைவியை நிராகரித்து விவாகரத்து வாங்கியவர். பின்னர் நாடக வாய்ப்புகள் குறைந்து போய் வயதான காலத்தில் பொது இடங்களில், மால்களில், உணவு விடுதிகளில் கதை சொல்பவராக வாழ்க்கையை நடத்துகிறார். குழந்தைகளுக்கு அவர் சொல்லும் கதைகளை விட அவருக்கு பின்னால் வந்து சிரிப்பூட்டும் கோமாளிகள் தேவைப்படுகிறார்கள். தன் மகளைத் தேடி பழைய வாழ்க்கைக்கு மன்னிப்பு கோருகிறார். ஆனால் கதை சொல்லிக் கொண்டிருக்கும் ஒரு இரவில் இறந்து போகிறார்.

மிகுந்த ஏமாற்றம்  தந்த  திரு இயக்குனர்கள் கிம்கி டெக் ( கொரியா )  , நோர்பு  ( பூட்டான்.)                     கிம்கி டெக்  ( மோயிபஸ்படத்தில் கணவனின் பாலியல் நடவடிக்கைகளை கவனித்து வெறுப்புற்ற மனைவி அவனின் ஆணுறுப்பை வெட்ட முயல்கையில் அவன் தப்பிக்க மாட்டிக்கொள்கிற மகனின் ஆணுறுப்பு வெட்ட்டப்படுகிறது.அவன் பள்ளியிலும் வெளியிடங்களிலும் அவமானப்டுத்தப்படுகிறான். அறுவைச் சிகிச்சை மூலம் வேறொன்று பொருத்தப்படுகிறது. பாலியல் தொந்தரவு செய்யும் இன்னொரு பையனின் ஆணுறுப்பு வெட்டப்படுகிறது. இப்படியே தொடர்கிறது. பாலியல் சார்ந்த அருவருப்பான்  படத்தை பார்த்த அனுபவமே ஏற்பட்டது. வசனமே இல்லாமல் கதறல், முணகலுடன்  புதிதாய் வடிவமைத்திருந்தார். கேரள திரைப்பட விழாவில் இளம் வயதினர் பெரிதும் பங்கு கொள்வதுண்டு. இப்படத்தைப் பார்த்து மயங்கிய இளம் பெண்களும், அதிர்சியில் உறைந்து போன பெண்களும் கிம்கிடெக்கை சபித்தபடி வெளியேறினர். கிம்கிடெக் பார்வையாளர்களுடான சந்திப்பில் அவரின் சமீபத்திய படங்களின் வணிக ரீதியாய் கட்டமைக்கப்பட்ட வன்முறை குறித்து   சொன்ன சமாதானங்கள் ஒரு நல்ல கலைஞருக்குரிய அடையாளங்களாக இல்லை. தென் கொரியா உட்பட பல நாடுகளில் இப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. கடைசியில் புத்தரிடம் போய் சரணடையச் செய்கிற  குறியீடுகள் அருவருப்பே தந்தன. னித்துவமான அழகும், தனித்துவமான வன்முறையும் என்னளவில் ஒன்றுதான்குடும்ப அமைப்பை உடலின் அமைப்பின் வழியாகச் சொல்கிறேன். பிறப்புறுப்பின் வழியாகச் சித்தரிக்க விரும்புகிறேன்.குடும்ப அமைப்பில் உருவாகும் வன்முறைகளைச் சொல்கிறேன். வன்முறைகள் உருவாகும் காரணங்களை என் படங்கள் சொல்கின்றனவாழ்க்கை வன்முறைக்கும் அகிம்சைக்கும் இடையிலானது வன்முறையும் புத்தமதமும் வெவ்வெறாகத் தெரிந்தாலும் இரண்டையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன் என்றார்.
( கிம் கி டெக்கின் படம் திரையிடலுக்கு முந்திய படமாக அஞ்சலி திரையரங்கில் மறைந்த வங்க இயக்குனர் ரிதுபர்னோகோஷ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்த  ” மெமரிஸ் இன் மார்ச்என்ற படம்  இருந்ததுஓரின பாலுணர்வு பற்றி நாசுக்காவும், விவாதமாகவும் உயர்ந்த தளத்தில் பேசிய படம். நமக்குத் தேவை ரிதுபர்னோகோஷ்கள்தான். கிம்கி டெக்குகள் அல்ல என்ற விவாதம் மேலெழும்பியது. ) பூட்டாவின் நோர்பு   இயக்கிய படம் சுனில் கங்கோபாத்யாயாவின் நாவலை மையமாகக் கொண்டதென்றாலும் தேவதாசிக்குடும்பம், வாரிசு, நிலப்பிரபு, எழ்ழைக்காதலன் என்று யூகிக்கக்கூடிய காட்சி அமைப்புகளுடனே இருந்தது. மண்  சிறபங்கள் செய்ய்யும் தலித் பையன் தேவதாசிப் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அவளை கர்ப்பமாக்கி விடுகிறான். பண்ணையார் மகனுக்கு அவள் மேல் கண் என்பதால் அவள் அவனுடனும் கூடி அது  பண்ணையார் மகனின் சிசு என்கிறாள். தலித் சிசுவை பண்ணையார் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்இடையில் முஸ்லீம்கள் சிலைகளை நொறுக்குவது போன்றவை வலிந்து சொல்லப்பட்டிருக்கிறது.
இலங்கைப்படமும் தமிழ்ப் போராளிகளை கொச்சைப்படுத்தும் பல விசயங்களால் கட்டமைக்கப்பட்டிருந்ததுயாழ்ப்பாணம் புலிகள் காய்ச்சலில் மிதப்பதாக குழதைகளை அடிக்கும் ஒருவனை வைத்து ஒரு வசனம் புகுத்தப்படுகிறது. பிரபாகரன் இறந்ததைக் கொண்டாட பட்டாசு வாங்கப போகிற 3 இளைஞர்களின் விசித்திரப்போகுகள்  இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.பிரபாகரன் இருக்கிறாரா என்று அதில் ஒரு இளைஞன் கேள்வி கேட்கிறான் அதற்கு தமிழனின் தோட்டத்தில் கள்ளு குடிக்கும் ஒரு சிங்கள் போலிஸ்காரன் இப்படிச் சொல்கிறான். : அதெல்லாம் நமக்கெதுக்கு . குடித்து குடியை அனுபவிதமிழனான விவசாயி நிலத்திலிருந்து காய்கறிப் பொருட்களும் தானியமும் சுரண்டி எடுத்துப் போகிற போலீஸ்காரன், குழந்தைகள் பொம்மைத்துப்பாக்கிகள் போலவே துப்பாக்கிகளை பாவித்து கொலை செய்து கொள்கிறார்கள்.   ஆய்தங்களை உபயோகித்துப் பழக்கப்பட்ட இளைஞர்கள் சிங்கள் புலிகள், பாதித்தமிழர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். வெலிக்கடை சிறையில் பத்தாண்டுகள் வாசமிருந்து வெளிவந்து காலில் தென்படும் கத்தியை நிராகரித்து புது வாழ்வுக்குத் தயாராகிறார்கள்.


போர்ஹேவின் புத்தகமொன்றை மையமாகக் கொண்டு பிழைகள் புத்தகத் தயாரிப்பில் மட்டுமல்ல சாதாரண வாழ்க்கையிலும் கொண்டு வரும் குழப்பங்களைஎரட்ட “  என்ற படம்  சொன்னது. இப்பட இயக்குனர் இவான் வெஸ்கொவொ  25 வயது இளைஞர். இதில் அவர் கட்டமைத்திருக்கும் உலிஸ்சஸ் கதாபாத்திரம் காதல் வயப்பட்ட  ஆண்களின் பிம்பமாக இருக்கிறான் . யதார்த்தத்திலும் புனைவிலும் கலந்ததாக ஞாபகங்களுடன் திரிகிறான்  அவனின் ஞாபகங்கள்  அவனைக் குழப்பத்திற்குள்ளாக்குகின்றன இந்தக்குழப்பங்களை கனவுகளாகவும், மனப்பிறழ்வாகவும் இந்த அர்ஜென்டைனா இயக்குனர் காட்டுகிறார். இந்தப்பட அனுபவம் ஒவ்வொரு முறை பார்க்கவும்   பாவ்லோ கொயா, போர்ஹே நூல்களின் வாசிப்பு போல புது அனுபவங்களைத் தரக்கூடியது  என்று   இவான் வெஸ்கொவொ நம்புகிறார்.காப்ரியல் மார்க்கூஸின்கலோனியலுக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை “  நாவலை மையமாகக் கொண்டிருந்த படம் யதார்த்தவாதப்பிரதியாக நாவலை மடித்துப் போட்டு விட்டது. முதிய கலோனல் ஒருவன் தம்து ஓய்வூதியம் பற்றிய கடிதம் வருமென்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்துக் கொண்டிருக்கிறான்.அவனது மனைவிக்கு ஆஸ்துமா வியாதி சிரமப்படுத்துகிறது. அவர்களின் ஆதாரமாக இருந்த மகன் வளர்த்த சண்டைக் கோழியின் சண்டைப் போட்டியில் சாகிறான்.ரசம் போனக் கண்ணாடிதான் கிழவிக்கு முகம் பார்க்கக் கிடைதத்துபாட்டிலில் நெஞ்சுத்தைலம் நோண்டி எடுத்து  நெஞ்சில் துடைக்க வேண்டியிருக்கிறது. இரண்டு இழுப்பு இழுத்து விட்டு மீதி சிகரெட்டை சிக்கனமாக வைக்க வேண்டியிருக்கிறது.கிறிஸ்துவ பாதிரியார் காட்டுக் படத்திற்கு இலவசமாய் போய் சங்கடத்துடன் உட்கார வேண்டியிருக்கிறதுபாதிரியிடம் மோதிரத்தை அடமானம் வைக்க வேண்டியிருக்கிறது. கோழிக்கான மக்கா சோளத்தை அவள் திஙக வேண்டியிருக்கிறது.செத்துப் போன மகனின் காதலி தரும் உணவுப் பொருட்களை மறுத்தாலும் வெட்கத்தை விட்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.கோழிச் சண்டையில் அது ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற பிரயாசை எங்கெல்லாமோ இழுத்துச் செல்கிறதுஇன்னும் 45 நாட்கள் இருக்கின்றன. கோழிச் சண்டைக்கு.அது ஜெயித்தால்தான் வாழ்க்கை மிச்சமிருப்பது போல் தென்படுகிறதுஇப்போதே சாப்பாட்டுக்கு வழியில்லை. என்ன செய்வது . எதைச் சாப்பிட கிழவி கேட்கிறான். அவன் சொல்கிறான் :                ” ஷிட் “   இந்த நாவலை மார்க்குவஸ் 1956-57ல் பாரிஷில்  வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது பாக்னரின் பாதிப்பில் எழுதியிருக்கிறார். பதினோரு முறை திருத்தி எழுதப்பட்ட நாவல்.அவர் உபயோகித்து வந்த டைப்ரைட்டர் இதனாலேயே தேய்ந்து விட்டதாம். கிடப்பில் அவர் போட்டிருந்த நாவலை சில நண்பர்கள் மெக்சிகோவில் தேடிக் கண்டு பிடித்து வெளியிட்டிருக்கிறார்கள்

போட்டிப் பிரிவில் பல மலையாளப்படங்கள் தென்பட்டன. தமிழ்திரையிடல் பகுப்பில்  ” சூது கவ்வும்இருந்தது. படத்தை முன்பே பார்த்து கிண்டலை பின்னணியில் தந்து கொண்டிருந்த தமிழ்ச சமூகம் பலருக்கு அருவருப்பையேத் தந்தார்கள். இலங்கை பிரசனை பற்றிய  சந்தோஷ் சிவனின் தமிழ்ப்படம்சிலோன்பட்டியலில் இருந்தாலும் திரையிடப்படவில்லை.              ( கோவா திரைப்பட விழாவில் ராமின்தங்க மீன்கள்மூன்று முறை திரையிடபட்டது. அதை அங்கு திரும்பத் திருமபக் கோரியவர்கள்  மலையாள பார்வையாளர்கள். கேரளாவில் தங்க மீன்கள் முன்பு வெளியிடப்படவில்லை .அதனால் ஆவலுடன் பார்த்தார்கள் ஆனால் திருப்திப்படவிலை )

தெரு படத்தயாரிப்புகள் “street film making என்ற தலைப்பிலான் 10 லத்தீன் அமெரிக்கப்படங்களின்  திரையிடல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வணிக நோக்கங்களைத் தகர்த்து கலகக் குரலும் கலாச்சார அம்சங்களும் இணைந்த தன்மையை இப்படங்கள் கோடிட்டன. மெக்சிகோ, அர்ஜன்டைனா, கொலம்பிய, கியூபா படங்கள் இப்பிரிவில் இடம்பெற்றிருந்தன. லத்தீன் அமெரிக்க திரைப்படங்களில்  க்யூபா படங்கள் அதன் தொண்ணுறைம்பது கால நீட்சியில் புரட்சிகர அம்சங்களையும், கலாச்சார மோதல்களையும் சரியாகவே உள்ளடக்கி இருந்தன.
லத்தீன் அமெரிக்காவில் விடுதலை இறையியலைக் கொண்டிருந்தவர்கள் அமெரிக்க அரசு  சர்வாதிகாரத்தால்  பல ஆண்டுகளாக படுகொலை செய்யப்பட்டார்கள்.விடுதலை இறையியலை விரும்பும் மக்கள் சோசலிச அரசாங்கஙகள் உருவாக முயற்சிப்பவர்களாக இருப்பார்கள் என்ற பயம் எப்போதும் இருந்திருக்கிறதுஇதை சொல்லுமம்சங்களை இப்படங்களில் காண முடிந்ததுஇப்பிரிவில் இடம்பெற்றிருந்த படம்சிவப்பு இள்வரசி ” . இதில் வரும் கிளாடியா என்ற பெண்குழந்தைக்கு  புரட்சிக்காரியாக தன்னை விளையாட்டில் காட்டிக் கொள்வதில் விருப்பம் இருக்கும். புரட்சிகரகாலமொன்றில்  அவளின் குடும்பம் நிகாரகுவாலிருந்து அரசியல் காரணங்களுக்கு வெவ்வேறு ஊர்களுக்குப் போய் தங்க நேரிடுகிறது.சில உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் அவ்வப்போது தங்கி காவல்துறையின் கண்காணிப்பு தொடர்கிற போது  தப்பிக்க வேண்டியிருக்கிறது. அப்போதெல்லாம் கிளாடியாவின் பயமும் அலைக்கழிப்பும் சிரமமாக இருக்கிறது. பள்ளியில் கோரஸ் பாட்டுப்பயிற்சியும் அரங்கேற்றமும் தடைபட்டுப் போவது அவளை இம்சிக்கிறது. கடைசியில் தந்தை சுடப்பட்டு கிடக்க பலநாட்கள் தலைமறைவாகி வந்த அம்மா வெளிநாட்டிற்குத் தப்பியோட விமான நிலையம் வந்தபின்னும் கிளாடியா கோரஸ்பாட்டுப் பயிற்சியிலேயே  மனம் திண்டாட சிரமப்படுகிறாள்.பெற்றோரின்  புரட்சிகர நடவடிக்கைகளால் குழந்தைகளின் மனம்  சஞ்சலமும் சிதைவும் கொள்வதை இப்படம் சித்தரித்தது. இதில் வருகிற சில குழந்தைகளின் பிரார்த்தனைகளை கவனியுங்கள் :  1. ” எங்க வீட்டுக்கு வாசிங் மிசின் வாங்கித் தா. வாசிங் மிசின் பிரச்சினையால்  அப்பா, அம்மா, சண்டை ஏற்படுகிறது. 2. நான் கண்ணாடி போடுவதை விட வேண்டும்  3. நான் நல்லா  உயாமா வளரணும்

குழந்தைகளுக்குள் இந்த வகைக் குழப்பங்களும் உள்ளன    .” அப்பா அம்மாவுக்கு துரோகம் செய்கிறாரா. அப்பா, அம்மா நாட்டுக்குத் துரோகம் செய்கிறாரார்களா ”  ” தொலை தூரம்என்ற இன்னுமொரு இப்பிரிவு படம் க்யூபா நாட்டு பொருளாதாரச் சிரமங்களை கொண்ட பின்னணி பற்றிப் பேசியது.   சோவியது யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னால  க்யூபா மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ளும் காலத்தை இப்படம் கொண்டிருந்ததுபொருளாதாரச் சிக்கலகள் காரணமாக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளைத் தேடி வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள்முப்பத்தைந்து வயது அனா தனது பிறந்த நாளில் நண்பர்களெல்லாம் தன்னை விட்டுப் பிரிந்து போய் விட்டது பற்றி கவலை கொள்வதை இப்படம் சித்தரிததது.

100 வருட இந்திய சினிமாவை ஒட்டி பல கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதையொட்டிய படங்களின் திரையிடல் பட்டியலில் தமிழின் கர்ணன், பாசமலர் இடம் பெற்றிருந்தனநூற்றாண்டு  திரைப்பட சுவரொட்டிகள் கண்காட்சியில் அரங்கேற்றம் 1973, தண்ணீர் தண்ணீர் 1981, கர்ணன் 1963  பட சுவரொட்டிகள் இடம் பெற்றிருந்தன.மலையாள திரைப்படத்திற்கு 75 வயதா, 85 வயதா  என்பது பற்றிய சர்ச்சை துவக்க விழாவிலேயே ஆரமபித்து விட்டது. இந்த சர்ச்சையில் இயக்குனர் கமல் அவரின்செல்லுலாய்ட்படத்தை திரைப்பட விழாவில் இருந்து விலக்கிக்கொள்ளப் போவதாகச் சொன்னார்அவரின்செல்லுலாய்டு”  படம்விகிதகுமாரன்”  என்ற 80 ஆண்டுகளுக்கு முந்தைய  படத்தைத்  தயாரித்த ஜே.சி டேனியலின் வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தது.
கமலேஸ்வர் முகர்ஜியின் இயக்கத்திலானமேகெ தாகா தாராபடம் மறைந்த வங்காள இயக்குனர் ரித்விகடக் பற்றியப் படமாக அமைந்திருந்தது. அவரின் முக்கிய படங்களின் ஒன்றினையே தலைப்பாக்கியிருந்தார்.ரிவிக்கின் படம் இந்திய பிரிவினைக்குப் பின் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்துhttp://puthu.thinnai.com/wp-admin/post-new.php கல்கத்தாவிற்கு இடம் பெயர்ந்த அகதி குடும்பம் ஒன்றை மையமாகக் கொண்டிருந்தது.கலாச்சார அரசியல் சூழலகளும் அம்சங்களும் பின்னிப்பிணைந்த படம் அதுகமலேஸ்வர் முகர்ஜி 1969ல் ரித்விக் கடக் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்  நிகழும் பின்னணியைக் கொண்டிருந்ததுமேற்கு வங்காளத்தின் பலவேறு அரசியல் சூழல்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக நகசலைட் இயக்கங்களின்  தாக்கம் பற்றிய விவாதமாகவும் இருந்தது. ரித்விக் கடக்கின் நாடக, திரைப்பட அனுபவங்கள்,, கட்சி அவர் மீது வைத்த விமர்சனங்கள், ரித்விக்கின் எதிர்வினை என்று இருந்தது.பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவரைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர் ரித்விக் மருத்துவமனையில் சக நோயாளிகளை வைத்து ஒரு நாடகம் போட அனுமதிக்கிறார். அப்போது பின்னோக்கி நடந்த பல விசயங்கள்  நாடகப் பாணியிலேயே அமைந்திருக்கின்றன. ரித்விக்கின் குடும்ப வாழ்க்கைச் சிதைவும், மன நோயால் மின்சார அதிர்வு சிகிச்சையால் சிதையும் அவரின் உடல் சிதைவும்  மனதினை  அதிர  வைக்கிறது. ரித்விக்கின் படத்தில் கதாநாயகி அலறும்       ” தாதா .. நான் உயிர் வாழ வேண்டும்என்று கதறுவதைப்போல்   ரித்விக் உயிர் வாழ வேண்டும் என்று பார்வையாளர்களும் கதற வேண்டியிருக்கிறது.


பல  உலகத் திரைப்பட விழாக்களில் அதிக பட்ச விருதுகளைப் பெற்றஸ்டில் லைப்”  என்ற  இத்தாலியப்படம் எழுப்பிய கேள்விகள் பல தளங்களில் வைத்துப் பார்க்கிறதாய் அமைந்திருந்தது. இயக்குனர் : உம்பர்டோ பசோலினி.. அனாதையாக செத்துக்கிடப்பவர்கள், உறவினர் என்று அறியப்படாமல் போகிறவர்களைப் புதைக்கும் ஜான் மே  குடியினால் செத்துப்போகிற ஒருவனின் உறவினர்களைத் தேடும்போது பல சுவாரஸ்யமான கதைகள் கிடைக்கின்றன   ஆனால் அவரின் சாவு விபத்தால் நிகழ்கிறதுயாருமற்ற பிணமாகத்தான் புதைக்கப்படுகிறார். இந்தத் தலைப்பு பெரும்பாலும் ஓவியங்களூக்குத்தான் இடப்படுவதுண்டு. கேரளத்திரைப்பட விழாக்கள் எப்போதும் மனதில் உறையும் சித்திரங்களாவதை இது போன்ற படங்கள் இந்தாண்டும் மனதில் உறைய வைத்தன.

சுப்ரபாரதிமணியன்