சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 26 அக்டோபர், 2012

திரைப்படம்: ஹாலிவுட்டின்

திரைப்படம்: ஹாலிவுட்டின்

சுப்ரபாரதிமணியன்

Share
கடந்த ஆண்டுகளில் வெளியான அமெரிக்கப்படங்களில் குறிப்பிட்த்தக்கதாய் சம்வேர், பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான். அவன் போகுமிடங்களுக்கு கூட்டிச் செல்கிறாள். நட்சத்திரத்தின் மகள் என்ற அந்தஸ்து அவளுக்கு மிதப்பைத் தருகிறது. அப்பா என்ற நிலையில் அவளை நன்கு கவனித்துக் கொள்கிறான். விளையாட்டும், பொழுது போக்குமாய் கழிகிறது. ஜானியின் பெண் சிநேகிதிகளும், அவர்களுடனான விளையாட்டும் தொடர்கிறது. அவையெல்லாம் மகளின் பார்வையிலிருந்து தப்புவதும் இல்லை. திரைப்படவிழாக்கள், கைரேகை, கால்ரேகை பதிப்பு நிகழ்ச்சி நடிகைகளுடானான ஸ்டில் எடுக்கும் நிகழ்வுகள், பெரும் தயாரிப்பாளர்களைச் சந்திப்பது என்று பொழுதைக் கழிக்கிறாள். மகள் இல்லாத தனிமையைச் சட்டென உணர்ந்தும் பார்க்கிறான். அவனை உலுக்கி விடுகிறது. சொகுசோ, பணமோ ஆடம்பரமோ குறைவில்லாத நிலையில் மனைவியில்லாத தனிமை அவனை உறுத்தவே செய்கிறது. மகளை விடுமுறையைவிட்டு பிரிகிறபோது அந்த உறுத்தல் அவனை அழுகைக்குள்ளாக்குகிறது. இறுதிக் காட்சியில் விலை உயர்ந்த காரில் சென்று கொண்டிருப்பவன் காரை நிறுத்திவிட்டு நடந்து போகத் துவங்குகிறான். கதாநாயகனின் பெண்களுடனான நெருக்கமான காட்சிகளும், விடுதி அறையின் கட்டில் கம்பிகளில் பெண்களின் நிர்வாண நடனமும். லாஸ் ஏஞ்சல் முதல் இத்தாலி வரையிலான கதாநாயகனின் பயணங்களும் சுவாரஸ்யமானவை.
தன்னை நடிகன் என்று கண்டுகொள்வதால் ஏற்படும் வெறுப்பை இப்படத்தின் பல காட்சிகளில் காண முடியும் . பணம், புகழ் , வெற்றி என்று மிதப்பவன் அவன். பெராரி கார் மிக வேகமாக செல்வதில் பெயர் பெற்றது.அதில் ஏறி பிற கார்களை விரட்டுவதில் அவனுக்கிருக்கிற பிரியம் அலாதியானதுதான். மதுவும் தேடிவரும் பெண்களும் அவனை எப்போதும் மிதக்கச் செய்து கொண்டே இருக்கிறார்கள். பிரிந்து போய் விடுகிற மனைவி. திடீரென்று ஒருநாள் தன்னிடம் வந்து சேர்கிற மகள். மகள் தன்னுடன் இருக்கிறபோதே அவன் தன்னை தந்தை என்று அடையாளம் கண்டு கொள்கிறான். அவளுக்கு நீச்சல் பயிற்சி, பாலே நடனப்பயிற்சி , ஓவியக் கண்காட்சிகள், விருந்துகள் என்று அவளைத் திருப்திபடுத்துகிறான். மகளும், பிரிந்து விட்ட மனைவியும் இல்லாதபோது தன்னை அந்நியனாகவே இனம் கண்டு கொள்கிறான். வேகத்திற்குப் பெயர் பெற்ற பெராரி காரை பாலைவனத்து சாலையின் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு எவ்வித இலக்குமின்றி நடக்கிறபோது அவன் ஒரு சாதாரண மனிதனாக இனம் கண்டுகொள்கிறான்.


இதன் இயக்குனர் ஷோபியா கப்போலாவின் முந்தின படமும் தி லாஸ்ட் டிரான்ஸ்லேசன் குறிப்பிடத்தக்கது. சம்வேர் படத்திற்கு ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் அமெரிக்க பெண் இயக்குனர் என்ற அளவில் பெருமை பெற்றவர். வெனிஸ் திரைப்படவிழாவில் சிறந்தப்பட பரிசு பெற்றதன் மூலமும் சர்ச்சைக்குள்ளான்வரானார். வெனிஸ் திரைப்படவிழா தேர்வுக்குழு தலைவர் நெருக்கமானவர் என்பதால் சர்ச்சை பரிசு குறித்து எழுந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சம்வேர் பட இயக்கத்தில் ஈடுபட்டவர், மாடலில் உட்பட பல தொழில்களில் இருந்தவர் என்ற வகையில் அவர் மீதான் சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை. ‘காட்பாதர்’ போன்ற படங்களை இயக்கிய கொப்பலாவின் மகள் இந்த ஷோபியா.


ஆறு ஆஸ்கார் அகாதெமி விருதைப்பெற்ற அமெரிக்கப் படமான ‘பிரிசியஸ்’ சபையரின் நாவலை மையமாகக் கொண்டத் திரைப்படம். அதிக எடை கொண்ட பதினாரு வயதுப் பெண் பள்ளியிலிருந்து இரண்டாவது முறை கர்ப்பமடைந்த காரணம் காட்டி வெளியேற்றப்படுகிறாள். பள்ளியில் சக வயதினர் நிகழ்த்தும் வசை சொற்பிரயோகங்களும் அவளை பள்ளியிலிருந்து துரத்துகிறது. அவளின் முதல் கர்ப்பத்தைப் போலவே இரண்டாம் கர்ப்பத்திற்கும் காரணம் அவளின் தந்தைதான். வேலையில்லாத அம்மாவும் அவளை வார்த்தைகளால் காயப்படுத்துபவள்.வீட்டை விட்டு வெளியே துரத்துவதில் கண்ணாக இருப்பவள். மாற்றுப்பள்ளியொன்றில் சேர்கிறாள். அங்குள்ள ஆசிரியரும், தாதிப் பெண் ஒருத்தியும் அவளுக்கு ஆறுதலாக இருக்கின்றனர். வீட்டைவிட்டு வெளியேறுபவளுக்கு கிறிஸ்துவ தேவாலயத்தின் குழுப்பாட்டும் இசையும் ஆறுதலாக இருக்கிறது.


அம்மா அவளை சமூக நல அலுவலகத்தில் சந்திக்கிறபோது அவள் அப்பா எயிட்ஸால் செத்துவிட்டதாகத் தகவல் சொல்கிறாள். மகளும் தன் குழந்தையின் எயிட்ஸ் பாதிப்பைச் சொல்கிறாள். அவள் பற்றிய விபரக் கோப்பொன்றை அலுவலகத்திலிருந்து திருடி, நெருக்கமான இருபெண்களிடம் காட்டுகிறாள். அவர்கள் தரும் ஆறுதல் அவள் வாழ்க்கையை நடத்த ஏதுவாகிறது. கறுப்பினப் பெண் ஒருத்தியின் சொல்லவியலாத கொடுமைகள் அடங்கிய வாழ்க்கையை இதன் இயக்குனர் லீ டேனியல் இப்படத்தில் வைத்திருக்கிறார். நாவலின் மையத்தை சரியாக வெளிக் கொணர்ந்த்தன் மூலம் கறுப்பின சமூகம் பற்றின பார்வை சரியாக் முன் வைக்கப்பட்டிருக்கிறது இதில். 35 லட்சம் மில்லியன் டாலர் சம்பளம் பெறும் ஒரு ஹாலிவுட் நடிகையின் வாழ்க்கை ஒரு புறம். இன்னொருபுறம் அதே அமெரிக்க சமூகத்தில் வாழும் ஒரு கறுப்பினப் பெண் தன்னை சாதாரணமானவளாகக் காட்டிக் கொள்ளவே துயரங்களை மறைத்து நடிக்கும் நடிகையாக வேண்டியிருக்கிறது.
இந்திய வம்சவளி இயக்குனர் மனோஜ் நைட் சியாமளனின் ‘ஏர் பைண்டர்’ தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு வெற்றியைத் தழுவியது. டாய்ஸ் ஸ்டோரி படத்தின் மூன்றாம் பாகமும் இவ்வாணடு பெரும் வெற்றி பெற்று அனிமேசன் படங்களுக்கான வெற்றியைச் செய்தியாய் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் படங்களும், ‘ தி கராத்தே கிட்’ மறு உருவாக்கமும் உயர்ந்த தேர்ந்த தொழில்நுட்ப படங்களின் (ஸ்கை லைன்) தோல்வியைத் தாண்டி குழந்தைகளை மையமாக்க் கொண்டவற்றின் வெற்றியை உறுதிப்படுத்தியிருக்கிறது. இன்சப்ஷன் போன்ற படங்களின் வெற்றி நம்பிக்கை தந்திருக்கிறது. சிஜஏ பிரதிநிதிகளை கதாநாயகர்களாக்க் கொண்டு ரஷ்யா, வியட்நாம், க்யூபா, போன்ற நாடுகளில் சாகசச் செயல்கள் செய்ய தேவையில்லாது போய்விட்டது. உலகின் கடைசி ராட்சத மிருகங்கள் போன்றவற்றைக் காட்டி மிரட்டிவிட்டு ஹாலிவுட் அலுத்துப் போயிருக்கிறது. இனி ஜீலியன் அசாஞ்ச்சின் விக்கிலீக்ஸ் வெளித்தள்ளியிருக்கும் தகவல்கள் கதைச்சுரங்கமாகும் அவர்களுக்கு.

சனி, 13 அக்டோபர், 2012

திரைப்படம் : ஹாங்காங்கின் இரவுகள்

ஆண்கள் மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன.

முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் குடும்பத்தில் பிரச்சினைகளாகி வன்முறை ரூபம் எடுக்கின்றன. கவனித்தும், அனுபவித்தும் கற்றுக் கொள்கிற சமூக புரிதல் இல்லாமல் போவதால் இது அதிகரிக்கிறது.ஆணாதிக்க மேலாணமையும், அதிகாரமும் உச்ச பட்ச நிலையை இதனால் எட்டுகின்றன.இது தரும் மன் அழுத்தமும், அதன் வடிவான மன நோயும் சாதாரணமாகி விடுகிறது . வேறொருபுறம் இது குழந்தைகள் மீதாவ வன்முறையாயும் வளர்கிறது. குழந்தைகள் மீதான இந்த வன்முறை ஆண்டுதோறும் 4 மில்லியன் குழந்தைகளைப் பாதிக்கிறது. எழுபதுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெண்ணிய இயக்கங்கள் இதை ஓரளவு கட்டுப்படுத்தி சட்டநியதிகளை கொண்டு வந்திருக்கிறது.. குடும்பப்பெண்கள், குழந்தைகள் மீதான வண் முறையின்  உச்சமாக் “ நைட் அண்ட் போக்” படம் தென்பட்டது.

நிஜக்கதையொன்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படம் ‘நைட் அண்ட் போக்’ . மனைவி, இரு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தையே கொலை செய்து விடுகிற கணவனின் முரட்டு வாழ்க்கை பற்றியது. முரட்டுத்தனமான கணவர்களின் குறியீடாய் கூட அவன் திகைந்து விடுகிறான். நம்மூர் நிஜ வில்லன்களின்  ஒரு பரிமணமாக அந்தக் கணவன் இருக்கிறான்.
வழக்கமான கணவன்மாராகவே இருக்கிறான். அவனின் முந்தைய திடுமணத்தால் வளர்ந்த பையன் இருக்கிற நிலையில் விவாகரத்து பெற்றவன். மீன் சமையலில் வறுத்தது தவறு. வேக வைத்திருக்க வேண்டும் என்று சண்டை போட்டு மனைவியை அடிக்கிறான். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான பணத்தைக் கட்டாமல் குழந்தைகளுக்கும் சங்கடமளிக்கிறான். மனைவியின் கைகளைக்கட்டி படுக்கையில் கிடத்தி உறவு கொள்வது அவனுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. அவன் வேலையில்லாதவன் என்பதால் கிடைக்கும் பென்சன் அவனுக்கு இன்னும் பிடித்தமானதாக இருக்கிறது. சமூக பாதுகாப்பு அலவன்சு அவனுக்கு வேலைக்குப் போகும் அவசியத்தை வற்புறுத்துவதில்லை. மனைவி வேலைக்கு போவது அவனுக்கு பிடிக்கவில்லை.பெண்ணாய் பலர் முன் நடமாடுவது அவனுக்கு இன்னும் பிடிக்கவில்லை. மனைவி அடி தாங்காமல் தத்தளிக்கிறாள்.
பக்கத்துப் போர்ஷன் பெண் காவல்துறை புகார் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கிறாள். மனைவி நிலைமை மீறும் போது அதையும் செய்து விடுகிறாள். குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார்கள். மனைவி அவளின் சகோதரி வீட்டில் தங்குகிறாள். கணவன் அங்கு வந்து கலாட்டா செய்யவும் குடும்ப அலோசனை மையத்திற்கு செல்கிறாள். கணவன் அப்பாவியாக தனது சிறு தவறுகளை பெரிதாக்கிவிட்டாள். அவளைப் பொன் போல பார்த்துக் காப்பாற்றுவதாக உறுதிமொழி தருகிறாள்.வீட்டிற்குத் திரும்பிய பின் வீட்டில் மறுபடியும் கணவனின் ரகளை அடி உதை. கையில் காயங்களுடன் அவள் மீண்டும் பிரிந்து ஒரு காப்பகத்தில் சேருகிறாள். அங்கிருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் கொண்டாட்டங்கள் காப்பகத்தில் நடக்கின்றது. அவள் சின்ன வயது நினைவுகளில் முழ்கிப் போகிறாள்.

அவளின் சின்ன வயது அனுபவங்களை அவள் நினைத்துப் பார்க்கவே ரம்மியமாக உணர்கிறாள். ஹாங்காங்கிற்கு வேலை கிடைத்து திரும்புகிறவள் ஒரு தொலைக்காட்சி பெட்டியோடு திரும்புகிறாள். அடுத்த முறை கிராமத்திற்கு வரும்போது தன் கணவனாய் வருகிறவனை அழைத்து வருகிறாள். கிராமத்தில் அவனுக்கு என்ஜினியர் என்று பெயர். அவளின் ஓட்டு வீட்டை பராமரித்து கட்டிட வேலைகளைச் செய்கிறான். ”இன்ஜினியர்” . சாப்பாடு தாமதமாகிறது, தேவையான பணம் இல்லை என்று தெரிகிற போது அவன் வீட்டு நாய் மீது எரிச்சலைக் காட்டி கொல்வது வீட்டில் அனைவர்க்கும் அதிர்ச்சி தருகிறது. மனைவியின் தங்கை மீதும் ஒரு கண் அவனுக்கு. கிராம வாழ்க்கையை மீறி நகரத்தில் வேலை அமைந்து ஆசுவாசம் கொள்கிறாள்.
காப்பகப் பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருக்கிறார்கள். உளவியல் பாதிப்பு கொண்டவர்களாய் நடந்து கொள்கிறார்கள். மனவியாதியின் உச்சத்தில் இருந்து கொண்டு நடமாடுபவர்களும் அங்கு இருக்கிறார்கள். அந்த சூழல் அவளுக்கும் குழந்தைகளுக்கும் அச்சம் தருவதாக இருக்கிறது. கணவன் வேறு கைபேசியில் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறான். கணவனை நம்பி வீட்டிற்கு வருகிறாள். தன்னை அவமானப்படுத்தியதாக சொல்லி அடிக்கிறான். உச்சமாய் இரு குழந்தைகளையும் அவளையும் கணவன் கத்தியில் குத்திக் கொல்கிறான். முதல் மனைவி மூலம் பிறந்த மகனை பத்திரிக்கை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு அப்பா பற்றி கேட்கிறார்கள். “ நான் அவர் மகன் அல்ல” என்கிறார்.

கிராமத்தில் அப்பெண்ணின் அப்பா எல்லா சோகத்தையும் சுமந்தவராக ஓடி விளையாடும் முயலைப் பார்த்தபடி பீடி குடித்துக் கொண்டிருக்கும் இறுதிக் காட்சியோடு படம் முடிகிறது. படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் மனைவி மீதான வன்முறை உச்சமாய் காட்டப்பட்டிருப்பது பதற்றத்திற்குள்ளாக்குகிறது. பெண்கள் மீதான வன்முறை குறித்த ஒரு பிரச்சார இயக்கம் பற்றின ஓர் இடமும் படத்தில் இடம் பெறுகிறது.

ஹாங்காங் சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கம் பற்றி வெகு சாதாரணமாகச் சொல்லும் படம் இது. அதே சமயம் கும்பல் வன்முறை என்பது நிலைபெற்றிருக்கிற நகரமும் அது. முதலாளித்துவ பொருளாதாரம் கோலோச்சும் நகரம். இங்கிலாந்திற்கு இணையாக கல்விமுறை பயிற்சியும் சிறப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது. கிழக்கும் மேற்கும் சந்திக்கும் உலகமாகவும் பல விதங்களில் அமைந்திருக்கிறது. உலக வியாபார கேந்திரத்தின் ஒரு முக்யமான நகரமாகிவிட்டது. கேளிக்கை நடவடிக்கைகள் மூலம் அந்நகரம் பெறும் வருவாய் என்பது முக்யமானதாக இருந்து கொண்டு உலக பணக்கார மக்களை அந்த நகரத்திற்கு விரட்டிக் கொண்டே இருக்கிறது.இப்பட்த்தில் இடம் பெறும் இரவுக்காட்சிகள் ஒரு நகரத்தின் கேளிக்கைப்பரிமாணத்தையும், மறுபுறம் வன்முறையின் முகத்தையும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல காட்டுகின்றன.
————————————————————-----------------------------------------------------
சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602
————————————————————------------------------------------------------------------

செவ்வாய், 9 அக்டோபர், 2012

ஜெயந்தனின் தார்மீகக் கோபம்


இவ்வாண்டின் ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு பெற்ற நாவல்: ”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்) - - - - - - அமரர் ஜெயந்தன் பெயரில் வழங்கப்படும் சிறந்த நாவலுக்கான இந்த பரிசை எனது “நீர்த்துளி “ நாவலுக்குப் பெறுவதில் அவரின் தீவிர வாசகன், நண்பண் என்ற வகையில் பெருமைப்படுகிறேன். எழுத்தாளன் வாழும் காலத்தில் அங்க்கீகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பியவர் ஜெயந்தன். அவரது காலத்தில் அவர் கொண்டாடப்படவில்லை என்ற வருத்தம் எனக்குமுண்டு.எழுபத்தேழில் திருப்பூரில் நடைபெற்ற கலை இலக்கியப் பெருமன்ற மாநில மாநாட்டில் அவரை முதல் முதலில் சந்தித்தேன். அப்போது ஜெயகாந்தன் ஓரளவு ஓய்ந்து போயிருந்த காலம்.அந்த சாயல் பெயர் கொண்ட ஜெயந்தனை வெகுஜன இதழ்கள் முன்னிருத்தியதற்கு காரணங்கள் இருந்திருக்கக் கூடும்.அவரின் வெகு ஜன இதழில் வந்தக் கதைகள், கணையாழி படைப்புகள் மூலம் அவரின் தீவிர வாசகர்களாக குறிஞ்சி இலக்கிய வட்ட நண்பர்கள் இருந்தோம்.எனது முதல் கதை “ சுதந்திர வீதிகள்” திருப்பூரிலிருந்து வந்த விழிப்பு இதழில் அந்த மாதம் தான் வெளியாகியிருந்தது. மாநாட்டினர் தங்கியிருந்த ஒரு விடுதியில் ஜெயந்தனைத் தேடிப் போய் ஒரு அறையில் ஜெயகாந்தனைக் கண்டேன். ஜெயகாந்தனிடமே “ ஜெயந்தன் உள்ளாரா ‘’ என்று கேட்டேன். “ “ அப்படி யாரும் இங்கில்லை “ என்று அந்த சிங்கம் கர்ஜித்தித்த்து. அந்த மாநாட்டில் ஜெயந்தனின் “ இயக்க விதிகள் 3 “ என்ற நாடகத்திற்கு ஒத்திகை நட்த்தினோம். பேராசிரியர் ராமானுஜம் பயிற்சியின் போது கூட இருந்தார்.அது முதல் திருப்பூரில் நண்பர்கள் நடத்திய “ அயணஸ்கோவின் “தலைவர்’, அறந்தை நாராயணின் ” மூர்மார்கெட்”, ஞானராஜசேகரனின் “ வயிறு”, சங்கரப்பிள்ளையின் “ கழுதையும் கிழவனும் “,சி ஆர் ரவீந்திரனின் ‘’பசு’’ ,பாலகிருஸ்ணனின் நாடகங்கள், வீதி நாடகங்கள், ஜெயந்தனின் “நினைக்கப்படும் ஒரு பகுதி ” ஆகியவற்றின் நிகழ்தலின் போது ஜெயந்தனின் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற்றோம். அந்த கால கட்ட்த்தில் வெகுஜன் இதழ்களில் அவரின் படைப்புகள் வெகுவாக வந்தன என்பது பலமாகும். அதுவே அவரின் பலவீனமாகி பின்னால் அவர் கதைகளை வெகுஜன இதழ்கள் நிராகரித்த போது சிற்றிதழ்களில் எழுதுவது ஆயாசம் தருவது போல் ஒதுங்கியிருந்தார்.அவரின் நியாயமான கோபம் அவரை ஒதுங்கச் செய்திருந்தது உண்மை. அவரின் சமூகம் குறித்த அந்தரங்கமான கோபம் நியாயமானது. வெகுவாக வாசகனை உறுத்தக்கூடியது.

மனசாட்சியை உலுக்கக்கூடியது. பிரச்சார உத்தி ஒரு வகையில் கலை வடிவமாக சரியாக பல படைப்புகளில் வெளிப்பட்டிருக்கிறது. அது பல சமயங்களில் சாதாரண வாசகர்களுக்கு அவசியமானதாகியிருக்கிறது.சமூக மாற்றத்திற்கான வடிவமாக தனது படைப்புகளை முன் நிறுத்தியவர். கொண்டாடப்பட வேண்டிய அளவு நிறையவே எழுதியிருக்கிறார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து பாராட்டுபவர். அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய திசையை சரியாகவே சுட்டிக்காட்டியவர். அவர்களுக்கு வாசிப்பு மிக அவசியம் என்று வலியுறுத்தியவர்.அவர்களுக்கான சிறுகதை வகுப்புகளை நட்த்தியவர். சிற்றிதழின் அடையாளமாக வெகு எளிமையாக அவரின் “ கோடு “ இதழ் இருந்திருக்கிறது. என து முதல் நாவல் “ மற்றும் சிலர் “ 1988ல் வந்த போது அதை வெகுவாக சிலாகித்துப் பேசினார். ”புதிய தலைமுறை வெகுபாய்ச்சலாக தாண்டிக்குதித்து முன்னேறுகிறது. பொறாமையுடன் இந்த நாவலைப் பார்க்கிறேன். அதை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறேன். அவர்களுடன் போட்டி போட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் வெகுவாக ஒதுங்கி நின்று விட்டார் என்று பல கோணங்களில் தென்பட்டிருக்கிறது.அவரின் நாடகத்திற்கான ஒரு அமைப்போ, திரைப்பட முயற்சிகளோ கைகூடவில்லை. கடைசி நான்காண்டுகள் அவருடனான எனது தொடர்பு முழுமையாக அறுந்து போயிருந்தாலும், சொந்த ஊர் மணப்பாறைக்கு வந்து அவர் இலக்கிய கூட்ட செயல்பாடுகளில் இருந்தார் என்பது ஆறுதலாக இருக்கிறது.ஆனாலும் அவை வெளியுலகிற்கு தெரியாத்தாகவும், அவர் அந்நியப்பட்டதாகவுமே இருந்திருக்கிறது. ஆனால் படைப்பிலக்கியத்தில் ஒதுங்கியது போல் இருந்து விட்டார் என்று தோன்றுகிறது.,அவரின் நாவல் முயற்சி முழுமையடையாமல் நின்று விட்டிருக்கிறது. எனது எட்டாவது நாவல் “ நீர்த்துளி”க்கு அவரின் பெயரிலான விருது பெறுவது என்பது ஆறுதலான விசயமாகவே இருக்கிறது.

  சமீபத்தில் அவரின் மொத்தச் சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள் ஆகியவை முழுமையாக தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்திருக்கின்றன.அவை மூலம் அவர் நினைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் அவர் பெயரிலான படைப்பிலக்கிய விருதுகள் மூலம் நினைக்கப்படுகிறார்.இதை அவரது மகன் சீராளனும் அவரது குடும்பத்தாரும் , மண்ப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அதுவே அவரின் தார்மீக கோபத்தை புதிய தலைமுறை படைப்பாளிகளுக்குக் கொண்டு செல்வதாக அமையும்.இன்றைய சூழலில் அது அவசியமானது கூட.இந்தச் சூழ்லை அவர் பெரும அபாயமாக கணித்திருக்கிறார். அந்த அபாயத்தை எதிர் கொள்ள வேண்டிய கோபம் அவர் எழுத்தில் இருந்திருக்கிறது.- - - - - சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com http://solvanam.com/

திங்கள், 8 அக்டோபர், 2012

நிறம்


முடி வெட்டிக்கொள்ள நாற்பது நாள் இடைவெளி என்பது எனக்கு அதிகபட்சம்தான். வெளிநாட்டில் ஒருமுறை முடி வெட்டிக்கொள்கிற செலவு, இங்கே ஒரு வருடத்துக்கு முடி வெட்டிக்கொள்வதற்கு இணையானது என்பதால், சென்ற முறை எனது வெளிநாட்டுப் பயணத்தில் முடி வெட்டிக்கொள்வதைத் தவிர்த்தேன். சென்னைக்கு வந்து சேர்ந்த பின், அத்தியாவசிய வேலைகளின் பட்டியலில் தலைமுடி வெட்டிக்கொள்-வதைத் தலையாயதாக வைத்து, முப்பது ரூபாய் கொடுத்து தலைச்சுமையைக் குறைத்துக்கொண்டேன். ஆசுவாசம் பிறந்தது. இந்த முறை வெளிநாட்டுப் பயணம் பத்து நாள் இடைவெளியில் நிச்சயிக்கப்பட்டு, துரித கதி என்பதால் விசா, டிக்கெட், கருத்தரங்குக்கான கட்டுரைத் தயாரிப்பு போன்ற அத்தியாவசியப் பட்டியலில் தலைமுடியைக் குறைத்துக்கொள்வது இடம் பெறவில்லை. செலவை மனதிலிருந்து தள்ளி வைத்தேன். வெளிநாட்டில் முடி வெட்டிக் கொள்வது சுவாரஸ்யமான அனுபவம் ஆகலாம். ‘இண்டியன் சம்மரை’ ஞாபகப்படுத்தும் வெயில் நேரத்தில், முடியைக் குறைத்துக்கொள்கிற தீவிரத்துடன் அறையை விட்டு வெளியே வந்தேன். சலூனைத் தேடிக் கிளம்பினேன். வெளிநாட்டில் வெளியில் தனியாகக் கிளம்பிச் செல்வதென்பது காரணமில்லாத சற்றே பயம் தரும் விஷயமாகவே இருந்தது. வணிக வளாகங்கள் பலவற்றில் கறுப்புக் கண்ணாடிகளால் சூழப்பட்ட சலூன்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கு ஸ்டுடியோ என்று பெயரிடப்பட்டு இருப்பது விநோதமாகத்தான் இருந்தது. எங்கு செல்வது என்ற யோசிப்பில், ‘ரோசா லக்ஸம்பர்க்’ முனை ஞாபகம் வந்தது. தெருவோரக் கடைகள், இந்திய விடுதியன்றுக்கு எதிராக ‘பொக்கே’ விற்கும் முகச் சுருக்கக் கிழவி, எப்போதாவது சாயந்திரத்தில் கிடார் வாசித்துக்கொண்டு இருப்பவன் (பிச்சையெடுக்கும் பாவனையா?!) ஆகியோர் நினைவில் வந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயரைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளக்கூட அந்த முனை பயன்படும். ரோசா லக்ஸம்பர்க் சிலை எங்காவது இருக்கிறதா என்று நண்பர் கருணாகர மூர்த்தியிடம் கேட்க வேண்டும். லெனின் சிலையைச் சுருட்டி வாரி எறியும் போது, ரோசாவையும் கிள்ளிப்போட்டு வேடிக்கை பார்த்திருப்பார்களோ! பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு எதிரான நினைவுத் தூண் சதுக்கத்தில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நாஜிக்களின் கொடுமையைக் கண்டிக்கிற நினைவுத் தூணாக அது இருந்தது. சென்ற முறை வந்தபோதே அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டேன். அதனால் இம்முறை ஒரு நிமிட மௌன அஞ்சலி போதும் என்று பட்டது. அந்த வணிக வளாகத்தின் மினுமினுப்பு, பளபளப்பற்ற என் உடையை ஒரு நிமிடம் கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொள்ளச் செய்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும், என் கற்பனையிலான பெண் முகம் மலர்ந்து ஹலோ சொன்னாள். கூச்சத்துடன் இடதுவாக்கில் பார்க்க ஆரம்பித்தேன். உள் அறையில் தென்பட்ட மூன்று சுழல் நாற்காலிகளில் ஆட்கள் இருந்தனர். நாற்காலிகளுடன் மூன்று பெண்கள் பணியில் இருந்தனர். வெளியில் போடப்பட்டு இருந்த ஐந்து நாற்காலிகளில் இருவர் இருந்தனர். நான் மூன்றாவது நபராக அமர்ந்தேன். கார்டி யன், டைம் பத்திரிகைகள் விரிந்துகிடந்தன. ஓரத்தில் ஈழ முரசு இருந்தது. சட்டென அதை எடுத்தால், என்னை அடையாளப்படுத்திவிடும் என்பதால், சுதாரித்தேன். இந்தப் பகுதியில் கணிசமான அளவில் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கருணாகர மூர்த்தி சொல்லியிருக்கிறார். என்னை ஒட்டி இருந்தவன் தலையணை அளவு ஆங்கில நாவல் ஒன்றில் மூழ்கி–யிருந்-தான். இடதுபுறம் இருந்தவன் நாற்காலியில் சரிந்து, கண்களை மூடி இருந்தான். கறுப்பனாக நான் தனித்திருந்தேன். வெள்ளைத் தோல் பெண்களிடம் தலைமுடி வெட்டிக்கொள்-தைக் கிளர்ச்சியானதாக மனதில் கொண்டேன். சுழல் நாற்காலியில் இருந்த ஒருவனுக்கு ஷாம்பு குளியல் நடந்தது. டிரையரைப் போட்டு உலர்த்தினாள் அவன் அருகே இருந்த பணிப்பெண். அவனின் தலையை முகர்ந்து, கண்களை விரித்து, ஏதோவொரு ஜெர்மன் வார்த்தையை உதிர்த்தாள். வேறு நாற்காலியில் அவனை மாறி உட்காரச் சொல்லிவிட்டு, கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டாள். அவளின் தலைமுடி பொன்னிறமாக இருந்தது. வர்ணமிட்டு மாற்றியிருப்பாள். மற்ற இரண்டு பெண்களின் முடி, சரியாக எண்ணெய் தேய்த்து பராமரிக்கப்படாதது போல ஏகதேசம் வெளிறி இருந்தது. தலைக்கு அடிக்கடி வர்ணம் மாற்றிக்கொள்வார்களோ! புருஷனை மாற்றுகிறபோதெல்லாம் தலைமுடி வர்ணத்தை மாற்றும் ஒரு பெண் பற்றி கருணாகரமூர்த்தி சொல்லியிருக்கிறார். சுவாரஸ்யம் கருதி ஏதாவதொரு வர்ணத்தைத் தலையில் பூசிக்கொள்ளலாமா! ஊருக்குப் போனால் மிரண்டுவிடுவார்கள். கருணாகர மூர்த்தி தரும் விகிதாசாரத் தகவலை அவர்களிடம் சொன்னால், அரண்டுவிடுவார்கள். அடுத்த அழைப்பு எனக்கு. ஷாம்பு குளியல் நடத்தி, என் தலையையும் அந்த வெள்ளைத் தோல் பெண் முகர்ந்து பார்ப்பாளா? கறுப்புத் தோல்காரனின் வியர்வை நாற்றத்தைச் சகித்துக்கொள்வாளா? அரையடி தள்ளி நின்றபடிதான் முடிவெட்ட ஆரம்பிப்பாள் என்கிற கற்பனையே திகிலாக இருந்தது. சட்டென எழுந்து போய்விடலாமா என்றிருந்தது. மூவரில் எந்தப் பெண்ணின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு வரும்? பருத்த உதட்டுக்காரிதான் ஏகதேசம் முடித்திருந்தாள். அவளின் பருத்த உதடு ஆப்பிரிக்கர்களை ஞாபகப்படுத்தியது. இன்னும் சற்றே கறுத்திருந்தால், அவள் இந்தியப் பெண்ணைப் போலவே இருப்பாள். மற்ற இருவரும் சுண்ணாம்பில் சற்றே மஞ்சள் கலந்த வெளிறிய நிறத்தில் இருந்தார்கள். கழுத்திலிருந்து மார்பு வரையிலான இடைவெளி அபரிமிதமாக இருந்தது. மார்பின் பிளவுகள் மெல்லிய கோடாக இருந்தன. பருத்த உதட்டுக்காரியின் நாற்காலியில் போய் உட்கார்ந்தால், வகை வகையாய் கேள்விகள் கேட்கக்-கூடும். ‘இலங்கைக்காரன்தானே?’ என்பாள். ‘இல்லை. இந்தியன்’ என்று மறுக்க வேண்டியிருக்கும். கட்டண விகிதம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்த்தேன். ஒரு ஆங்கில வார்த்தைகூடத் தென்படவில்லை. கழிப்பறைகளில் வித்தியசம் தெரிய ஆண், பெண் படங்கள் இல்லாமல், ஜெர்மனியில் மட்டும் எழுதப்பட்டு இருந்த விபரீதத்தால், பெண்கள் கழிப்பறை ஒன்றில், நான் பத்து நிமிடம் கழித்துவிட்டு வந்ததைக் கருணாகரமூர்த்தி பலமுறை ஞாபகப்படுத்தி, வாய்விட்டுச் சிரித்திருந்தார். சரி, கட்டணம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்… தலைமுடி வெட்டுகிற கூலி, நிச்சயம் தலையின் விலையாக இருக்காது என்று திடப்படுத்திக் கொண்டேன். இரண்டாம் நாற்காலியில் இருந்தவனுக்குப் பாதி முடிக் குறைப்பு வேலை முடிந்திருந்தது. சட்டென அவன் தலையை உயர்த்தி, அவளை முத்தமிடும் தோரணையில் உதட்டைக் குவித்தான். முடி வெட்டுகிற பெண் கன்னத்தைச் சாய்த்து, அவன் முத்தத்தை ஏற்றுக்கொண்டாள். அவன் மீண்டும் ஒருமுறை சட்டென எம்பி, அவளை முத்தமிட முயன்றான். அவள் கத்திரிக்கோலை நிதானமாக டேஷ்போர்டில் வைத்துவிட்டு, அவனின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி, அழுத்தமாக முத்தமிட்டாள். இப்படியரு முத்தம் எனக்குக் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும், அது நிச்சயம் இந்த வகையான அழுத்தமான முத்தமாக இருக்குமா? கறுப்புத் தோல்காரன் என்பதை முகச்சுளிப்பிலேயே காட்டிவிடுவாள். சென்ற முறை வந்தபோது, டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் ஒருவன் மீது என் கைகள் பட்டுவிட்ட தற்காக, ‘கறுப்பன்கள் இன்னும் கறுப்பன்கள்தான்’ என்று ஒருவன் நிறுத்தி, நிதானித்து ஆங்கிலத்தில் சொல்லிக் காண்பித்தான். ‘வெள்ளையர்களுக்கு மட்டும் என்ற பிரத்யேகத் தொனியில் இருக்கும் உணவு விடுதிக்குள் தப்பித் தவறிக் கூட நுழைந்து விடாதே! அவமானப்பட்டுத் திரும்ப வேண்டியிருக்கும்’ என்று கருணாகரமூர்த்தி சொல்லியிருந்தார். நாலு நாட்கள் முன்பு மெட்ரோவில் கிடார் வாசித்துப் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த வெள்ளைத் தோல் பெண்ணொருத்தி, நான் நீட்டிய யூரோ நாணயத் தைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அடுத்தவனிடம் சென்றாள். மெள்ள ஒரு பரபரப்பு என்னைத்தொற்றிக்கொள்ள, சுற்றிலும் பார்த்தேன். அடுத்த நாற்காலி காலியானதும், வெள்ளைத் தோல் பெண் என்னைக் கூப்பிடுவாள். இந்தப் பரபரப்பில் அவள் முன் போய் நிற்பதென்பது, அவள் பார்வையில் சாம்பலாக்கிவிடும். மெதுவாக எழுந்து வாசல் பக்கம் பார்த்தேன். அறையின் குளுமை உடம்பைச் சட்டென ஜில்லிட வைத்துவிட்டது போலிருந்தது. கறுத்த உதட்டு வெள்ளைத் தோல் பெண், மொஸைக் தரையில் பரவியிருந்த வெட்டப்பட்ட மயிர்க் கற்றையை ஒதுக்கிக்கொண்டு இருந்தாள். இன்னொருத்தி மெல்லிய குரலில் கிசுகிசுத்தபடி, காதோரத்துக் கேசங்களை வெட்டிச் சரிசெய்துகொண்டு இருந்தாள். அவன் அடுத்த முத்தத்துக்காக உதடுகளைக் குவித்துக் காத்திருந்தான். எனக்கு முத்தம் வேண்டாம்; அலட்சியமில்லாத பார்வையாவது கிடைக்குமா? மெள்ள நகர்ந்து வாசல் கதவுப் பக்கம் வந்துவிட்டேன். ‘ஹலோ’ என்று முதுகில் குரல் கேட்டது. ‘‘ப்ளீஸ் வெயிட்! நெக்ஸ்ட் டேர்ன் யுவர்ஸ்!” கதவுக் கண்ணாடியில் என் முகம் இருட்டாகியிருந்தது. ‘கறுப்பனுக்கு முடி வெட்டிவிடுவதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையா என்று கேட்காமல் வந்து உட்கார்ந்துவிட்டேன். ஸாரி! நாய் விற்ற காசு குரைக்குமா?’ என்று, எனது ஆங்கிலத்தை அவள் புரிந்து பதில் சொல்கிற விதமாக இல்லாமல், ஒரு மாதிரி ஒப்பித்துவிட்டு, வெளியே வந்தேன். ஜெர்மனியில் என் மீது ஏதாவது வசவை உதிர்த்திருப்பாள். வாகனங்களின் மிதமான இரைச்சல் ஆறுதலாக இருந்தது. சென்னையில், மிகக் குறைந்த செலவில் தலைமுடியைக் குறைத்துக் கொள்கிற சுகானுபவம் கற்பனையில்கூட வந்தது

காதுகள்


ஏதோ நினைவில் வலது காதை நீவிக்கொண்டு இருந்தேன். காதை நீவுவது சுறுசுறுப்பு தரும் என்று யாரோ சொன்ன ஞாபகம். காதைக் கிள்ளி சுறுசுறுப்பாக்குகிற வாத்தியார் இல்லாமல் போய்விட்டார். வலது காதிலிருந்து கையை எடுத்தபோது, அருண் வந்து நின்றான். ”காதையே தடவிக்கிட்டு இருக்கீங்களேப்பா. நீங்க ளும் ரிங் போட்டுக்கணுமா. ரிங் போட ஆசையா என்ன?” – அவனின் கேள்வி புரியாமல் பார்த்தேன். அவனின் இடது காதில், அட! ரிங் ஒன்றை மாட்டிக் கொண்டு இருக்கிறானே. ”என்ன இது புதுசா?” ”ஃபேஷன்ப்பா. நீங்க ஏதோ குழப்பத்தில் இருக்கிற மாதிரி தோணுது. நானும் குழப்பமாதான் இருந்தேன். இந்த ரிங்கை வலது காதுல போடுறதா, இடது காதுல போடறதான்னு? கடைசியில் இடது காதில் போட்டுட்டேன். உங்களுக்கும் இடதுதானே புடிக்கும். நீங்க எப்பவும் லெஃப்ட்டிஸ்ட்தானே?” ”தங்கமாடா?” ”தங்கத்திலே போடுற அளவுக்கு நீங்க பாக்கெட் பணம் குடுக்கிறீங்களா என்ன? சாதாரண கவரிங்தான். வெள்ளியாச்சும் போடணும். வலியில்லாம காதைக் குத்திக்கிட்டேன். எங்க காலேஜ்ல காதுல ரிங் போடுறவங்கன்னு ஒரு க்ளப் ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா!” நான் வலது காதில் கை வைத்து நீவிப் பார்த்துக் கொண்டேன். சின்ன வயதில் காது குத்தின அடையாளம் முழுக்க மறைந்து போய்விட்டது. அருணுக்குச் சின்ன வயதில் மொட்டை போட்டுக் காது குத்துவதில் அக்கறையாக இருந்தாள் கண்ணகி. அது மறந்து போயிருக்கும் அவனுக்கும். இப்போது ரிங் குத்திக்கொண்டு இருப்பது மட்டும் இனியும் ஞாபகத்தில் இருக்கும். காது குத்திக்கொள்ளாதவர்களைச் சுடுகாட்டுக் குழியில் இறக்கும்போது சுடலைமாடன் அனுமதிக்க மறுப்பான். காது குத்தாத உடம்புகளா? ஒரு நிமிஷம் என்று ஏதோ ஆணியையாவது எடுத்து வந்து காதில் ஓட்டைகளைப் போட்டு பிணத்தைக் குழிக்குள் வைப்பான். பாட்டி காது வளர்த்து தண்டட்டி போட்டிருந்தது ஞாபகம் வந்தது. சின்னக் குழந்தைகளோ, புதியவர்களோ, பாட்டியின் தண்டட்டியைப் பார்த்து ஆச்சர்யப்படாதவர்களே இல்லை. ”காது குத்தி காது வளக்கிறதே…” என்று சத்தம் போட்டுக்கொண்டு கிராம வீதிகளில் பாட்டி செல்லும்போது, பல நாட்கள் அவளுடன் போயிருக்கிறேன். காது குத்திக் கெடா வெட்டும் விசேஷங்களில் பாட்டிக்கு மரியாதை இருந்திருக்கிறது. பாட்டியின் சத்தம் கேட்டு வீட்டுப் பெண்கள் வாசலில் வந்து நிற்பார்கள். ‘அடுத்த வாரம் வர்றியா?’ என்பார்கள். தேவகி என்னோடு இரண்டாம் வகுப்பு படித்தவள். அவள் வீட்டுக்குக் காது குத்திவிட பாட்டியோடு சென்றது ஞாபகம் இருக்கிறது. வீட்டின் பின்புறம் எங்களை வரச் சொன்னார்கள். நான் ஒரு வகையில் திகைப்புடன் நின்றுகொண்டு இருந்தேன். ”இவங்கெல்லாம் மேல்சாதிக்காரங்க. இவங்க வூட்டுக்குள்ள வுட மாட்டாங்க. இங்க உக்காரவெச்சுதா குத்தணும்.” தேவகி உடம்பில் ஒரு வெள்ளை வேஷ்டியைப் போர்த்தியிருந்தார்கள். விடுக்கென பாட்டி காது குத்தியதும் தேவகி அலறினாள். அவளின் வாயில் யாரோ லட்டோ, ஜிலேபியோ திணித்தார்கள். கண்களில் நீர் வழிய அவள் அதைச் சாப்பிட்டபடியே வலி பொறுக்க முடியாமல் கத்திக்கொண்டு இருந்தாள். காது குத்தி முடிந்த பின் குளிக்கச் செய்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். அவளின் காதில் மாட்டின தோட்டில் நட்சத்திர டிசைன் மினுங்கிக்கொண்டு இருந்தது. அடுத்த வாரம் தேவகி வீட்டுக்குப் போகலாம் என்று பாட்டி கூட்டிக்கொண்டு போயிருந்தாள். கம்மலைக் கழட்ட தேவகிக்கு மனசில்லை. கம்மலைக் கழட்டிவிட்டு உரித்த சோளத் தட்டையைத் திரித்து, சிறு தண்டு மாதிரியாக்கி அந்த ஓட்டையில் திணித்தாள். தினமும் சோளத் தட்டையைத் தண்ணீர் விட்டு நனைத்தபடி இருக்கச் சொல்லிவிட்டு வந்தோம். இன்னொரு பத்து நாள் கழித்துப் போனோம். இம்முறை சோளத்தட்டை எடுத்துவிட்டு பனை ஓலையை மடிப்பு மடிப்பாகச் சுருட்டி காது ஓட்டைக்குள் திணித்தாள். கொஞ்சநாளில் காது ஓட்டை பெரிதாகிவிட்டது. அடுத்த வாரம் போனபோது ‘குறுக்கை’ மாட்டிவிட்டாள். காது நன்கு கீழ் இழுத்து தொங்கின பின்பு ‘குறுக்கை’ கழட்டிவிட்டு தங்கத்தில் செய்திருந்த தண்டட்டியை மாட்டிவிட்டாள். தேவகியைத் தொங்கும் காதுகளுடனும் தண்டட்டியுடனும் பார்க்க அழகாக இருக்கும். ரொம்ப வருடங்கள் கழித்து, தேவகியை சென்னையில் பார்த்தபோது ரொம்பவும் மாறிப்போயிருந்தாள். காது வளர்ந்து தண்டட்டியுடன் தொங்கிக்கொண்டு இருக்கிற, சவுரி வைத்து தலைமுடியைக் கொண்டையாக்கிய கிராமத் துப் பெண்ணாகி இருந்தாள். ”என்ன… எதுவரைக்கும் படிச்சே?” ”எங்க படிக்கிறது. இந்தத் தண்டட்டியும், காதும், கொண்டையும் வெச்சுட்டு கிராமத்தை வுட்டு படிப்புக்குன்னுதா போக முடியுமா..?” பாட்டி காது வளர்க்கக் கேட்டு கூவிக்கொண்டு போகும்போது, பின்னப்பட்ட மூங்கில் கூடைகளை வைத்திருப்பாள். கூடைகள் எப்படியும் ஓரிரண்டு விற்கும். காது வளர்ப்பதற்குக் கூலியாக கம்பு, சோளம், பழைய துணியெல்லாம் கிடைக்கிறபோது வாங்கி வருவாள். நான் முதன் முதலில் போட்ட பேன்ட் அப்படிப் பழைய துணியில் வந்ததுதான். சிவகாமி விஷயத்தில் பாட்டிக்குச் சங்கடமாகிவிட்டது. எல்லாம் சரியாகத்தான் செய்ததாகப் பாட்டி சொன்னாள். ஆனால், சிவகாமிக்குக் காது புண்ணாகிவிட்டது. சிவகாமியின் காது புண் ஆறுவதற்குப் பாட்டிதான் வைத்தியம் செய்தாள். குறுமிளகை வெள்ளைத் துணியில் கட்டி மண்ணெண்ணெய் விளக்கில் விட்டாள். அதைத் தூளாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து புண் இருக்கிற இடத்தில் பத்து போட்டாள். அதுவும் சரியாகாமல், ஈரம் பூத்து புண் மினிங்கிக்கொண்டு இருந்தது. குறுமிளகைப் பச்சையாக அரைத்துப் பத்து போட்டாள். தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக முகம்கூடக் கழுவாமல் சிவகாமி வீட்டு வாசலில் போய் நின்றுகொள்வாள். அப்படிக் கவனம் இருந்தும் காது அறுந்து போய்விட்டது. அறுந்துவிட்டதைச் சரியாகத் தெரிந்துகொண்ட நாளில் சிவகாமி அழுதாள். ஊரே கூடிவிட்டது. பாட்டியின் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. கண்களில் நீர் வழிந்தது. ”சாமி…” என்றபடி கைகளைக் கூப்பி அனைவரையும் பார்த்தாள். பொது மன்னிப்பு தரும் பாவனையில் எல்லோரும் பார்த்தார்கள். பிறகு, சிவகாமியின் அறுந்துபோன காதை நன்கு சுத்தம் செய்துவிட்டு கொதிக்கும் வெந்நீரில் போட்டெடுத்த ஊசி நூலால் தைத்துவிட்டாள். முட்டை போடும் வெடக்கோழியை அறுத்து அதன் ரத்தத்தைத் தைத்த இடத்தில் தொட்டுவைத்தாள். ரொம்ப நேரம் அப்படி பொட்டுப் பொட்டாக வைத்துக்கொண்டு இருந்தாள். வெடக்கோழியை என் கையில் கொடுத்துவிட்டார்கள். அம்மா கோழியைச் சமைப்பதில் கெட்டிக்காரி. ஆனால், சிவகாமி வீட்டுக் கோழியை ருசிக்க இயலவில்லை பாட்டிக்கு. அம்மா தண்டட்டி போட்டு காதின் மேல் புறங்களில் தங்கக் கம்மல்களைக் குத்தியிருப்பாள். அப்படி தண்டட்டி போடாதவர்களை ‘மூளிக்காரி’ என்பார். அம்மா அப்படிச் சொல்வதைக் கேட்டபடி இருந்த பாட்டி, ஒரு நாள் ”நானும் மூளிக்காரிதா” என்றாள். தாத்தா தொடுப்பு வைத்திருந்த பெண் தண்டட்டி போட்டு காது வளர்த்ததில்லை. மினுங்கும் தங்கக் கம்மல்களைப் போட்டிருப்பாள். காது நுனியில் கடுகளவு தங்கத் துணுக்கு மினுங்கிக்கொண்டு இருக்கும். பார்க்க அழகாக இருக்கும். சாகும் வரைக்கும் தாத்தா பாட்டியிடம் திரும்பவில்லை. ”தண்டட்டி போடாதவளுக மட்டுந்தா மூளிக்காரியா?” என்று பாட்டி முனகிக்கொண்டு இருப்பது சாகிற வரைக்கும் வெகு சாதாரணமாக இருந்தது. ”காது குத்தி காது வளக்கிறதே” என்ற பாட்டியின் குரல் தெருக்களில் ஓய்ந்தபோது, அவள் தன்னை மூளிக்காரி என்று சொல்லிக்கொண்டது ஓயாமல் தெருக்களில் மிதந்துகொண்டு இருந்தது!

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

பத்துமலை முருகனும், பெரியாரும்


கோலாலம்பூரிலிருந்து 12 கி.மீ தொலைவில் பத்துமலை முருகன் 140 அடி உயரத்தில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.272 படிகள் ஏறிச் சென்றால் குகையில் புராதான முருகனைச் சந்திக்கலாம் என்றார் ஏ ஆர் சுப்ரமணியன். கவிஞர். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்க நிர்வாகிகளில் ஒருவர்.மலேசிய தொலைத்தொடர்புத் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அங்கு 55 லேயே ஒய்வு. . நான் கடவுள் மறுப்பாளன் என்பதை மறந்தீரா ” என்று கேட்டு வைத்தேன். பத்து என்றால் கல். பத்துமலை கல் மலை என்று பெயர். சுண்ணாம்பும்லைதான் அது. அடர்ந்த காடுகள் அதன் பின்னணியில். விலங்குகள், விதம்விதமான மரங்கள் அழகூட்டுகின்றன.பழங்கால கொக்காலிகா மரம் , விதவிதமான மஞ்சள் நிற மரங்கள், கொஞ்சம் வெற்றிலை மணம்.நம்மூர் ஆண்மைச் சின்னம் குரியன் பழங்கள் மலிவாக்க் குவிந்து கிடக்கின்றன.பொரிகடலையும். இடது பக்கம் மினி வள்ளுவர் கோட்டம். சின்ன திருவள்ளுவர். கொஞ்சம் கொஞ்சும் திருக்குறள்கள். கோலாலம்பூர் வழக்கறிஞர் குமாஸ்தா தம்புசாமி பிள்ளை கனவில் வந்து முருகன் கோவிலை அங்கு ஏற்படுத்த அம்பாள் சொல்ல அவர் ஆயத்தம் செய்திருக்கிறார்.. சுற்றிகும் இருந்த கெண்ட், சுங்கைதுவ, செங்கம்பட், செபோங், பத்து ரப்பர் எஸ்டேட் தொழிலாளர்களின் ஈடுபாட்டால் நிறுவப்பட்டிருக்கிறது. சில காலம் பிரிட்டிஸ் அரசு அதை மூட முயற்சிகள் எடுக்கவும், நீதிமன்ற வழக்கும் இந்துக்களுக்கு நம்பிக்கை தந்திருக்கிறது. தைப்பூசநாளில் காவடி, தேர், பூஜைகள் என்று பத்து லட்சம் பேர் கலந்து கொள்ளும் அமர்க்களம். சற்றே தூரத்தில் தெரிகிறது அரசு தமிழ்ப்பள்ளி. மலேசியா முழுக்க 700 தமிழ்ப்பள்ளிகள். அரசு, வெளிக்கட்டமைப்பில் சிறப்பானத் தோற்றங்கள். குறைந்து வரும் அரசு மான்யங்கள், உதவித்தொகைகள்,தமிழர்கள் சீனம், ஆங்கில மொழிகளில் தங்களின் குழந்தைகளை படிக்க அதிகம் விரும்புவது ஆகியவை தமிழ்ப்பள்ளிகளை பலவீனப்படுத்தி வருகின்றன நோம்புகாலத்தையொட்டி வீதிகளில் இனிப்புப்பலகாரக்கடைகள் எங்கு தென்படுகின்றன, விதவிதமான வர்ணங்களில் இனிப்புப் பலகாரங்கள். ஏஆரெஸ் வாங்கிக் குவிக்கிறார். அந்த இனிப்புகளுக்கு கேட்துவாட் என்று நாமம்.அதிகம் சாப்பிட வேண்டாம் என்று அன்பு கட்டளை. அடுத்து இரு நாட்களின் நாவல் பட்டறைக்கு இடையூறு ஆகி விடக்கூடாது இது என்கிறார்.மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் மலேசியா நாவல் பயிற்சிப் பட்டறையில் முதல் நாள் தமிழ் நாவல் வரலாறு பற்றிய உரை, அடுத்த நாள் என் நாவல் அனுபவம் உரை, இரவில் சிறுவர் கதை பரிசளிப்பில் தமிழ் சிறுகதை பற்றிய உரை இருக்கின்றன. பத்துமலை ஏற வேண்டிய வேலை இல்லாததால் இருக்கும் நேரத்தைக் கழிக்க கூட இருக்கும் பிரகாசைப் பார்க்கிறேன்.திராவிடர்கழக கூட்டம் ஒன்றுக்கு செல்ல வேண்டியிருப்பதை ஞாபகமுட்டுகிறார். நானும் இங்கு வந்து திராவிடர் கழக நடவடிக்கையை கவனிப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. கிள்ளான் போக வேண்டும். ” எங்கள் தலைவர்கள் பக்திமான்கள் “ என்கிறார் ஏஆர் எஸ்.அவர் குறிப்பிட்ட்து மலேசியா எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன், துணைதலைவர் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு பற்றி.. பத்திரிக்கையாளர் ராஜேந்திரன் -கலைஞர், வைரமுத்து நணபர். திராவிட பாரம்பரியத்துக்காரர். ஆனால் பிரதோசம், அமாவாசை, பவுர்ணமி, என்று விரதம் இருந்து கோவில் செல்பவர். கார்த்திகேசு மலேயா தமிழர்களின் வாழ்வை தீவிரமாக அவரின் 5 நாவல்களும் சிறுகதைகளிலும் சித்தரித்தவர். அவரின் கடவுள் ஈடுபாட்டை எங்கும் வெளிபடுத்தாதவர். மலேசியா அர்சியல் அமைப்புச் சட்டம் “ கப்பர் சாயான் “ என்கிறது. “ கடவுள் மேல் நம்பிக்கை வை” கடவுள் மறுப்பை வெளிப்படையாகப் இங்கு பேச முடியாது. தலைமறைவு இயக்கம், தன்னார்வக்குழு போல்தான் செயல்படவேண்டும். பதிவு, புதுப்பித்தல் சம்பந்தமாக தி.கவிற்குச் சொந்தமான 2 கட்டிடங்களை அரசு எடுத்துக் கொண்டு விட்டது. கட்சியும் இளைய தலைமுறையினரிடம் பலவீனமாகவே இருக்கிறது. “ இருக்கு .. ஆனா இல்லே “ நிலைமைதான்... பெரியார் திராவிடர் கழகப் பிளவு, கோவை இராமகிருஸ்ணன், கொளத்தூர் மணி பிரிவு பற்றிச் சொல்கிறேன். பிரகாசிற்குத் தெரியவில்லை. “ எங்கள் தலைவர் வீரமணிதான்”. மலேசியாவின் பெரும்பான்மையான வாசகர்கள் மு.வ., நா.பா., அகிலன் தாண்டி வரவில்லை.தி.க அரசியலில் வீரமணி தான் தலைவர்,25 ஆண்டுக்கு முன்னால் எல்லாம். பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங் போக வேண்டும். மலேசியாவின் ரப்பர் தோட்டப் பகுதிக்குச் சென்ற பெரியாரின் சாமியார் தோற்றத்தைப் பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்” என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். வாகன நெரிசல். மெதுவாக ஊர்ந்து போகிறோம்.ஏஆர்எஸ் தொலை பேசி செய்து கிள்ளான் போய் விட்டீர்களா என்கிறார். வாகன நெரிசல் பற்றிச் சொல்கிறோம்.” பத்து மலை முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கவில்லை. தி.க கூட்ட்த்திற்கு போக அவர் அனுமதி தரவில்லை ” என்கிறார்.. “ பெரியாரின் ஆசீர்வாதம் இருக்கிறது “ வெகு தாமதமாகிவிட்டது. இனி போய் பிரயோஜனமில்லை. வழியில் தென்படும் புத்தர் கோவில் ஒன்றி இளைப்பாறுகிறோம். பிரமாண்டமான சிலைகள். புத்தரின் சாயல்களைத் தேடுகிறேன். விதவிதமான ஏற்றப்படுவதற்கான மெழுகுவர்த்திகள். இலவச சிடிகள் குவிந்து கிடக்கின்றன. 12 ஆண்டுகளுக்குஒரு முறை வந்து செல்லும் ராசிகளின் உருவங்கள் மனித, மிருக உருவங்களாய் நிற்கின்றன. வில் அம்புகளை குவித்து வைத்திருக்கும் குடுவைபோன்றதில் நிறைய குச்சிகள். குலுக்கி நிமிர்த்தினால் ஒன்று வெளித்தள்ளிக் கொண்டு வருகிறது.அதில் ஒரு எண் எழுதப்பட்டிருக்கிறது. 45. அந்த எண் உள்ள பளுப்பு சிவப்பு நிற சீட்டை எடுக்கிறேன். ஒரு பக்கம் சீன, கொரியா எழுத்துக்கள் இன்னொரு பக்கம் ஆங்கிலத்தில் அது இப்படி சொல்கிறது:: நல்ல சகுனம். எல்லாம் நல்லபடியாகச் செல்கிறது. இப்போது உங்கள் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த் காலத்தின் சிறந்த உழைப்பின் பயனை அனுபவிக்கிறீர்கள். நல்லவர்கள் உங்களோடு சேர்கிறார்கள். நல்ல திருமண வாழ்க்கை அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். = சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

வியாழன், 27 செப்டம்பர், 2012

ஓ...மலேசியா

கோலாலம்பூர் வீதிகளில் தமிழ்ப்பெண்களைக் கூட புடவையில் காண்பது அரிதாகவே இருக்கிறது. தொடை தெரியும் குட்டைப் பாவாடைகள், பெர்முடாஸ், அரை ஜீன்ஸ்கள் என்று தமிழ் பெண்களும் மலேயர்கள், சீனர்கள் மத்தியில் தென்படுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், தமிழ்க்கோவில்களிலும் தமிழ்ப்பெண்கள் புடவை அணிகிறார்கள்.தமிழ்த்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், செய்தி வாசிப்பில் பெண்கள் புடவை அணிந்து வருவது கட்டாயமாக இருந்தது. இப்போது அது குறைந்து விட்டது என்று தமிழ் அமைப்பினரும், சனாதானிகளும் கண்டித்திருப்பது சமீபத்திய சலசலப்புச் செய்தியாக இருக்கிறது. நம்மூர் வேடிடி சட்டை போல் மலேயா தேசிய உடையிலும் சிலர் தென்படுகிறார்கள். தலையில் குல்லா. முழுக்கைச் சட்டை. பேண்ட் மேல் சுற்றப்பட்ட கைலி. இதுதான் தேசிய உடை எனலாம். சுதந்திரதினத்தை தேசிய தினமாகக் கொண்டாடும் வைபவத்தில் நாடு முழுவதும் மலேசியா தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறக்கிறது.1958ல் சுதந்திரம் பெற்றது.அந்நாட்டின் தேசிய மலர் செம்பருத்தி இரும்பால் வார்த்தெடுக்கப்பட்டு வீதிமுழுக்க விளக்குக் கம்பங்களில் மினுங்குகிறது. 100 வருடத்திற்கு முன் தமிழன் கட்டிய ரயில்வே ஸ்டேசன் மின் விளக்கில் பளிச்சிடுகிறது.இந்தியர்களின் பெருமையைச் சொல்லும் லிட்டில் இந்தியாவிற்கு எப்போதும் மவுசுதான்.கோலாலம்பூரின் மத்தியில் தென்படுகிறது ராம்லீ தெரு. ராம்லி நம்மூர் சிவாஜிகணேசன் போல் முக்கிய நடிகர். இவரை இயக்கிய முக்கிய இயக்குனர்களீல் ஒருவரான கிருஸ்ணன் ஒருதமிழர்.மலேசியாவின் முதல் கோடீஸ்வரர் ஆனந்த கிருஸ்ணனுக்குச் சொந்தமானது கோலாலம்பூரின் இரட்டை கோபுரங்களில் ஒன்று. அதை விற்றுவிட்டார். 2ஜி ஊழலில் இவர் பெயரும் அடிபட்டு பல நிறுவனப் பங்குகளை விற்றுவருகிறார். இவரின் ஒரே மகன் புத்தமத சாமியாராகிவிட்டார். பத்துமலை முருகனுக்கு எப்போதும் கூட்டம் அலைமோதும். பத்து என்றால் கல். கல் மலை. பத்து மலையைச் சுற்றிலும் ரப்பர் தோட்டங்கள் இருந்தது ஒரு காலத்தில் .1991ல் கும்பவிசேகம் கண்ட பின் மிக உயர சிலையில் முருகன் பத்துமலை முகப்பில் சிரிக்கிறார். 13 வது பொது தேர்தல் எப்போதும் வந்துவிடலாம் என்ற தேர்தல் காய்ச்சலில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அய்ந்து வருடங்கள் எந்த அரசும் முழுமையடைவதில்லை.இந்த முறை ஆளும் கட்சியின் அரசுக்கு மூன்றரை ஆண்டுகளே கடந்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு அரைமாத போனஸ் என்று இந்த திடீரென பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருப்பது தேர்தல் கவர்ச்சிக்குதானாம். (எல்லா பெரிய புள்ளிகளின் பெயர்களுக்கு முன்னால் ட்த்தோ இருக்கிறது. நம்மூர் பத்மஸ்ரீ போல என்கிறார்கள்.) பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு இந்தியர்கள்., மலாய்க்காரர்கள் ஆதரவு குறைந்திருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கின்றன.சீனர்களின் ஆதரவு தூக்கிப்பிடித்து நிறுத்துகிறது. ஆனால் அவரின் அரசிற்கான மதிப்பு அப்படி இல்லை என்கின்றன ஆய்வுகள்.இந்தத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்கிறார்கள் . இந்த தேர்தலில் இந்திய சமூகத்தினரின் எதிர்பார்ப்புகள் இப்படியாக உள்ளன: 1.அரசின் ” ஒரே மலேசியா” கொள்கையின் கீழ் இந்தியர்களுக்கு அரசுத்துறைகளில் தாராளமாக வேலை வாய்ப்பு வேண்டும். 2. அரசின் உதவிகளும் இந்திய சமூகத்திற்கான நலத்திட்டங்களும் முறையாக சென்றடையாமல் நிறைய இடைத்தரகர்கள் இருப்பதை நீக்க வேண்டும். 3.இந்திய சமுதாயத்திற்கானப் பொருளாதாரப் பங்குகளை ஏற்படுத்த வேண்டும். 4.குடியுரிமை இல்லாமல் சிவப்பு அடையாள அட்டையாலும் பிறப்புப் பத்திரம் இல்லாமலும் அகதிகள் போல் இருக்கும் நிலை மாற வேண்டும். 5.தமிழ்ப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும்.(குடிக்கக் கூழும் படிக்க தமிழும் சந்தோசம் தரும் என்று வாழும் தமிழ் தலைமுறையில் புதியவர்களுக்கு தமிழ்க் கல்வி சற்றே கசந்து வருகிறது). குறைவாகவே சிலைகள் தென்படுகின்றன. பெரியார் சிலையைப்பார்க்க கோலாலம்பூரிலிருந்து 250 கி.மீ நிபோங் போக வேண்டும். மலேசியா சென்ற பெரியாரின் தோற்றத்தைப் பார்த்த தமிழ் பெண்ணொருத்தி ” என் மகளுக்கு வயித்திலே புழு பூச்சி ஆக மாட்டீங்குது. நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்” என்றிருக்கிறாள்.” பெரியார் நாகம்மையைச் சுட்டிக்காட்டி “ இவங்க என் சம்சாரம். இவங்களுக்கும் குழந்தையில்லே. டாக்டரை நம்புங்க.” என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். மலேசியா முஸ்லீம் நாடு. கடவுள் மறுப்பிற்கு அதன் சட்டவடிவமைப்பில் இடமில்லை. கடந்த பத்தாண்டுகளில் இன்னும் பலமிழந்திருக்கும் மலேசியா தி.க. தலைமறைவு இயக்கம் போல்தான் செயல்படுகிறதாம். மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய நாவல் பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.கடந்த 5 ஆண்டுகளாக மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் போட்டி நடத்தி 1,75,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்குகிறது. கூடவே தமிழகம் வந்து செல்ல விமான டிக்கட்.இவ்வாண்டும் அப்போட்டியின் முன்னோடியாகவே இந்தப் பட்டறைநடத்தியது. சென்றாண்டு சிறுகதைப் பட்டறையை நடத்தியவர் எஸ்.இராமகிருஸ்ணன். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு இது பொன் விழா. இவ்வாண்டு நாவல், சிறுகதை, கவிதைப் போட்டிகள் என்று மொத்தம் 2,50,000 ரூபாய் பரிசு பம்பர் மலேசியா எழுத்தாளர்களுக்குக் காத்திருக்கிறது. ( = சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641602. 9486101003 )

சுப்ரபாரதிமணியனுக்கு கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு கோவை கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது ( கே.சி.சி சாகித்யபுரஸ்கார் விருது ) வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் கேரள கல்சரல் செண்டரின் இலக்கிய விருது தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கும், மலையாள எழுத்தாளர் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது. இவ்வாண்டின் தமிழ் பிரிவிற்கான விருது சுப்ரபாரதிமணியனுக்கு வழங்கப்பட்டது. மலையாளத்தில் மினிமேன்னுக்கும்.அவ்விழாவில் முன்னாள் கேரளா கலாச்சார அமைச்சர் பேபி, மலையாளத் திரைப்பட நடிகை கிருபா, திரைப்பட நடிகர் மேகநாதன், பாலக்காடு எம்.பி. ராஜேஸ், கோவை எம்.பி. நடராஜன், கேரள சாகித்ய அகாதமி செயலாளர் கவிஞர் ராமுன்னி, விஜயகுமார் குனிச்சேரி, ஸ்டான்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருப்பூர் மலையாள எழுத்தாளர்களும் வாசகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். செய்தி: சு.சுபமுகி ( கனவுக்காக) கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602. 09486101003

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

வெள்ளம்


தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதாய் அவன் அவ்வப்போது சொல்லிக்கொண்டதுண்டு. படுக்கையில் யாருடனாவது களைத்து விழுந்து உடம்பைக் குறுக்கிக் கொண்டு தூங்க ஆரம்பிக்கும் போது பெரும்பாலும் அவன் அப்படிச் சொல்லிக் கொள்வான். இல்லையென்றால் சவுந்தர்ய உபாசகனாகி இவ்வளவையும் ரசிப்பவனாக ஆகியிருக்க முடியுமா என்றிருக்கும். இவ்வளவு பெண்கள் தன்னிடம் அகப்பட்டுக்கொள்வார்கள் என்று அவன் நினைத்துப்பார்த்ததுமில்லை.அய்ந்து வருடம் முன்பெல்லாம் அவன் தனித்து விடப்பட்ட போது அவனுக்கு சாவு பற்றிய எண்ணம் தான் மிகுந்திருந்தது. சரவணன் பெரியப்பாவிடம் ஒருநாள் கூட கேட்டுவிட்டான். “ எனக்கு எப்ப சாவு வரும்” அவர் சொன்னார்: “ எனக்கே எப்ப வரும்ன்னு தெரியலே.. இதுலே உனக்கு நான் ஜோஸ்யம் சொல்ல முடியுமா .. என்ன..” எல்லாவற்றுக்கும் கடுமையான முயற்சி வேண்டும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. அதற்கு விதிவிலக்க்காக பெண்கள் தன்னிடம் வந்து சேர்ந்து விடுகிறார்கள் என்றும் தோன்றியது.” சுலபமாக எப்படி சாவது “ “ தூக்குக் கயிறு, தண்டவாளம், எலிமருந்து..” “ எலி மருந்தெல்லா வேலை செய்யாதப்பா..” “ சாணிப்பவுடர்..” 2. “ அது சரிதா.” நகரத்தில் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பெரும்பான்மையானப் பெண்கள் சாணிப்பவுடரில்தான் அடைக்கலமாகிறார்கள். அவர்களின் பட்ஜெட்டில் அதுதான் சுலபமாகிறது. “ எனக்குத்தெரிஞ்ச ஒருத்தருக்கு எள்ளுன்னா அலர்ஜி .. இது ரொம்ப வருசமா. ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கற ஆளுதா.. என்னமோ திடிர்ன்னு எங்கையோ போன எடத்திலே எள்ளுரைண்டை ஒன்னு சாப்புடக் குடுத்திருக்காங்க. சாப்புட்டுட்டார். அலர்ஜியாயி செத்துப் போயிட்டார். அதுமாதிரி உனக்கு அலர்ஜி என்னன்னு கண்டுபுடி.. சீக்கிரம் செத்துப் போலாம்” ரொம்ப நாள் பெண்கள் தான் அவனுக்கு அலர்ஜியாக இருந்தார்கள். அவர்கள் தூரமாக இருக்கும் போது அலர்ஜிதான். பக்கத்தில் நெருங்கிவிட்டபின்பு அலர்ஜியெல்லாம் தொலைந்து போய் விட்டது. இப்போது சாவுக்கு பயப்படுகிறவர்கள் அவனிடம் அடைக்கலமாகிறார்கள், பெண்களுக்குத்தான் எவ்வளவு கஷ்டம். சுலபமாக அடைக்கலமாகிறார்கள். வெள்ளம் நதிகரையில் இருப்பவர்களையெல்லாம் அழுக்காக்கி விட்டது. அழுக்கை விட வேண்டித்தான் பெண்கள் அடைக்கலமாகிறார்கள். வெள்ளம் இப்படி வந்து எல்லாவற்றையும் அழுக்காக்கிப் விட்டுப் போய்விடும் என்பது பெரிய ஆச்சர்யமாகத்தான் இருந்தது. வீடெல்லாம் சக்தியும் மண்னுணுமாகி விட்டது. எல்லாம் இடங்களிலும் பூத்திருந்த ஈரம் காய்வதற்கு முன்னமெ பெண்கள் அடைக்கலம் தேடுகிறவர்களாகி விட்டார்கள். நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைத்தும், சூடாக எதையாவது சமைத்துப் போட்டும் ரொம்பநாள் 3 நீடிக்கவில்லை. அழுக்கும், ஈரமும் படிந்திருந்தாலும் வீட்டிற்குப் போவதுதான் எல்லோரின் குறிக்கோளாக இருந்தது. வெள்ளை எருக்கம் பெரிய மரமாகவே கிளைத்திருந்தது. அதை கட்டிப்போட்டு நிற்க வைக்கும் முயற்சிகளெல்லாம் தோற்றுப் போனது போல் தரையில் கிடந்தது. எப்போது மஞ்சள் வெயில் பட்டாலும் பூத்துக்கிடக்கும் எருக்கம் பூக்கள் மின்னி ஒளிவிடும். வெள்ளை எருக்கையை வெட்டி தூரப்போட்டு விடும்படி யசோதாவிற்கு பலர் சொல்லி இருக்கிறார்கள். ஏதோ தெய்வக்குத்தம் என்பதைத்தான் அவள் திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த வெள்ளை எருக்கம் செடி போன இடம் மழையில் தெரியவில்லை. சேறு மூடிப்போய் விட்ட்தா, இல்லை மண்ணிலிருந்து பெயர்ந்து போய் விட்டதா என்பது பற்றி யசோதாவிற்குத் தெரியவில்லை. என்னாவாகியிருக்கும் என்று அவனிடம் தான் கேட்டாள் “ எனக்கென்ன தெரியும்..” “ என் வீட்டை வாங்கப் போற ஆளு நீங்க.. தெரிஞ்சுக்க வேண்டாமா வெள்ளம் வடிந்தபின்னும் வீடுகளில் சேறும் கசடும் எங்கும் நிறைந்திருந்த்து. யாரும் வீட்டிற்குள் போகவும் சங்கடப்பட்டார்கள். என்ன வியாதி வரும் என்று யூகிக்க முடியவில்லை. பொதுவாக காய்ச்சல் என்று ஏதோ வந்தது. செத்துப்போனவர்களும் இருந்தார்கள். அவளுக்கு ஏதோ முடி கொட்டிப்போகும் என்று தோன்றியது. பதினெட்டு வயதில் அப்படித்தான் முடி கொட்டிப்போனது. வீட்டில் கோழி வளர்த்துக் கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் கூண்டைத்திறந்து கோழிகளை விரட்டுவது அவளது வேலையாக இருந்தது. கோழிப்பீயின் நாற்றம் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. சட்டென சின்னச் சின்ன சொட்டைகள் தலையில் விழ 4 ஆரம்பித்தது. ஏதோ வெட்டுப்புழுவின் சாகசம் என்று சொன்னார்கள். அந்த சொட்டை பளபளவென்று மினுங்கிக் கொண்டிந்ததாகச் பலர் சொன்னபோது அவளுக்கு அழுகையாக இருந்தது. பல இடங்களில் அந்த சொட்டை ஆக்கிரமித்தது. இனி கல்யாணக் கனவெல்லாம் அவ்வளவுதான் என்றிருந்தது அவளுக்கு. ஏதோ டிஞ்சர் ஒன்ரை தம்மணன் கொண்டு வந்து கொடுத்தார். அதை மூன்று நாட்கள் சொட்டை விழுந்த இடத்தில் தடவிய போது சொருசொருவென்று ஏதோ தட்டுப்பட்டது. மெல்ல மயிர் முளைத்து வளர்ந்த போது நம்பிக்கை ஏற்பட்டு விட்ட்து. “ அப்புறமும் ஏன் உனக்குக் கல்யாணம் நடக்கலே “ “ அதுதா எனக்கும் தெரியலே” அவளுடன் படுத்து முயங்கிக் களைத்து விழுந்தபோது குழி தோண்டும்போது பாறையிலோ, பெரும் கல்லிலோ கடப்பாரை பட்டு நங்கென்று எழும் சப்தம் அவளுக்குக் கேட்டது “ சத்தம் கேட்டயா.. கடப்பாரை வுழுகறச் சப்தம்” “ கடப்பாரை அப்பிடி சப்தம் போடாதே. நம்ம கடப்பாரைச் சத்தம் வேற மாதிரியல்லவா இருக்கும்.” ஒரு வகை சிரிப்புடன் அவன் சொன்னான். “ ஓ .. நீ அங்க வர்றியா.. உன் கடப்பாரை இன்னம் ரெண்டு நாளைக்கு முனை மழுங்கியதுதானே. “ ”அவ்வளவு களச்சுப் போயிட்டனாக்கும். எந்த நேரம் கடப்பாரையா மாறும்ன்னு யாருக்குத் தெரியும் . உனக்குத் தெரியும் ” ” ஆமா.. நாங்கதா அலையறம். அலையற ஆளு சொல்றதெப்பாரேன்” 5 “ எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டது . இல்லீன்னா இதெல்லாம் அமையுமா.லோலோன்னு அலையறவங்க எவ்வளவு பேரு இருக்காங்க..” “ உலகமே இதுலதா சுத்துதுன்னு சொல்லிகிட்டு இருக்காங்க. சுத்தட்டும் ..சுத்தட்டும்..”. அவள் சொன்னபின்பு அவனுக்கும் கடப்பாரைச் சத்தம் கேட்கிறமாதிரி இருந்தது.. செத்துப்போனவர்களைப் புதைக்க எங்காவது குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்களா. இப்போதெல்லாம் மின்மயானம் சுலபமாகப் போய் விட்டது. ஒன்றுக்கு இரண்டாக மின் மயானங்கள் வந்து விட்டன.யுனிவர்சல் திரையரங்கு கல்லறைத்தோட்டத்தில் குழிதோண்டிப் புதைக்கிற மாதிரித் தெரியவில்லை. அடுத்த காம்பவுண்ட் மின்மயானம் என்பதால் யார் வந்தாலும் அங்குதான் கை நீட்டிவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர் சிலை பக்கம் இருக்கிற கிறிஸ்துவ வேதகாரர்களுக்கான சுடுகாட்டை இடித்து வேறு ஏதோ பெரிய கட்டிடம் கட்டுகிறார்கள். அப்படி கட்டும் கட்டிடத்தில் ஏதாவது ஆவிகள் அலைந்து கொண்டிருக்குமா. பக்கத்தில் இருந்த அடுக்குமாடிக் கட்டிட்த்தில் அவனின் நண்பன் ஒருவன் குடியிருந்தான். அங்கே ஆவிகள் நடமாடுவதாய் கண்டுபிடித்து அலறிக் கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அவன் குடிப்பதை நிறுத்தியிருந்தான். தூக்கமும் கெட்டு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அப்புறம் ஆவிகள் நடமாட்டத்தைத் தவிர்ப்பதற்காக குடிக்க ஆர்ம்பித்தான். எவ்வளவு குடித்தாலும் நடு ராத்திரிக்குப்பின் தூக்கம் கலைந்து விட்டது அவனுக்கு. ஆவிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த இடத்தை காலி செய்து விட்டு வேறு இடம் தேடிப் போய் விட்டான்.அதை விட்டால் சுடுகாடு என்று சட்டென நினைவில் எதுவும் வரவில்லை .புதிதாய் இன்னொரு மின் மயானம் வருவதாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள். 6 அதற்கு அவனிடமும் நன்கொடை கேட்டார்கள்: “ என்ன அட்வான்ஸ் தொகையா..” என்றான். “ எங்க பெரியம்மா பொண்ணு ஒண்ணு செத்துப் போனது கொடுமையா இருந்துச்சு. அவ புருசன் அடுச்சு கொன்னு புதச்சுட்டான். ரொம்பநாளா ஊர்ல காணம்ன்னு கம்ப்ளெயிட் வேற கொடுத்தா சந்தேகம் வந்து தோண்டிப்பாத்திருக்காங்க. எலும்புகதா கெடச்சுது. அதுக்கும் மரியாதை பண்ணி அடக்கம் பண்ணுனாங்க.” “ அது பண்றதுக்குன்னு சில பேர் இருந்தாங்களே. என்னையெல்லாம் கேட்கறதுக்கு ஆளில்லதா..” “ அப்புறம் பாக்கியவான்னு சொல்லிகிட்டிருந்தே.” “ பாக்கியவான்.. ஆனா பாக்கியம் இல்லாத பாக்கியவான்..” வெள்ளம் வந்து பத்து வருடங்களுக்கு மேலாகிப் போய் விட்டது. நொய்யலின் கரையோரங்களில் காசுள்ளவர்கள் சாய்ப்பட்டறை போட்டு சாயத்தண்ணீரை நொய்யலில் விட்டு சம்பாதித்தார்கள். சின்னதாய் இருந்த இடங்களெல்லாம் ஆக்கிரமிப்பிற்குள்ளாகி சிறுசிறு வீடுகளாகிவிட்டன. உள்ளூரில் அவ்வளவாய் மழையில்லை. மேற்கே பெய்த மழை வெள்ளத்தைக் கொண்டு வந்து விட்டது. சங்கிலிப்பள்ளம் பகுதியில் இருந்த வீடுகளெல்லாம் வெளளத்தில் மூழ்கி எல்லோரையும் துரத்திவிட்டது. இடிந்து போன வீடுகளில் குடி புக முடியாது. கார்ப்பரேசன்கார்ர்களும் கரையோர வீடுகளை இடித்து விடப்போவதாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். பாலம் கட்டுகிற வேலையில் பல வீடுகள் கார்பரேசன்காரன்களின் புல்டோசரின் இடிபாடுகளில் சிதைந்திருக்கிறது. லட்சுமி நகர் முக்கில் அப்படித்தான் பல வீடுகளில் இருந்து அழுகையும், அரற்றலும் 7 இருந்தது. “ ஒரே நாள்லெ இவ்வளவும் செய்யறீங்களே அய்யா. அவகாசம் தரக்கூடாதா. வேலைக்குப் போன் புருசனும், பள்ளிக்கூடம் போன கொழந்தைகளும் வந்து வூடு எங்கேன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்.” என்று கத்திக்கொண்டு உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக் கொண்ட பெண் ஒருத்தியை காவல்துறை கைது செய்தார்கள். கரையோர வீடுகளை அடித்து நொறுக்கும் புல்டோசர்கள் பிரமாண்டமானதாகத்தான் இருக்கும். சோமன் கிடைக்கிற வீட்டைப் பார். எவ்வளவு சகாயமா முடியுமோ அவ்வளவுக்கு ஆட்டையைப் போடப் பாரு. கெடைக்கற வரைக்கும் லாபம்தா.” என்று பணத்திற்கு உத்தரவாதம் கொடுத்து பார்க்கச் சொல்லியிருந்தான். . கார்ப்பரேசன்காரர்கள் இடிக்கப்போவதாய் சொல்லி மிரட்டிதான் இரண்டைப் பேசி முடித்திருந்தான். அப்படி ஒரு வீட்டைப் பார்க்கப் போனபோதுதான் சியமளாவைப் பார்த்தான். அவள் கணவன் ஒரு விபத்தில் இறந்து போனான். பனியன் கம்பனி வேலைக்கு போன் போது அறிமுகமான சுப்ரவைஸ்சர் பரமசிவத்தோடு விடுமுறை நாட்களில் வெளியூர்களில் அறை எடுத்து சுற்ற ஆரம்பித்தாள். அப்புறம் கல்யாணம் என்று முடிவாகி முதல் கணவனுக்கு ஒரு பெண்ணும், பரமசிவனுக்கு ஒரு பெண்ணும் என்று ஆகிப்போயிற்று. மூத்த பெண்ணை தன் சொந்த ஜாதியில் திருமணம் செய்து வைத்தாள். இரண்டாவதை எங்கு எந்த ஜாதிக்காரனிடம் தள்ளுவது என்பது அவளின் புதிராக இருந்த்து. வெள்ளத்திற்கு முன்பே பரம்வம் கொஞ்ச நாளாய் காணவில்லை. சியமளாவை மூத்த பெண்ணின் கணவனோடு சம்பந்தப்படுத்தி ஏதோ கோபத்தில் 8 பேச அவள் துரத்தி விட்டாள். சியாமளா வீட்டைப் பார்க்கப் போன போது வீட்டு முகப்பில் அரை அடி உயரத்திற்கு சேறு படிந்து கிடந்தது. ” இதியெல்லா க்ளின் பண்றதுக்கு வீட்டு விலை செரியாப் போகும் ” என்றான். ஈரம் பூத்து விழ தயாராகும் நிலை போல் இருந்தது. நடு அறையில் அரை அடி உயர தடுப்பு ஒன்று அமைந்து சேற்றின் அளவைக்குறைத்திருந்தது. சியாமளா ஒத்துழைப்பாள் என்று அவனுக்கு தோன்றவில்லை. வழுக்கலில் விழப்போனவளைப் பிடித்தபோது எதுவும் சொல்லவில்லை. அவனும் வழுக்கி விழுவது போல் அவன் மீது பிறகு விழுந்தான். ஈரம் பூத்த சுவற்றில் அவளின் உடம்பு தகதகத்து சாய்ந்த்து. எங்கும் வீசிய துர்நாற்றத்தின் மத்தியில் அவளின் உடம்பின் வாசனை அவனை கிரங்கடித்தது. ” தேக்கு மரம்ய்யா நீ. “ என்றாள் அவள். “ நீ சோப்புக் கட்டி “ அதற்குப்பிறகு அவளைத்தேடி அவன் நான்கு முறை சென்று விட்டான். கடைசியாகப் போனபோது “ வீடு விக்கற அய்டியா இல்லைன்னு சொல்லச் சொன்னாங்க “ என்று யாரோ அவனிடம் சொன்னார்கள். ஏமாற்றமாக்த்தான் இருந்தது. அவள் கண்வன் திரும்பி வந்திருப்பானா. வீடு விக்கிற ஆசை எப்படி கலைந்து போனது. தன் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட அவளுக்கு வேறு உபாயம் ஏதாவது தெரிந்து விட்டதா எனப்தைப்பற்றியும் அவன் யோசித்துப் பார்த்தான். கைபேசி சிணுங்கி ஓய்ந்தது. தமிழில் குறுஞ்செய்திவரும்படி அவன் வடிவமைத்திருந்தது ஆறுதல் தந்தது. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வரச்செய்ய நூறு ரூபாய் தரவேண்டியிருந்தது. ‘ புரிஞ்சுக்க்கற மாதிரி செய்யணும்ன்னா காசு தந்துதானே ஆகணும் “ வந்த குறுஞ் செய்தி வீடு வாஙக் கடன் வேண்டுமா என்று கேட்டது. இது போல் கடன் குறித்து பல 9 குறுஞ்செய்திகள் வருகின்றன. கடன் வேண்டுமா என்று கேட்டு பல பெண்கள் பேசுகிறார்கள். ” நேரில் வந்து கேட்க்க் கூடாதா “ என்று கேட்டிருக்கிறான். “ ” எங்க வேலை ஆபீஸ்ல இருந்து பேசறததுதா..நீங்க வேண்ணா வாங்க. நேரிலே விளக்கம் சொல்றேன்..” அப்படி தேடிப் போனதில்லை அவன். ஒரு மாதிரி ஒற்றைக் கண்ணும், கறுப்பு நிறமும் யாரையும் தூரம் வைத்தே பேச வைக்கும். ஆனால் வீடு, ரொக்கம் என்று அலைகிறபோது பேச யாராவது கிடைத்து விடுகிறார்கள். இது அவனை பாக்யவான் என்றே சொல்ல வைத்திருக்கிறது. அவன் செய்து களைத்த வேலைகளைப் பட்டியலிடுவதில் கூட அவனுக்கு அயற்ச்சியாக இருந்திருக்கிறது.. எதிலும் சுலபமில்லைதான். யாரும் விதிவிலக்காக இருக்கமுடியாது. அவனின் கஷ்டங்களையெல்லாம் அவன் நினைத்துப் பார்த்ததில்லை. கொஞ்சம் பணம், கொஞ்சம் லஞ்சம், கொஞ்சம் புகழ்ச்சி, ஒரு ராத்திரி நேர விருந்து எல்லாவற்றையும் சுலபமாக்கி விடுகிறது.இந்தப் பெண்களுக்கு மலிவு விலை சேலை அல்லது அதற்கு இணையான தொகை. மலிவு விலையில் நியாயவிலைக்கடையில் விற்கும் ஏதாவது பொருளுக்காக கூட அடைக்க்கலமாகிப் போவது அவனுக்கு ஆச்சர்யமே தந்திருக்கிறது. ’ என் ரசனை அவர்களுக்கு சுலபமாகப் புரிந்து விடுகிறது. ருசிக்கு எந்த அடிப்படையும் தேவையில்லை. ருசி முக்கியம். அவர்களும் ருசிப்பவர்கள்தான்” வெள்ளம் ஒரே நாளில் வடிந்து விட்டது. ப்ருத்திக்காட்டுப்புதூர் நகராட்சிப் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்தபோது அவனுக்கு இரக்கம் பீறிட்டது. எல்லோரும் அழுக்காகத்தான் இருந்தார்கள் மோசமானக் கதைகளைச் சொன்னார்கள். எல்லோரிடமும் சொல்வதற்கு அழுகையான கதையொன்று இருந்தது. 10 இவர்களிடமிருந்து என்னென்ன வியாதிகள் கிளம்பும் என்பதை நகராட்சி அலுவலர் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். கண்டுபிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் இடது கையின் ஆறாம் விரல் தங்கு சதையாய் ஆடிக் கொண்டிருந்தது, அவர் கைகளை அசைத்தசைத்துப் பேசும் போது அது கரகரவென்று திருகி பயமூட்டியது. கூரைகளின் மேலேறி கடத்திச் சென்று தீயணைப்பு வண்டிகளுக்குள் பலரை உட்கார வைத்ததை அவன் உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்திருந்தான். மாடும் ஒன்று மிதந்து போனது. கட்டில்களும் குப்பைக் கூளமும் கலவையாக போனது. ஒரு இளம் பெண்ணின் உடம்பு உப்பிய பிணமாய் போனதாக பரவலாகச் சொல்லிக் கொண்டார்கள். ஏகதேசம் அது நிர்வாணமாகத்தான் இருந்தது என்பதுதான் எல்லோரின் கவனிப்பிற்குமான காரணம் என்று நினைத்தான். பய பீதியில் பிணமாக மூர்ச்சையடைந்து போனவர்கள் கூட இருப்பார்கள். தெற்கு முக்கு வீட்டில் வீடு பார்க்கப் போன இடத்தில் அவன் தொட்ட ஒரு பெண் சட்டென மூர்ச்சையாகி விட்டாள். அவள் முகத்தை முத்தத்திற்காய் நெருக்கிய போதுதான் அவள் கண்கள் கிறங்கி துவண்டது தெரிந்தது. அது கிளர்சியால் வந்த மயக்கமல்ல;பய பீதியில்தான் மயங்கி விட்டாள் என்பதை அவன் உணர கொஞ்ச நேரம் பிடித்தது. அவள் கொஞ்ச நேரம் கழித்து கண்களைத் திறப்பதற்குள் அவன் உடம்பு வியர்த்து விட்டது. அவள் கண்களைத் என்னாச்சு என்று கேட்டபடி திருதிருவென முழித்தாள். எல்லாம் சகஜமாகிவிட்டதைப் போல அவள் வெளியே நடக்க ஆரம்பித்தாள். பயத்துடன் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றிருந்தான். அப்பெண் மறுபடியும் வரக் காணோம் என்று விறுவிறுவென்று நடக்க 11 ஆரம்பித்தான். அவன் உடம்பு வெள்ளத்தில் மூழ்கி விட்டது போல ஈரமாகி விட்டது. கிராமத்தில் காரு மழை பொய்த்துப்போனது. போட்டிருந்த போர்வெல் குழிகளெல்லாம் காய்ந்து விட்டன.குடிக்கத்தண்ணீர் வேண்டியிருந்த்து. தென்னம்பிள்ளைகளுக்கும் பொய்த்தண்ணீர் கட்டுவதற்கே சித்தப்பாவால் முடியவில்லை. கறவை மாட்டில் கிடைக்கிற பால் நாலு வீடுகளுக்கு ஊத்தும்படி இருந்தது. கிராமத்துக்குக்காரங்களுக்கு இப்படி வெள்ளம் பார்பதில் குதூகுலம் இருக்கும். சித்தப்பாவைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் போலிருந்தது. வெள்ளத்தில் அழுக்கடைந்து போன ஒரு வீட்டை மசூதியாக மாற்றியிருந்தார்கள். இரண்டு பேர் அந்த வீட்டில் வெள்ளம் அடித்துப் போனதில் செத்துப் போயிருந்தார்கள். இனி அந்த வீடு யாருக்கும் பிரயோஜனமில்லை என்பது போல் கிடக்கும் என்று அவசரமாக முடிவெடுத்திருப்பார்களா என்றிருந்தது. கொஞ்சநாள் வீடு இழந்தவர்களுக்கென்று தங்க வைக்க அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தார்கள் அதை விற்கிற யோசனை இருக்கிறதா என்று அவன் கேட்கப் போனபோது குறுந்தாடியோடு இருந்த ஒருவன் அவனை முறைத்துப் பார்த்தபடிக் கேட்டான்: “ மசூதிக்குன்னு முடிவு பண்ணிட்டபோறகு கேட்கறையே.. தைரியந்தா உனக்கு. “ ” சொர்க்கத்துக்கு போனவங்க நினைவாவா “ “ அதுக்குப் பேரு வேற “ “தர்காவா” 12 நன்கு சுத்தம் செய்யப்பட்டு கழுவப்பட்ட அறையின் வாசம் பெரும் கனவு போல அவனின் மனதில் இருந்தது. எப்போது பார்த்தாலும் ஏதோ அழுக்குகளுக்குள்தான் அடைபட்டிருக்கிறோம். அழுக்கை தேடிப்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அழுக்கிலிருந்து விடுபட முடியவில்லையா என்றிருந்தது. அழுக்கடைந்த வீடுகளையே பார்த்து பேசி, விலைக்குக் கேட்டு அதிலிருந்து மீள முடியவில்லை.சோமனிடம் சொல்லி வேறு இடம் பார்க்கப் போக வேண்டும். அழுக்கின் வாசம் உடம்பைக் உலுக்குவதாக இருந்தது. கோழ்ப்பீ அடைந்த கோழிக்கூண்டில் அவனை அடைப்பது போலிருந்தது. மூச்சுக்திணறுவதாக இருந்தது. எங்கோ வெள்ளத்தை நிறுத்துவதற்காக ஒரு பெண் தன் குழந்தையை ஆற்றில் வீசியெறிந்ததாக படித்திருந்தான். அது நடந்ததா.. இல்லை கதையா.. எதுவாக இருப்பினும் அவன் உடம்பு அதை நினைக்க நடுங்குவதாக இருந்தது. அல்லது ஏதாவது குழந்தையொன்றின் பிணம் இந்த வெள்ளத்தை இங்கும் நிறுத்தியிருக்குமா.. காலருகில் ஒரு பூச்சி விறுவிறுவென்று பரபரத்து ஓடியது. இந்த அழுக்கிலிருந்தும் சேற்றிலிருந்தும் பிறப்பெடுத்திருக்கிற புது பூச்சியாக இருக்க வேண்டும். புது பூச்சி. இந்த அழுக்கு கோடிக்கணக்கான பூச்சிகள் பிறப்பெடுக்கும் இடமாக இருக்கும். பல கால்களைக் கொண்ட பூச்சிகள். உடம்புகள் பெருத்தும் சிறுத்தும் புது புது வடிவங்களில் பூச்சிகள். நாலு நாள் கிடந்தாலே பொருட்களீலிருந்து பூச்சிகள் கிளம்பும். உயிர்கள் உற்பத்தியாகும் அபூர்வம் அவனுக்கு ஆச்சர்யமளித்தது. மெஸ்ஸிலிருந்து வாங்கி வந்த சாப்பாடு கவனிக்கப்படாமல் இருந்து பிளாஸ்டிக் கூடையில் அதைப்போடும் போது புழுக்கள் நெளிவதாக அவன் கண்டிருக்கிறான். புது பூச்சி. புது உயிர். புது உயி இப்படித்தான் ரகசியமாக உற்பத்தியாகிறதா. இந்தப் 13 பெண்களிடமும் வாரிசு என்று ஏதாவது பூச்சி உருவாகி விட்டால் பிரச்சினையாகி விடும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதுவும் எடுத்ததில்லை. இதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்ன பண்ணினே.. ஏதாச்சும் கெடச்சுதா என்று சோமனின் முகம் மனதில் வந்து மிரட்டிக் கொண்டிருப்பது போல ஏதாவது புது உயிர் பற்றியக் கற்பனை தன்னை மிரட்டினால் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கலாம் என்ற எண்ணம் மனதில் வந்தது. யாராவது பெண்ணொருத்தி அவனருகில் வந்து நின்று அவன் சட்டையை உலுக்கி கேள்வி கேட்பாள் என்ற கற்பனை மனதில் இருந்து கொண்டே இருந்தது. இதற்குக் காரணம் என்ன.. ஏதாவது உறுத்தல் மனதை அக்கிரமித்து விட்டதா.. ஏதோ காரியத்திற்காக ஏதோ செய்து கொண்டிருக்கிறோமா.. வெள்ளம் நிதானமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. நதியின் சலசலப்போடு அவன் அருகில் வந்து நிற்கும் பெண் ஏதோ குசுகுசுவென்று பேசுகிறாள். அவள் பாராட்டுவதாகத்தான் அவனுக்குத் தோன்றியது. திரைப்படங்களில் ஆற்றின் கரைகளில் கதாநாயகன், நாயகிகள் இப்படித்தான் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்வார்கள். குறும்படகுகள் ஓடிக் கொண்டிருக்கும் .மெல்லக் காற்று வீசி 14 ரம்மியப்படுத்தும். தன் அருகில் நிற்கும் முகம் அறியாதப் பெண்ணிடம் அவன் அந்த ரம்மியத்தைப் பற்றி ஏதோ பேச முற்படுகிறான். வெள்ளம் ஓடி அதன் கறைகளை மட்டும் நிலை நிறுத்தியிருந்தது.......................... சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

வியாழன், 20 செப்டம்பர், 2012

எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்


சுப்ரபாரதிமணியன் கிறிஸ்துவ உலகத்தோடு பிரஞ்சு புரட்சியைச் சேர்த்துப் பார்க்கிற நோக்கிலேயே முஸ்லீம் உலகத்தோடு சமீப கிளர்ச்சியை பார்க்கலாம் என்கிறார் “காஞ்சா இலையா” இரோப்பிய கிறிஸ்துவம். அரசபரம்பரை, நிலப்பிரபுத்துவ அமைப்பால் பல நூற்றாண்டுகளாக இறுகிப் போய் கிடந்தது. இஸ்லாமிய குடியுரிமை அமைப்புகள் அவர்களின் சொந்த நடைமுறைகளாலேயே உருவானவை என்கிறார். எகிப்தின் கிளர்ச்சி சர்வாதிகாரத்திற்கு எதிரான ஒரு அஹிம்சை போராட்டமாகவே ஓரளவு வடிவெடுத்து புரட்டஸ்டண்ட் உட்பிரிவுகளால் பிளவுண்டது. ஜரோப்பாவில் புரட்டஸ்டன்ட் சமூகமே பல்வேறு எழுச்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. அதே சமயம் கத்தோலிக்க சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தோடு ஒத்திசைவானதாகவே இருந்து வந்திருக்கிறது. எகிப்தின் வளம் சூயஸ் கால்வாயின் கப்பல் போக்குவரத்தாலும், சுற்றுலாத் துறையாலும் செழுமையாக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என்ற ஏகப்பிரதேசத்திற்கும் தானிய ஏற்றுமதி செய்து வந்த நாடு கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்து சுகபோக வாழ்கையை வாழ்ந்து வந்த அதிபர் ஹேஸ்னி முபாரக் பிப்ரவரி கிளர்ச்சி மூலம் தூக்கி எறியப்பட்டிருக்கிறார். இந்தக் கிளர்ச்சிக்கு அடித்தளமாய் சமூக வலைத்தளங்களும், வீடியோ வலைத்தளங்களும் பயன்பட்டிருக்கின்றன. தொலைத் தொடர்பு புரட்சி வெற்றிகரமாக “ ஒரு வகை புரட்சியை” தீவிட்டு எறிந்து வெற்றிபெறச் செய்திருக்கிறது. பல வலைத்த்யளங்களியும், அல் ஜ ஸீரா போன்ற தொலைக்காட்சி வரிசைகளையும் முபாரக் கைது செய்து சிறையிலடைத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வெளிநாட்டில் வசிக்கும் எகிப்தியர்களால் கிளர்ச்சி நடவடிக்கைகள் கொழுந்து விட்டெறிந்தன. முபாரக் ஆட்சிவிலகும் தீர்மானம் கிளர்ச்சியின் வெற்றிவடிவமாகக் கணிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆதிக்கம் தோற்று வருவதன் எதிரொலியாக இது கருதப்படுகிறது. எகிப்தியர்களுக்கு 1952 புரட்சிக்கு முன்பான வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொள்வது என்பது உவப்பானதாக இருப்பதை “ ஹெலியோ போலிஸ்” என்ற படத்தின் ஒரு பாத்திரம் சொல்கிறது. அதற்குப் பிறகான வாழ்க்கையின் கனவுகளும், சிதைவுகளும் அவர்களை தொந்தரவுபடுத்தவே செல்கின்றன. இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் பேச்சிலும், நடவடிக்கைகளிலும் தென்படும் சோர்வு இதிலிருந்து மீள வேண்டியதான அவர்களின் ஆசையை சொல்லிக் கொண்டிருக்கிறது. கெய்ரோவின் நகர வீதிகளும் மனிதர்களும் ஒரு நாளில் கொள்ளும் தினசரி வாழ்க்கையின் ஒரு பக்கத்தை இது காட்டுகிறது. அதுவும் மேல்தட்டு மனிதர்களின் வாழ்கையைக் காட்டுவதாக இது அமைந்திருக்கிறது. அவ்வகையான எட்டு மனிதர்கள் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். புது அபார்ட்மெண்ட்டை பார்க்கக் கிளம்பும் ஒரு திருமணமாகாத தம்பதியர் வாகன நெரிசலில் மாட்டி தவித்துப் போகிறார்கள். அவன் ஒரு காட்சியில் சொல்கிறான்: “ டிராபிக் ஜாம் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. உன்னைப் பார்க்க வந்து இரண்டு மணி நேரமெல்லாம் காத்திருக்கிறேன். அப்போது நேரம் என்பது ஒன்றுமில்லை. இப்போது நேரம் ஏன் கொல்கிறது?”. அபார்ட்மெண்ட் வாங்கலாம், பிரிட்ஜ் வாங்கலாம் நன்றாக இருப்போம் என்ற நம்பிக்கையில் திரிகிறார்கள். பிரிட்ஜ் அவர்களின் திட்டமிடலில் இல்லாதது அவர்களை வெவ்வேறு கடைகளுக்குத் துரத்துகிறது. ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டிருப்பதாகச் சொல்லும் இளைஞன் தெருக்களில் அலைந்து பழைய புராதனக் கட்டிடங்களை படம் பிடிக்கிறவனாக இருக்கிறான். டிராபிக் கான்ஸ்டபிலால் படம் பிரிக்கப்படுகிறது. சிறுபான்மை இனமக்கள் தொகை குறைந்து வருவது பற்றி ஆராய்ச்சி செய்வதாக ஒரு வயதான பெண்ணிடம் சொல்லும் அவன் வீடியோ படம் பிடிப்பது அவளுக்குப் பிடிக்காமல் போய் விடுகிறது. நகர வீதிகளில் அலைந்து திரிந்து பலவற்றைரைப் படம் பிடிக்கிறான். ஹீக்கா புகைக்கும் கணிணி படித்த இளைஞன் அவனைச் சீண்டுவதை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறான். அவன் வீட்டிற்குத் திரும்பியபின் அவளிடமிருந்து பிரிந்த காதலி வேறொருவனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி அனுப்புவது அவனுக்குச் சோர்வு தருகிறது. விடியலை எதிர்பார்த்திருப்பவன் போல அலைகழிக்கிறான். தெருவில் போகும் பால்காரர்களை வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கழிக்கிறான். பாதுகாப்புப் பணியில் வேடிக்கை பார்த்தபடி பொழுதைக் கழிக்கிறான். பாதுகாப்புப் பணியில் வேலை செய்பவன் ஓரத்தில் இருக்கும் கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்கிறவனாக இருக்கிறான். தெருவில் திரியும் நாய் அவனுக்கு நட்பாகிறது. கையிலிருக்கும் உண்வை அதற்குத் தருகிறான். இரவுநேர தூக்கம் அவனின் வேலையைச் சிரமப்படுத்துகிறது. திருமணமாகாத விடுதி வரவேற்புப் பெண்ணிற்கு பாரீசிற்கு செல்வது கனவாக இருக்கிறது. வெளிநாட்டுத் தம்பதிகள் விடுதிக்கு வருவதும் அவர்கள் முத்தமிட்டுக் கொள்வதும் சிரமப்படுத்துகிறது. வெளிநாட்டுச் செல்கிற கனவுகளில் மிதந்து கொண்டிருக்கிறான்.அவளின் சிநேகிதியுடன் குடிக்குமிடத்திற்குச் செல்கிறவளுக்கு ஆண்களின் மிகையான சிரிப்பும் பாதிக்கவே செய்கிறது. அவளின் அறையில் இருக்கும் பாரிஸ் ஈபில் டவர் போஸ்டர் கிழிந்து அவளைத் துன்புறுத்திகிறது. அவளின் கனவுகள் சிதைந்து கொண்டிருப்பதை நினைக்கிறாள். ஒரு மருத்துவர் ஒரு நாயுடன் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார். வெளிநாடு செல்வதற்கான விசா விசாரணையில் அவனின் வங்கிக் கணக்கில் பணம் குறைவாக இருப்பது கூட்டி காட்டப்பட்டு துரத்தப்படுகிறான். அம்மாவுடன் சண்டை போட்டுக் கொள்வது அவனுக்குச் சோர்வையேத் தருகிறது. இந்த மருத்துவரைப் போல் வாழ்க்கையில் அலைகழிப்பிற்கு உள்ளாகும் ஒரு மருத்துவரை “ தி மெஸேஐஸ் பிரம் சீ” பட்த்தில் பார்க்க முடிகிறது. பருத்துவப்படிப்பைப் படித்திருந்தாலும் திக்குவாய்குறை அந்த இளைஞரை சமூகத்தில் ஒட்டச் செய்வதில்லை. அலக்சாண்டிரியாவுக்கு திரும்பி சாதாரண மீனவனாக வாழ்க்கையை ஓட்டுகிறான். மீன்பிடிப்பது அதனால் வரும் வருமானத்தில் வாழ்க்கையைக் கழிப்பதில் திடமாக இருக்கிறான். மதுச்சாலைக்குப் போகிறவன் பல சமயங்களில் நிலை தெரியாமல் குடித்துவிட்டு கிடக்கிறான். வீட்டிற்கு வந்து சேர்வதே பெரும் பாடாக இருக்கிறது. வீதியில் ஒரு வீட்டிலிருந்து கேட்கும் இசை அவனை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இரவுகளில் தனித்திருந்தும், மழையில் நனைந்தும் அந்த இசையைக் கேட்கின்றான். அப்படி காத்திருந்து வீதியில் அலைகிற ஒருநாளில்தான் நோராவைச் சந்திக்கிறான். அவளின் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அவளுக்கு இருக்கும் வேறு தொடர்புகள் பற்ரியும் அறிந்து கொள்கிறான். அதிலும் குறிப்பாக வயதான ஒருவருடன் இருக்கும் தொடர்பு அவனை எரிச்சலாக்குகிறது. அவள் இருக்கும் வீட்டை காலி செய்யச் சொல்லும் வீட்டுக்காரன் நோராவுடனான் தொடர்பைக் காட்டிப் பழிக்கிறான். தூண்டில் போட்டி மீன் பிடிகிற அவனும், கடலில் குண்டுகளை வீசி செத்து மிதக்கும் வீட்டுக்காரனும் முரண்படுகிறார்கள். நோராவுடன் உயிர் பிழைக்க தப்பி ஓட வேண்டியிருக்கிறது. கடலில் குண்டுகள் விசி மீன்கள் மிதக்கும் பகுதியில் அவன் அழகான நோராவுடன் படகில் தப்பியோடுகிறான். பட்த்தின் பல காட்சிகளில் தென்படும் பாட்டிலும், கடலின் அலைகளால் அலைகழியும் அதன் இயக்கமும் மருத்துவ இளைஞனின் மனமாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது. ———————- சுப்ரபாரதிமணியன்,8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602