சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 29 ஜனவரி, 2015

“ எதுவும் மாறலாம் “ குறும்படம்



சுப்ரபாரதிமணியன்



திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் சிறந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது. இவ்வாண்டின் அவ்விழாவில் ” நம்மூர் கோபிநாத்”  அவர்களைச் சந்தித்தேன். கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் அவரின் கவிதையில் நவீனத்துவம் இல்லாவிட்டாலும் மரபின் தொடர்ச்சியாய்  செய்திகளைப் பரிமாறிக் கொள்வதைக் கண்டேன். அவர் இணைந்து பணியாற்றி, நடித்துமிருந்த  “ எதுவும் மாறலாம் “ குறும்படத்திலும் இதைக் காண முடிந்தது.
“புறச்சமூகத்திலிருந்து வரும் ஆதிக்கம், தனக்குளேயிருக்கும் ஆதிக்கம், தன்னில் நிலவும் அறியாமை  ஆகிய மூன்று மலைகளை ஒரு ஆண் முதுகில் சுமக்கிறான்” என்று புகழ் பெற்ற வாசகம் ஒன்று உண்டு.  அதை மெய்ப்படுத்துவது போல் இந்தக்குறும்படத்தில் வரும் இரு சக்கர வாகன மெக்கானிக் படிப்பறிவு இல்லாமல் இருக்கிறான். வேலைக்காகப் போடப்படும் பில்லை உதவியாளரிடம் கொடுத்தே படிக்கச் சொல்கிறான். வண்டிக்குப்பின் மறைவாக உட்கார்ந்து திருட்டுப்பார்வை பார்த்து மது பாட்டிலை உடைத்து, மூன்று சொட்டை தெய்வத்திற்குச் சம்ர்ப்பிப்பது போல் உதறி விட்டு குடிக்கிறான். சிறுவன் உதவியாள் பையனுக்கும் தருகிறான். வடநாட்டு வெள்ளத்தில் பெற்றோர் செத்துப் போன ஒரு அனாதைக்குழந்தையை பள்ளிக்கூட்டிச்செல்லும் ஒரு முதியவளிடம் இதெல்லாம் தேவையா.. ஒர்க்‌ஷாப்பில் சேர்த்து விடு என்று சொல்ல அவள் திட்டுகிறாள். இந்தப் பையனுக்கு படிப்பு சொல்லி  பெரியாள் ஆக்குகிறேன் பார் என்கிறாள்.   போதை  ஏறவில்லை என்று  சிறுவனை ஏவுகிறான் இன்னொரு பாட்டில் வாங்கிவர…  கைபேசியை பேசியபடி வரும் ஒரு இரட்டைச் சக்கர ஓட்டியின் வாகனத்தில் மோதி மருத்துவமனையில்  அனுமதிக்கப்படுகிறான் சிறுவன். போதையில் கிடப்பவனை எழுப்பி தகவல் சொல்லப்படுறது. மருத்துவமனைக்கு வருபவன் மது பாட்டிலைக் கொண்டு வந்து அடிபட்ட பையனுக்கும் கொடுத்துக் குடிக்கிறான். மருத்துவர் பார்த்து கண்டித்து விட்டு அடிக்கிறார்.” நானும் படிச்சிருந்தா உம்மாதிரி டாக்டர்  ஆகியிருப்பேன் “ என்கிறான். மருத்துவர் அந்தப்பையனை குழந்தைத் தொழிலாளியாகவே பார்க்காதே . படிக்க வைத்து முன்னேற்று என்கிறார். அந்த அறிவுரை  அவனுக்குள் பல சிந்தனைகளைப் பரப்புகிறது. அவனுக்குள் இருக்கும் ஆதிக்கம் , அறியாமை எல்லாம் ஒரு நிமிடம் அவன் முன் நிற்கிறது. நிலைகுலைந்து போகிறான்.சிறுவனை பள்ளியில் சேர்க்கிறான். மகிழ்வுந்தில் போகும் மருத்துவர் பார்த்து விட்டு  நெகிழ்ந்து போய் சையால் வாழ்த்துச் சொல்கிறார்.
மதுவின் தீமை, கைபேசியை உபயோகித்துக் கொண்டே வண்டி ஓட்டுவது, குழந்தைத் தொழிலாளர்முறை, குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்று பல செய்திகளை பூடகமாகச் சொல்லியிருக்கிறார்கள். “ அன்பைக்  காட்டுங்கள். யாரும் அனாதையல்ல “ என்ற வாசகங்களுடன் படம் முடிகிறது. செய்திகள் சொல்வது படைப்பின் ஒரு நோக்கம் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார் நம்மூரு கோபிநாத்

படிக்கலாம் வாங்க…. தாய்மொழி வழிக்கல்வி


சுப்ரபாரதிமணியன்


” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம்  இது என்று சுட்டிக் காட்டியவர்  கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி அறிவித்தார், 1993ம் ஆண்டில் கல்வி அடிப்படை உரிமை, அதை இலவசமாக்க் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது.இது குறித்த சட்டம் 2010ல்  அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்கள்.
மாநில சிறுபான்மையினருக்கான தொடக்கக் கல்வியை முடிந்தவரை தாய் மொழியில் வழங்குவதில் மாநில அரசின் பொறுப்பாக்கியது அரசியல் சட்டம். எல்லா மாணவர்களுக்கு தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வி தரப்பட வேண்டும்  என்பதை இந்திய அரசும் ஒப்புக்கொண்டது.  கல்வி தருவது அரசியல் சட்ட்த்தில் தொழில் என்று சொல்வதில் அடங்கும்.லாபத்துக்காகச் செய்தாலும், சேவையாகச் செய்தாலும் அது தொழிலே.. சமீபத்தில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பொன்று தாய்மொழி வழியாக்கக் கல்வி வழங்கும் சட்டத்தை நிராகரித்திருக்கிறது.  பொது நன்மையை காக்க அரசுக்கு இருக்கும் கடமையைக் குறைத்து விட்டது.இது தாய்வழிக்கல்வி குறித்த அக்கறை கொண்டவர்களுக்குப் பேரிடியாகும்.
தாய்மொழிக் கல்வி பற்றி அவரின் பணிகாலத்திலும், இலக்கியப் பணியிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருபவர் பொன்னீலன் அவர்கள்.மொழிவழிப்பட்ட இன வளர்ச்சியே மனித குலத்தைப் பரிபூரண மனித லட்சியங்களை நோக்கி மேலும் மேலும் செலுத்தும் . பண்பாட்டு விடுதலை என்பது அரசியல் பொருளாதார விடுதலையோடு அவசியம் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார். அதைத்தான்  “ தாய் மொழி வழிக்கல்வி “ என்ற சிறு நூலிலும் வலியுறுத்துகிறார்.அவரின் சில அபிப்பிராயங்களைக் கேளுங்கள்.


  1. ஒரு இனத்தின் முகத்தை வடிவமைப்பதில் மொழிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2. பண்பாட்டின் உட்கரு மொழியே. ஒரு இனத்துக்கு ஆளுமை, சுயசிந்தனை, அழகு, பெருமிதம், கர்வம்  தருவது மொழியே.3.aaaஆங்கிலம்  பயன்பாட்டுத் தத்துவம் கொண்ட்து. பிஞ்சு பருவத்தில் ஆங்கிலம் படிக்கும் மனதும் இப்படிப்பட்டப் பார்வையோடுதான் வளரும். மனித மதிப்பை விடப் பண மதிப்பையே பெரிதெனக் கருதும். 4. மண்ணுக்கும் , சூழலுக்கும் ஏற்ப உருவாகும் மனித உடல் போல மனித உழைப்புக்கும் உணர்வுக்கும், அறிவுக்கும் ஏற்றவாறு மொழியை மையமாகக் கொண்டே மனித மூளை கட்டமைகிறது.தாய் மொழியும் தாய் உணர்வும் குழந்தையின் மூளையைக் கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றுகின்றன. 5. அந்நிய மொழியின் எதிர்திசைக் கட்டமைப்பானது ஏற்கனவே அமைந்துள்ள தாய் மொழிக் கட்டமைப்போடு முரண்படும் 6. வெள்ளைக்காரத் தமிழனின் திமிராட்சி சாதாத்தமிழன் தலையை நசுக்காதா 7. கல்வியை அல்ட்சியப்படுத்தினால் அல்லது அரசியல் படுத்தினால் சமூகத்தின் எதிர்காலமே சீர்கெட்டுப் போகும் 8. கல்வி வழியெ ஒரு தலைமுறையில் ஏற்படும் கோளாறு ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என்பதை அரசு மறந்து விடக்கூடாது.

” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு


சுப்ரபாரதிமணியன்

 

நட்பே நலமா: நூல் வெளியீடு திருப்பூரில் அரோமா ஓட்டலில் ஞாயிறு அன்று மாலை நடைபெற்றது. சிலரின் உரைகள்:
சுப்ரபாரதிமணியன் ( எழுத்தாளர் ) :
பாட்டாளிகள் படைப்பாளிகளாக, எழுத்தாளர்களாக மாறிய மறுமலர்ச்சி காலம் இது. ஒரு காலத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரும், மெத்த படித்தவர்களும் ., புலவர்களுமே எழுதும் சூழல் இருந்தது. விளிம்பு நிலை மக்களைப் பற்றியும் அவர்களே எழுதினர். ஆனால் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களிலிருந்தே, சாதாரண மக்களிலிருந்தே தலித்கள், பெண்கள், நெசவார்கள், பனியன் தொழிலாளர்கள், ஓரின புணர்ச்சியாளர்கள், திருநங்கைகள் என்று அவரவர் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்தும், வாழ்வியல் குறித்தும் எழுதுகிறார்கள். சாதாரண மக்களே அவர்களின் வாழ்க்கையை எழுத்தாளர்களாக நின்று எழுதும் இன்றைய கால கட்டம் பட்டாளிகளே படைப்பாளிகளாக தங்களை வெளிப்படுத்தும் எழுச்சி மிக்க காலம்… இது இலக்கியத்தின் ஆரோக்கியமான சூழலைக் காட்டுவதாகும்.
தலைமை : ” ஈஸ்வரன் ( த.மு.எ.க.ச ):
எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கெதிரனான மதவாதிகளின் செயல்பாட்டை எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். இது எழுத்துலம் மீதான வன்முறை..கடிதம் எழுதுங்கள். மற்றவர்களுடன் மனதைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நெகிழ்வான, மகிழ்ச்சியான கணங்களை கடிதங்கள் உருவாக்கும்.
பாரதி சுப்பராயன் ( முகநூல் எழுத்தாளர்) :
தனக்கு ஏதாவது லாபம் இடைக்குமா என்று திட்டமிட்டு யோசித்து இந்தத் தலைமுறையினர் மற்றவர்களுடன் பழகுகின்றனர். இது தவறான அணுகுமுறை.. அன்பு, மனிதாபிமானம் சார்ந்த விசயங்களை வலியுறுத்தி படைப்புகளை எழுதி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இன்றைக்கு எழுத்தாளர்களுக்கு உள்ளது..
சிவகாமி ( ஆசிரியை): சமூகம் சார்ந்த அனுபவங்களை எழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் பெண்களின் பங்காய் அவர்களின் அனுபவங்களை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக எழுதித் தீர வேண்டியது அவசியம்.
கவிஞர் கனல்: பழைய நினைவுகளையும் கலாச்சார மரபுகளையும் மீட்டெடுப்பதும், பதிவு செய்வது இன்றைய தலைமுறைக்கு தேவையானதாக உள்ளது.
பாரதிவாசன்( பதியம் ): இயங்கிக் கொண்டே இருத்தல் மனித இயல்பு. எழுத்தின் மூலம் சமூகப்பிரச்சினைகளை வெளிக்கொணர்வதும் அதன் மூலமான விழிப்புணர்வும், போராட்ட உணர்வும் கொண்டு வர புத்தகங்கள் உதவுகின்றன.
இளஞாயிறு ( நொய்யல் இலக்கிய மையம்): புதிய பாதைகளை போடுபவர்களாக, புதிய நியதிகளை உருவாக்குபவர்களாக மாற புதிய தலைமுறைக்கு பொறுப்புணர்வு உண்டு. தொழில்நுட்பம் சார்ந்த ஊடகங்களை விட புத்தக வடிவில் படிப்பதில் நிறைய சவுகரியங்கள் உள்ளன. இதைத் தொடர்ந்து பேண வேண்டும்.
( 40 எழுத்தாளர்களின் கடிதங்களின் தொகுப்பு நட்பே நலமா: நூல் தொகுப்பு இளஞாயிறு, மோகன் ராசு, பல்லடம் ராசு..
வெளியீடு : மகேசுவரி புத்தக் நிலையம் , திருப்பூர் விலை : ரூ 60 )

கைபேசியின் அறிவியல் வினோதஉலகம் ஜிமாவின் கைபேசி : கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்


சுப்ரபாரதிமணியன்

கைபேசியின் கண்டுபிடிப்பு உலகத்தை சிறு கிராமமாக்கி விட்ட்து. அல்லது உள்ளங்கையில் உலகம் என்றாக்கிவிட்டது. அது வரமா, சாபமா என்ற விவாதம் இருந்து கொண்டே இருக்கிறது. கைபேசியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மன இயல்புகள், வாழ்க்கை பற்றி நிறைய சொல்லப்படுகிறது.பலர் நியூட்ரான் குண்டுகள், எலக்ட்ரான் குண்டுகளின் அபாயம் என்றெல்லாம் கைபேசியை வர்ணிக்கிறார்கள். குழந்தைகள் பாடத்தைத் தவிர்த்து விட்டு கைபேசியைக் கையாளுகிறார்கள். வீட்டில் அவர்கள் இருக்கும் நேரங்களைப் பெரும்பாலும் தொலைக்காட்சி, கைபேசியுடன்தான் கழிக்கிறார்கள்.பிற தொற்று நோய்களிடமிருந்து குழந்தைகளைக் காப்பது போல் கைபேசியின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டி உள்ளது. அறிவியல் கண்டுபிடிப்பின் உச்சபட்ச சாதனைகளைக் கொண்டிருக்கும் கைபேசி தரும் உலகத் தகவல்களும் பயனும் சொல்லி மாளாதபடி குவிந்து கிடக்கிறது.கைபேசி புனைவு இலக்கியத்தில் எப்படியாவது இணைந்து தன் பங்கைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.அப்படியான கற்பனையில் கொமாகோ இளங்கோவின் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் ஜி.மானஸா என்ற ஜிமாவுக்கு ஒரு புது கைபேசி கிடைக்கிறது,அவளின் புகைப்படத்தை அவள் செருக அதுவே சிம் கார்டாகி மினுங்குகிறது. டிப்பி என்று பெயர் வைக்கிறாள். டிப்பியில் பல தகவல்கள் அவளுக்கு வருகின்றன. தினம் இரு தரம் பல் துலக்க வேண்டும் என்பது முதல் கொசுவை விரட்டும் உபாயம் வரைக்கும்.எந்திரக்குருவியொன்றையும் அது வெளிப்படுத்துகிறது. கண்காணிப்பிற்கு பெரிதும் உதவும் அது. அது காண்பிக்கும் பல்வேறு மென்பொருட்கள் அவளின் வகுப்புத் தோழிகளுக்கும் பிடித்திருக்கிறது.குழந்தைகளுக்கு வைத்தியத்திற்கென்று அது தரும் டிப்ஸ்களும் ஏராளம். ஒரு நாள் அது கீழே விழுந்து சிதறுகிறது. ஜிமா அதிர்ந்து போவ்தோடு கதை முடிகிறது. கைபேசியை முன் வைத்து அறிவியல் சார்ந்து அது தரும் விஞ்ஞான சாத்தியங்களை கொ.மா.கோ.இளங்கோ விரித்துச் செல்கிறார்.விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் அசாத்தியங்களை கற்பனைக்கச் செய்கிறது.. எழுத்தாளன் தனித்து இயங்கும் எழுத்து என்றில்லாமல் குழந்தை வாசகர்களோடு உரையாடும் தன்மை சுலபமான வாசிப்பிற்கு இட்டுச் செல்கிறது. புராணக் கதையம்சங்கள், நீதிஅம்சங்கள், விலங்குகள் காட்டும் வினோத உலகம் என்ற சிறுவர் கதைஅம்சங்களிலிருந்து மாறுபட்டு விஞ்ஞான அற்புதங்களைச் சொல்கிறார். சிறுவயது குழந்தைகளின் மன இயல்பில் விளையாடும் வெகுளித்தன்மையும் பள்ளி உலகமும் எப்படி இருந்து வருகிறது என்பதை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். செல்போன் தரும் அன்பும் ஆதரவும் குழந்தைகள் பல சமயங்களில் பெற்றோர்களிடம், சக மனிதர்களிடம் பெற் முடியாத்தாக இருக்கிறது.சிறுவர்கதைகளில் புது பாதையும் பயணமும் கொண்டவர் இளங்கோ என்பதை இந்த புது நூலும் சொல்கிறது
ஜிமாவின் கைபேசி கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல். குழந்தைப்பாடல்கள் நிறைய எழுதி உள்ளார். குட்டி டாக்டர் வினோத், தேனென இனிக்கும் தீஞ்சுவைக் கதைகள் என்று இரு சிறுவர் நூல்களையும் முன்பே எழுதியவர். இறுக்கமான கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தவர் இயல்பான குழந்தைகளின் மனநிலையோடு எளிமையான சிறுவர் கதையை படைத்திருப்பதில் அவரின் இன்னொரு பரிமாணத்தையும் காட்டுகிறது.
subrabharathimanian-subrabharathi@gmail.com
( ஜிமாவின் கைபேசி கொ.மா.கோ.இளங்கோவின் சிறுவர் நூல்.ரூ40 புக்ஸ் பார் சில்ரன் பதிப்பக வெளியீடு சென்னை 044 24332424 )

பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”


சுப்ரபாரதிமணியன்

பெண்களுக்கு அரசியல் அவசியம்
“ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
மத்திய அரிமா சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “ அரிமா விருதுகள் ” வழங்கும் (குறும்பட விருது, ஆவணப்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான “சக்தி விருது “ ) , இவ்வாண்டு நிகழ்ச்சி 25/12/14 சிறப்பாக நடைபெற்றது.
.. மத்திய அரிமா சங்கத் தலைவர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். பேரா.. செல்வி துவக்க உரை நிகழ்த்தினார்.பரிசுகள் பெற்ற 30 படைப்பாளிகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. பரிசு பெற்றவர்களில் சிலரின் பேச்சு:
* விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –கோவை ( 1000 பக்க நாவல் “ ஆலமரம் “) எழுதியவர்:
அரசாங்கப்பதவிகளில் இருந்து விட்டு ஓய்வு பெற்று நகர வாழ்க்கை வெறுத்துப் போய் முதியோர் இல்லத்தில் சக வயதினருடன் வாழ்ந்து வருகிறேன். முதுமை வரம் என்றே உணர்கிறேன்.ஓய்வு நேரத்தை எழுதுவதிலும், படிப்பதிலும் கழிக்கிறேன். வாசிப்பு எல்லோருக்கும் அவசியம் மன இறுக்கத்தை தளர்த்த வாசிப்பு உதவுகிறது.
*சுஜாதா செல்வராஜ் – பெங்களூர் – இளம் கவிஞர்
பெண் சமையலறையில்தான் பாராட்டைப் பெறுகிறாள். சமையலறையை விட்டு வெளியே வரும் வாய்ப்புகளை பெண்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் உணர்வும் அக்கறையும் பெண்ணுக்குத் தேவை. நடைமுறை வாழ்க்கையில் அரசியலை எதிர் கொள்பவளும் அவள்தான். பெண்களுக்கு அரசியல் அவசியம்
* கவுரி கிருபானந்தம்-ஹைதராபாத் –தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்
நம்மை நாமே செழுமையாக்கிக் கொள்ள இலக்கியம் அவசியம். எழுத்தாளன் சொல்லாதையும் புரிந்து கொள்பவனே நல்ல வாசகன். மொழிபெயர்ப்பு என்பது இன்னொரு வகை படைப்பாக்கமே.
1
* இடைமருதூர் மஞ்சுளா –சென்னை : நாவலாசிரியை, பத்திரிக்கையாளர்
பத்திரிக்கைத்துறையில் பெண்களின் அனுபவம் குறைந்ததல்ல. பல வீச்சுகளை காட்டியிரூகிறார்கள். ஊடகங்களில் பெண்கள் தீவிரமாக இயங்கி வரும் ஆரோக்கியமான காலம் இது.
படைப்புகளை தேர்வு செய்த எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசுகையில் “ இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய பாரம்பரியத்தில் பெண்கள் பங்கு கடந்த இருபது ஆண்டுகளீல் குறிப்பிடத்தக்கது. அவ்வையார், ஆண்டாளுக்குப்பின் நல்ல கவிஞர்கள், எழுத்தாளர்கள் இல்லை என்ற வசவு இந்த்த் தலைமுறை பெண் எழுத்தாளர்களால் நீங்கியிருக்கிறது. த்லித்தியம், பெண்ணியம், உடல்மொழி,பெண்களின் பிரத்யேக அனுபவங்களை சொல்லும் படைப்புகளை உயர்ந்த தரத்தில் படைத்து வருகிறார்கள் “ என்றார். கவிஞர்கள் ஜோதி, மதுராந்தகன், பாண்டியன், சு.பழனிச்சாமி , பைரவராஜா உள்ளிட்டோர் கவிதைகள் வாசித்தனர்.
பொருளாளர் அரிமா கோபால் நன்றியுரை வழங்கினார்.
 
“ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
 
* அரிமா குறும்பட/ ஆவணப்பட விருது :
 
1. சாரோன், சென்னை( பட்டுக்கோட்டைகல்யாணசுந்தரம் பற்றிய ஆவணப்படம் )
2. யுகபாரதி புதுவை( தீதும் நன்று பிறர்தர வாரா )
3. நம்மூர் கோபிநாத், சென்னை( why why )
4.மதரா , திருனெல்வேலி ( கதவு )
5. கே.பி.ரவிச்சந்திரன் கரூர் ( “ விழிகள்” )
 
* சிறப்புப் பரிசு : திருப்பூர் குறும்படப் படைப்பாளிகளுக்கு
1.சபரீஸ்வரன், 2. சி.கோபிநாத் 3. பைரவராஜா
*. அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கானது )

1. .விஜயலட்சுமி சுந்தர்ராஜன் ( நாவல் ). கோவை 2. சுபாஷிணி, சென்னை, (கட்டுரை) . 3.இடைமருதூர் கி.மஞ்சுளா, சென்னை ( நாவல் ). 4.இந்திராபாய், சென்னை ( பெங்களூர் ) 5 .கவுரி கிருபானந்தம் ஹைதராபாத் ( மொழிபெயர்ப்பு ), 
 6..ஸ்ரீஜாவெங்கடேஷ், சென்னை( நாவல் ). 

,7. கமலா இந்திரஜித்., திருவாரூர்(சிறுகதை ) 
8.சாந்தாதத் ஹைதராபாத்) மொழிபெயர்ப்பு 
9.தேனம்மை லட்சுமணன் (ஹைதராபாத்)-கவிதை 
10. பாலசுந்தரி, திருவாரூர்(சிறுகதை )
 11. எம் எஸ் லட்சுமி, சிங்கப்பூர்(கட்டுரை)
 12. மாதாங்கி , சிங்கப்பூர்- கவிதை.
 13. ஈஸ்வரி, கோவை (கட்டுரை)
 14 கவுதமி, கோவை -கவிதை 
15. சவுதாமினி , தாராபுரம் (கட்டுரை) 
16. ராஜேஸ்வரி கோதண்டம், ராஜபாளையம் (மொழிபெயர்ப்பு )
 17. ஜெயஸ்ரீ சங்கர்(ஹைதராபாத்) நாவல்,
18.மைதிலி சம்பத் (ஹைதராபாத்), நாவல் 
19.வனஜா டேவிட் , பெங்களூர் நாவல் 
20. ராமலட்சுமி , பெங்களூர், – சிறுகதை 
21.சுஜாதா செல்வராஜ் , பெங்களூர் –கவிதை. 
22.அகிலா கோவை ( கவிதை )

சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்

சுப்ரபாரதிமணியன்

சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்:
கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்


இலக்கியச்சந்திப்பு-49 இனிதே நடைபெற்றது. இளஞ்சேரலின் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் சு.பழனிச்சமி அவர்களின் ‘கருவத்தடி’ கவிதைநூல் குறித்து செல்வி அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து ஜெயந்தி சங்கர் படைப்புலகம் குறித்துப் பேசப்பட்டது.
ஜெயந்தி சங்கரின் ‘நெய்தல்’நாவல் குறித்து அவைநாயகன் அவர்களும் ‘வாழ்ந்து பார்க்கலாம் வா’ நாவல் குறித்து இரா.பூபாலனும் மற்றும் அவரின் நான்கு நாவல்கள் குறித்து சுப்ரபாரதிமணியன் அவர்களும் பேசினார்கள் பின் இரவீந்திரபாரதியின் நாவல் ‘காட்டாளி’ குறித்து அன்புசிவா பேசினார் தொடர்ந்து ஏற்புரை வழங்கி சிறப்பித்தார் இரவீந்திரபாரதி.
அடுத்து கவிஞர் வேல்கண்ணனின் ‘இசைக்காத இசைக்குறிப்பு’ கவிதைநூல் குறித்து மதுரை சரவணன் கட்டுரை வாசித்தார் வேல்கண்ணன் ஏற்புரை வழங்கினார்.
சுப்ரபாரதிமணியனின் பேச்சின் ஒரு பகுதி :
தமிழகச்சூழலில் அடையாள அரசியல் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர் சூழலில் அடையாள அரசியல் என்பது பற்றிய வரையறை முற்றிலும் வேறுபட்டது. சிங்கப்பூரில் பிறந்து வாழ்பவரா இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவரா என்பதே அவ்விவாதம். வந்தேறிகள், அல்லது குடியேறியவர்களின் இலக்கியம் என்ற பிரிவே இதை ஒட்டி கிளப்ப்ப்பட்டிருக்கிறது. ஜெயந்தி சங்கரின் நாவல்களில் மையமாக சிங்க்ப்பூரில் பிறந்து வாழ்பவர்கள், இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவர்கள் பற்றிய அனுபவங்களாகவே அமைத்திருக்கிறார். அவரின் அய்ந்து நாவல்கள் தொகுக்கப்பட்டு 1100 பக்கங்களில் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
“ திரிந்தலையும் திணைகள்”: : வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களி ன் ( ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம் ) சமகாலவாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கீயத்தில் தமிழர் வாழ்க்கை பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம்.அவரின் சமீபத்திய இந்த நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும் சாதாரண சமூகங்களின் படிமங்களைக் காட்டியிருக்கிறார்.. இந்த நாவல் சாதாரண மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கன்வுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.

புதன், 14 ஜனவரி, 2015


வியாழன், 8 ஜனவரி, 2015

பாரம்பரிய தொழில்களை ஒழிக்கும் உலகமய சூழல் எழுத்தாளர்கள் கவலை





திருப்பூர், ஜன. 5-

திருப்பூரில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் “சப்பரம்“ என்ற நாவல் வெளியீட்டு விழா பி.என்.சாலை “முயற்சி” அலுவலகத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது. கவிஞர் ஜோதி தலைமை தாங்கினார். கேபிகே செல்வராஜ் (முத்தமிழ்ச் சங்கம்), சிதம்பரம் (முயற்சி), குமார் (தமிழ் வளர்ச்சித் துறை ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர்நெசவாளர் குடும்பத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சப்பரம் நாவலை கலால் சேவை வரித்துறை ஆணையர் ஏ.கே.ரகுநாதன் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: திருப்பூரில் பனியன் தொழில் நிறுவப்படுவதற்கு முன்பு நெசவுதான் பிரதான தொழிலாக இருந்தது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் நெசவில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் உணவு, கல்வி, மருத்துவம் என்று அவர்களின் தேவை நிறைவேற்றப்படாததால் அவர்கள் பனியன், பவர் லூம் என்று சென்று விட்டனர் என்று கூறினார். சப்பரம் நாவலின் முதல் பிரதிகளை பதியம் பாரதிவாசன், சமூகநீதிப் பதிப்பகம் தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் செ. நடேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நாவலை அறிமுகப்படுத்தி கவிஞர் ஜோதி பேசினார்.
நூலாசிரியர் சுப்ரபாரதிமணியன் ஏற்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறுகையில், காலம் காலமாக நெசவாளர்கள் தனியார் முதலாளிகளிடம் கூலி நெசவு செய்து வருகிறார்கள். அவர்களிடம் அவர்களுக்கு தொழிலாளி என்ற அந்தஸ்து கூட இல்லை. அவர்களுக்கு போதிய சமூகப் பாதுகாப்பு இல்லை.
அதைப் பெற அவர்கள் போராட வேண்டும். தொழிலாளி அந்தஸ்து, உரிமைகள் பெற நெசவாளர்களின் ஒன்றுபடுதலும் போராட்டமும் தேவை. அப்போதே அவர்களுக்கு ஓரளவு சமூக பாதுகாப்பு கிடைக்கும். உலகமயமாக்கல் கைத்தறி நெசவு போன்ற புராதான தொழில்களை ஒழித்துக் கொண்டு வருகிறது. இயந்திரமயத்தில் அவர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
கருணா மனோகரன் எழுதிய சாதி-வர்க்கம்-தேசியம் நூல் பற்றி செ. நடேசன்,தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். கருணாமனோகரனின் 7 நூல்களை சேர்த்து கோவை சமூக நீதிப் பதிப்பகம் சாதி-வர்க்கம்-தேசியம் என்ற நூலாக வெளியிட்டுள்ளது. முன்னதாக கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி மேம்பாட்டுக்குழுத் தலைவர் காங்கயம் சு.மூர்த்தி போபால் கல்வி யாத்திரை” என்ற தலைப்பில் பேசினார். பழ.விசுவநாதன் நன்றி கூறினார்.

செய்தி 
தீக்கதிர் 


இலக்கியச்சந்திப்பு-49 

இனிதே நடைபெற்றது. இளஞ்சேரலின் வரவேற்புடன் தொடங்கிய இந்நிகழ்வில் சு.பழனிச்சமி அவர்களின் 'கருவத்தடி' கவிதைநூல் குறித்து செல்வி அவர்கள் பேசினார்கள். தொடர்ந்து ஜெயந்தி சங்கர் படைப்புலகம் குறித்துப் பேசப்பட்டது. ஜெயந்தி சங்கரின் 'நெய்தல்'நாவல் குறித்து அவைநாயகன் அவர்களும் 'வாழ்ந்து பார்க்கலாம் வா' நாவல் குறித்து இரா.பூபாலனும் மற்றும் அவரின் நான்கு நாவல்கள் குறித்து சுப்ரபாரதிமணியன் அவர்களும் பேசினார்கள் பின் இரவீந்திரபாரதியின் நாவல் 'காட்டாளி' குறித்து அன்புசிவா பேசினார் தொடர்ந்து ஏற்புரை வழங்கி சிறப்பித்தார் இரவீந்திரபாரதி. அடுத்து கவிஞர் வேல்கண்ணனின் 'இசைக்காத இசைக்குறிப்பு' கவிதைநூல் குறித்து மதுரை சரவணன் கட்டுரை வாசித்தார் வேல்கண்ணன் ஏற்புரை வழங்கினார்.
சுப்ரபாரதிமணியனின் பேச்சின் ஒரு பகுதி :

தமிழகச்சூழலில் அடையாள அரசியல் பற்றிய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர் சூழலில் அடையாள அரசியல் என்பது பற்றிய வரையறை முற்றிலும் வேறுபட்டது. சிங்கப்பூரில் பிறந்து  வாழ்பவரா இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவரா என்பதே அவ்விவாதம். வந்தேறிகள், அல்லது குடியேறியவர்களின் இலக்கியம் என்ற பிரிவே இதை ஒட்டி  கிளப்ப்ப்பட்டிருக்கிறது.  ஜெயந்தி சங்கரின் நாவல்களில் மையமாக சிங்க்ப்பூரில் பிறந்து  வாழ்பவர்கள், இல்லை வேலைக்காக சிங்கப்பூர் வந்து குடியேறியவர்கள் பற்றிய அனுபவங்களாகவே  அமைத்திருக்கிறார். அவரின் அய்ந்து நாவல்கள் தொகுக்கப்பட்டு 1100 பக்கங்களில் காவ்யா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.
  “ திரிந்தலையும் திணைகள்”: : வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் தமிழர்களி  ன் ( ஓரளவு மேல் தட்டு வர்க்கம், மத்திய வர்க்கம் ) சமகாலவாழ்வை கூர்ந்து பார்த்து எண்ணற்ற சிறுகதைகள், நாவல்கள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து சிங்கப்பூர் இலக்கீயத்தில் தமிழர் வாழ்க்கை பதிவுகளை முக்கியத்துவம் உள்ளதாக்கி இருக்கிறார் என்பது அயலக இலக்கியச் சாதனையில் ஒன்றாகவும் சொல்லலாம்.அவரின் சமீபத்திய இந்த நாவலில் இந்திய சமூகமும், சிங்கப்பூர் சமூகமும் என்று மாதிரிப் பாத்திரங்களைக் கொண்டு இருநாட்டிலும் வாழும்  சாதாரண சமூகங்களின்  படிமங்களைக் காட்டியிருக்கிறார்.. இந்த நாவல்  சாதாரண மத்தியதரத்து மக்களின் சின்னச் சின்ன கன்வுகளையும், அதை எட்ட முயலும் முயற்சிகளையும் கொஞ்சம் சிதைவுகளையும் காட்டுகிறது.